Skip to Content

14. நேப்பால் டாக்ஸி டிரைவர்

 

நேப்பால் டாக்ஸி டிரைவர்

       தியான மையம் வந்து பக்தர் உணர்ச்சிவசமாகப் பேசினார். ரூ. 5000/- காணிக்கை கொடுத்தார். அவர் கூறியது,

       “நானும் என் கணவரும் நேப்பால் சுற்றிப் பார்க்கச் சென்றோம். இந்தியா நேப்பால் எல்லையில் ஒரு டாக்ஸியில் போய்க் கொண்டிருந்தோம். Guest house ஆபீஸில் ஏதோ விசாரிக்க வேண்டும் என என் கணவர் அங்கே இறங்கி உள்ளே போனார். நான் குழந்தையை எடுத்துக் கொண்டு அவர்பின் சென்றேன். எங்கள் லக்கேஜ் டாக்ஸியில் இருக்கிறது. நான் அதைக் கருதவில்லை. நான் எடுத்துவருவேன் எனக் கணவர் நினைத்தார். வேலை முடிந்து ஆபீஸ் வெளியில் வந்தபொழுது தான் லக்கேஜ் நினைவு வந்தது. டாக்ஸி போய்விட்டது. உடனே நான் அன்னையை அழைக்க ஆரம்பித்தேன். சற்று நேரத்திற்குள் டாக்ஸி திரும்ப வந்தது. மறுசவாரி ஏற்ற டிரைவர் டிக்கியைத் திறந்தபொழுது எங்கள் லக்கேஜைப் பார்த்துக் கொண்டு வந்ததாகச் சொன்னார். பெட்டியில் பணமும் அன்னை பற்றிய புத்தகமும் இருந்தன.

பிரச்சினை எழுந்தவுடன், பிரச்சினையை மறந்து,

அன்னையை அழைத்தால் பலன் கைமேல் வரும்.

****

 



book | by Dr. Radut