Skip to Content

04.அருள்மலர்

அருள்மலர்

       எவ்வளவோ அன்பர்கள் தோட்டம் உள்ள வீடுகளில் குடியிருக்கிறார்கள். நகரத்தில் Flatல் குடியிருப்பவருக்கு அவ்வசதி இருப்பதில்லை. தோட்டம் இல்லாத வீடுகளிலும் தெருவில் காம்பவுண்ட் இருப்பதுண்டு. வீட்டிற்கும் காம்ப்வுண்டிற்கும் இடையே மண் தரை இருந்தால், இம்மலருக்குரிய செடியை நட்டு வைத்தால் செப்டம்பர் முதல் ஜனவரி வரை மலர்கள் கிடைக்கும், செடியை நாமே நட்டு, தண்ணீர் விட்டு, கவனித்து மலர் பெறுவது மலரை மட்டும் பெறுவதை விடச் சிறப்பு. இந்த செடி ஓராண் டுதானியிருக்கும், அதிகபட்சம் இரு ஆண்டுகள் பூக்கும்.

       ஆண்டு தொறும் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை இம்மலர் எனக்குக் கிடைக்கும். செடி மலர் தருவது அக்டோபரில் உச்சகட்டமாக இருப்பது வழக்கம். சுமார் 15 ஆண்டுகட்கு முன் ஒரு நாள் அக்டோபரில் 400 மலர்கள் கிடைத்தன. அந்த ஆண்டு அதிகபட்ச மலர்கள் கிடைத்தது அன்று தான். இன்று என்ன விசேஷம் என நினைத்துப் பார்த்தேன். அப்படியொரு நல்ல காரியம் நடந்தால் அந்த தேதி நம் வாழ்நாளில் உயர்ந்த தேதியாக இருப்பதுண்டு. நம் பிறந்த நாளாகவோ, அன்னையை அறிந்த நாளாகவோ, முதலில் ஆசிரமம் வந்து அன்னையை தரிசித்ததாகவோ, உத்தியோகம் பெற்ற தேதியாகவோ, குழந்தை பிறந்த நாளாகவோ, வீடு, மனை வாங்கிய நாளாகவோ இருக்கும். அது இல்லாமலிருப்பது அரிது. எதுவுமில்லாத நாளாக இருந்தால், இனி அந்நாள் நம் வாழ்வில் சிறப்பான நாளாக மாறும்.

       எது நம்மிடம் உயர்ந்த திறமையோ அதையே வீணாக்குவது மனித சுபாவம். எவர் தனக்குள்ள திறமையை அறிந்து போற்றுகிறாரோ, அவருக்கு அது பெரும் பலன் தரும். அன்னையிடம் திறமைகள் பெரும் பலன் தரும். குறைகள், திறமைக் குறைவுகள், கெட்ட பழக்கங்கள், கெட்ட குணங்கள் திருவுருமாறினால் அதிகப் பலனை விட உயர்ந்த பலன் தரும்.

       நாம் அன்னையிடம் வந்த பின் நம் திறமைகளை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து வாழ்க்கையில் பலன் பெற்றிருக்கிறோமோ, அல்லது அவற்றை வீணடித்திருக்கிறோமோ எனக் கருதலாம்.

அருள்மலர் அதிகமாக நம் பிறந்த நாளில் வந்தால் அதிகபட்ச அருள் பேரருள் - நமக்குண்டு என்று அது காட்டுகிறது. எனக்கு அதிகபட்ச மலர் oct 7 ம் தேதி கிடைத்தது.

சத்தியம் - முழுசத்தியம் - கடமையுணர்வு, பொறுப்பு, நல்லெண்ணம், பெருந்தன்மை போன்றவற்றுள் ஒன்றை அதிகபட்சம் பின்பற்றினால் அந்த அம்சம் மேலெழுந்து வந்து அதிர்ஷ்டமாக மாறும்.

அருள்மலர் நம்மை நாடி வருவது, நாமே செடியை வளர்த்து மலர் பெறுவது, மனத்தால் மலரைக் கற்பனை செய்வது, அருள் பெறுவதாகும்.

நாமே அருளாக மாற, அல்லது அருள் நம் வழி உலகுக்குச் செல்ல, அன்னை கூறும் வழி பிறருக்கு அன்பு செலுத்துவது அருள் மனிதனுள் நுழைந்து வெளிச்செல்லும்பொழுது அன்பாக மாறுகிறது என்பது அன்னை விளக்கம்.

****

 

 



book | by Dr. Radut