Skip to Content

10.லைப் டிவைன் - கருத்து

The Life Divine -கருத்து
We Know God in the descent; we do not know God in the ascent.

நமக்குக் கடவுளைத் தெரியும்; மனிதனில் கடவுளை நாம் காணவில்லை.

. சிவனடியாரைச் சிவபெருமானாகக் கருதினர்.

. வைஷ்ணவர், அடுத்த வைஷ்ணவனை விஷ்ணுவாகக் கருதினர்.

. இவை நாட்டில் சிறப்பானவர் வாழ்விலிருந்தது உண்மை. பொதுமக்களிடையே இக்கருத்து நடைமுறையில் ஏற்கப்படவில்லை.

. கடவுள் உலகை சிருஷ்டித்தார் என்பதை மனம் ஏற்கிறது.

. ஜடம் பரிணாமத்தால் கடவுளை நோக்கி உயரும்பொழுது, மனிதனாக இருக்கிறது என்ற கருத்தில்லை.

. கோவிலில் விக்ரஹத்தை கல்லாக நினைக்காமல், கடவுளாக மனிதன் தொழுகிறான்.

. சிருஷ்டி ஜடத்தில் முடிகிறது. பரிணாமம் ஜடத்தில் ஆரம்பிக்கிறது.

. பரிணாமத்தில் கடவுள் ஜடத்திலிருந்து வெளிவருகிறார்.

. அதன் முடிவான கட்டம் இன்று மனிதன்.

. நாளை அது சத்தியஜீவனாகும்.

. இக்கருத்தை நாம் ஏற்றால் நாம் மற்றவரைக் கடவுளாக நடத்தவேண்டும்.

. மற்றவரைக் கடவுளாக நினைத்தால்,

. அவரைக் குறை கூறக்கூடாது.

. அவரை வணங்க வேண்டும்.

. அவர் செய்யும் கெடுதல்களை வரமாக ஏற்க வேண்டும்.

. உலகில் தீமையில்லை என ஒப்புக்கொள்ள வேண்டும்.

. Negative என்பதில்லை என்று நம்பவேண்டும்.

. பிறர் நமக்குச் செய்யும் தீங்கு, நன்மை என எண்ண வேண்டும்.

. புயலும், பூகம்பமும் ஆண்டவன் திருவிளையாடலாகும்.

. விஷ ஜந்துக்கள் அற்புதமாகும்.

. பிள்ளையைக் கொடுமைப்படுத்தும் பெற்றோர் கடவுள் எனக் கூறும்படியாகும்.

. வயிற்றில் எழும் பசி ஆண்டவனின் குரலாகும்.

. நாட்டில் போர் மூள்வது ஆண்டவன் செயலெனப்படும்.

. அணுகுண்டும் நல்லது எனக் கூறும்படி நினைக்கவேண்டும்.

. கன்னத்தில் விழும் அறை ஆண்டவனின் அன்புக்கரம் தீண்டுவதாகும்.

. அதேசமயம் அர்ஜுனன் உறவினரைக் கொன்று குவித்தது ஆண்டவனிட்ட கட்டளை என்பதுபோல் நம் வாழ்வில் நாமும் நம் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு பலனைப் பெற, உடல் உழைக்கின்றது. வேலைக்குரியசக்தியை உணர்வு அளிக்கின்றது. மனம் புரிந்துகொள்ள சிந்தனையை நாடுகிறது (consciousness). ஜீவியம் அதே பலனைப் பெற விழிப்புடன் இருந்தால் போதுமானது.

மனம் முயன்று பெறுவது அறிவு.

உணர்வு சாதிப்பது சக்தி.

உடல் பலனைச் சாதிக்கின்றது.

ஜீவனுக்குரிய பலன் ஆன்மீக வளர்ச்சி.


 


 


 


 


 


 



book | by Dr. Radut