Skip to Content

12. அன்னை மறந்து போகும்

அன்னை மறந்து போகும்

உமாபதி சிவம் போன்றவர் பெரிய பக்தர்கள். அப்பைய தீக்ஷிதர் பரம்பரை பெரியது. சிவபெருமான் மீதுள்ள பக்தி, பயித்தியம் பிடித்தாலும் போகக் கூடாது எனப் பிரார்த்திப்பது உயர்ந்த பக்தி. அப்படி பயித்தியம் பிடித்த நிலையில் சிவனைப் பற்றி எழுதிய ஸ்தோத்திரம் பிரசித்தி பெற்றது.

-நம் போன்றவர்க்குப் பிரச்சினை தீர்ந்தவுடன் அன்னை மறந்து போகும்.

- சிறு தொழில் சேவையால் பெருக ஆரம்பித்தவுடன் - 7,8 மடங்கு பெருகியவுடன் - அன்னை நினைவு வாராது என்பதுடன் வீட்டிலுள்ளவர், "இது என்ன தியானம், சேவை, ஏனிப்படி நேரத்தை வீணாக்க வேண்டும்'' என்பார்கள்.

-நம் வீட்டார் அப்படிப் பேசுகிறார்கள் எனில் நம் மனம் அன்னையை விட்டகன்றுவிட்டது எனப் பெயர்.

- மனித சுபாவத்திற்கு ஆதாயம் முக்கியம்.

- ஆதாயத்தை நாடி வருபவர்க்கு அன்னை ஆதாயத்தைத் தருகிறார்.

- ஆதாயத்தைப் பெற்று அன்னையை மறப்பது சட்டம், மறக்காதது விதிவிலக்கு.

- ஆதாயம் அகந்தையை வளர்க்கும்.

- அகந்தை ஆதாயத்தால் தன்னையே அழித்துக்கொள்ளும்.

- அகந்தை அழிவது ஆதாயத்தை நாடியதால் பெற்ற ஆன்மீக ஆதாயம்.

- ஆதாயம் கூட வாராது; அன்னை நம்மைவிட்டு அகலமாட்டார்.

- ஆதாயத்தை ஏற்று, அன்னையை விட்டகன்றவர் கண்ணில் தனக்கு வரவேண்டியது தன்னுடனிருந்தவர்க்குப் போனது தெரிவதில்லை. பெற்றது 10, இழந்தது ஆயிரம்.


 

*******



book | by Dr. Radut