Skip to Content

13.தவறாது, தவறினால் பெரியது வரும்

தவறாது, தவறினால் பெரியது வரும்

ஐந்திற்கு இரண்டு பழுதில்லை என்பது பழமொழி. ஐந்தும் கூடிவரும் என எவரும் கூறமுடியாது. அன்பர்கள் அன்னையை அறிந்தபொழுது, காரியம் தவறாமல் நடக்கும், வேண்டியனவெல்லாம் நடக்கும், நினைத்தனவெல்லாம் நடக்கும், நினைக்காதனவெல்லாம் நடக்கும், அப்படியிருந்தும் அன்னை மறந்துபோகும். ஆனால் முக்கியமானது ஒன்று பிரார்த்தனைக்கு நகராது. அது மனமாற்றத்திற்கு நகரும். நகரும்பொழுது அப்பொழுதே நடக்கும், அற்புதமாக நடக்கும்.

அந்த நிலையிலும் சமர்ப்பணம் பலிக்காது.

சமர்ப்பணம் செய்யமுடியாத நிலையில் இப்படி இத்தனை காரியங்கள் நடக்கும். எதுவும் தவறாது.

தவறாது, தவறினால் பெரியது வரும்.

மிகப்பெரியது வரும், பிரம்மாண்டமானது வரும்.

அப்படி நடந்தாலும் அகந்தை கரையாது, சமர்ப்பணமாகாது. இதுவரை வாழ்விற்குரியன, இதற்குமேல் சமர்ப்பணம். அதைத் தொடர்ந்து சரணாகதி. அவை யோகத்திற்குரியது. ரிஷிகள் முடியாது எனக் கைவிட்ட யோகம் அது. அது நம்மால் முடியாது. நாம் சரணடைந்தால் அன்னை நம்முள் அதை அப்பொழுதே சாதிப்பார். பெரியது என்றால் அரை கோடி வியாபாரம் செய்பவருக்கு 1 கோடி ஆர்டர் பெரியது. 9 கோடி ஆர்டர் பிரம்மாண்டமானதன்று, ஆனால் மிகப் பெரியது. 90 கோடி பிரம்மாண்டமானது. இவையெல்லாம் எல்லா அன்பர்கட்கும் வரவில்லை. ஈடுபாடுள்ளவர்க்கு இவை தவறாது வந்துள்ளன. மனத்தின் வக்ரங்களில்லாத இடத்தில், தூய்மையான மனமுள்ள இடத்தில் வாழ்வு யோகமாகும். வாழ்வில் குறையிருந்தாலும் உழைப்பு, நாணயம்,விஸ்வாசம் போன்றவை அக்குறையை மீறி பலிப்பது மேற்சொன்னது. குறையற்றவருக்கு வாழ்வில்லை.

அவருக்குப் பணம் தேவையில்லை. அவர் வாழ்வு யோகமாகும்.

*******



book | by Dr. Radut