Skip to Content

02.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

                                                       லைப் டிவைன்

                                                         (சென்ற இதழின் தொடர்ச்சி....)        கர்மயோகி
 

XII. Delight of Existence : The Solution

ஆனந்தம் - விளக்கம்

A question arises

ஒரு கேள்வி எழுகிறது.

Why does the ONE take delight in such a movement?

ஏன் ஏகனான இறைவன் இச்சலனத்தில் ஆனந்தப்படுகிறான்?

All possibilities are present in Its infinity.

அதன் அனந்தத்தில் எல்லாச் சந்தர்ப்பங்களும் உள்ளன

The possibilities can be variably realised.

இச்சந்தர்ப்பங்கள் பலவாறு பூர்த்தியாகும்.

The delight of existence lies in this.

சிருஷ்டியின் ஆனந்தம் இங்குள்ளது.

It lies in the mutable becoming.

அது பிரகிருதியின் வளர்ச்சியிலுள்ளது.

It is not in its immutable being.

அது அக்ஷரப் பிரம்மத்தில்லை.

That possibility can be worked out here.

அந்தச் சந்தர்ப்பத்தை இங்கு நிறைவேற்றலாம்.

It is done in the universe.

அதைப் பிரபஞ்சத்தில் செய்யலாம்.

We are part of the universe

நாம் பிரபஞ்சப் பகுதி.

It begins from the concealment of

Sachchidananda.

சச்சிதானந்தம் மறைவதில் அது ஆரம்பிக்கின்றது.

It conceals in its opposite.

தனக்கு முரணானதில் அது ஒளிகிறது.

Delight lies in the self-finding.

கண்டுபிடிப்பது ஆனந்தம்.

The self-finding must be in terms of the opposite.

கண்டுபிடிக்க நாம் எதிரான சந்தர்ப்பங்களை ஏற்கவேண்டும்.

Infinite being loses itself in appearance.

அனந்த ஜீவன் தோற்றத்தில் மறைகிறது.

It is an appearance of non-being.

அது அசத்தின் தோற்றம்

It re-emerges as finite Soul.

அது மனித ஜீவனாக வெளிவரும்.

It is the appearance.

அது தோற்றம்.

Infinite consciousness too loses itself.

அனந்த ஜீவியமும் தன்னை இழக்கும்.

It appears as vast indeterminate inconscience.

பரந்த நிலையற்ற ஜீவனற்ற வாழ்வில் தன்னை இழக்கும்.

It emerges in the superficial consciousness.

மேலேழுந்த ஜீவியத்தில் அது எழுகிறது.

It is limited.

அது அளவுக்குட்பட்டது.

Infinite Force is self-sustaining.

அனந்தமான சக்தி சுயமாக வாழக் கூடியது.

It loses itself in the chaos of atoms.

அது அணுக்களின் குழப்பத்தில் தன்னை இழக்கிறது.

It emerges in the insecure balance of the world.

உலகில் நிலையற்ற நிலையில் அது எழுகிறது.

Infinite Delight loses itself.

அனந்தமான ஆனந்தம் தன்னை இழக்கிறது.

It is lost in the insensible Matter.

அது சொரணையற்ற ஜடத்தில் தன்னை இழக்கிறது.

It emerges as pain, pleasure and indifference.

அது வலி,

சந்தோஷம், பராமுகமாக வரும்.

It is a discordant rhythm.

அது அபஸ்வரம்.

It appears too as love, hatred and indifference.

அன்பு, வெறுப்பு, பராமுகமாகவும் அது தோன்றும்.

Infinite unity loses itself into chaos of multiplicity.

அனந்தமான ஐக்கியம் துண்டுகளின் களேபரத்தில் தன்னை இழக்கிறது.

It emerges as a discord of forces and beings.

சக்தியின் சச்சரவாகவும், ஜீவனின் பிணக்காகவும் அது வரும்.

They seek to recover unity.

மீண்டும் ஐக்கியத்தை அவை நாடும்.

They do so by possessing, dissolving and devouring each other.

கரைவதிலும், விழுங்குவதிலும், ஆட்கொள்வதிலும் அவை வெளிவரும்.

Real Saachchidananda must emerge in this creation.

இச்சிருஷ்டியில் உண்மையான சச்சிதானந்தம் எழவேண்டும்.

Man is the individual.

மனிதன் தனித்தவன்.

He must become a universal being.

அவன் பிரபஞ்சத்திற்குரியவனாக வேண்டும்.

His mental consciousness is limited.

அவன் மனம் குறுகியது.

It must widen to the superconscient unity.

அது உலகத்தைக் கடந்து பரவவேண்டும்.

It embraces all.

அனைத்தையும் அது தழுவவேண்டும்.

His heart is narrow.

அவன் இதயம் சிறியது.

It must learn the infinite embrace.

அனந்த ஜீவன்களை அது அரவணைக்க வேண்டும்.

It must replace its lusts and discords by universal love.

காமம், கோபம் அன்பாக மாறவேண்டும்.

His vital being is restricted.

அவன் உணர்வு சுருங்கியது.

It must become equal to the whole stock of the universe.

அது முழுப் பிரபஞ்சத்திற்குரியதாக வேண்டும்.

It must become capable of universal delight.

அதற்குப் பிரபஞ்ச ஆனந்தம் தேவை.

His physical being is a separate entity.

அவன் உடல் அவனுக்கே உரியது.

It must become one with the whole flow of the individual Force.

அது உலக சக்திகளின் ஓட்டத்துடன் கலக்க வேண்டும்.

That Force is all thing.

அந்த சக்தி அனைத்திலும் உண்டு.

His nature must reproduce unity in the individual.

அவனுடைய சுபாவம் மனிதனில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்.

The harmony, the oneness-in-all of ALLBliss must come there.

சுமுகம், அனைவரும் ஒன்று, அனைத்தும் ஆனந்தம் வரவேண்டும்.

It is a Bliss of the Supreme Existence- Conscious-Bliss.

சத்து, சித்து, ஆனந்தத்தைக் கடந்த ஆனந்தமிது.

Page No.111, Para No.18.


 

Throughout the play the secret reality is the same.

லீலை முழுவதும் இரகஸ்ய சத்தியம், மாறாதது.

It is the same delight of existence.

அதுவே சச்சிதானந்தம்.

It is the same in the delight of subconscious sleep.

ஆழ்ந்த நித்திரைக்குரிய ஆனந்தமும் அதுவே.

The individual emerges later.

மனிதன் பிறகு வருவான்.

There is a struggle and delight in the struggle.

இப்போராட்டத்தில் ஓர் ஆனந்தமுண்டு.

The individual is the centre of all these changes.

எல்லா மாறுதல்களும் மனிதனில் ஏற்படும்.

The individual finds himself amid the mazes of dreams.

கனவுலகச் சிக்கலில் மனிதன் நடுவிலிருக்கிறான்.

Varieties, vicissitudes, perversions, conversions, reversions are the struggle.

மாற்றம், ஏற்றதாழ்வு, குதர்க்கம், தலைகீழ் மாற்றம் ஆகியவை

போராட்டம்.

This is a half-conscious dream

இது அரைத் தூக்கக் கனவு.

The eternal superconscient's delight has self-possession.,

சச்சிதானந்த ஆனந்தத்திற்கு சுய ஆட்சியுண்டு.

The individual must wake into it.

மனிதன் அதனுள் புனர்ஜென்மமெடுக்க வேண்டும்.

He must become one wityh Sachchidananda there

அங்கு சச்சிதானந்தத்துடன் அவன் கலக்கவேண்டும்.

Sachchidananda is indivisible.

சச்சிதானந்தம் அகண்டம்.

This the play of the One, the Lord, the All.

இதுவே இறைவனின் லீலை, ஈஸ்வர லீலை, ஏகனின் லீலை.

It reveals itself to our liberated and enlightened knowledge.

விடுதலையடைந்த ஒளி பெற்ற ஞானத்திற்கு அது தெரியும்.

Ours is the material universe.

நம் உலகம் ஜட லோகம்.

Its view is the conceptive standpoint.

அது தத்துவரீதியாக அறிவதாகும்.

This is that view.

இதுவே அக்கண்ணோட்டம்.

The End.

முற்றும்

*******

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

முயற்சிகளில் சிறந்தது மனத்தால் எழும் முயற்சி. எனவே அதுவே கடுமையானதும்கூட.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சிறு ஆசையை விலக்குதல் சரி; அடக்குவது உதவும்;திருவுருமாற்றம் உயர்ந்தது.


ஸ்ரீ அரவிந்த சுடர்

சுயநலம் செயலை மூன்று நிலைகளில் - பெருந்தன்மை,சாதாரணம், கொடுமையான பாவம் - கணிக்கிறது. தான் பிறருக்குச் செய்யும் அதே காரியத்தைத் தனக்கு வேறொருவர் செய்தால், பெருந்தன்மை கொடுமையாக மாறுகிறது. தான் சம்பந்தப்படாத இடங்களில் அது சாதாரண செயலாகிறது.பிறரில் கொடுமையைத் தன்னில் பெருந்தன்மையாக நினைப்பது சுயநலம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அல்ஜீப்ரா ஓர் உண்மையைக் குறிக்கிறது. கம்ப்யூட்டரில் உள்ள குறியீடுகள் ஓர் எலக்ட்ரானிக் உண்மையைக் குறிக்கின்றன.பிரம்மம் பிரபஞ்சத்தைத் தன்னுள் கொண்டது. பிரம்மத்தின் குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட உண்மையைக் குறிப்பவையில்லை.எதையும் சிருஷ்டிக்கும் சக்தியைக் குறிப்பவை. இது பிரம்மத்தின் தன்மை. சிருஷ்டிபோல் (fixed) மாற்றமில்லாதது இல்லை.

பிரம்மத்தின் குறிப்பு எதையும் குறிக்கும், சிருஷ்டிக்கவும் செய்யும்.

 

*******


 book | by Dr. Radut