Skip to Content

07.அஜெண்டா

“Agenda”

Mother needs a question to respond.

பதிலிறுக்க அன்னைக்கு ஒரு கேள்வி தேவைப்படுகிறது.

நாமெல்லாம் பள்ளியில் படிக்கும்பொழுது, பாடம் புரியவில்லை என மாணவர்கள் எழுந்து கேட்பதில்லை. ஆசிரியரே கேட்கும்படிச் சொன்னாலும், அதனால் ஒரு பையன் கேள்வி கேட்டாலும், அவனை அதிகப்பிரசங்கி என்பர். நமது பரம்பரையில்

பெரியவர்களைக் கேள்வி கேட்காமலிருப்பது மரியாதை.

கேள்வி கேட்காத மாணவன் சொல்லிக்கொடுத்ததைக் கற்பான். அவனுக்குச் சொந்தமான புத்தி வாராது. மேதைகளாகப் பிறந்த குழந்தைகள் வாய் ஓயாமல் கேள்வி கேட்டபடியிருக்கும். கேள்விகள் எழாத மனம் மந்தமான மனம்.

புத்தருக்குக் கேள்வி எழுந்தது. துன்பத்தை எப்படிப் போக்குவது என்பது கேள்வி. பல ஆண்டு தியானத்தில் பதில் கிடைத்தது. மனத்தில் அந்தக் கேள்வி எழாதவர் புத்தர் உபதேசங்களைப் படித்தால் மனதில் நிற்காது. நின்றால் புரியாது. நம் மனத்தில்லாத கேள்விகட்குரிய பதில் பயன் தாராது.

The Life Divine புரியாத புத்தகம். உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது என்ற கேள்வியை பகவான் எழுப்பிப் பதில் தருகிறார். அந்தக் கேள்வி யார் மனத்தை உறுத்துகிறதோ, அவர்கட்கு அது புரியும். சங்கரரும், புத்தரும் கேட்ட கேள்வி அது. The Life Divine அவர்கட்குப் புரியும். இன்று உலகில் நிலவும் தத்துவங்களில் சிருஷ்டியை விளக்குபவை பல.

. பைபிள் ஆண்டவன் உலகை 7 நாட்களில் சிருஷ்டித்தான் என்கிறது.

. பிரம்மா பொம்மை செய்து உயிர் கொடுத்தார் என்பது இந்து மதம் கூறுவது.

. Big Bangஇல் பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டு கல்லிலிருந்து உயிரும்,உயிரிலிருந்து மனிதனும் பிறந்தது விஞ்ஞானி கூறுவது.

ஒருவர் இதுபோன்ற தத்துவங்களை ஆராய்ச்சி செய்தால், அவருக்கு The Life Divine புரியும். அன்னை புதன்கிழமை, சனிக்கிழமை குழந்தைகட்கு விளையாட்டு மைதானத்தில் வகுப்பு நடத்துவார்.

. அவர் கூறுவது ஸ்ரீ அரவிந்தம்.

. ஸ்ரீ அரவிந்தம் சிருஷ்டியை விவரிப்பது.

. சிருஷ்டி எந்த நேரமும் நம்மைச் சூழ்ந்துள்ளது.

. அதை நாம் எப்படி எதிர்கொள்வது என்று யோசனை செய்பவருடைய கேள்வி அன்னைக்குப் பதில் கூற உதவும்.

. கேள்வியை அன்னையே கேட்டு, பதிலும் அவரே சொன்னால் chessஇல் இரு பக்கமும் ஒருவரே ஆடுவது போலிருக்கும்.

. கேள்வி சிந்தனையைக் குறிக்கும்.

. சிந்தனை அறிவுக்கு விளக்கம் தரும்.

*******
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அநியாயம், பாரபட்சம், கோணல், தீமை, தவறு, குறை, தோல்வி ஆகியவைகள் வாழ்வின் பகுதிகள். சாதாரணத் திறமையைவிட அதிகத் திறமையுள்ளவன் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை.அவையும் அவனைப் பாதிப்பதில்லை. சராசரிக்குக் கீழுள்ளவன் வேலை செய்ய ஆரம்பித்தால் இவை அவனைப் பாதிக்கின்றன.(Not Self) புறம், அகத்தைவிடப் பெரியது என அவன் காண்கிறான்.

புறம் அகத்தைவிடச் சிறியவனுக்குப் பெரியது.


 


 



book | by Dr. Radut