Skip to Content

11."எனக்குத் தகுதியில்லை''

"எனக்குத் தகுதியில்லை''

எனக்குத் தகுதியில்லை என்பது பேராசையற்ற அடக்கவுணர்வு. அடக்கவுணர்வுக்கு அனைத்தும் உண்டு. ஆன்மாவால் ஏற்பட்ட அடக்கத்திற்கு வலிமையுண்டு. பயத்தால் ஏற்பட்ட அடக்கத்திற்கு பயத்தின் பலன் உண்டு. ஆஸ்துமா, அலர்ஜியால் பீடிக்கப்பட்டவர் மையம் வந்து பிரார்த்தனை செய்து அவற்றினின்று விடுதலை பெற்றார். "என் கையில் 45/- ரூபாய்மட்டும் இருந்தது. அதைச் செலவுசெய்ய பயம், தயக்கம்.

அன்னை கொள்கைப்படி, அன்னையை நம்பி செலவுசெய்தால் சம்பளம் வரும்வரை செலவுக்குப் பணம் வரும் என செலவிட்டேன். எப்பொழுதோ கைமாற்று என்னிடம் வாங்கியவர் அந்த 1,000ரூபாயைத் திருப்பிக்கொடுத்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது'' என அவர் கூறுகிறார். அது அவருக்கு அன்றே கிடைத்ததாம். அவர் கூறும் சில அனுபவங்கள்:

- இரண்டாண்டிற்கு முன் கடன் தொல்லையால் நான் அன்னையிடம் வந்தேன்.

- அப்பொழுது எனக்கு ரூ.4,390/- மாதச் சம்பளம்.

- வீடு சண்டையும், சச்சரவுமாக இருந்தது.

- சுமுக மலரை நாடினேன்.

- சண்டை விலகி சுமுகம் ஏற்பட்டது.

- இப்பொழுது என் மாதச் சம்பளம் ரூ.9,890/-.

அருள்பெற அனைவரும் தகுதியுடையவர்.

ஆன்மீக அடக்கத்துடன் அதைப் பெறுவது நல்லது.

*******

Comments

11. "எனக்குத்

11. "எனக்குத் தகுதியில்லை''

 Para 1  -  Line  2  -  வliமையுண்டு    -   வலிமையுண்டு

 Please combine Para 1 &  Para 2



book | by Dr. Radut