Skip to Content

03.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

பெரியவனுடைய நண்பன் கூறும் புத்திமதி:

 • பிள்ளை கெட்டுப்போனால் முக்கியக் காரணம்"சேர்க்கை சரியில்லை" என்பதாகும்.
 • சிறுவயதிலிருந்தே பெரியவர்கள் பிள்ளைகளை மட்டமான குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்கமாட்டார்கள்.
 • பெரியவர்கள் வீட்டிலிருந்தாலும், பிள்ளைகள் மீது முழுக்கவனமிருக்கும்.
 • வாழ்வில் முன்னுக்கு வந்தவர்கள் சிலர் நல்ல நட்பால் முன்னுக்கு வந்தவர்கள்.
 • நண்பர்கள் கூறுவதை வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் வயதில் நண்பர்கள் ஒருவர் வாழ்வை நிர்ணயிப்பார்கள்.
 • நல்ல நண்பர்களுடைய உறவு தெய்வம் உடனிருந்து காப்பதற்கு ஒப்பாகும்.
 • நல்ல நண்பர் அமைவது பூர்வஜென்ம புண்ணியம்.
 • எவர் பேச்சையும் ஏற்காதவர்கள் நண்பர் சொல்வதை அப்படியே ஏற்பார்கள்.
 • குரு, தகப்பனார், தலைவர் செய்யும் நல்லதை இனிய நண்பன் செய்வான். அவர்கள் செய்யாததையும் நட்பு செய்யும்.
 • நட்பு நயமானால் நாளெல்லாம் நல்ல நாளானது போலாகும்.
 • பெரியவனுக்கு பார்ட்னர்ஷிப் தெரிகிறது, பார்ட்னர் தெரியவில்லை, அவர் பண்பு தெரியவில்லை. நண்பன் பார்ட்னரை அறிவான்; அவர் பக்குவத்தை அறிவான்; அதைப் போற்றிப் பாராட்ட பெரியவனுக்குப் பண்பில்லை என அறிவான். அதை எடுத்துச்சொன்னான்; இடித்துச் சொன்னான். பெரியவன் ஏற்றுக்கொண்டான். இக்குடும்பத்தில் தாயாரின் பக்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ, அவ்வளவு முக்கியத்துவம் நண்பன் அறிவுரைக்குண்டு. பக்தி நல்லது செய்கிறது; அறிவுரை தவற்றைத் தடுக்கிறது.

ஆபத்தை விலக்குவதும்,அருளை அழைப்பதும் சமம்.

 • கணவருக்கோ, சிறியவனுக்கோ, பெண்ணுக்கோ, அந்த நல்ல வாய்ப்பு அமையவில்லை.
 • சரியான நேரத்தில் உயர்ந்த சொல்லைச் சொல்வது அசரீரி. அதைக் கேட்டுப் பயன்பெறுவது அருள், அதிர்ஷ்டம். காங்கிரஸ் தலைமை 1942-இல் அப்படிப்பட்ட சொல்லை ஸ்ரீ அரவிந்தர் கூறியதைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாடு பிளவுபட்டிருக்காது.
 • 1943இல் 30 இலட்சம் பேர் பஞ்சத்தில் கல்கத்தாவில் இறந்தனர். வைஸ்ராய் வேவல் வந்து மார்க்கட்டை துரிதப்படுத்தி பஞ்சத்தைப் போக்கினார். அதன் முன்னிருந்த வைஸ்ராய் லின்லித்கோவால் அதைச் செய்ய முடியவில்லை.
 • கடும் சொல்லானாலும், ஒரு சொல், நேரத்தில் ஒருவர் சொல்வதால் குடும்பம் அழிவது தடுக்கப்படுகிறது.
 • ஒரு சொல் - ஓம் - உலகை சிருஷ்டித்தது. ஒரு சொல் உயிரைக் காப்பாற்றும். ஒரு சொல் ஓராயிரம் சொல்லுக்குச் சமம்.

ஒரு சொல்லை அறிந்தவர் வாழ்வில் "ஓம்"ஐ அறிந்தவர்.

வேலைக்கார ரங்கன்:

900 ரூபாய் சம்பளம் 9,000 ரூபாய் வருமானமாகும்: அன்னைக்குத் திருடனையும், திருட்டையும் பிடிக்கும்:

 • மனிதன் அன்னையை ஏற்றால், சத்தியஜீவனாகலாம் என்ற வாய்ப்பு எழுகிறது என்பது, வாழ்வில் அன்பர் அவருடைய ஸ்தாபனத் தலைவராவார் என மாறுகிறது. வேலைக்கார ரங்கன் அன்னையை வழிபட்டால், இந்தக் குடும்பத்தின் நிலைக்கு வருவான் என்பது சட்டம்.
 • முடியாட்சி, மன்னராட்சி போய் மக்களாட்சி வந்தபின் எவரும் நாட்டை ஆளலாம் என்று உரிமை வந்தது போல், ஊழியர் தலைவராவார்.
 • ரங்கனுக்கு வந்த வாய்ப்பு எல்லா அன்பர்கட்கும் தவறாது வந்தது. பெறுவது அன்பரைப் பொருத்தது.
 • நம்மை அன்னை ஏற்கவேண்டும். திருடனை விலக்கவேண்டும்; தண்டிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு.
  • இது சரி எனக் கொண்டால், அன்னை மகான்களை ஏற்க வேண்டும், பாமரமக்களை விலக்கவேண்டும், தண்டிக்க வேண்டும் என்று சொல்ல க்கூடாதா?
  • உலகில் தீமையில்லை என்றால் அன்னை ஏன் எவரையும் விலக்க வேண்டும்?
  • உத்தியோகம் நல்லதொழில், திருடு கெட்டதொழில். அதனால், அன்னை ஒன்றை ஏற்று, மற்றதை விலக்கவேண்டும் என்பதும் சரியாகாது.
  • நம் உத்தியோகம் நமக்குச் சரி; திருடனுக்குத் திருட்டு சரி.
  • நம் தொழிலில் திருடு கலந்துள்ளது. நாம் அதைப் பொருட் படுத்துவது இல்லை.
  • திருடனுடைய தொழிலில் சத்தியம் கலந்துள்ளது. நமக்கு அது தெரிவதில்லை.
  • உயர்ந்த மனிதன், தாழ்ந்த மனிதன் என்றிருப்பதைப் போல் தாழ்ந்த ஜீவராசிகள் உள்ளதால், தாழ்ந்த மனிதன் அவற்றைவிட உயர்ந்தவனாயிற்றே; அதனால் அன்னை தாழ்ந்த மனிதனையும் ஏற்கவேண்டும்.
  • நம் குழந்தைக்குத் திருட்டுபுத்தியிருப்பதால் வீட்டைவிட்டு நாம் அனுப்புவதில்லை. அன்னை திருடனைத் தம் வீட்டில் வைத்துக்கொள்கிறார்.
  • திருடன், "பெரிய திருடு"வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தால் அதுவும் பலிக்கிறது.
  • இதனாலெல்லாம் திருடு சரியாகாது.
  • சங்கரர் கொள்ளு சாப்பிட்டதால் சிஷ்யர் கொள்ளு சாப்பிட்டார். சங்கரர் உலையிலிருந்த ஆணியை சாப்பிட்டார்; சிஷ்யர் சாப்பிட முடியுமா?
  • மனிதன் கெட்டவனானால் நல்லவனாக வேண்டும் என்பது நம் கொள்கை.
  • மனிதன் கெட்டவனானாலும், நல்லவனானாலும் கெட்டதையும், நல்லதையும் விட்டு - திருவுருமாறி - அன்னையை அடையவேண்டும் என்பது அன்னை கொள்கை.

ரங்கனுக்கு நம் அந்தஸ்து வரும் என்றால் பெண் "அநியாயம்" என்கிறாள்:
எதிர்வீட்டு பாக்டரிப் பையன் எம்.எல்.ஏ. ஆனான்:
ரங்கனை"நீ மந்திரியாவாய்" என்றால் அவன் மந்திரியாகி விடுவான் என்றால், நான் அதைச் சொல்ல மாட்டேன். அதன் மூலம் எனக்கு நல்லது வரும் என்றால் சொல்வேன்:

 • ரங்கன் உயர்வான் என்பது பெண்ணுக்கு இயல்பாக அநியாயம் என்று தோன்றுகிறது.
  • அவளே பார்த்தது எதிர்வீட்டுப் பையன் எம்.எல்.ஏ.ஆனது.
  • யார், எதுவாகிறார்கள் என்பது நம் கையிலில்லை.
  • இருந்தால் நாம் கொடுக்கமாட்டோம என்ற நினைவை இது காட்டுகிறது.
  • இருந்தால் கொடுக்கமாட்டேன் என்பவருக்கு அன்னை எதுவும் தரமுடியாது.
  • ஆயிரம் பேருக்குக் கொடுப்பேன்; ஆனால், எதிரிக்குத் தர மாட்டேன் என்பதே அன்னை ஏற்கமுடியாத மனநிலை. எதிரிக்குத்தான் முக்கியமாகத் தரவேண்டும் என்பது அன்னை நிபந்தனை.
  • அன்னை நிபந்தனைகட்குப் பின்னுள்ள ஆன்மீக விளக்கமென்ன?
  • இடம் காலியாகாமல் உள்ளே வரமுடியாது என்பது physical law ஜடமான சட்டம்.
  • கொடுக்கும் மனம், எதிரிக்கும் கொடுக்கும் மனம் கண்டத்தை அகண்டமாக்குகிறது. அகண்டம் வெளிப்பட்டால், அகண்டம் உள்ளே வருகிறது என்பது விளக்கம்.
 • நான் சொன்னால் ரங்கன் உயர்வான் என்றால் சொல்லுவேன்" என்பதற்குப் பதிலாகச் "சொல்லமாட்டேன்" என்கிறான் பெரியவன். "எனக்கு நல்லது வரும் என்றாலும் ரங்கன் உயர்வதை நான் பொறுக்க முடியாது" என்பவளை விடப் பெரியவன் தேவலை.
  • பெறுவது சலனம்.
  • அதிகமாகப் பெறுவது கண்டம் அகண்டமாவதால்.
  • இந்த நல்ல எண்ணங்கள் finite ஆக infiniteஆக மாற்றக் கூடியவை.
  • நம் எண்ணங்கள் நாம் யார் என்பதைக் காட்டுகின்றன.
  • சுமுகம் வேண்டும் என்பவர் சத்தியஜீவியத்திற்குரியவர்.
  • பிணக்கை வளர்ப்பவர் vital உணர்வில் வாழ்பவர்.
  • குடும்பம் மேலே போகும்பொழுது மனம் குறுகியதாக இருந்தால் தடையாகும்.
  • மனம் நம் கையில் உள்ளது. எப்படியும் மாற்றலாம். உடனேயும் மாற்றலாம்.
  • "மனம் என் கையிலில்லை" என்பவன் vital person மனத்திற்கு உட்பட்ட விலங்கு மனிதன்.
  • "நமக்கு பாக்டரி வருவது சரி. ரங்கனுக்கு நம் அந்தஸ்து வருவது சரியன்று"என நினைக்கலாம். அதனால் பாக்டரி தான் வாராமற்போகுமே தவிர ரங்கனுக்கு வருவது நிற்காது.
  • தாய்மாமன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தவனை, "செய்யாதே, இதனால் உனக்கு ஏதாவது நல்லது நடந்து விட்டால் என்ன செய்வது" என்ற தாய்மாமன் எத்தனை வருஷம் அன்னையை வணங்கினாலும் அது சாமி கும்பிடுவது போல் இருக்குமே தவிர அன்னையை ஏற்பதாகாது.

மனிதன் என்றால் குறையுடையவன்:

 • இது உண்மை. நிறைவுடைய பகுதியும் மனிதனில் உள்ளது.
 • சமர்ப்பணம் ஆளும் பகுதியில் குறையிருக்காது. Man is always right என அப்பகுதியைக் கூறலாம்.
 • நாட்டுத்தலைவர்கள் சாப்பாட்டை வேளைக்கு வேளை சோதனை செய்வார்கள். எந்த நேரமும் விஷம் கலந்திருக்கும்.
 • நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அக்குறை வர வழியேயில்லை.
 • சர்க்கரை வியாதி, பிளட் பிரஷர், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற வியாதி உள்ளவர்கள் இஷ்டப்படி சாப்பிடமுடியாது. கவனித்துச் சாப்பிடவேண்டும். நல்ல உடல் நலம் உள்ளவர்க்கு அப்பிரச்சினை இல்லை. அவர் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
 • பலரிடமும் கடன் வாங்கியவருக்கு எந்த நேரமும் கடன்காரன் தொந்தரவு வரலாம். கடனே வாங்காதவர் வாழ்வில் அப்பிரச்சினை இருக்காது.
 • கடன்படாதவர், வியாதியில்லாத ஆரோக்கியமானவர், எதிரிகள் இல்லாமல் வாழ்பவருக்கு மேற்சொன்ன பிரச்சினைகள் இல்லை.
 • வாழ்வில், வாழ்வுக்குட்பட்டு, சமூகத்தைஒட்டி வாழ்பவருக்கு எந்த நேரமும் ஏதாவது பிரச்சினை வரும். He is always right என்று அவரைக் கூறமுடியாது.
 • வாழ்வை விட்டகன்று, வாழ்க்கைக்குட்படாமல், சமூகத்தை ஒட்டி வாழாமலிருப்பவருக்கு He is always right அவருக்குத் தப்பில்லை என்ற நிலையுண்டு. அதை அன்பர்கள் அறிவதில்லை. அப்படி ஒரு விஷயமிருப்பதாகத் தெரிந்தால் மேற்சொன்ன நிபந்தனைகளை ஏற்காமல் I am always right நான் செய்வதெல்லாம் சரி என தம்மிஷ்டப்படி நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
 • பிறந்த குழந்தை 10 வயதானால் தான் நிலை என்ற காலம் மாறி வருகிறது. காலம் மாறும்பொழுது failure தவறுதல் குறைந்து வருகிறது. சில இடங்களில் failure தவறுவதில்லை என்றும் ஏற்பட்டுள்ளது. பரீட்சை என்றால் failure உண்டு என்பது பிரபலமான பள்ளிகளில் ஆரம்பநாட்களிலிருந்ததில்லை. ரயில் லேட்டாகவும் வரும் என்பது ஐரோப்பாவில்லை. புத்தகம் பிரசுரித்தால் விற்கும்; விற்காமலுமிருக்கும் என்பது பிரபலமான ஆசிரியர்கட்கில்லை. Failure தவறுதல், குறை எத்தனையோ இடங்களில் குறைந்து வருகிறது. முழுவதும் குறை, தவறுதலில்லை என்ற இடங்களுக்கு ஓரிரு உதாரணம் எழுதினேன். நமக்குப் பழக்கமான விஷயங்கள் - நம் வீட்டுச் சாப்பாடு - நாம் கவனிப்பதில்லை. 600 தென்னம்பிள்ளை நட்டவருக்கு 480 செத்துவிட்டது எனக் கேள்விப்பட்டவர், எங்கள் ஊரில் ஒரு பிள்ளை இறந்துவிட்டால் ஆயிரம் கேள்விவரும் என்றார். சுற்றுலாவிற்கு 75 பேர் போனால் எத்தனை பேர் திரும்பி வந்தார்கள் எனக் கேட்பதில்லை.

நாமறிந்த வாழ்விலும் குறையற்ற முழுமை இருப்பதை
நாம் காண்பதில்லை.

சமர்ப்பணம் செய்யப்பட்ட வாழ்வு குறையற்ற முழுமையுடையது.

அப்படிப்பட்டவரை He is always right என்று கூறலாம்.
மனிதன் குறையுடையவன்; அன்பன் குறையற்றவன்.

பெண்ணின் தோழியின் அக்கா வாழ்வு மலர்கிறது:

 • வாழ்வு தவறுவது வாழ்வின் போக்கு. அது ஏராளம்.
 • வாழ்க்கை, தன்னைச் செப்பனிடத் தவறுகிறது.
 • மரம் சிலையாகச் செதுக்கப்படவேண்டும.
 • செதுக்கப்படுவதும், சிதையும் மரமும் சிலையை உற்பத்தி செய்வதுபோல் வாழ்வு தன்னைச் செதுக்கிக் குடும்ப வாழ்வை உற்பத்தி செய்கிறது.
 • கல் சிதையாமல் சிலையில்லை.
 • மனிதன் இடறிவிழுகிறான், சண்டைபோடுகிறான், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறான். இதனாலெல்லாம் குடும்பம் உற்பத்தியாகிறது. இன்று நாம் குடும்பத்தில் கடமையைச் செய்கிறோம் என்றால் முன்னாளில் பல தலைமுறைகளில் கடமையை நம் முன்னோர் தவறி, பிறகு கடமையின் அவசியத்தை அறிந்தனர்.
 • ஒரு பெண்ணைக் கணவன் கை விட்டுப் போகிறான் என்றால், அவனுடைய வருங்காலத் தலைமுறைகள் அக்கடமையைக் கற்கும் பாதை அது. அதைத் தடுக்கமுடியுமா?
  • தடுத்தால் கடமையை எப்படி வருங்காலம் அறியும்?
  • அப்படித் தடுத்தால், கொஞ்சநாளில் மீண்டும் அக்குறை வெளி வரும்.
 • பையன் பெயிலானால், அடுத்த வருஷம் நன்றாகப் படிப்பான். அவனுக்குப் பாஸ் போட்டால், அடுத்த வருஷம் அவனால் படிக்கவே முடியாது. பாஸ்போடுவது நல்லதா? அவனுக்கு நல்லதைச் செய்யுமா?
 • அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் பாஸாகிறதே. ஏன் அன்னை அதைச் செய்கிறார்?
  • பிரார்த்தனை நம்பிக்கையால் வருகிறது.
  • நம்பிக்கை அறிவைவிட உயர்ந்தது.
  • நம்பிக்கை பிறந்த பிறகு பெயிலானால் நம்பிக்கை போய்விடும்.
  • நம்பிக்கையால் அறிவு வந்தபிறகு அடுத்த வருஷம் அவனால் நன்றாகப் படிக்கமுடியும்.
  • அனைவரும் அறிவால் பெறுவதை இவன் நம்பிக்கையால் பெறுகிறான் என்பது உயர்ந்தது.
  • பெண்ணின் நம்பிக்கைக்குத் தோழியின் அக்கா வாழ்வு எதிரொலியாகச் செயல்படுவது பெண்ணுக்கு அருளுண்டு எனத் தெரிகிறது.
 • அன்னை எதைச்செய்தாலும், எந்த முறையாகச் செய்தாலும் அதில் தவறு இருக்காது. அது அன்னை செய்வதால் உயர்ந்துவிடும்; உயர்ந்ததாக இருக்கும்.
  • அதை அறிபவன் அன்பன்.

காரியம் கூடிவருவது நாம் அன்னையை ஏற்பது:
காரியம் கூடிவாராதது நாம் அன்னையை ஏற்க மறுப்பது அல்லது ஏற்கமுடியாதது:

 • இப்படி, காரியத்தை அறிவது யோகக்கண்ணோட்டம்.
 • நாம் ஒருவருடன் தொடர்புகொண்டவுடன், அவர்கள் வேலை ஆட்டம் காண்கிறது என்றால் என்ன அர்த்தம்?
 • அன்னையின் புதிய சிருஷ்டியாக இவர் வேலை பெற்றவர் எனில், நாம் அதற்கு எதிரானவர் எனப் பொருள்.
 • நமக்கு அன்னையின் புதிய சிருஷ்டி ஒத்துவரவில்லை. மனம் பழமையை conservation நாடுகிறது என்று பொருள்.
 • அவர் மனத்தில் இந்த உண்மைபடுமானால், அதை அவர் ஏற்று மாறி - திருவுருமாறி - செயல்படுவாரானால், அவர் பக்தராகலாம்.
 • சத்தியஜீவியம் எங்குச் செயல்பட்டாலும் அங்குள்ள நிலைமையை அனுசரித்துச் செயல்படவேண்டும்.
  • நாடு அடிமையாக இருக்கும்பொழுது சத்தியஜீவியம் சுதந்திரம் பெற்றுத்தருகிறது.
  • நாடு பிளவுபட்டிருக்கும் பொழுது முதற்காரியம் நாடு ஒன்றுபட வேண்டியது.
  • நாட்டில் வறுமையிருக்கிறது எனில் வறுமை நீங்க வேண்டும்.
  • மனிதன் சோம்பேறி, வேலை செய்யப் பிரியப்படாதவன், அன்னையை நாடிவந்தால், வேலை செய்யாமல் சாப்பிட வேண்டும் என்பான். அவன் முன் அன்னை சக்தி - 1956 பிப்ரவரி 29இல் பொன்னொளி விழுங்கப்பட்டது போல் - பின்வாங்கும். அவன் உட்கார்ந்து சாப்பிடுவான். அவனுக்கு வெட்கம் வாராது. சக்தி தலைவணங்குமே தவிர அன்னைசக்தி அவனுக்கு வெட்கம் தர இயலாது; அவனை வேலை செய்ய வைக்கும் திறன் அதற்கில்லை.
  • அதுபோன்ற இடம், அதே இடமில்லாவிட்டாலும், அனைவரிடமும் உண்டு. அதை நம்மிடம் காண்பது அறிவு.
  • இக்கதையில் தாயாரிடம் நாம் கண்டால் நல்லது.
  • அன்னைசக்தி குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு வேண்டும் என அவர் நினைப்பது அதுபோன்ற வெட்கம் கெட்ட செயல். அதுவே அவருக்கு அருளைப் பெற்றுத்தருகிறது.
  • தாயாரால் அந்த எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை.
  • நம்மால் எந்த இடத்தில் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என நாம் பார்த்தால் எதையும் சமர்ப்பணம்செய்ய முடியவில்லை எனத் தெரியும்.

நீ எப்பொழுது போனாலும் கேட்டைத் திறந்து போட்டு விடுவாய்; போன் பேசினால் ரிஸீவரை மீண்டும் சரியாக வைப்பதில்லை; மேஜை ஒழுங்கீனமாக இருக்கும்; இவையெல்லாம் சரியில்லாமல் சமர்ப்பணம் ஆரம்பிக்க முடியாது :

 • தோழியின் அக்கா பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்ய முடிவு செய்தவுடன், அவள் பிரச்சினை தீர்ந்து போனதைக் கண்ட பெண் சமர்ப்பணத்தை மேற்கொள்ள முடிவு செய்து தாயாரைக் கேட்கிறாள். தாயார் மேற்கண்ட பதிலைக் கூறுகிறார்.
 • சமர்ப்பணம் மிக சக்தி வாய்ந்தது. அதனால் அதை எளிதில் ஆரம்பிக்க முடியாது.
 • சமர்ப்பணம் சரணாகதியில் முடியும். பிரம்மம் தன் நிலையை விட்டிறங்கி வந்து - அதைச் சரணம்செய்து - உலகைச் சிருஷ்டித்தது. நாம் மீண்டும் பிரம்மத்தையடைய அதே உபாயத்தை - சரணாகதியை - மேற்கொள்கிறோம். எனவே சரணாகதி
  • உலகை சிருஷ்டித்த சக்தி;
  • மனிதன் பிரம்மமாகும் சக்தி;
  • சிருஷ்டியில் அதிகபட்ச சக்தியுள்ள கருவி.
 • The Life Divine இல் ஓர் அத்தியாயம் நன்றாகப் புரிந்தபின், அதன் கருத்துகளை மனத்தில் வரிசையாகக் கொண்டுவரலாம். மனப்பாடமாகச் செய்தால் புரியாது; ஜீவனிருக்காது. வேகமாகச் சொல்லலாம்; பயன் தாராது. முதல் கருத்தை நினைத்தவுடன் அடுத்தது நினைவுவந்தால் முதல் கருத்துப் புரிகிறது என்று பொருள். அப்படி எல்லாக்கருத்துகளும் வரிசையாகத் தாமே தம்மை நினைவுபடுத்தினால் அவை நமக்குப் புரிகின்றன எனக்கொள்ளலாம். அப்படி நினைவுகூறுவது ஒளிமயமாக உள்ளே தெரியும். அது ஒளிப்பிழம்பாக, ஒளி வெள்ளமாக நம் ஜீவனைப் பிளந்து ஊடுருவுவதைக் காணலாம். அந்த அனுபவம் சற்றுநேரமே இருக்கும். அனுபவம் அதற்குமேல் தொடர்ந்தால் ஒளி பொன்னொளி ஆகும். பொன்னொளி ஸ்ரீ அரவிந்தராகும். இவ்வனுபவம் பெற்றவர் அதன் பிறகு எதைப் படித்தாலும் பொன்னிறப்பொறிகள் எழுத்தில் இங்கும், அங்குமாகத் தெரியும். வருஷக்கணக்காக ஓர் அத்தியாயத்தில் ஊன்றி இப்பலனைப் பெறலாம்.
 • ஓர் அத்தியாயத்தில் பெற்ற பலனை அடுத்த அத்தியாயத்தில் பெற 10 ஆண்டுகட்குப் பதிலாக 7, 8 ஆண்டுகளில் பெறலாம். பக்குவம் இருந்தால் ஓரிரு ஆண்டுகளிலும் பெறலாம். அத்தியாயத்தைத் தொடங்கும்முன் சமர்ப்பணத்தை மேற்கொண்டால், சமர்ப்பணம் செயல்பட்டால், படிக்கும் முயற்சி சமர்ப்பணமானால்

  அன்றே அவ்வனுபவம் அடுத்த அத்தியாயத்தில் கிடைக்கும்.

 • 56 அத்தியாயங்களும் சமர்ப்பணத்தால் தங்கள் ஆன்மீகச் சத்தியத்தை (reveal) வெளிப்படுத்தினால், நூல் முழுவதும் - ஸ்ரீ அரவிந்தம் - அன்பருக்கு மொத்தமாக, ஞானமாக மனத்திரையில் எழும். அது பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பொன்மயமான உருவமாகும்.
 • சமர்ப்பணம் பெரியது, முடிவானது, முழுமையானது, முக்கியமானது.

கணவருக்கு ஒரு வருஷம் லீவு உரிமையாக வருகிறது:
பெண் அம்மா சொல்வதைச் செய்ய முயன்றால் எரிச்சல் வருகிறது என்று கண்டாள்:
தாம் போனைச் சரியாக வைப்பதில்லை எனப் பார்த்தாள்:

 • கணவருக்கு லீவு உரிமையுடன் வருவதன் அர்த்தம் விளங்கவில்லை. சௌகரியமாகப்பட்டது.
 • மனிதனுக்குப் பெறுவது தெரிகிறது. கொடுப்பவர் தெரியவில்லை. சூட்சுமத்தில் குருடு. காரணமும் புரிவதில்லை.
 • பெண் நல்லவள், அடக்கமானவள். அம்மா சொல்வனவெல்லாம் நன்றாக இருப்பதால் செய்யலாம் என ஆசைப்பட்டாள். போனைக் கூடச் சரியாக வைக்கத் தெரியாத பெண். உடலுக்கு அடிப்படையான பயிற்சியில்லை. அவள் எப்படி ஆத்மாவுக்குப் பயிற்சி தரமுடியும்?
 • எதற்குமே இலாயக்கில்லாத பெண் முடிவான கட்டுப்பாட்டை ஏற்க முயல்வது
  1. அடக்கமானவள் என்பதாலும்;
  2. வீட்டின் சூழல் அன்னைச் சூழல் என்பதாலுமாகும்.
 • போனில் நெடுநாள் பழக்கமுள்ளவரும், எதையும் அழகாகச் செய்யும் பாங்குள்ளவரும், சமர்ப்பணம் செய்யக்கூடியவரும் போனை அழகாகப் பொருத்தமாக வைப்பார்கள். இது எதுவும் இல்லாத பெண்.
 • போனைப் பொருத்தமாகத் திரும்பவைப்பது என்பது அச்செயலுக்குரிய ரூபம் (forn). ரூபம் சரியாக இருந்தால் force பாவம் சரியாக இருக்கும். ரூபமும், பாவமும் சரியாக இருந்தால் அவை எழும் உற்பத்தி ஸ்தானமான (spiritual determinnts) எட்டு அம்சங்கள் சரியாக இருக்கும். அவை புருஷத்தொடர்புள்ளவை என்பது ஆன்மீக விளக்கம். சரியாக வைக்கவில்லை என்றால் சைக்கிளில் ரோட்டில் போகச் சொன்னால், தார்போட்ட இடத்தில் சைக்கிளை ஓட்டினால் சரியாக வரும்; தார் போடாத மண்ணில் ஓட்டினால் சைக்கிள் சரியாக ஓடாது. சைக்கிளைத் தார்ரோட்டில் ஓட்டவேண்டும் எனத் தெரியாதவன் அல்லது ஓட்டமுடியாதவன் சைக்கிளுக்குப் புதியவன். இப்பெண் போனுக்குப் புதியவள் என்பது மட்டுமன்று,
  • ஒழுங்கான செயல் பயிலாதவள்.
  • உடலுக்குச் செயலுக்குரிய ரூபம் வரவில்லை.
  • அவளுக்கு ஆதாயமனப்பான்மை இருப்பதும், போனைச் சரியாக வைக்காததும் ஒரே அம்சமாகும்.
  • தாயார் ஒரு கோடி எனில் பெண் எதிர்பக்கத்துக் கோடியாகும்.
  • பெண் தாயாரைப்போல இருப்பாள் எனில் அடக்கமாக இருக்கிறாள். தாயாருடைய ஆன்மீகத்திறன் வரவில்லை. மனம், உயிர் தாண்டி தாயாருடைய உடலுக்குரிய திறன் (skills)வரவில்லை. கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படும் வயதில் புத்தகம் நேராக தலைகீழே இருக்கிறதா புரியவில்லை எனில் எழுத்துப் பயிலவில்லை என்று நாம் அறிகிறோம்.
 • தியானத்தில் பெண் எரிச்சல்படுகிறாள். அவளுடைய எரிச்சலும், பெரியவனுடைய குதர்க்கமும், கணவருடைய கடுமையும் வறுமையின் சுவடுகள்.

பெரியவன் அரசியல் கூட்டத்திற்குத் தலைமைதாங்கினான்:
மந்திரி ரங்கனைக் கவனித்தார்:

 • மிகச்சிறிய நல்லதற்கும் பெரும்பலன் வரும் சூழல் பூமியில் உள்ளது என்கிறார் அன்னை.
 • ரங்கனைப்பற்றி பேசினார்கள். மந்திரி அவனைத்தேடி வந்துவிட்டார்.
 • பெண் நல்லவார்த்தைப் பேசப் பயப்படுகிறாள்.
 • பெரியவனுக்குத் தாங்கவில்லை. ஏதாவது நடந்துவிடப் போகிறது எனப்பயப்படுகிறான்.
  • அப்படி பயம் எழுவது ஆழ்மனத்தில் subconscious.
  • அதற்கு வீச்சும், சக்தியும் அதிகம்.
  • அதனால் அது உடனே பலிக்கும்.
 • தாயார் தவிர வீட்டில் பெண்ணுக்குத் தான் நல்லமனம். அவளுக்கே மனம் தயங்குகிறது. அது வீட்டின் மனநிலையைக் காட்டுகிறது.
 • நாடு முன்னேறும் நேரம் - இன்று நமக்கு அப்படிப்பட்ட நேரம் - இன்று டிரைவராக இருந்தவன், நாளை பெரிய குபேரனாகிறான். கவனித்தால் எல்லாத்தொழில்களிலும் அதுபோல் இளைஞர்கள் திடீர், திடீரென உச்சக்கட்டத்திற்கு உயர்ந்துவிடுகிறார்கள். பணம், பதவி, படிப்பு, பாராட்டு, பிரபலம் ஆகியவை பெருகிவருகின்றன. The collective subconscious is mature and confers boons. சமூகம் ஆழ்ந்துணர்ந்து வாடி வதங்கிய உள்ளங்களை உயர்த்தக் கங்கணம் கட்டிக்கொண்டு அவர்களில் யாராவது ஏதாவது முயற்சி எடுக்க மாட்டார்களா எனக் காத்திருக்கிறது.
  • மேல்லோகத்தில் பெரிய ஆத்மாக்கள் தகுந்த கருவுக்காகக் காத்திருப்பது ஆன்மாவின் வளர்ச்சி.
  • அதன் பிரதிபலிப்பு சுபிட்சம்.
  • ரங்கன் பெரிய குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் அவனுக்கு இயல்பாக உயர்ந்த குணங்களுண்டு.
  • பொறாமைப்படுவதற்குப் பதிலாக என்ன நடக்கிறது என அறிய முயலவேண்டும்.
   • அது தெரிந்தால், நாம் அதைக் கற்க முன்வரவேண்டும்.
   • அது நம் ஆழ்மனத்தை அடைந்தால் சமூகம் இன்று மக்களுக்குச் செய்வதை நாமே செய்யலாம். நாம் சமூகத்தில் அதிர்ஷ்டத்தின் கருவியாக இருக்கலாம்.
   • நாம் அன்னைக்கு அருளின் கருவியாகலாம்.
   • நாம் பெறும் அருள் நம்முள் பேரருளானால் நாம் அருளின் கருவியாகலாம்.
   • திறமையில் நம்பிக்கை போனால் அருள் பேரருளாகும்.

பெண் தன் முடிவைச் சமர்ப்பணம் செய்தாள்;
அது சமர்ப்பணமாயிற்று:
மனம் மலைபோலக் கனத்தது;
இன்பமாகக் கனத்தது:
அண்ணன், தம்பி, அப்பா, பார்ட்னர் பெண்ணுடன் பிரியமாக நெடுநேரம் பேசினர்:
பால்பாயிண்ட்பேனா எழுதாதது எரிச்சல்படாமருலிந்தபொழுது நன்றாக எழுதியது:
குழந்தை வாயில் மாட்டிக்கொண்ட பொருள் தானே வெளிவந்துவிட்டது:
உடல் கனத்தது; உடல் லேசாயிற்று:

 • ரங்கன் விஷயத்தில் மனம் மட்டமாக இருப்பதைப் பெண் அறிந்து மாற முடிவு செய்து முடிவு சமர்ப்பணமானதில் அனைவரும் இதுவரை இல்லாததுபோல் பிரியமாகப் பேசியது, பேனா, குழந்தை விஷயம் பெண்ணைப் புது மனுஷியாக்கிய போதிலும், எண்ணம் சமர்ப்பணம் ஆனதால் இந்த மாறுதல் என்று பெண்ணுக்குத் தெரியவில்லை.
 • இது திருவுருமாறும் சமர்ப்பணம். பலன் கருதிய சமர்ப்பணமில்லை. பலன் மனத்திற்குரியது. Psychological growth. இருந்தும் இது unconscious தானறியாத சமர்ப்பணம். தானறியும் சமர்ப்பணமும், சரணாகதியும் இதைக் கடந்தவை.
 • வாழ்வில் தம்மை மறந்த இன்பம் ஒரு முறையும் அறியாதவர் ஏராளம். அண்ணனுக்கும், தம்பிக்கும் வீட்டில் ஒரு பெண்ணிருப்பது நினைவு வருவதில்லை. பார்த்தால் தான் நினைவுவரும். பார்ட்னர் எப்பொழுதும் மரியாதையாக, பிரியமாகப் பேசுவார். இம்முறை போனில் பிரியமாக, மரியாதையுடன் போனை வைக்க முடியாதபடிப் பேசினார். கை, கால், முகம் வசதியானவர்க்குச் செழிப்பாகவும், இல்லாதவர்க்கு வறண்டும் இருக்கும். வறண்ட தோல் செழிப்பாக உடனே மாறாது. அதற்கு வசதியுடன் சந்தோஷமும் வரவேண்டும். பெண்ணிடம் காணும் மாறுதல் அத்தகையது. செல்வச் செழிப்பு coarse உடல் எடை கூடியது போன்றது.ஆன்மீகச்செழிப்பு பொலிவானது. செழிப்பு,
  • நன்கு சாப்பிட்டு வந்தால் எடை அதிகரிக்கும்.
  • சந்தோஷமும் சேர்ந்தால், பளபளக்கும்.
  • படிப்பாலும், பண்பாலும் வருவதானால் பளபளப்புக்கு உயர்விருக்கும்.
  • ஆன்மவிழிப்பால் வருவதானால் பொலிவுக்கு சக்தியுள்ள கம்பீரம் தெரியும்.
  • பெண் சற்றுநேரம் பெற்ற பொலிவு அது போன்றது.
  • மட்டமான மனம் தன் முடிவால் உயர்வது, வளரும் ஆன்மா வெளிப்படுவது — திருவுருமாற்றம்.
 • பால்பாயிண்ட் பேனாவில் இங்க் வருவதும், வாராததும் நம் கையிலில்லை. நம் நாட்டுப் பேனாவில் 10இல் 7 பேனாவில் வரவில்லை என்றால் பிறகு இங்க் வாராது. வெளிநாட்டுப் பேனாவில் 100இல் 99 பேனா தடையின்றி எழுதும். எதுவும் நம் கையிலில்லை. சமர்ப்பணத்தால் பேனா தவறாமல் நல்ல முறையில் எழுதும். அது சமர்ப்பணம் ஜடத்தை அசைப்பதாகும்.
 • குழந்தை வாயில் அடைபட்ட பொருளில் விஷயம் எப்படியுமிருக்கும். சமர்ப்பணம் குழந்தையை அசைத்ததா, பொருளை அசைத்ததா என்று நமக்குத் தெரியாது. விவரமாகக் கவனித்தால் அது புரியும்.சமர்ப்பணம் பலன் தந்தது உண்மை.
  • குழந்தை பெண்ணின் சமர்ப்பணத்தால் தன்னைக் காப்பாற்றி இருந்தால் அது உயிருடைய உணர்வு (vital life response).
  • பொருள் சமர்ப்பணத்தைக் கேட்டு வெளிவந்திருந்தால், அது (Matter's response) ஜடம் சமர்ப்பணத்திற்கு அளித்த பதில்.

இனி உள்ளே வேலையிருப்பதையும், அது மிகக்கடினமானது என்பதையும் பெண் புரிந்துகொண்டாள். அம்மாமீது இதுவரை இல்லாத பாசம் எழுந்தது. அன்னை, நெஞ்சை நிரப்பியவர்கள், அதையும் கடந்து பரவுவதை ஆனந்தமாக உணர்ந்தாள். மனமும், உடலும் கரைந்தன. உடல் லேசாகிக் காற்றில் பறப்பது போலிருந்தது. என்ன என்று புரியவில்லை. கனப்பதும், லேசாக இருப்பதும் இன்பமான உணர்வுகள் எனத் திட்டவட்டமாகப் புரிந்தது:

 • பெண் பெற்றது ஆன்மீக அனுபவம். சைத்தியப்புருஷன் தரும் அனுபவம்.
 • எரிச்சல்படாமலிருப்பது (non-reaction, equality) மிகக் கடினம் என்று புரிவது (subtle knowledge) சூட்சும ஞானம்.
 • அம்மா மீது இதுவரையில்லாத பாசம் எழுவது தாய்ப்பாசம் ஆன்மீக மெருகு பெறுவதாகும்.
 • நெஞ்சு நிரம்புவது உணர்வு நிறைவது. அதையும்கடந்து ஆனந்தமாகப் பரவுவது ஆன்மீகச்சூழல் ஜீவனில் பரவுவதாகும் (spiritual atmosphere spreading all over the being).
 • மனமும், உடலும் கரைவது அவற்றிலுள்ள தமஸ் கரைவது.
 • உடல் கனப்பது உடலை ஆன்மா நிரப்புவது.
 • உடல் லேசாவது, கனத்தவுடல் கனத்தைக் கிரஹித்துக் கொண்டது.
 • என்ன என்று புரியாதது மனம் வேலை செய்யவில்லை என்பது.
 • கனத்தாலும், லேசானாலும், ஆன்மாவின் செயல் என்பதால் இன்பமாக இருக்கின்றது.
 • இவையெல்லாம் பெரிய மாற்றங்களானாலும், சுபாவத்தை அந்த நேரம் கடந்து வேலை செய்யுமென்றாலும், சுபாவத்தை மாற்றும் திறனுடையவையில்லை. பெண்ணின் ஆதாய மனப்பான்மையை இவை தொடக்கூடியவையில்லை.
 • பெண் அடக்கமானவள், நல்லவள். பெரியவன்போல் குதர்க்கமில்லை. சிறியவன் போல் எதையும் அறியாதவளில்லை. தகப்பனார் போல சொத்தையில்லை என்பதால் இந்த ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன. இவை மற்றவர்க்குக் கிடைக்கவில்லை.
 • இந்த அனுபவம் ஏற்பட்டபின் ரங்கனைப்பற்றிப் பொறாமையாகப் பெண்ணால் நினைக்கமுடியாது. இந்த அனுபவம் உள்ளபொழுது நிச்சயமாக நினைக்கமுடியாது. அந்த மாற்றம் தற்காலிகமானது என்றாலும் திருவுருமாற்றம்.
 • உள்ளே வேலையிருக்கிறது என்று தெரிவது அகம் என்றொரு இடம் இருப்பது தெரிவது.
 • நமக்கு அப்படியொரு இடம் உண்டு, அது உள்ளேயிருக்கிறது எனத் தெரியாது.
 • அகத்தை அறிவது அனைத்தையும் அறிவது.
 • அகத்தை அறிவது ஆண்டவனை அறிவது.
 • பெண்ணில் ஏற்பட்ட மாற்றம், அடக்கமும், நல்ல குணமுமிருந்தால் வீட்டில் மற்றவர்களில் என்ன மாற்றம் வரமுடியும் எனக் காட்டுகிறது.
 • "உள்ளே வேலையிருக்கிறது" என்ற கருத்து உயர்ந்த ஆன்மீக உண்மை.
 • பெண் தாயார் போலிருப்பதால், முதல் நல்ல மாற்றங்கள் பெண்ணில் தெரிகின்றன.

தம்பி மனைவிக்குக் கான்சர்; தாயார் அதை நம்பவில்லை:
தம்பியைப் பிரார்த்திக்கச் சொன்னார்:
தம்பி மனைவியிடமிருந்து அது தவறான செய்தி எனத் தகவல் வந்தது:

 • என்ன வந்தது, ஏன் வந்தது, என்ன ஆயிற்று, எப்படிப் போயிற்று என்ற ஆராய்ச்சி முழுப்பலன் தரும் என்றாலும், எதையும் அந்த விஷயம் சூழலிலிருக்கும் பொழுது பேசக்கூடாது.
 • விஷயம் சூழலிலிருந்தால் நாம் பேசுவது அதற்கு உயிரளிக்கும் என்பது சூட்சுமச்சட்டம்.
 • பல ஆண்டுகள், பல மாதங்கள் என்பது கணக்கில்லை. சூட்சுமச் சூழலிலிருந்து விஷயம் விலகியபின் பேசலாம். அதற்குமுன் பேசக்கூடாது.
 • தரித்திரம், அதிர்ஷ்டம் என்ற இராசிக்குத் தகுந்தாற்போல் பேச்சு எழும்.
  • தரித்திரத்திற்கு ஓர் அடையாளம், சூட்சுமச் சூழலைச் சீண்டும்படி நடப்பது.
  • வீட்டிற்குக் கார் வந்தபின், "எனக்குக் கார் வேண்டாம். பஸ்ஸில் போகிறேன்" என எவருக்கும் தோன்றாததை ஒருவர் பேசினால், வீட்டில் எத்தனைக் காரிருந்தாலும் அவருக்கு எந்தக் காரும் உதவாது என்ற நிலை உருவாகும்.
 • என்ன சொல்கிறோம் என்பது முக்கியம். ஏன் சொல்கிறோம் என்பது அதைவிட முக்கியம். அன்று பேசியது தவறு என்று இன்று மனம் உணர்ந்தால், நிலைமை மாறும்.
 • பிறவியிலேயே தரித்திரமானவர் அன்னையிடம் வந்து அடக்கமாக இருந்து பெருஞ்செல்வரானதுண்டு. பிறப்பு தரித்திரமானால், அவர் திருவுருமாறினால் அதிர்ஷ்டம், உலகில் தரித்திரமான அனைவருக்கும் வரும்.
 • தாயார் வீட்டில் நல்லநிலைமை. இருந்தாலும், இருப்பதில் குறைகள் உண்டு. அதனால், கான்சர் செய்திவருகிறது. கனத்தசூழலிருப்பதால், செய்தியை நம்பாவிட்டால், செய்தி விலகும் எனத் தாயார் அறிவார். அது நடந்தது.
 • தம்பியின் மனம் செய்தியை நம்பாததால், தியானம் இலயமாயிற்று. அப்படிப்பட்ட தியானத்தில் எதுவும் கரையும்.
 • அக்காளுக்கு அதிர்ஷ்டம் வந்தால், அடுத்தகட்ட உறவினருக்கு - தம்பிக்கு - என்ன வரும் என்பதற்குச் சட்டம் உண்டு.
  • மனம் நல்லபடியாக இருந்து, அக்காளிடம் பிரியமிருந்தால் அதிர்ஷ்டம் வரும்.
  • மனம் சாதாரணமாக இருந்தால், அவர் ஜாதகப்படி நடக்கும்.
  • மனம் வெறுப்பாக இருந்தால், அவ்வெண்ணம் அவர் வாழ்வில் பலிக்கும்.
  • பாராமுகமாக இருந்தால், வரும் பேரதிர்ஷ்டம் தவறும்.
 • செய்தி எப்படி மாறுகிறது என்பதும் சூழலின் தன்மையைப் பொருத்தது.
  • கனத்தசூழலில் செய்தியே தவறு என வரும்.
  • சாதாரணச் சூழலில் டெஸ்ட்டில் செய்தி மாறும்.
  • வலுவில்லாத சூழலில் வந்தத, பிரார்த்தனையால் போகும்.

பெண்ணுக்கு அன்னை நினைவாகவேயிருக்கிறது:
என் நண்பர்கள் எல்லாம் நான் ஏதோ புது மேக்கப் போடுவதாகப் பேசுகிறார்கள்:

 • "தம்பியின் மனைவிக்குக் கான்ஸர்" என்று வந்த செய்தி இல்லையென மாறியது வீட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.
 • ஆர்ப்பாட்டம் குறைந்து அமைதியாயிற்று வீடு.
 • கான்சரில்லை என்பது ஆச்சரியம். இந்நிகழ்ச்சி மனத்தை உலுக்கி, அன்னையை ஏற்கச் சொல்லியது பெரியது. ஆனால், மனம் உள்ளிருந்து அன்னையை அறிந்து ஏற்பது பெரியது; நிலையானது; ஆத்மாவுக்குரிய நம்பிக்கை.
  • புறம் ஏற்படுத்தும் நம்பிக்கை பயிருக்கு நீர்பாய்ச்சுவது போன்றது.
  • அகம் நம்பிக்கையால் மலர்வது மழை பயிரை ஆசீர்வதிப்பது போன்றது.
  • கணவர் கேட்ட விவரங்களை மனைவி, "இப்பொழுது பேசக் கூடாது" என்று கூறி மறுத்துவிட்டார். கணவரே கேட்காமல் இருப்பது பக்குவம். அது அவருக்கில்லை. தம்பிக்கிருந்தது.
  • பெண்ணின் மனம் கணவர்போல் அர்த்தமற்றதாகவோ, தம்பி போல் நிறைவுடையதாகவோ இல்லாமல், நடுநிலையிலுள்ளது. அவள் முகம் பொலிவுபெற்றது. தாயாரிடம் அதிகமாக நெருங்கி வருகிறாள்.
  • The Life Divine படித்தால் ஞானப்பொலிவு வரும். பெண்ணுக்கு நம்பிக்கையால் பொலிவு எழுகிறது. சமர்ப்பணம் செய்தால் முழுமையான பொலிவுண்டு. மனம் அன்னையைத் தானே நாடினால் அது அன்பின் பிரகாசம். படிப்பால் வரும் பொலிவு தலைக்கு மேலிருந்து வருவது. நம்பிக்கையால் வருவது ஆத்மாவிலிருந்து எழுவது. சமர்ப்பணப் பொலிவு சைத்தியப்புருஷனுக்குரியது. அன்பால் வரும் பிரகாசம் ஆத்மா ஆனந்தத்தைக் காண்பதால் உற்பத்தியாவது. 12 வயதில் முகக்களை இளமைக்குரியது. வசதியான குடும்பத்தில் வளரும் குழந்தைக்கு முகம் களையாக இருப்பது நல்லசாப்பாடு தருவது. புத்திசாலிப் பையன் முகம் பளிச்சென இருப்பது அறிவுக்குரியது. வேதம் ஓதும் வீட்டில் 12வயதுப் பையன் முகம் தளதள என இருப்பது வித்வக்களை. பரம்பரையான செல்வர் மந்திரியானால் அவர் வீட்டுப் பையன் முகத்தெளிவு அந்தஸ்து தருவது. இயல்பாகக் குதூகலமான பையன் அழகாக, கலகலப்பாக இருப்பது vital cheerfulness உணர்வின் செழிப்பு. நல்லஎண்ணம் தரும் களை வேறு. களை வயதாலும், ஆன்மாவாலும், அந்தஸ்தாலும், சுபாவத்தாலும் வருவதை நாமறிவோம். இந்த ஒவ்வொரு நிலைக்கும் உரிய ஆன்மீகப்பொலிவு அழகாக, களையாக, அற்புதமாக எழுவதைக் காண்பது ஓர் ஆச்சரியம்.
  • தாயார் புத்தகங்களைப் படிப்பது அவற்றின் பெருமையை அந்தராத்மா அறிந்து, அதனால் மனம் அன்னையோடு ஈடுபடுவதாகும். கணவரும், பிள்ளைகளும் படிப்பது, "இது முக்கியம், படிக்க வேண்டும்" என்று படிப்பதாகும். மேல்நாட்டார் ஸ்பூனால் சாப்பிடுவது ஸ்பூன் மூன்றாம் உதடுபோல் செயல்படும். கிராமத்து மனிதர் நகரத்திற்கு வந்தால், ஸ்பூனால் சாப்பிட்டால், ஸ்பூன் வாயில்படாமல் சாப்பிட முயல்வதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். தாயார் படிப்பதற்கும், மற்றவர் படிப்பதற்கும் அதுபோன்ற வித்தியாசம் உண்டு. தாயாருடைய ஈடுபாடே குறையானது.

ஏம்மா, எங்களை எல்லாம் படிக்கச் சொல்லவில்லை:
சொல்லியிருந்தால், நான் படித்திருக்கமாட்டேன்:

 • சொன்னால் செய்யக்கூடாது என்பதை நாம் வக்கிரபுத்தி என்போம். Negation என்று அதற்குப் பெயர்.
 • நமக்குத் தெரிந்தவர்களைஎல்லாம் இக்கண்ணோட்டத்தில் பார்த்தால் எவரும் விலக்காக இருக்கமாட்டார்கள்.
 • நம்மையே கவனித்தால் ஒரே ஒரு செயல் தவறாமல் நாம் இப்படிப் பழகுவது தெரியும்.
 • அப்படி நம்மைப் பலநாட்கள் கவனித்தபின் அது நமக்குள்ள குணம் என மறந்துபோகும்.
 • 2 வயதில் குழந்தை ஏன் ஓடுகிறது? அதனுடம்பில் தெம்பு பொங்கி வழிவதால் ஓடுகிறது. அது உடல் வளரும் வயதின் தன்மை. மனம் என்பது சிந்திப்பது. காண்பதை, கேட்பதை மனம் அறிய முயல்வது சிந்தனை. சிந்தனையின் ஆரம்பம் மறுப்பு. எது சொன்னாலும் "வேண்டாம்" எனச் சொல்லும் குழந்தை மனத்தால் சுறுசுறுப்பானது; புத்திசாலிக்குழந்தை. மறுப்பு மனத்தின் சிந்தனைக்கு ஆரம்பம் என்றால், ஏற்பது சிந்தனை முதிர்ந்து முடிவது. நம்மையே நாம் கவனித்து, மறுப்பை ஏற்பாக மாற்றமுயல்வது ஒரு ஜென்ம முன்னேற்றம். அது எளிதன்று. சோதனையாக உள்ளிருந்து முயன்று வெற்றிபெற்றால்,வாழ்வின் முடிவில், அடுத்த ஜென்மத்தில் நடக்கவேண்டியது இப்பொழுது நடக்கும். இன்க்ரிமெண்ட் ஆண்டுதோறும் வருவது. பிரமோஷன் சில ஆண்டுகட்கு ஒரு முறை வருவது. இதையொருவர் முயன்று வெற்றி பெற்றால், ஓய்வுபெறும்பொழுது வரும் சம்பளம் நாளைக்கு வரும். அதையே சமர்ப்பணத்தால் செய்தால், டிரைவர் மந்திரியானது போன்ற மாற்றம் வரும். எந்தப் பலனையும் எதிர்பாராமல் "இது முன்னுக்கு வரும் உபாயம்" என அறிந்து மனம் அதை விரும்பி ஏற்று ஒருவரால் இம்முறையை 6 மாதங்கள் அல்லது ஒரு வருஷம் செய்யமுடியுமானால் Bill Gates வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் வரும்.
 • தாயார் குழந்தைகளைப் படிக்கச் சொல்லியிருந்தால், தாயார் சொன்னதே அவர்கட்குத் தெரியாமல், "அது வேண்டாம்" என அவர்கள் விலகிப் போயிருப்பார்கள்.
  இது மனித சுபாவம்.
  மனிதசுபாவம் மனவளர்ச்சிக்கு உதவும். துரியோதனன் கிருஷ்ணனுடைய படைகளைக் கேட்டதும், அர்ஜுனன் கிருஷ்ணனைக் கேட்டதும், மனிதசுபாவம் செயல்படுவதையும், அது விலக்காகச் செயல்படுவதையும் காட்டுகிறது.
  • அர்ஜுனன் சிவபெருமான் அம்சமுடையவன்.
  • துரியோதனன் பிறந்தவுடன் அவன் அழுகுரல் நரிக்குரலாக இருந்தது. வியாசர், "இக்குழந்தை நம் வம்சத்தை அழிக்கும்" என்றார். காந்தாரி துரியோதனனை அழிக்கச் சம்மதப்படவில்லை. கணவனுக்குப் பார்வையில்லை என்பதால் தன் கண்களைக் கட்டிக் கொண்ட கற்புக்கரசி அவள். >அவள் பொறாமையால் வயிற்றை இடித்துக்கொண்டாள்.
   கற்பின் உயர்வும், பொறாமையும் சேர்வது மனிதசுபாவம்.
  • தாயாருக்கு இவையெல்லாம் தெரியும் என்றாலும், குழந்தைகளைப் படிக்கச் சொல்லாமலிருக்க அவருக்கு வேண்டிய பொறுமை பெரியது. அது மனிதசுபாவத்திற்குரிய பொறுமையில்லை.
  • பொறுமையிருப்பதால் ஆன்மாவுக்கு உயர்வில்லை. பொறுமையில்லாத சொத்தையாக இருப்பதால் அது ஆன்மாவுக்குத் தாழ்வில்லை.

  செமிஃபைனல்ஸ் வரை எங்கள் டீம் வந்தால் அதற்கப்புறம் என்னைக் கேலி செய்யமாட்டேன் என ஒத்துக்கொள்வாயா?

  • வயதில் சிறியவர்கள் ஆன்மவிழிப்புடையவர் என்பதால் அவர்கள் பிரார்த்தனைகள் அதிகமாகப் பலிக்கும்.
  • வயதானபின் அறிவுக்குப் பொருந்தாததைக் கேட்கக் கூச்சமாக இருக்கும்.
  • குழந்தைக்கு அக்கூச்சமிருக்காது.
  • கூச்சமற்ற குழந்தை அர்த்தமற்றதைக் கேட்கும்; அன்னை தருவார்.
  • நாம் கேட்கக் கூச்சப்படுவதற்கு ஒரு காரணம் அர்த்தமற்றது நடக்காது என்று நமக்குத் தெரியும்.
  • அர்த்தமுள்ளது என்றால் நம் அறிவுக்குப் புரிவது.
  • நமக்குப் புரியாதது நடக்காது என நாம் நம்புவது அறியாமை.
  • எதுவும் நடக்கும் என நினைக்கவோ, பேசவோ அறிவு தடைசெய்யும்.
  • அறிவில்லாதவர்க்கும், வயதில்லாதவர்க்கும், அனுபவமில்லாதவர்க்கும் அத்தடையில்லை.
  • அத்தடையில்லாததால், அது நடக்கும்.
  • அப்படி ஒரு காரியம் நடந்தால், "ஏதோ அப்பொழுது நடந்துவிட்டது" என அதை மறந்துவிடுகிறோம்.
  • 3 நாட்கள் இடைவிடாமல் அன்னைப் பெயரை ஒருவர் எக்காரணமும் இல்லாமல் சொல்லியபொழுது அவரை அன்னையிடம் அழைத்துப்போய் தரிசனம் செய்வித்தார்கள்.
  • சிறியவன் இடைவிடாது பயித்தியம் பிடித்தவன்போல அன்னையை அழைத்ததால், செமிஃபைனல்ஸ் வரை வாராது என்ற டீம் செமி ஃபைனல்ஸில் ஜெயித்தது. பைனலும் ஜெயித்தது.
  • கேலி செய்யும் மனம் மட்டமானது.
  • இவ்வளவு பெரிய வெற்றி பெற்றபின், தம்பியிடம் தோல்வியை ஏற்கவும் அவனால் முடியவில்லை.
  • தோல்வியை ஏற்காதவனை நம்பமுடியாது.
  • டீமில் சண்டை, கேப்டனுக்கு ஜுரம், காற்று உதவியது என்பவை காரணங்கள்.
   • அன்னை சக்தி, இக்காரணங்களை ஏற்படுத்தி அதன்மூலமாக ஜெயித்தது.
   • இக்காரணங்களில்லாமலும் அது ஜெயிக்க முடியும்.
   • கருவி தேவையா, தேவையில்லையா என்பது நம்பிக்கையைப் பொருத்தது.
   • சிறியவனுக்குப் பிரார்த்தனை பலிக்கும் என்ற நம்பிக்கையை விட அண்ணனை மடக்க அது சந்தர்ப்பம் எனத் தீவிரமாக அன்னையை அழைத்தான்.
   • அது சிறுபிள்ளைத்தனம். அர்த்தமற்ற பிரார்த்தனை.
   • அர்த்தமில்லாவிட்டாலும், பிரார்த்தனை என்பதால், அதற்குத் தீவிரம் வந்தால் பலிக்கிறது.
   • பிரார்த்தனை தீவிரமானால், எந்தப் பிரார்த்தனையும் பலிக்கும். "அது அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதன்று" என நினைக்க நமக்குப் பெரிய நம்பிக்கை வேண்டும். அதுவே பிரார்த்தனையைப் பற்றிய உண்மை.

  "சரணாகதியை எந்த நிலையில் செய்தாலும் பலன் ஒன்றே" என்று அகந்தை உருவாகாதவரைப்பற்றிப் படித்தபோது தெரியவந்தது நினைவுவந்தது:

  • வளர்ச்சி, முன்னேற்றம், அபிவிருத்தி என்ற கருத்துகளில் தீராத ஐயமான கருத்து இது.
  • சத்தியஜீவியம் இனி வரப் போகிறது என்றாலும், அதன் அம்சம் ஒரு துளியாவது வாழ்வில் எங்காவதிருக்கும்.
  • தனக்கு ஏற்கனவே தெரிந்ததை முடிவாக நம்புபவன், எந்தப் புதிய விஷயத்தையும், பழைய கருத்தை ஊர்ஜிதம் செய்யப் பயன்படுத்துவான்.
  • ஸ்ரீ அரவிந்தம்(in letter and spirit)அகத்திலும், புறத்திலும் இக்கருத்திற்கு எதிரானது.
  • 2000 பக்கங்கள் பெரிய ஆராய்ச்சியின் மூலம் பகவான், அன்னையைப் பற்றி எழுதிய பேராசிரியர், "பகவான் நம் மரபில் உள்ள ஆன்மீக அனுபவங்களை தம் அனுபவங்கட்கு உறுதுணையாகக்கொண்டார்" என்று எழுதுவது பரிதாபத்திற்குரியது. பகவானுடைய அனுபவங்கள் பழைய ரிஷிகளின் அனுபவங்கட்கு எதிரானது; அவற்றிலிருந்து புரட்சிகரமாக மாறியது என்று அறியாதவர் கூற்று இது. அப்படிப் பட்டவர்கட்கு சரணாகதி புரியாது. மேற்சொன்ன கருத்து விளங்காது.
  • அகந்தையுள்ளவன் அகந்தையைச் சரணம் செய்து முன்னேறுகிறான்.
  • அதனால் அகந்தையே உருவாகாதவன் அகந்தையை உருவாக்கி அதன்பின் அதைச் சரணம்செய்யவேண்டும்எனத் தோன்றுவது இயல்பு. அது தவறு.
  • விவசாயம் முதிர்ந்து வியாபாரம் எழுந்தது எனில் இனி வியாபாரம் செய்ய வேண்டுமானால் முதலில் விவசாயம் செய்யவேண்டும் என்று பொருளன்று.
  • அந்தச் சட்டம் finite சிறியதற்குரியது.
  • Infinite பெரியதற்கு அது சட்டமில்லை. நேரடியாக வியாபாரம் செய்யலாம்.
  • அது புரிய சரணாகதியின் சிறப்புப் புரியவேண்டும்.
  • எந்தச் சிறியதும் (finite) நேரடியாகப் பெரியதாகமுடியும். அதற்குரிய கருவி சரணாகதி.
 • சரணாகதி அனந்தத்தின் கருவிஎன்றால் சரணாகதியே அனந்தம்.
 • சமூக முன்னேற்றத்தில் இந்த உண்மையைக் காண்கிறோம்.
 • நமக்குக் கர்மத்தில் நம்பிக்கை; லிமிட்டில் நம்பிக்கை; நமக்கில்லை என நம்புகிறோம். "முடியாது" என்பது நம் கொள்கை. "சிறியது சிறியதுதான்; பெரியது பெரியதுதான்" என்பதை நம்புபவருக்குச் சரணாகதி, அனந்தம், ஸ்ரீ அரவிந்தம் இல்லை.
 • பிரதமராக வேண்டுமானால் நேரு குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்ற நம்பிக்கையை இல்லை என பிற்கால வரலாறு காண்பிக்கிறது.
 • தத்துவமும், உதாரணமும் புரியவேண்டும்; அதை மனம் ஏற்கவேண்டும்; ஏற்க ஆர்வம்வேண்டும்; ஏற்பதில் அனந்தம் எழுவதைக் காணவேண்டும்.

எங்கள் குடும்பம் "பக்கம் 93-94இல் முந்தைய கருத்து மேலும் விளக்கப்படுகிறது; இது முக்கியமானது:

 • இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பதவிக்கு வந்தவர்கள் சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து நெடுநாள் உழைத்தவர்கள்.
 • அதனால் அதுமட்டுமே பதவிக்குவரும் பாதை என்று கொண்டால் இராதாகிருஷ்ணன், C.D..தேஷ்முக், சண்முகம் செட்டி, ஜான் மத்தாய் போன்றவர்கள் அப்பாதையில் வரவில்லை.
 • சுதந்திர இயக்கம் கொடுத்த தகுதியை வேறு பாதையில் எவர் பெற்றிருந்தாலும் அவருக்கு அத்தகுதியுண்டு என்றாகிறது.
 • ஒரே தகுதியைப் பெற ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளிருக்கின்றன.
 • சர்வமும் அனந்தம் என்பதால் அப்பாதைகளும் அனந்தம்.
 • அனந்தமே இலட்சியமானால், அதற்குரிய கருவி அனந்தமான கருவியாக இருக்கவேண்டும்.
 • யோகம் அறிந்த எந்தக் கருவியும் அனந்தமான கருவியில்லை.
 • 10 ஆண்டுகள் முயன்று சூட்சுமமான இரகஸ்யத்தை பகவான் கண்டு கொண்டவற்றுள் சரணாகதியும் ஒன்று.
 • சத்தியஜீவியமே சத்தியம் என்ற சுவாமி விவேகானந்தர், அதை அடையும் மார்க்கத்தைக் கூறவில்லை.
 • சத்தியஜீவியம் பூரணம், முழுமை. நாமறிருந்திருப்பது மேல்மனம். அன்று ஸ்ரீ அரவிந்தர் அறிந்தது நிஷ்டை. நிஷ்டை அக்ஷரப்பிரம்மத்திற்கு அழைத்துப்போகிறது. சத்தியஜீவியத்திற்கு அழைத்துப்போகவில்லை.இக்கட்டான இந்நிலையில் பகவான் 10 ஆண்டுகளிலிருந்து,
  • சத்தியஜீவியம் போக உள்ளே போய் மேலே போகவேண்டும்.
  • வந்தவழியே மீண்டும் போகவேண்டும்.
  • பிரபஞ்சம் வழியாகப் பிரம்மத்தையடையவேண்டும்.
  • ஆன்மாவை மற்ற கரணங்களிலிருந்து பிரிக்கக்கூடாது.
  • ஆன்மாமட்டும் தனியாக, சத்தியஜீவியத்தை அடையமுடியாது.
  • ஆன்மாவும் வளரக்கூடியது.
  • காலமோ, கடந்ததோ சத்தியஜீவியத்தை எட்டாது. மூன்றாம் நிலை காலம் உண்டு. அதற்குக் காலத்தின் முழுமையுண்டு.
  • சத்தியஜீவியம் என்ற முழுமையையடைய நாம் முழுமையில் ஆரம்பிக்க வேண்டும். க்ஷணமும் முழுமையைவிட்டு அகலமுடியாது.
  • முழுமை மேல்மனத்திலோ, உள்மனத்திலோயில்லை; அடிமனத்தில் உள்ளது. அங்குள்ள வளரும் ஆன்மாவில் உள்ளது.
  • அதற்குரிய கருவி நாம் பெற்றவற்றையெல்லாம் கைவிட்ட நிலையான சரணாகதி எனக் கண்டார்.
  • இதை வாழ்வில் காண்பது அதிர்ஷ்டம், அருள், பேரருளாகும்.

வாழ்வில் பூரணத்தை அறியுமுன் யோக அம்சங்களின் பூரணத்தை அறியவேண்டும்:

  • சத்தியஜீவியம் என்பது பூரணம்.
  • அது சிருஷ்டியின் பூரணம்.
  • அங்கு ஒரு ஜீவன் எல்லா ஜீவன்களிலும், எல்லா ஜீவன்களும் ஒரு ஜீவனிலும், இறைவன் எல்லா ஜீவன்களிலும், எல்லா ஜீவன்களும் இறைவனிலும் உள்ள பூரணம் உண்டு. இப்பூரணத்தில் பிரிவினையில்லை. பிரிந்த தோற்றம் உண்டு. சத்தியஜீவியம் 3-ஆம் நிலைக் காலத்திற்குரியது.
  • நாம் உள்ள மேல்மனம் காலம், அகந்தை, மனம், சிறியது ஆகியவற்றால் ஆனது.
  • உள்மனம் காலத்தைக் கடந்தது என்றாலும் அதற்கு முழுமையில்லை.
  • அடிமனத்திற்குப் பிரபஞ்ச முழுமையுண்டே தவிர ஆன்மீக முழுமை இல்லை.
  • அடிமனத்திலுள்ள சைத்தியப்புருஷனுக்கு முழுமையுண்டு.
  • அவனையடைய மனம் காலம், அகந்தை, சிறியதிலிருந்து விடுபட, ஆசனம், பிராணயாமம் எதுவும் பயன்படாது.
  • பின் எது பயன்படும்? "முழுமை" பயன்படும்.
  • மனத்திற்கு முழுமையில்லை. முழுமை வேண்டுமானால் மனத்தைக் கடக்கவேண்டும்.
  • காலத்தைக் கடந்து 3-ஆம் நிலைக் காலத்தை அடையவேண்டும்.
  • நாம் பெற்ற திறமைகள் பகுதி.
  • இப்பகுதியை முழுமையாக்கினால் அது மனித முழுமையாகும்.
  • இப்பகுதியைக் கைவிட்டால் சத்தியஜீவிய முழுமை எழும்.
  • மேல்மனத்தின் 4 அம்சங்களைக் கைவிடுதல் அடிமன முழுமைக்கு வழிவிடும்.
  • பகுதியைக் கைவிடுவது சரணாகதி எனக் கூறப்படுகிறது.
  • இதை பகவான் 10 ஆண்டுகளில் கண்டுகொண்டார்.

இதையே வாழ்வில் எப்படிக் கூறுவது?

  • சமூகம், பணம், நியாயம், தர்மம், கடமை ஆகியவை பகுதிகள். இப்பகுதிகளைக் கைவிட்டு சத்தியஜீவிய முழுமையை எட்டும் வகை சரணாகதி.
  • நம் திறமையைக் கைவிட்டால், அருள் பேரருளாகும்.
  • அதை ஆரம்பிக்க உதவுவது சமர்ப்பணம்.
  • எண்ணமற்ற, உணர்வற்ற, செயலற்ற மௌனத்தில் செய்யும் சமர்ப்பணம் நிறைவு பெற்று சரணாகதியாகும்.
  • Man has to utterly decondition himself and not recondition but offer himself to the Force..

மனம் குடும்பத்தைவிட்டுச் சரணாகதியை நாடியது. அதன்பிறகு வந்த செய்திகள் பல. நம்பமுடியாத பெரிய செய்திகள். இதன் முடிவு "வேலை உள்ளேயிருக்கிறது"எனப் புரிந்தது:

 • மனம் குடும்பத்தைவிட்டுச் சரணாகதியை நாடுவது ஞானயோகச் சமாதியை விடப் பெரியது.
 • அதன்பிறகு மனம் வாழ்வை அசைத்து நடத்தியவை பெரிய செய்திகள்.
 • இந்த வேலையை உள்ளேதான் செய்யவேண்டும்.
 • உள்ளே என்பது புறத்தை உட்கொண்ட அகம் இது மூன்றாம் நிலை காலத்திற்குரியது.
 • செய்திகளுக்காக மனம் சரணாகதியை நாட முயன்றால் பலன் இருக்காது.
 • வேலை உள்ளேயிருக்கிறது என்பதன் சூட்சுமம்,
  நம் எதிர்காலம் நம் கையிலிருப்பதாக அர்த்தம்.
 • இதை ஆரம்பித்ததிலிருந்து தாயார் கண்டவை,
  • மனம் அமைதியாயிற்று;
   வேலை அன்னைக்கு, நமக்கில்லை எனப் புரிந்தது.
  • பேரமைதியாய்த் தெரியும் அமைதி மேல்மனத்தின் மேற்பகுதியினுடையது;
   அதைக் கடந்ததால் இது புரிகிறது.
  • எழுந்து அடங்கும் ஆசைகள் எழவில்லை;
   உணர்ச்சி கட்டுப்பாட்டிலிருக்கிறது.
  • அவ்வாசை பிறர்மூலம் பூர்த்தியாகிறது;
   சுயநலம் மாறி பரநலம் வந்துள்ளது.
  • தான் ஆரம்பிக்கவில்லை என்பதால் பிறர் தருவதை ஏற்கிறார்;
   நாமே தேடுவது தவறு; பிறர் தருவது அன்னை தருவது.
  • ஏதோ ஒருவகையில் தம் வாழ்வு இதுவரை யோகம்;
   கவனிக்காவிட்டால் வளரும்.
  • சர்க்கார் ஊழியர் எவர்க்கும் முழு சர்க்கார் அதிகாரம் உண்டு;
   அன்பர் எவருக்கும் முழு அன்னை சக்தியுண்டு.
  • உயர்ந்த நிலையில் தம்மைப் பதிவுசெய்துகொண்டதை அறிந்தார்;
   Self awareness தாம் யார் என அறிந்தார்.
  • இவை வளரும் ஆன்மாவால் செய்யப்படவேண்டியவை;
   வாழ்வையும், யோகத்தையும் பிரிக்கமுடியாது.

அன்னை வீட்டிற்குள் வந்தபின் கட்சி, பதவி ஏற்றது போலிருக்கும்:
அன்னை வாழ்வின் உயர்வை சுயநலமாக்கினால் அரசியல்வாதி சொத்து சேர்ப்பதுபோலாகும்:
பெரியஇடத்து அழைப்பை ஏற்று எவரை,எங்கு அனுப்பினாலும், மானம் போகும்படி நடந்துகொள்வார்கள்:

 • நாம் வாழ்வின் ஒரு பகுதியை மட்டும் அறிவோம்.
 • அடுத்த பகுதியை "தீமை" என ஒதுக்குகிறோம்.
 • நாம் ஒதுக்கும் பகுதி நம்மைவிட்டுப் போவதில்லை. தோட்டத்து வழியாக நம் வீட்டினுள்ளும், நம்முள்ளும் வருகிறது. நாம் அதை மறுக்க முடியாததால், மறைத்துவிடுகிறோம்.
 • சமூகம் மாறும்பொழுது - வளரும்பொழுது, புரட்சி நடக்கும்பொழுது - நாம் மறைத்த பகுதி வெளிவருகிறது.
 • வெளிவந்து, வளர்ந்து ஆட்சி செய்கிறது. நாம் அதன் ஆட்சிக்குப் புரியாமல் பணிகிறோம்.
  விலக்கவேண்டும் என்பதை முக்கியமாகப் பீடத்தில் அமர்த்துகிறோம்.
  வாய், அது தவறு என்று பேசினாலும், வாழ்வு தவறாகவே நடக்கிறது.
 • விலக்க வேண்டியதன் கருவைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ மனம் வருவதில்லை. வெகுநாட்களுக்குமுன் அக்கருவைக் காயப்படுத்தியதால்,இன்று அது வாழ்வையே கறுப்பாக்குகிறது.
 • இதற்குத் தீர்வு புறத்திலில்லை; அகத்திலுண்டு.
 • நம் மனத்தின் கறுப்பு நமக்குத் தெரியும். கறுப்பைக்கண்டு, அடக்கமாக ஏற்று, மனம் மாறி, திருவுருமாறினால் புறம் மாறும்.
 • அகம் காண மறுக்கும் வரை புறத்தில் கறுப்பு பூதாகாரமாக வளரும்.
 • அன்னை வீட்டினுள் வருவது, அரசியல் கட்சி பதவிக்கு வருவது போன்றது. ஏனெனில், பதவியில்லாத பொழுது அதிகாரமில்லாததால் நல்லதைப் பேசுவார்கள்.கெட்டது அடங்கியிருக்கும். பதவி வந்தபிறகு நல்லது மறந்துபோகும். கெட்டதுமட்டும் நினைவிருக்கும், செயல்படும், வளரும்.
 • அன்னை வரும்முன் பெரியஇடத்து அழைப்பு வாராது; வந்தபின் வரும். அங்குப் போனால் பேசத் தெரியாது. அசம்பாவிதமாகப் பேசுவோம். மானம் போகும். மானம் போவதே தெரியாது. It is unconscious low consciousness.
 • தாமரை இலைத் தண்ணீராக, சாட்சிப்புருஷனாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில்லை இவை. அற்புதம், பிரம்ம ஜனனம் என்பதாக வளரும் ஆன்மா நிகழ்ச்சிகளில் எழுந்து, சிருஷ்டியைத் தீமையிலிருந்து நன்மைக்கு மாற்றிநடத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும்.
 • ஆபீஸில் இலஞ்சம் நடமாடினால், அன்பர் இலஞ்சம் வாங்காமல் ஒதுங்கியிருந்தால்,அனைவரும் சேர்ந்து அவர் இலஞ்சம் வாங்குவதாக அன்பரைத் தண்டிப்பார்கள். அவருக்குரிய வழிகள் 2.
  1. அதைவிட்டு விலகி, தன் அதிகாரத்தில் செயல்படும் ஸ்தாபனத்தை நிறுவி அங்கு இலஞ்சமில்லாமல் நடத்தவேண்டும். இலஞ்சம் வாங்காமலிருப்பதுடன், இலஞ்சம் கொடுக்காமலிருக்கவேண்டும்.
  2. ஆபீஸில் அனைவரையும் இவர் தலைமையில் சேர்த்து இலஞ்சம் வாங்காமல் செயல்படவேண்டும்.
 • அன்பர்கள் எளியவர்கள் என்பதாலும், இவையிரண்டும் பிரம்மாண்டமானவையானதாலும், பொதுவாக அன்பர்கள் ஒதுங்கி வாழ முயல்வார்கள். அது பயன் தாராது. பயன் தருவதானால்,அதைவிட்டு வெளியேற உதவும்.
 • அன்பர் இலஞ்சம் வாங்க ஆரம்பித்துவிட்டால், நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

தொடரும்....

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம் அன்றாட வேலைகளில் நமக்கு முழு ஞானம் உண்டா?அதில் முடியாததில்லைஎன்று சொல்ல முடியுமல்லவா? ஆனால் அது கண்மூடித்தனமான ஞானம் (an unconscious possession).

முழுஞானம் முடியாததில்லை.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்

சூட்சும உடல்என்பது (True physical) உண்மையான உடலிலிருந்து சற்று மாறுபட்டது.

சூட்சும உடல்.

Comments

 பெண்ணின் தோழியின் அக்கா

 பெண்ணின் தோழியின் அக்கா வாழ்வு மலர்கிறது:

       Point 30 - Line 2 -  (forn)                   -    (form)
       Point 30 - Line 2 -  forceபாவம்      -   force பாவம்
       Point 30 - Line 3 - spiritual determinnts - spiritual determinants
 
பெரியவன் அரசியல் கூட்டத்திற்குத் தலைமைதாங்கினான்: மந்திரி ரங்கனைக் கவனித்தார்:
       Point 6  -  Line 5  -  பெருகிவருகின்றன..   -   பெருகிவருகின்றன.
 
பெண்ணுக்கு அன்னை நினைவாகவேயிருக்கிறது:
       Point 3 - Sub point 2 - Please remove the period that is in the beginning.
 
ஏம்மா, எங்களை எல்லாம் படிக்கச் சொல்லவில்லை: 

Point 7 , 8, 9, 10 -  Please remove starting quotes

வாழ்வில் பூரணத்தை அறியுமுன் யோக அம்சங்களின் பூரணத்தை அறியவேண்டும்:
 
Please remove quotes and period in the beginning of every point.
 
Point 22 -   the Force..      -     the Force.

மனிதன்என்றால்

மனிதன்என்றால் குறையுடையவன்:

       
        Point 2   -   right.என   -  rightஎன
        Point 6   -   Please remove the extra blank line and join rest of the lines
        Point 9   -   Please remove the extra blank line
        Point 10 -   Line  4   -  ஐரோப்பாவில்லை      -    ஐரோப்பாவிலில்லை
        Point 10 -   Line  7   -  தவறுதல்லைஎன்ற     -    தவறுதலில்லைஎன்ற
 
 பெண்ணின் தோழியின் அக்கா வாழ்வு மலர்கிறது:
 
        For all the points -  please indent the lines starting with quotes and also remove the quotes .
        Point 8   -  Please remove the extra blank line
        Point 9   -  பிரார்த்தனைmசெய்தால்   -   பிரார்த்தனைசெய்தால்
        Point 10 -  Sub Point 1 -  Please move the following lines to new paragraph
                    காரியம் கூடிவருவது ...
                     :
                     :
                    ....  அல்லது ஏற்கமுடியாதது:
        Point 15 - Please remove the extra blank line 
        Point 16 - Sub point 1 - Please remove the extra blank line
        Point 19 (starting with சமர்ப்பணம் சரணாகதியில் முடியும் )  - 
                            Please remove the extra blank line
        Point 26 (starting with மனிதனுக்குப் பெறுவது தெரிகிறது )     - 
                            Please remove the extra blank line 
       Point 27 - Please remove the extra blank line
       Point 30 - Please remove the extra blank line
       Point 30 - Line 2 - (forn)   -    (form)
       Point 30 - Line 2 - forceபாவம்     -   force பாவம்
       Point 30 - Line 3 - spiritual determinnts         - spiritual determinants

03.எங்கள் குடும்பம்

03.எங்கள் குடும்பம் II
 
பெரியவனுடைய நண்பன் கூறும் புத்திமதி:
 
       Line -  ஒரு சொல்லை அறிந்தவர் வாழ்வில் "ஓம்'ஐ அறிந்தவர்  -    Please change  "ஓம்'ஐ  -   "ஓம்"
 
வேலைக்கார ரங்கன்:
 
       For all the points , please indent the lines starting with quotes and also remove the quotes .
 
       Point 4  - Sub point 1   -  சொல்ல க்கூடாதா       -    சொல்லக்கூடாதா
       Point 4  - Sub Point 5  -  பொருட் படுத்துவது     -    பொருட்படுத்துவது
       Point 4  - Sub Point 8 & 11  -   Please remove extra blank lines in these points
       Point 4  - Sub Point 10 - Please move the following line to new pargraph 
                 ரங்கனுக்கு நம் அந்தஸ்து வரும் என்றால் பெண் "அநியாயம்'என்கிறாள்
                 Please change  "அநியாயம்'என்கிறாள்       -     "அநியாயம்" என்கிறாள்
       Second para starting with எதிர்வீட்டு பாக்டரிப் பையன் ...
              Please move the line starting with ரங்கனை "நீ மந்திரியாவாய்' .. to a new paragraph
                 Please change  "நீ மந்திரியாவாய்'            -      "நீ மந்திரியாவாய்"
      
        Point 5  - Sub Point 5 - Please remove extra line and joint the lines
       
        Point 6  -  Please remove the extra line before the line starting with
                         "எனக்கு நல்லதுவரும்என்றாலும் ரங்கன்
        Point 6  -  Sub Point 9    -   personமனத்திற்கு    -    person மனத்திற்கு   
        Point 6  -  Sub Point 10  -   Please remove extra blank line from this sub point 
        Point 6  -  Sub Point 10  -   பாக்டரி தான் வாராமற் போகுமே தவிர -
                                         பாக்டரிதான் வாராமற்போகுமேதவிரbook | by Dr. Radut