Skip to Content

04.அஜெண்டா

Agenda

Never has man lied as much as now.

இன்று மனிதன் பொய் சொல்வதைப்போல் என்றும் சொல்லியதில்லை.

  • அன்னை உலகத்தின் வரலாற்றை அறிந்தவர். அதைக்கடந்து பூமியின் வரலாற்றை அறிந்தவர்.
  • சூட்சுமலோகத்தில் பூமியின் வரலாறு (Earth's memory) உள்ள இடத்தை அறிந்தவர்.
  • இந்தியாவைப் பொருத்தவரை 200 ஆண்டுகட்கு முன்பும் இங்கு பொய் சொல்பவரைப் பார்த்ததில்லை என ஆங்கிலேயர் கூறியதுண்டு. பிற நாட்டாரும் அப்படிக் கூறியுள்ளனர்.
  • உலகில் Lord of Falsehood பொய்யின் பிரபு அழிந்துவிட்டதாக அன்னை கூறுகிறார். அழியும்நேரம் சுடர் பிரகாசிப்பதைப் போல், பொய் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துகிறது.
  • பொய் என்றால் என்ன? அதை அழிப்பது எப்படி?
  • மெய் (infinite) வளர்ந்து ஆண்டவனையடையும். அதுபோல் பொய் வளரமுடியாது. வளர்ந்தால் முடிவான கட்டம் வருமுன் அழியும் என்கிறார் பகவான். There is no absolute falsehood as Absolute Truth. முழுப் பொய் என்பது இருக்கமுடியாது. ஏனெனில், அதற்கு வித்தாக மெய் தேவை.
  • நாட்டில் ஊழல் வளர்வது அனைவருக்கும் வருத்தம் தருவது.
  • ஊழல் வளர்வதற்குக் காரணம் செல்வம் வளர்வதால் என அறியும் பொழுது வருத்தம் குறைகிறது. ஏழை நாட்டில் செல்வம் வரும்பொழுது அதே வேகத்தில் நாணயம் வளர்வதில்லை. அதனால் ஊழல் வளர்கிறது. முன்னேறிய நாடுகளெல்லாம் இக்கட்டத்திற்கு வந்துள்ளன. எனவே ஊழல் எதிர்காலத்திலிருக்காதுஎன்பது தெளிவு தருகிறது.
  • மெய் வளர, பொய் வளர்வது அவசியம் எனத் தெரிவதால், பொய் நமக்கு பயம் விளைவிப்பதில்லை.
  • வளரும் குழந்தை சாப்பிடும்பொழுது சாப்பாட்டை இறைக்கும், படிக்கும் பொழுது பேப்பர் கிழிந்துபோகும், ஏராளமான பொருள்கள் விரயமாகும். இதெல்லாம் குழந்தையின் வளர்ச்சியுடன் சேர்ந்தது; குழந்தை வளர்ந்த பின்னிருக்காது; இது அவசியம். இதை நாம் அனைவரும் அனுபவிக்கவேண்டும் என்ற கருத்து தெம்பு தரும். அதுபோல் ஊழல்.
  • மனிதனுடைய உண்மையைத் தொடர்ந்து சோதிக்க (hostile forces) தீயசக்திகள் அவசியம். மனிதன் முழு உண்மையை ஏற்றால் தீயசக்திகள் அழியும் என்பது போல் மனிதன் சத்தியத்தை ஏற்க, பொய் உலகில் உறைகல்லாக உலவுகிறது.
  • நாத்திகப் பிரச்சாரம் ஆஸ்திகனை மூடநம்பிக்கையிலிருந்து காப்பாற்றுகிறது.
  • நாம் ஏன் பொய் சொல்கிறோம்?
    • பொய் சொல்வது ஆதாயம் என நினைக்கிறோம்.
    • பொய் சொல்லாமல் வாழமுடியாது என நினைக்கிறோம்.
    • இன்று சொல்லும் பொய் நாளைக்குப் பெரிய நஷ்டம் தரும் எனத் தெரிவதில்லை.
    • இயலாமையால் பொய் சொல்கிறோம்.
    • பொய் சொல்லிநிம்மதியாக வாழமுடியாது; பொய் சொல்லாமல் நிம்மதியாக வாழலாம் என அறிவதில்லை.
    • குறை பொய்.
    • நிறைவு, மெய்.
       

*******


 

Comments

04.அஜெண்டா Point 6         

04.அஜெண்டா
 
Point 6           - Please remove the extra blank line and join the word 'தேவை. '  to  the previous line.
Point 14 to 20 - Please remove starting quotes.



book | by Dr. Radut