Skip to Content

07.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

849) அது புரியாத நேரத்தில் அறிகுறிகளை மட்டும் நம்பி, சலனமற்ற சமத்துவத்தைப்பெற்றிருப்பது நம்பிக்கையுடன் செயல்படுவதாகும்.

சலனமற்ற நிதானம் தெய்வநம்பிக்கை.

  • வாழ்வின் சட்டங்கள் நேரானவையாக இருக்கும்பொழுது நமக்கு எளிதாக இருக்கின்றது.
  • சட்டம் தலைகீழே இருந்தால், புரிவது கஷ்டம். ஒவ்வொரு முறையும் தவறு வரும்.
  • அண்ணன் வீட்டுக்கு வரும் தோறும் குழந்தை விழுந்து காயப்பட்டுக் கொள்கிறது என்பது புரியமுடியாத விஷயம். புரிந்தால் எப்படிச் செயல்படுவது?
  • ஓர் எழுத்தாளர் 4 புத்தகங்கள் வெளியிட்டார். 4வது புத்தகம் வெளியிட்டவுடன் அவருக்குக் கான்ஸர் ஆப்பரேஷன் நடந்தது. அப்பொழுது அவர் நினைத்துப்பார்த்தால், முதல் மூன்று புத்தகங்கள் வெளியிட்டபொழுதும், உடல்நலம் குறைவானது நினைவுவந்தது. அதனால், இனி புத்தகம் வெளியிடக் கூடாது எனப் புரிந்தால்,வெளியிடாமலிருக்க மனம் வாராது. இங்குத் தெரிகிறது; செய்ய மனமில்லை.
  • குருவைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தால் வீடு பற்றி எரிகிறது. இது குருவால் எனப் புரியாமல் குருவின் ஆசீர்வாதத்தை மீறி கஷ்டம் வந்ததாக நினைக்கிறான். குருவிடம் போய்ச் சொல்கிறான். திரும்பி வந்தால் மகன் வீட்டைவிட்டு ஓடிவிடுகிறான். இந்தத் தொடர்பு தெரியாத நேரம் உண்டு. தெரியாவிட்டால் என்ன செய்வது?
  • தெரியாவிட்டால், எதுவும் செய்யாமலிருப்பது நல்லது.
  • எதுவும் செய்யாமலிருப்பது தெய்வநம்பிக்கை.
  • பிள்ளையைக் கறி சமைத்துக் கொடு என்றவுடன் சிறுத்தொண்டர் அப்படியே செய்தார். எல்லோரும் அதைச் செய்யமுடியாது.
  • முடியாதவர் என்ன செய்வது?
    • எதுவும் செய்யக்கூடாது.
    • எதுவும் செய்யாவிட்டால் நெஞ்சு பதறுகிறது.
    • நெஞ்சு பதறாமலிருப்பது அவசியம்.
    • நெஞ்சு பதறாவிட்டாலும் சமத்துவம், நிதானமிருக்காது.
    • அவையும் இருப்பது அவசியம்.
    • அப்படி அவையிருந்தால் அதற்குத் தெய்வநம்பிக்கை எனப் பெயர்.

*******

850. ஆர்வம் அடக்கமுடியாமல் பீறிட்டெழுந்தால் அது தீவிரமாகி சத்தியஜீவிய அலையோசையாகிறது. அடக்கமுடியாத ஆர்வம் அற்புதத்தின் அலையோசை.

  • அளவு பெரியதாகும்பொழுது தரமும் உயர்வது இயற்கை.
  • வளரும் அளவு தவறானதாக இல்லாமலிருந்தால், தரம் தானே உயரும்.
  • மனத்தின் ஆர்வம் சத்தியஜீவிய ஆர்வமாக மாற,
    • ஆர்வம் ஆசைக்காக இருக்கக்கூடாது.
    • ஆர்வம் மௌனம் பெறவேண்டும்.
    • மௌனம் ஜோதியாகும் அடுத்த நிலைக்கு வரவேண்டும்.
    • ஜோதி ஞானமாவது அவசியமான அடுத்த கட்டம்.
    • ஞானம் தெய்வமயமாவது அடுத்தது எனினும், அவசியமானதன்று.
    • அடுத்ததே சத்தியஜீவியம்.
    • பாடத்தை மாணவன் தலைவிதியே எனப் படிப்பதைவிட,
    • பாடத்தின் மீது ஆசையாகப் படிப்பது.
    • அந்த ஆசையையும் மாற்றி வேலையில் ஆர்வமாக்க வேண்டும்.
    • அந்த ஆர்வம் மௌனம், ஜோதி, ஞானம், தெய்வமாவது மனம் சத்தியஜீவியத்திற்குப் போகும் பாதை.
  • அதுவே முறையானால், அப்படியின்றி மனத்தின் ஆர்வம் உயர்ந்து பீறிட்டெழும்பொழுது தீவிரமானால், அதன் வேகம், தீவிரம் தானே ஓரளவுக்கு சத்தியஜீவிய அலையாகும்.
  • அறிவோடு செயல்படுவதே அழகு என்றாலும், அறிவில்லாதவன் உழைப்பால் தன் முயற்சியை ஆயிரம் மடங்கு உயர்த்தும் பொழுது அந்த உழைப்பு உயர்ந்து உன்னதம் பெறுவதை வாழ்வில் நாம் "உழைப்பால் உயர்ந்த உத்தமர்'' எனக் கூறுகிறோம்.
  • அது சத்தியஜீவியத்தை அவ்விதம் எட்டுவதுண்டு. எட்டுவதுடன் அது அழகுற அமைந்து, அலையாக எழுந்து, இசையாக மாறி, அலையோசையை எழுப்புவதும் உண்டு.


 

தொடரும்.....


 

ஜீவிய மணி

சிறியதை விட்டுப் பெரியதை நாடுவது

வாழ்வில் ஆன்மாவின் மலர்ச்சி.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடைந்தபொம்மைக்காக அழும் குழந்தையின் வருத்தம், வளர்ந்தவர்க்கு வாராது. அதுபோல் நாம் உடலால்படும் துன்பம் யோக முதிர்ச்சியுற்றவர்க்கு இல்லை.

யோகிக்குத் துன்பமில்லை.

***** 

Comments

07.யோக வாழ்க்கை விளக்கம்

07.யோக வாழ்க்கை விளக்கம் V 

849)

Point 9 -  For all the sub points, please remove starting quotes and indent them by few spaces.

850)

அலையோசை..    -     அலையோசை.

Point 3 & 4 -  For all the sub points, please remove starting quotes and indent them by few spaces.



book | by Dr. Radut