Skip to Content

09.லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

The human reason attempts to define and limits by negation the Infinite and Illimitable.

அனந்தமான முடிவற்றதை அறிவு இல்லாததைக்கொண்டு விளக்க முயல்கிறது.

.விளக்கம் என்றால் அதன் பகுதிகளையும், அம்சங்களையும் கூறி விவரிப்பது எனப் பொருள்.

. ஆசிரமம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அங்குள்ளவர் எப்படிப் பட்டவர், யார் அவர் எனக் கூறுவது விளக்கம் எனப்படும்.

. ‘‘வாழ்வைத் துறந்து இறைவனைத் தேடுபவர் சேருமிடம் ஆசிரமம்.

. ‘‘அவர்கள் தியானத்தை மேற்கொள்பவர்கள்.

. ‘‘முடியும், தாடியும் உடையவர்.

. ‘‘காவி உடுப்பவர் போன்றவை விளக்கம் எனப்படும்.

. பிரம்மம் என்பது ஒன்று. அதுபோல் வேறொன்றில்லை என்பதால் பிரம்மத்திற்கு உதாரணமாக எதையும் கூறமுடியாது. சூரியன் ஒன்றே.அதற்கு உதாரணம் கூறமுடியாது.

. யானையை விளக்க வேண்டுமானால், அது 4 கால்கள் உடைய பிராணி என்பதால், மாட்டை உதாரணமாகக் கூறலாம். துதிக்கை உள்ள பிராணியில்லை என்பதால் துதிக்கைக்கு உதாரணம் கூற முடியாது. இது உள்ளதைக்கொண்டு விளக்குவதாகும். "இப்படியில்லை" எனக் கூறுவது negative definitionயானையை விளக்க அது மேஜை போலில்லை, மரம் போலில்லை, பேனாவைப் போலில்லை என்றால் என்ன புரியும்?பேனாவைப் போல் யானையில்லை என்பது சரி. அதனால் யானை விளங்குமா? விளங்காது.

. நாம் அறிபவை அனைத்தும் - கடல், மரம், உணவு, ஊர், பேப்பர்,குழந்தை போன்ற அனைத்தும் - அளவுக்குட்பட்டவை. அளவுக்குட் படாதது நம் மனத்திற்கு எட்டாதது. அளவுக்குட்படாததை அளவுக்கு உட்பட்டவற்றைக் கொண்டு விளக்க முயல்வது பயன் தாராது.

. பிரம்மத்தை விளக்க முடியாது. விளக்க முற்படுபவர்கள் பயன்படுத்தும் முறை இரண்டு.

. ‘‘இல்லாததைக்கொண்டு விளக்குவது.

. ‘‘அனந்தமானதை, அளவுக்குட்படாததை அளவுக்குட்பட்டதன் மூலம் விளக்குவது.இவ்விரண்டு முறைகளும் பயன் தாரா.

. ஏதாவது முறை பயன் தருமா?

. ‘‘பலர் பலவிதமாகக் கூறிய அனைத்தையும் தொகுத்து மனத்தால் நிறைவுசெய்து பார்த்தால் ஓரளவு பயன் தரும்.

. ‘‘ஒரு மெஷினைப் பிரித்தபின், அதன் பகுதிகள் அனைத்தையும் ஒரு கூடையில் சேர்த்தால் அது மெஷினாகாது. எல்லாப் பகுதிகளின் தொகுதி முழுமையாகாது. இவை அனைத்தும் பொருத்தமாகச் சேர்ந்தால் அது மெஷினாகும்என்பதை மனதால், அறிவால் பூர்த்திசெய்யலாம். அப்படி பிரம்மத்தை அறிய முற்பட்டால் நாம் மனத்தைக்கடந்து சத்தியஜீவியத்தைத் தொடுவதால் ஓரளவு புரியும்.

*******
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆயிரம் முறை திரும்பத் திரும்ப எழும் உந்துதலானாலும்,

இடைவிடாது சமர்ப்பணம் செய்தால் அது மாறும்.

நாய் வாலும், மனித சுபாவமும் சமர்ப்பணத்திற்கு அடங்கும்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடலாலானவன், உணர்வாலானவன் மனமுடையவனல்லன்.அவனால் மனத்தைப் பயன்படுத்தமுடியாது. மனத்தால் சிந்திக்க அவன் முதல் மனத்தைப் பெறவேண்டும். அதேபோல் நன்மையைக் (good) கருதும் நிலை அவனுள் இல்லை.அதைச்செய்ய சத்தியஜீவியத்தைப் பெறவேண்டும். ஜீவனின் பகுதிகளான ஒரு புருஷனை (.ம். மனோமயப் புருஷன்)நாடுவதால் இதைப் பெறமுடியாது. சைத்தியப் புருஷனை நாடினால் இது முடியும். பகவான் பத்து வருஷங்களாகத் தேடிய சூட்சும இரகஸ்யம் இது.

பூரணயோகப் பரிணாம இரகஸ்யம்.


 


 



book | by Dr. Radut