Skip to Content

10. "விதியை வெல்லும் மதி"

 

"விதியை வெல்லும் மதி"


 

1944இல் கிராமத்து நெசவாளி மகளை இ.. படிக்கவைக்க விரும்பினார்.

சமூகம் ஏற்காது. அவளுக்குத் திருமணம் முடித்து, கல்லூரியில் சேர்த்தார்.

கணிதத்தில் 100க்கு 100ம், மற்ற பாடங்களில் 90க்கும் மேலாக மார்க் வாங்குவாள். டைபாய்ட் வந்ததால் 1 மாதத்திற்கு மேலாக கல்லூரி செல்லவில்லை. அட்டண்டன்ஸ் இல்லாததால் பரீட்சைக்கும் போக முடியாது என்ற பட்டியல் அவள் பெயர் வந்தது. அவள் வசிக்குமிடத்தில் சுமார் 15 கல்லூரி மாணவர்களுமிருந்தனர். "என்ன செய்வது?'' என அவள் தகப்பனார் அந்த மாணவர்களைக் கேட்டார். "எதுவும் செய்ய முடியாது'' என ஏகமனதாகப் பதில் வந்தது. பெட்டி, படுக்கையுடன் அவள் வண்டியில் ஏறப் போகும்பொழுது, அவள் வீட்டிலேயே குடியிருக்கும் மாணவன் ஒருவன் வந்தான். நடந்ததை அறிந்து, பேச ஆரம்பித்தான். அவள் தகப்பனாரிடம், "அவளுக்கு டாக்டர் சர்ட்டிபிகேட் தரவில்லை. அதைக் கொடுத்தால் பரீட்சை எழுதலாம்'' என எடுத்துக் கூறினான். அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, கல்லூரியில் விசாரித்து, சர்ட்டிபிகேட் கொடுத்து, பரீட்சை எழுதி, I classஇல் பெண் பாஸ் செய்தாள். அனைவருக்கும் அது மிக சந்தோஷம். அவர்களைப் பொருத்தவரை "மதியால் விதியை வென்றதாக'' கூறினார்கள். பெண் அடுத்த ஆண்டு B.Sc. சேர்ந்தாள். கருவுற்றாள். கல்லூரிக்குப் போக முடியவில்லை. ஓராண்டு வீட்டில் இருந்து மீண்டும் படிப்பைத் தொடர்ந்தாள். அவளுக்கு அறிவுரை கூறிய மாணவன் அரசியல் சேர்ந்தான். அந்த ஆண்டு அவனுக்குப் படிப்பு வீணாயிற்று. அடுத்த ஆண்டும் கல்லூரியில் சேர முடியவில்லை. வேறு கல்லூரியில் சேர்ந்து 2 ஆண்டு படிப்பை 3 ஆண்டில் முடித்தான்.

  • மதி விதியை வெல்லும்; அது தற்காலிகம். முடிவாக விதி வெல்லும்.

  • அடுத்தவர் கர்மத்தில் தலையிட ஒருவருக்கு அனுமதியில்லை.

தற்காலிகமாக வெற்றி கிடைத்தாலும் முடிவில் விதிப்படியே நடக்கும்.

  • பெண்ணுக்கு ஓர் ஆண்டு எப்படியும் வீணாயிற்று. பையனுக்கு 3

ஆண்டு போயிற்று.

  • பெண்ணுக்கு அருளில் - அன்னையில் - நம்பிக்கையிருந்தால் விதி

கரைந்து இருக்கும்.

  • விதி கரைந்ததுடன், திருவுருமாறி எதிரான உயர்ந்த பலன் தரும்.

 

விதி வலிது. அருள் அதனினும் வலியது. அறிவால் விதியை வென்றால்,

வெற்றி தற்காலிகமாகக் கிடைக்கும். அருளால் வென்றால் பலன் நிரந்தரமாகும். அத்துடன் திருவுருமாறும் வாய்ப்பும் உண்டு. ஒருவர் விதியை அடுத்தவர் தலையிட்டு மாற்ற முயல்வது அவருக்கு வர வேண்டியது தலையிடுபவர்க்கு வரும். அதிகமாகவும் வரும்.

**********



book | by Dr. Radut