Skip to Content

11. வல்லபாய் படேல்

 

வல்லபாய் படேல்

இரும்பு மனிதர்என நாம் அறியும் சுதந்திரப் போராட்ட வீரர் பட்டேல். இவர் 20 ஏக்கர் நிலம் உடைய குடும்பத்தில் பிறந்தவர். அண்ணன் வித்தல்பாய் பட்டேல். 13ஆம் வயதில் 3ஆம் வகுப்பில் படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்து, வேலையில் அமர்ந்து, பணம் சேகரம் செய்து, பாரிஸ்டராகப் படிக்க பாஸ்போர்ட், விசா பெற்று, அண்ணனிடம் தன் எண்ணத்தைக் கூறினார். அண்ணன், தம்பியின் பணத்தை எடுத்துக்கொண்டு இலண்டன் போய் பாரிஸ்டராகத் திரும்பி வந்தார். தம்பி மீண்டும் வேலை செய்து பணம் சேகரம் செய்து 30ஆம் வயதில் பாரிஸ்டரானார்.


 

.சுதந்திரப் போராட்டத்தில் அண்ணனும், தம்பியும் சேர்ந்தனர்.

.1947க்கு முன் மத்திய சட்டசபையில் பட்டேலுடைய அண்ணன் உறுப்பினராகி, சபாநாயகரானார்.

.தம்பி, பாரிஸ்டர் தொழிலைத் தியாகம் செய்து, காங்கிரஸ் தலைவராகி, மகாத்மா காந்தியின் உற்ற நண்பரானார்.

. இந்தியா சுதந்திரம் பெற்றது.

. நேரு பிரதமரானார். ராஜேந்திரப் பிரசாத் ஜனாதிபதியானார்.

. பட்டேல் மத்திய மந்திரி சபையில் மந்திரியானார்.

உப பிரதமரானார்.


 

அண்ணன், தம்பியின் பணத்தையோ, உரிமையையோ எடுத்துக் கொள்ளலாம். தம்பி பிரியமாகக் கொடுக்கலாம்; பணிந்தும் கொடுக்கலாம். என்றாலும்,

அவரவர் பணமே அவரவருக்குப் பயன்படும்.


 

தம்பி அண்ணனுக்கு அன்று உட்பட்டதால், முடிவில் அண்ணன் சபாநாயகராக இருந்தபொழுது, தான் உப பிரதமர் ஆனார். உள்ளது போகாது; உரிமை பறிபோகாது. என்றும் அது தன்னைத் தன் பாணியில் நிலைநிறுத்திக்கொள்ளும்.

**********************

 

ஜீவிய மணி

எதிரான முரண்பாடு

இனிமையான உடன்பாடாவது திருமணம்.



book | by Dr. Radut