Skip to Content

10.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

                                        (சென்ற இதழின் தொடர்ச்சி....)            கர்மயோகி

இந்த முறைகள் அனைத்தும் ஏற்கனவே பல இடங்களில் விவரமாக எழுதப்பட்டவை என்பதால், அவற்றை இங்கு விவரிக்கவில்லை. சில குறிப்புகளை மட்டும் எழுதுகிறேன்.1. காரியம் கூடிவரும்பொழுது மேலே போக வேண்டும். Raise the rising aspiration.காரியம் கூடிவந்தவுடன் நாம் அனைத்தையும் மறந்து காரியத்தைப் பார்க்கிறோம். அந்த நேரம் நெஞ்சு ஆர்வமாக இருப்பது தெரியும். அந்த ஆர்வம் உயரும்படி உள்ளே மனம் செயல்பட வேண்டும்.

2.எது உனக்குச் சிறந்த முறையோ அதை அளவுகடந்து பின்பற்று.

Give the most to your best.

3.சைத்தியப்புருஷன் செயல்படும்படி நடப்பது சரி.இது பலிக்க சமர்ப்பணம் மறக்கக்கூடாது.

4.மௌனம் சேர்ந்து மனம் கனத்தால், அதைப் பேச அனுமதிக்க வேண்டும்.

5.உனக்குத் தெரிந்த அத்தனை கட்டுப்பாடுகளையும் (disciplines)மொத்தமாகப் பின்பற்ற வேண்டும்.

6.கூறும் குறையை நிறைவான நினைவாக மாற்றுதல்.

7.வெறுப்பின் பின் இறைவன் உள்ளதைக் கவனி.

8.உள்ளம் அடங்கினால் உலகை உள்ளே நாடு.

9.மௌனம் சிறந்து காட்சியாகும்.

10. காட்சியைக் கருதாதே - அதை ஞானமாக அனுமதி.

11.நீ ஜபிக்கும் மந்திரங்களின் மறைபொருளை அறிவது நல்லது.

12. அன்னையே உன் சரணாகதியை ஏற்றபின், அடுத்தது இல்லை.

13. அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்வது.

14. எதைச் செய்தாலும், எவரும் அதை மேலும் உயர்த்த முடியாத அளவு செய்ய வேண்டும்.

15. உள்ளே போ; உலகம் உள்ளே தெரியும்வரை உள்ளே போ. உலகை வெளியில் காண்பதற்குப்பதிலாக, உள்ளே காண்பது உண்மையை அறிவது.

16. எதைச் செய்தாலும் அதில் நம் நல்ல அம்சங்கள் முழுவதும் வெளிப்படும்படிச் செய்வது (to positively exhaust yourself).

17. செயலற்றிருப்பதே சிறந்த செயல் என அறிவது.

18. செயலின் பின்னுள்ள மௌனத்தை எட்டுவது.

19. மௌனத்திற்குப் பின்னாலுள்ள மௌனத்தை அடைவது.

20. எட்டு தலைகீழ் (reversal) மாற்றத்தை அறிவது.

தோல்வியே வெற்றி; வலி ஆனந்தம்; எதிரி ஏற்றமிகு நண்பன்; அநியாயம் ஆண்டவனின் நியாயம்; நடப்பவை இறைவன் செயல் என்ற கருத்துகளை ஏற்பது.

21. துர்அதிர்ஷ்டம், பேராபத்து கொண்டுவருபவை வாய்ப்பு என அறிந்து மகிழ்தல்.

22. முக்கியமான சிறிய நிகழ்ச்சிகளில் சிருஷ்டிச் சிறப்பை அறிவது (Small significant acts). சிறிய நிகழ்ச்சிகள் பெரிய காரியத்தைப் பூர்த்தி செய்வது உண்டு. அவை சொர்க்க வாயில். அவற்றை காணும் சூட்சுமம் தேவை.

23. நீ பாடும் சிறப்பான பாட்டை மேலும் சிறப்பாகப் பாட முயலுதல்.

24. சிறப்பாகச் செய்யும் சமையலை, மேலும் இனிப்பாக, சுவையாகச் செய்வது.

25. மனம் எழுப்பும் தவறுகளை, தவறாது நேர்படுத்துதல்.

26. அதிகபட்சம் நல்லெண்ணத்தை உற்பத்தி செய்வது.

27. நாட்டைப் பற்றிய உன் சிறந்த நோக்கத்தை மேலும் உயர்த்துவது.

28. பெற்றோர் குறைகளை நம் வாழ்வில் விலக்குவது.

29. வாழ்வை செயல்படச் செய்வது (Evoke a life response).

30. மனம் களைத்துப்போகும்வரை The Life Divineயைப் படிப்பது.

31. மரணபயத்தை விலக்குவது.

32. சமர்ப்பணத்தை ஜீவனின் சிகரத்தில் ஏற்பது.

33. எதையும் செய்ய முயல்வதைத் தவிர்ப்பது.

34. எரிச்சலைத் தவிர்ப்பது.

35. ஆழத்தில் ஜீவன் விழைவது கிடைக்கும்.

36. நினைவைக் கடந்து செல்வது.

37. ஆழ்ந்த உறுத்தலை ஆராய்ச்சியால் கரைப்பது அல்லது எரிச்சல்படாமல் இருந்து அழிப்பது.

38. உயர்ந்த வலிமையை உயர்த்துவது.

39. நடக்கும் என்பதால் நடத்திக் கொள்ளாதே.

40. மனத்தை அடிமையிலி ருந்து விடுதலை செய்.

(.ம்.) பணத்திற்கு அடிமையாகாதே.

41. பிடி கொடுக்காமல் பேசுவதைத் தவிர்.

42. வெட்கப்படக்கூடிய காரியங்கள் மீது ஆசைப்படாதே.

43. ஆபத்தை அறைகூவி அழைக்காதே.

44. உள்ளத்தின் உண்மையை ஓரிழை உயர்த்து.

45. தவறு சரியென மாறும் பொழுது செய்ய மறுக்காதே.கோபம், ரௌத்திரமாகும் பொழுது தடை செய்யாதே.

46. அனைவரும் அர்த்தமில்லாமல் போற்றுவதை நீயும் போற்றாதே.

47. உன் சுபாவத்தை சுட்டிக்காட்டும் உடற்குறை சிறியதானாலும் அதை அகற்ற முயல வேண்டும்.

48. வெட்கத்தைக் கடந்த மனநிலையை நாடு.

49. விரயத்தை விலக்கு.

50. அளவுகடந்த அர்த்தமற்ற விரயத்திற்கு அர்த்தம் உண்டென அறியலாம்.

51. நமக்குள்ள திறமையை நாம் மறக்கும் அளவுக்குப் பாராட்டக் கூடாது.

52. சுயநலமிக்குச் சேவை செய்யாதே.

53. முழுச்சுயநலமிக்கு முழுமையாக ஆதரவு கொடு.

54. பெருமை தரும் அடக்கம் பெரியது.

55. எதைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறோமோ, அதை விட்டுக்கொடுக்க வேண்டும்.

56. பரம எதிரியின் வாயால் நல்ல பெயர் வாங்க வேண்டும்.

57. துரோகத்தைப் போற்று.

58. பேயான மனிதனுக்கு அடிமையாகச் சேவகம் செய்.

59. நல்லவரையும், பொல்லாதவரையும் சமமாக மனத்தில் பாராட்டு.

60. நன்றியறிதல் உடலில் புல்லரிக்க வேண்டும்.

61. வளரும் ஆன்மாவை வளர்க்க முயல வேண்டும்.

62. அவமானத்தைப் பிரியமாக ஏற்க வேண்டும்.

63. முறையென எதையும் தேடாதே.

64. பரபரப்பாக வேலை செய்யும்பொழுது அமைதியாக இரு.

65. ஒரு சட்டத்தை (discipline) எடுத்துப் பூரணமாகப் பின்பற்று.

66. சக்தி, வீர்யம், தெய்வப் பிரகிருதியைக் கடந்த சிரத்தையை (நம்பிக்கை) நாடு.

67. வாழ்வின் அறிகுறிகள் கூறுவதைக் கவனி.

68. தவறுஎனத் தெரிந்ததைச் செய்யத் துடிக்காதே.

69. கடந்ததை வலியுறுத்தும் பழக்கம் ஒன்றைக் கைவிடு.

70. அபிப்பிராயம் என்பதை அழிக்க முயல வேண்டும்.

71. சரி என பலமாக நீ அறிவதை ஆழத்திற்குக் கொண்டு போ.

72. யாரால் உனக்கு அழிவு வருமோ அவரிடமிருந்து வரும் பெரும்பரிசை மறுத்துவிடு.

73. பிறருக்குச் செய்த தவறுகளில் ஒன்றைப் பூரணமாகப் பாதிக்கப்பட்டவர் முழு திருப்தியடையும் வரை செய்.

74. செல்லம் கொடுப்பதைச் செல்லமாக வளர்த்துக்கொள்.

75. மன்னிக்க முடியாத குற்றத்தை ஏற்றுப் போற்று.

76. அன்று மயங்கிய கவர்ச்சியில் ஜீவனில்லை என இன்று உணர முடியுமா?

77. அழைப்பு ஆனந்தம் தர வேண்டும் - அது ஆன்மீக நன்றியறிதல். நினைவுக்கும் அழைப்பின் மகத்துவமுண்டு.

78. யாருக்கு என்ன வேலை செய்தால் தடை விலகி வாயில் திறக்கும் எனப் பார்.

அச்செயலுக்குரிய நேரத்தைக் கண்டுபிடி.

79. உனக்குத் தாங்காதவற்றை (sensitivity) அறிவதுபோல் வாழ்வை அறிய வேண்டும்.

80. அழைப்பு ஆழத்தில் ஆனந்த உணர்வு கொடுப்பதைக் கவனி.

81. எவரையும் அவருக்குத் தாங்காத இடத்தில் (sensitivity) தொடும்படிப் பேசாதே.

82. சிறு தவறு, குறை ஏற்படாவண்ணம் 24 மணி நேரம் (3 நாள் நல்லது)போக வேண்டும்.

83. 3 மணி நேரம் மனத்தில் ஒரு குறையும் (complaint) வராதபடித் தடுத்து விடு.

84. பிறர் கர்மத்திற்குக் கருவியாகக் கூடாது. 1 வாரம் அல்லது 1 மாதம் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

85. முடிவைத் திட்டவட்டமாக எடு (1 வாரம்).

86. கடன் பெறுவதைச் சில காலம் தள்ளி வை.

87. முனைந்து உதவி செய்யப் போவதை சில காலம் ஒத்திப்போடு.

88. என்ன விஷயம்என அறியும் ஆவலை (curiosity) மறுத்துவிடு (1 மாதம்).

89. பிறருக்கு நல்லது செய்ய நினைப்பது ஆனந்தம் தர வேண்டும்.

90. அளவுக்கு மீறிச் சாப்பிடாதே.

91. பொங்கிவரும் சந்தோஷம் இயல்பாக வேண்டும்.

92. கோள் சொல்லக் கூடாது.

93. காணிக்கை.

தொடரும்....

****

 


 


 


 


 

 



book | by Dr. Radut