Skip to Content

11.சாவித்ரி

சாவித்ரி

P.68 The burden of a long unmeaning tale

நீண்ட நெடிய அர்த்தமற்ற புராணத்தின் அவதி.

.புதிர் விளங்கவில்லை. இருளான ஜடம் ஒளித்துள்ளது.

.வாயிலில்,வாயிலின் அடியில், தெய்வ இரகஸ்யம் புதைந்துள்ளது.

.அழியாத ஆத்மாவை ஒளித்து வைத்த உடல்.

.ஊர் பேரில்லாதவன் ஒளிந்துள்ள சக்தியை உடையவன்.

.ஜடரூபம், எண்ணத்தைக் கடந்த நோக்கம்.

.கற்பனையைக் கடந்த ஆபத்து.

.எல்லாம்வல்ல எதுவும் தெரிய முடியாத சக்தி.

.ரூபமே தன்னையறியாமல் அவன் உறைகிறான்.

.தடமறியாத மனம் தன்னையறியாத திரை.

.எண்ணம் உலவும் உலகில் அலையும் மனிதன்.

.தவறு நிறைந்த சத்தியத்தில் தவழும் மனிதன்.

.சிகரத்தில் விவேகத்தைத் தேடும் மனிதன்.

.தன்னையே தேடுபவனின் மறதி போன்ற நிலை.

.இழந்த உள்ளொளியைத் தேடுபவன்போல.

.புது இடத்திற்கு வந்த வழிப்போக்கன்போல.

.தெரியாத வீட்டை நோக்கி அவன் செல்கிறான்.

.சத்தியம் தன் சத்தியத்தைத் தேடுகிறது.

.ஆடுபவன் ஆட்டமானான்.

.சிந்திப்பவன் சிந்தனையானான்.

.அனேகன் மௌனமான ஏகனானான்.

.பிரபஞ்ச சக்தியின் சின்னம்.

.ஜடமான ஜீவனுள்ள சின்னங்கள்.

.நிகழ்ச்சிகளெனும் சித்ரகூடம்.

.இடைவிடாத அதிசயத்தை ஆழ்ந்து தேடினான்.

.ஆயிரம் புதிருக்கு அவன் கண்டுபிடித்த விடை.

.அனைத்தையும் அறியும் ஆத்மாவின் ஓர் ஒளிக்கதிர்.

.சக்தி வாய்ந்த தம்பதியுடன் செய்த ஒப்பந்தம்.

.அவளுக்காக அவளுடன் இணைந்தான்.

.காலத்தின் காலத்தைக் கடந்த கதியைப் பின்பற்றினான்.

.அவள் வினோதமான குணத்தின் விபரீத நாடகம்.

.திரையிட்ட இலட்சியத்தின் அதிர்ச்சியும், ஆச்சரியமும்.

.அவள் கோணல் கோலத்தின் ஏற்றமும், தாழ்வும்.

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சிறுவயதிலும் பெரும்பாலோர்க்கு ஆர்வமிருப்பதில்லை. உயர்ந்த ஆசையை இலட்சியமென பலர் கருதுகின்றனர். இளமை தாண்டினால் பலருக்கு ஆசையும் இருப்பதில்லை. நடுத்தர வயது அடைந்தபின் மனம் அசை போடுவதை மட்டும் மேற்கொள்ளும்.அது வளர்ந்து, வயது முதிர்ந்தபின் மனிதனைப் பிடித்து உலுக்கும்.

அசை போடும் மனிதன் ஜீவனற்றவன்.


 



book | by Dr. Radut