Skip to Content

12.மின்சார பில்

அன்பர் கடிதம்

மின்சார பில்:

இருளே அறியாத ஜோதிமயமான சத்திய லோகமாகிய பொன்னுலகை விட்டு அஞ்ஞான இருள் நிறைந்த பூலோகத்திற்கு வந்து,இருளை விலக்கி, ஒளிமயமாக்க வந்திருக்கிறார் அன்னை. இந்த அன்னையால் முடியாதது பூலோகத்திலும் சரி, மற்ற லோகங்களிலும் சரி, எதுவுமே இல்லை. இப்படிப்பட்ட அன்னை நமக்குக் கிடைத்தது பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்த புண்ணியம்தான்.

அன்னை பூலோகத்தின் இருளை விலக்க மின்னலாக வந்துள்ளார் என்பதை நாம் உணர வேண்டும். அன்னையை நம்பினால் அவர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார். அவருடைய சக்தியை உணர்ந்து, "நம் அன்னையால் எதுவும் முடியும்' என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் எதையும் சாதிக்கலாம்.

எனக்குத் தெரிந்தவரையில் தியான மையத்தில் மின்கட்டணக் கணக்குகளின் விபரம் 3244/2330/2452/2087/2087/2087/1600/1350/617. அதிகமாக வரும்போது 4000க்குப் பக்கமாக வருகிறதே, நாலாயிரத்தை"அன்னை'எட்டிப் பிடித்துவிடும் போலிருக்கிறதே, என்ன செய்வது எனப் பேசிக் கொண்டனர். அதோடு மறந்துவிட்டனர். எனக்கு மட்டும் நம்பிக்கை உண்டு மதர் மேல். மின்சார பில் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் என் மனம் வருத்தப்பட்டது. வருத்தப்பட்டுப் பயனில்லை, அன்னையிடம் கேட்போம் என மனதை மாற்றி, மனதை அன்னை பக்கம் திருப்பி, அன்னையால் எதுவும் முடியும் என்ற வாக்கியத்தை நினைவுக்கு கொண்டுவரப் பார்த்தால், அந்த வாக்கியம் மனதில் மறைந்திருந்தது. அதைப் புதுப்பித்து அன்னையை கேட்கலாம் என அன்னை பக்கம் போகும்போது சமூகப் பழக்கம் முன்வந்து நின்று, "நீ எப்படி வெற்றி பெறுவாய்? 40 பேரும் முடியாது என்று விட்டுவிட்டதை உன் ஒருவனால் எப்படி முடியும்?' "சமூக பழக்கமே அப்படி ஒரு பக்கமாக உட்காரு. அன்னையை சாதாரணத் தெய்வம் போல் நினைத்தாயா? காலத்தைக் கடந்தவர், அவரால் முடியும்'என நானும் காலத்தை கடந்த நிலைக்குப் போய், "அம்மா! மற்றவர்களைப் பற்றிய நினைவு தடை என்றால், தடைகளை உடைக்கும் சக்தியல்லவா?

தடைகளை உடைத்து அருள் புரியுங்கள்'. 3850 ரூபாய் பில் 1000ரூபாய் குறைந்து 2850 ரூபாயாக வந்தது. "குறைத்தால் போதும், எனக்குப் பெரிய வெற்றி', சொல்லி விட்டு வருஷகணக்கில் மறந்துவிட்டேன்.

7.4.2006 அன்று மின்சார பில் கட்ட பணம் மின் கட்டண அட்டையில் வைத்து வைத்திருந்தார்கள். "என்ன இது, மின் கட்டணம் நிறைய வரும். பணம் என்ன குறைவாக வைத்திருக்கிறார்கள், பார்க்கலாம்'என எடுத்துப் பார்த்தேன். நம்பமுடியாத சந்தோஷம் எனக்காகக் காத்திருந்தது. பணத்தை எண்ணிப் பார்த்தேன்; 617 ரூபாய் இருந்தது.அட்டையில் பார்த்தேன்; 130 யூனிட்டுக்கு 617 என எழுதியிருந்தது.அதைப் பார்த்ததுமே, "அம்மா! நன்றி. இந்தக் குழந்தையின் கற்பனையை நிஜமாக்கிவிட்டீர்கள். குழந்தை கேட்டதோ 1000. அம்மா கொடுத்ததோ 3233. இந்த குழந்தையின் ஆழ்மனதில் இருந்ததைக் கண்டு, அதையும் நிறைவேற்றிவிட்டீர்கள்', மனமும், உடலும் பறப்பதுபோல் உணர்வு ஏற்பட்டது. "இத்தனைத் தடைகளையும் உடைத்து, இந்தப் பிஞ்சுக் குழந்தையின் ஆழ்மனதின் எண்ணத்தை நிறைவேற்றிவிட்டீர்கள்.உங்களை என்ன வார்த்தை சொல்லி  பாராட்டுவது என எனக்கு  வார்த்தைகள் தெரியவில்லை. அம்மான்னா அம்மாதான்!

நீ என்னை வார்த்தைகளால் புகழவேண்டாம். என் மேல் நம்பிக்கையும், எனக்காக எதையும் விடும் தைரியமும் இருந்தால் போதும். உன்னுடன் இருப்பேன்.

அம்மா எனக்கு இப்படியொரு பாக்கியம் கிடைத்ததற்கு நன்றியுடன் இருப்பேன்.

அம்மாவிடம் இன்னொரு விஷயம் தெரிஞ்சிக்கனும். அம்மா பணம் ஆயிரம் குறைக்கச் சொன்னேன். மூவாயிரத்துக்கும் அதிகமாக குறைத்துவிட்டீர்கள். ஆனால் மின் விளக்குகள் முதல் இருந்த அனைத்தும் இருக்கின்றன; ஃபேன்கள் அனைத்தும் இருக்கின்றன;எவையும் குறையவில்லை; ஃபிரிஜ், ஏர்கூலர் இருக்கிறது; இத்தனையும் மின்சாரத்தைச் சாப்பிட்டு, அதனதன் வேலையைச் செய்கின்றன.ஆனால் யூனிட் குறைந்திருக்கிறது. இது எப்படிஎன எனக்குத் தெரியுது.பிரம்ம சக்தியை பிரம்மம் எடுத்தால் தான் வளரும்.

இந்தக் கட்டுரையை படிப்பவர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த வரி எழுதுகிறேன்: காலத்தைக் கடந்த நிலையில் நாம் இருந்தால் இது நடக்கும். காலத்தை கடக்க என் மனதை அன்னை பக்கம் திருப்பினேன்.நாம் அன்னையின் பக்கம் இருந்தால் நம் விருப்பம் நிறைவேறுகிறது என்பது நூற்றுக்கு நூறு வெற்றி மட்டும் நமக்குண்டு. எனக்கு உள்ளுக்குள் ஓர் ஆசை இருந்தது. 3000 குறைத்து மீதியை கட்டும்படி செய்யுங்க எனக் கேட்க தோன்றியது. எப்படிக் கேட்பது? இவ்வளவு ஆசையாஎன நினைப்பார்களே என்ற வெட்கம் வந்து தடுத்தது. அந்த வார்த்தையை வெளிவிடாமல் உள்ளுக்கு அனுப்பிவிட்டேன். அந்த எண்ணம் ஆன்மாவை அனந்த அற்புத மலராக மலர்ந்து மனம் மணம் வீசியது. இதற்குப் பொருள் உள்ளிருக்கும் எண்ணத்தை மலரச் செய்தார். மூவாயிரத்துக்கும் அதிகமாகவே குறைத்துவிட்டார்.3850 ரூபாய் பில் வரும்போது இருந்த மின் சாதனங்கள்தாம் இப்போதும் இருக்கின்றன. அதே மின்சாரம்தான் செலவாகுது.

மின்சாரக் கணக்கு:

யூனிட்டுகளின் கணக்கு: 540/390/410/350/350/350/300/280/230/130. ஒவ்வொரு முறை கணக்கெடுக்கும்போதும் குறைந்துகொண்டே வந்து 130 யூனிட்டுகள் கணக்கில் வந்தது. அன்னை என்ன என்ன அற்புதங்கள் செய்கிறார். அற்புதங்கள் செய்து நம்மை சந்தோஷத்தில் மூழ்க்கடித்து, திக்குமுக்காட வைப்பதே அன்னை விளையாட்டு. 540யூனிட்டை 410 யூனிட்டாக குறைத்து, 130 யூனிட்டாக்கிவிட்டார்கள், நன்றி!

உங்களுடைய விளையாட்டுகள் அற்புதம். தினமும் என்னை உங்கள் விளையாட்டில் சேர்த்துக்கொண்டு வெற்றிக்கு அற்புதத்தைப் பரிசாகக் கொடுங்கள்.

 

****


 


 book | by Dr. Radut