Skip to Content

04.லைப் டிவைன்

 "ஸ்ரீ அரவிந்தம்"

                                                   லைப் டிவைன்              கர்மயோகி

XV. The Supreme Truth- Consciousness
Page No.123, Para N o.1

15. உயர்ந்த சத்தியஜீவியம்

This Supermind is all.

 சத்தியஜீவியமே அனைத்தும்.

It is all-containing.

 அதனுள் அனைத்தும் உண்டு.


It is all-originating.

 அனைத்தும் அங்கு உற்பத்தியாகிறது.

It is all-consummating.

 அனைத்தையும் முடிப்பது அதுவே.

We have to regard this Supermind as the nature of the Divine Being.

இந்த சத்தியஜீவியத்தை நாம் தெய்வீக சத்புருஷனுடைய சுபாவமாகக் கருத வேண்டும்.

The Divine Being has its absolute self-existence.

 அப்புருஷனுக்கு பிரம்ம வாழ்வுண்டு.

In its action it is the Lord.

 அது செயல்படும்பொழுது ஈஸ்வரனாகும்.

It creates its own worlds.

அது தன் லோகங்களை உற்பத்தி செய்யவல்லது.

We consider the latter aspect.

 இந்த இரண்டாம் அம்சம் நமக்கு முக்கியம்.

This has a truth.

 இதற்கொரு உண்மையுண்டு.

We call it God.

 நாம் அதைக் கடவுள் என்கிறோம்.

This is not a too personal, limited Deity.

 இஷ்ட தேவதை என்ற குறுகிய கருத்தன்று நாம் கூறுவது.

It is an ordinary occidental conception.

 மேல்நாட்டார் அனைவரும் நினைப்பது அதுவாகும்.

It is a magnified and supernatural Man.

 மனிதன் இயற்கையை வெல்லும் திறன் பெறும் நிலை அது.

It erects a too human a figure.

அது தெய்வத்தை மனித உருவத்தில் கற்பனை செய்வதாகும்.

It is a relation between Supermind and ego.

 அது சத்தியஜீவியத்திற்கும் அகந்தைக்கும் உள்ள தொடர்பு.

The Supermind is creative.

 சத்தியஜீவியம் சிருஷ்டிக்கவல்லது.


The Deity has a personal aspect.

இஷ்ட தேவதைக்குச் சொந்த அம்சம் உண்டு.

We must not exclude this.

 இதை நாம் விலக்க முடியாது.

The existence has many faces.

பிரபஞ்ச வாழ்வுக்கு அநேக அம்சங்களுண்டு.

The impersonal is only one of them.

 பொது அம்சம் அவற்றுள் ஒன்று.

The Divine is All-existence.

 தெய்வம் பிரபஞ்ச வாழ்வனைத்தையும் தழுவும்.

But it is also the one-Existent.

இருப்பினும் அது ஒரு ஜீவன்.

(It is the sole Conscious-Being.  But still it is a Being.)

 (அது ஒன்று மட்டுமே தன்னையறியும் ஜீவன். எப்படியானாலும் அது ஒரு ஜீவன், புருஷன்).

We are not concerned with this aspect now.

 இந்த அம்சம் நமக்குத் தற்போது முக்கியமில்லை.

The divine consciousness has an impersonal psychological truth.

 தெய்வீக ஜீவியத்திற்கு பொதுவான மனோதத்துவ உண்மையுண்டு.

It is the truth of the divine consciousness.

அதுவே தெய்வீக ஜீவியத்தின் சத்தியம்.

We are seeking to fathom this.

 அதை நாம் ஆழ்ந்து ஆராய்வோம்.

Let us fix it in a large and clarified conception.

 அதைப் பரந்த அளவில் தெளிவுபடுத்துவோம்.

Contd..........

                                  தொடரும்....

 ****

 ****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதன் ஆனந்தத்தை அவனுடைய ஜீவியத்தில் ஆழ்ந்து ஏற்றுக் கொண்ட நோக்கங்களால் வலியாக மாற்றுவதை நாம் காண்கிறோம்.

ஆனந்தத்தை வந்து வலியாக மாற்றுவது மனிதவாழ்வு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜடம் தெய்வ நிலைக்குப் போக துன்பத்தைக் கருவியாக நாடுகிறது.

துன்பத்தின் பரிணாம நிலை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சமூகத்திலும், வாழ்விலும் ஒவ்வொருவருக்கும் பிறருடைய சேவை, உதவி, ஆசீர்வாதம் தேவைப்படுகின்றன. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ளவரிடமிருந்தும் அவை தேவைப் படுகின்றன. எந்த விஷயத்தில் எவரிடம் உதவி தேவையோ,அந்த விஷயத்தில் அவரை நம்பியுள்ளவராவோம்.

பிறரை நம்பி இருப்பது தாழ்ந்த நிலையிலுள்ளவன் கீழ்ப்படிதலாகும்.


 

 



book | by Dr. Radut