Skip to Content

05.பிரியம்

பிரியம்

கர்மயோகி

. தன்னையறியாமல் மனம் அடுத்தவரை நாடுவது பிரியம் எனப்படும்.

.பிரியம் உணர்ச்சிக்குரியது; அன்பு ஆத்மாவுக்குரியது.

.பிரியம் பிரியமுள்ளவரை நாடும்.

.அன்பு அனைவரையும் நாடும். பிரியம் குறிப்பிட்டவரை நாடும்.

.அனைவரையும் நாடும் பிரியம் அன்பு.

.பிரியம் வரும், போகும் என்பது வழக்கு.

.வருவதும், போவதும் ஆசை, பாசம், பற்று; பிரியமில்லை.

.இருந்து போனது பிரியமில்லை.

.இல்லாமல் உற்பத்தியாகக் கூடியது பிரியம்.

.பிரியத்தில் உண்மை தவிர மற்றவை கலக்கக்கூடாது.

.நடிப்புக்காகப் பிரிந்திருக்கலாம் என்ற நண்பர்கள் உண்மையிலேயே பிரிந்தனர்.

.நடிப்பையும் ஏற்க முடியாதது பிரியம்.

.தம்பதிகள் பிரியமாக இருப்பார்கள்; இல்லாமலிருப்பார்கள்; ஒருவருக்கு மட்டும் பிரியமிருக்கும்.

.அவர்களும் நடிப்பாக 1 மணி நேரம் பழகினால், பேசினால், அது மறக்க முடியாததாகிவிடும்.

.நடிப்பால் பிரியம் எழாது என்பது உண்மை.

.அன்னைச் சூழலில் நடிப்புமூலம் நல்லது வருவதும் பெரியது.

.பிரியமேயில்லாத சிடுமூஞ்சி தம்பதிகள் 1 மணி நேரம் பிரியமாக நடித்தால், அதன்வழி அன்னை செயல்பட்டு அவரிடையே பிரியம் நிலையாக எழும்.

.அன்னைக்கு ஒத்து வாராத பொய், நடிப்பு, ஏமாற்றம், சூது, வாது, கபடு,திருடு நாம் விலக்க வேண்டியவை.

மனத்தின் ஆழத்தில் இத்தனை தவற்றுக்குப் பின்னும் உண்மையிருந்தால் அன்னை அதன் மூலம் செயல்பட்டு வாழ்வை மாற்றிவிடுவார்.

நமக்கில்லையென்றாலும் அன்னைக்கிருந்தாலும் அப்படி வாழ்வு மாறும்.

.அன்னை செய்பவற்றை மகாபாரதத்தில் காண முடியாது.

.உலகமே எதிரியானாலும் அன்னை பலிக்கும்.

.உடையவரே எதிரியானாலும் அன்னை பலிக்கும்.

.அன்னை தவறுவதேயில்லை; தவறியதேயில்லை.

.அன்னையிடம் வந்து, அன்னை பலிக்கவில்லை என்றவரில்லை. அன்னையை விலக்கியவருண்டு.

.அப்படிப்பட்டவரும் வாழ்வு ஜீவனற்றதாக இருந்தால் 1 மணி நேரம் பிரியமாக நடித்துப் பேசிப் பழகி, அன்னைக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம்.

.அன்னையை முழுவதும் அறிய முயல்வது ஒரு பெரிய யோகம்.

.அன்னைக்கு நிகராக எவரையும் கூற முடியாது. அவரே அவருக்கு நிகர்.

.அவர் செயல் வழி வரும் அருள் பேரருளாகும்பொழுது, அது அன்னையையும் மிஞ்சும்.

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

முரண்பாடு, வரையறை, சோகம், நோய், பிரச்சினை, ஜடம், பிரிவினை, அறியாமை ஆகியவை அவற்றிற்கு நேர்மாறானவை. அகண்டத்தின் நோக்கோடு அவற்றைப் புரிந்துகொண்டால் அது தெரியும்.

பிரம்ம ஞானத்திற்கு சோகம் ஆனந்தமாகத் தெரியும்.


 



book | by Dr. Radut