Skip to Content

15.ஹாவாய்

ஹாவாய்

ஹாவாய் என்பது ஒரு தீவு. அமெரிக்க மாநிலங்களில் ஒன்று. அங்கு ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. வேலை செய்பவரைப் பைத்தியங்கள் திட்டும், அடிக்கும். இது வழக்கம். ஓர் அமெரிக்க டாக்டர் இங்கு வேலை செய்தார். அவர் நோயாளிகளை மருத்துவ முறைப்படி சிகிச்சை செய்யவில்லை. அவனுடைய file கோப்பை எடுத்து வைத்துக்கொள்வார். அதைப் படிப்பார். "என் பிரியத்தை நான் இந்நோயாளிக்கு அனுப்புகிறேன்'' என பலமுறை கூறுவார்.

- நோயாளிகளின் கடுமை குறைந்தது.

- சிலர் குணமாயினர்.

- பலர் பூரண குணம் பெற்று வீடு திரும்பினர்.

இது ஹாவாய் தீவில் பரம்பரையான பழக்கமான முறை.

- மனம் கருணையால் நிறைந்தால் அதைப் பிறருக்குத் தர முடியும். அது தானே அவரைப் போயடையும்.

1914ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்னை பகவானை சந்தித்தார். அடுத்த நாள் "உலகம் இருளில் மூழ்கியிருப்பது பெரிதன்று. நேற்று நான் கண்ட மஹானிருக்கும்வரை இறைவன் திருவுள்ளம் இவ்வுலகில் நிறைவேறும்'' என தம் டைரியில் எழுதினார்.

உள்ளத்து உண்மையை உலகம் ஏற்று உய்யும் தூய்மை தெய்வம்.

****



book | by Dr. Radut