Skip to Content

03.லைப் டிவைன் - கருத்து

"Life Divine" - கருத்து

லோகம் மாறினால் காலம் மாறும்.

மனம் தூரத்திலுள்ளவரை அசைக்கும்.

. ஆர்வமான நேரம், பல மணி நேரம் சில நிமிஷங்களாகப் பறக்கும்.

. ஆபத்தான நேரத்தில் நிமிஷம் யுகமாக நகரும். இந்த அனுபவங்களுக்கு The Life Divine தத்துவ விளக்கம் தருகிறது.

. காலம் என்பது நிலையானதன்று. உடலுக்குரிய காலம், மனத்திற்குரிய காலம், ஆத்மாவுக்குரிய காலம் என வேறுபடும்.

. வீடு கட்டுவது போன்ற செயல்கட்கு அந்தஸ்தைப் பொருத்து காலம் சுருங்கும்.

வசதியற்றவன் நெடுநாளிலும், வசதியானவன் உடனேயும் கட்டிவிடுவான்.

Promotion பதவி உயர்வு என்பது சர்க்காரில் சீனியாரிட்டியைப் பொருத்து மெதுவாகச் சட்டப்படி நகரும்.

தனியார் கம்பனியில் திறமையைப் பொருத்து வேகமாக வரும்.

அரசியலில் சந்தர்ப்பங்கள் மாறினால் MLA மந்திரியாவான். நேரம் தேவை இல்லை.

வீடு கட்டுவதும், பிரமோஷன் பெறுவதும் இந்த உதாரணங்களில் காரணம் புரிகிறது.

காலம் மாறுவதற்குத் தத்துவம் காரணம் கூறுகிறது.

உடலின் காலம் மெதுவாகவும், மனத்தின் காலம் வேகமாகவும் - மனோ வேகம் - நகரும்.

மனத்தின் பின்னால் செல்ல முடியுமானால்

ஜடத்தின் பின்னாலுள்ள இடம் தெரியும்.

அங்கிருந்து மனம் குரல் எழுப்பினால்

தூரத்திலுள்ள பொருள் அசையும்.

. ஆத்மா தன் அசைவைக் காண்பது காலம் என்பது தத்துவ விளக்கம்.

மனிதன் தன் மனத்தின் அசைவைக் காண்பது எண்ணம் அல்லது கற்பனை.

மனிதனுக்கு மனம் செயல்படுவதுபோல் சத்புருஷனுக்கு ஆத்மா செயல்படுகிறது.

மனிதன் உள்ளே போய் மனத்தைக் காண்பது எண்ணம் உற்பத்தியாவது.

அதேபோல் புருஷன் உள்ளே போய் ஆத்ம சலனத்தையறிவது காலம்.

எனவே காலம் என்பது ஆத்மாவின் எண்ணம் எனலாம்.

காலம் ஆத்மாவின் எண்ணம் என்பதால், தூரத்திலுள்ள பொருளையோ, மனிதனையோ ஆத்மாவால் அசைக்க முடியும்.

மனிதன் ஆத்மாவானால் தூரத்திலுள்ளவற்றை ஆளமுடியும்.

***
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நமக்கு எதைச் செய்ய முனைப்பிருக்கிறதோ, அது தேவை இல்லாத சின்ன விஷயம். நம்மையறியாமல், நம்மை மீறிய நிலையில் எதைச் செய்வதற்கு உள்ளிருந்து உந்துதல் இருக்கிறதோ, அது பெரிய தெய்வ காரியம்.

சிறிய விஷயத்திற்கு முனைப்பு; பெரியதற்கு உள் உந்துதல்.


 


 



book | by Dr. Radut