Skip to Content

08.சாவித்ரி

சாவித்ரி

P.78 There is a provider for mind's satiety

மனம் திகட்டும் மணியான பொருள்.

. தசை தாளம் போடுகிறது; ஆனால் ஆத்மா கீதம் எழுப்பவில்லை.

. காலம் தரும் கனிந்த இனிமை அனுபவித்தறியாத ஆனந்தம்.

. பெருவாரியின் அர்த்தமற்ற அனுகூலம்.

. பூரிப்பின் சிலை புதுமையை இழந்துள்ளது.

. புண்பட்ட புன்னகையின் ஜீவனற்ற கதிர்.

. மனமோ, உணர்வோ பெற்ற சிறு தென்றல்.

. லோகத்தின் அதிபதி உடலின் அடிமைக்கு வீசிய எலும்புத்துண்டு.

. ஆனந்தக் கட்டுப்பாட்டின் அடிச்சுவடு.

. அறியாமையின் அரியாசனமுள்ள அரண்மனை.

. பெற்றனவெல்லாம் உடனே பேற்றை இழந்தன.

. காலமெனும் கருவூலத்தில் காதறுத்த காசோலை.

. இருண்ட ஜடத்தின் அரைகுறையான ஆணவம்.

. செய்த முயற்சிகளெல்லாம் செய்யவில்லைஎனக் கூறும்,

. புதிய பிரபஞ்சத்தின் குழப்பமான அட்டூழியம்.

. வெற்றியெல்லாம் பெற்ற தோல்வியின் வித்து.

. காண்பதெல்லாம் கரையேறாக் காட்சியெனத் தோன்றும்.

. எழுந்து நிற்கும் ஏற்றமிகு எண்ணத்தின் அவநம்பிக்கை.

. சாதனையின் நிலையாமை.

. சிந்தனை ஜனிக்காத உலகின் சிந்தனைச் சிற்பி.

. கருத்தைக் கடந்த கடலுள் உள்ள தீவு.

. சிறுமையாய்ப் பிறந்து பெருமையை நாடும் பிறவி.

. தெய்வாம்சம் உள்ள விலங்கு.

. எவரும் வாழும் ஏற்றமற்ற வாழ்வு.

. அவன் செயல்களை எண்ணிக் கூட்டினால் எழும் சூன்யம்.

. கொளுத்திய தீவர்த்தியை அணைத்தது அவன் ஜீவியம்.

. தொட்டிலுக்கும், சுடுகாட்டுக்கும் மேலே சுடர்விடும் நட்சத்திரம் அவன் நம்பிக்கை.

. அவன் ஆத்ம-இலக்கு அவற்றைக் கடந்தது.

. அழியாத அமரத்துவமுள்ள ஆத்ம சத்தியம் அவன் உண்மை.

. தன்னையும், தமரையும் புதுப்பிக்கும் தனயன்.

. புது உலகை சமைத்ததில் வாழ்வான்.

. அறிவற்ற அவன் காலத்தைக் கடந்து அறிவான்.

. இயற்கையையும், விதியையும் கடந்த பிரம்மம் அவன்.

****

. அவன் செயல் நிறைந்த வாழ்வினின்று அவன் பெற்ற ஓய்வு.

. மனித மாச்சரியம் அழிந்து அடங்கியது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அறியாமை மனம் இருண்டது. உணர்வு மனம் ஓரளவு சூட்சமானது. சிந்தனைக்குரிய மனம் முழுவதும் சூட்சுமமானது. தன் கருமையை விட்டு, பாரபட்சத்தையும் இது விட முன்வந்தால், சத்தியஜீவியத் தொடர்பை இது மீண்டும் பெறலாம்.


 


 


 


 



book | by Dr. Radut