Skip to Content

09.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

கர்மயோகி
 

XVI. The Triple Status of Supermind

Page No.142, Para No. 1

16. சத்தியஜீவியத்தின் மூன்று கட்டங்கள்

It is easy to understand our world.

நம் உலகைப் புரிந்துகொள்வது எளிது.

We try to understand it from the apprehending Truth-Consciousness point of view.

காலத்துள் உள்ள சத்தியஜீவிய (பிரக்ஞா) கண்ணோட்டத்தில் அதைக் காணலாம்.

It sees things from the individual soul.

ஜீவாத்மாவின் நோக்கில் அது பார்க்கும்.

It will be freed from the human mentality.

அது மனித மனப் போக்கிலிருந்து விடுபட்டது.

The action of the Divine Supermind is there.

தெய்வீக சத்தியஜீவியத்தின் செயல் அங்குண்டு.

Our mentality is admitted to participate in it.

அதில் நம் மனப்போக்கு கலந்துகொள்ள அனுமதியுண்டு.

Before that there is a duty.

அதற்கு முன் நாம் செய்யக்கூடியதுண்டு.

Ishwara is the Lord.

ஈஸ்வரன் உலகை ஆள்பவன்.

He develops the world out of His being.

உலகைத் தன் ஜீவனிலிருந்து அவன் உற்பத்தி செய்கிறான்.

He does so by His Maya.

தன் மாயை மூலம் அதைச் செய்கிறான்.

It is done out of the original concentrated unity.

ஆரம்பத்தின் செறிந்த ஐக்கியத்தினின்று அது செய்யப்பட்டது.

We must see what we have realised of this.

இதை எந்த அளவு நாம் அறிந்து கொண்டோம் என நாமறிய வேண்டும்.

Or, what we can as yet realise of this conciousness.

இந்த ஜீவியத்தில் இதுவரை நாம் சாதித்ததென்ன என அறிய வேண்டும்.

Page No.142, Para No.2

 

We started with one assertion.

நாம் ஒரு கொள்கையுடன் ஆரம்பித்தோம்.

It is all existence is one Being.

உலகனைத்தும் சத் புருஷனேஎன்று கூறினோம்.

Its essential nature is Consciousness.

அதன் முக்கிய சுபாவம் ஜீவியம்.

It is one Consciousness.

அது ஒரே ஜீவியம்.

Its active nature is Force or Will.

அந்த ஜீவியம் செயல்படும்பொழுது அது மன உறுதி அல்லது சக்தியாக இருக்கும்.

This Being is Delight.

இந்த ஜீவன் ஆனந்தமயமானது.

This Consciousness is Delight.

இந்த ஜீவியம் ஆனந்தமயமானது.

This Force or Will is Delight.

இந்த சக்தியும், உறுதியும் ஆனந்தமயமானது.

This is Eternal.

இவை காலத்தைக் கடந்தவை.

It is inalienable Bliss of Existence.

சத்தின் ஆனந்தம் அதனின்று பிரிய முடியாதது.

It is Bliss of Consciousness.

அது ஜீவியத்தின் ஆனந்தம்.

It is Bliss of Force or Will.

அது உறுதி, சக்தியின் ஆனந்தம்.

It may be concentrated in itself.

அது அதனுள் செறிந்தது.

And therefore it will be at rest.

செறிவின் மிகுதியால் அது அசைவையிழந்தது.

It can be active or creative.

அது செயல்பட்டு சிருஷ்டிக்கும் திறனுடையது.

This is God.

அது கடவுள்.

This is ourselves in our essentials.

நம் ஆழத்தில், அதன் சாரத்தில் நாம் அதுவே.

This is our non-phenomenal being.

தோற்றத்தைக் கடந்த ஜீவன் இது.

It is concentrated in itself.

அது தன்னுள் செறிந்தது.

It possesses Bliss.

ஆனந்தம் அதன் உடமை.

It is the essential, eternal, inalienable Bliss.

இந்த ஆனந்தம் சாரமானது; காலத்தைக் கடந்தது; பிரிக்கவொண்ணாதது.

It can be active and creative.

இதனால் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்; சிருஷ்டிக்க முடியும்.

Even when it does possess the same Bliss.

அப்பொழுதும் அதே ஆனந்தத்தை அது பெற்றுள்ளது.

Here, we can say, it becomes the Bliss.

இங்கு அது ஆனந்தமாகிறது எனலாம்.

There it is the delight of the play.

அங்கு அது ஆனந்த லீலை.

It is the play of existence.

அது சத்தின் லீலை.

It is the play of consciousness.

அது ஜீவியத்தின் லீலை.

It is the play of force and will.

அது சக்தியின் (உறுதி) லீலை.

That play is the universe.

பிரபஞ்சம் அந்த லீலை.

That delight is the sole cause.

அந்த ஆனந்தம் மட்டுமே முதற்காரணம்.

The motive and object of cosmic existence is that delight.

பிரபஞ்சம் ஏற்பட்டதும், இருப்பதும் இந்த ஆனந்தத்திற்காகவே.

The Divine Consciousness possesses it.

தெய்வீக ஜீவியம் அதைப் பெற்றுள்ளது.

It does so eternally and inalienably.

அது என்றும் பிரிய முடியாதபடி நடக்கிறது.

Our essential being is our real self.

நம் உண்மையான ஆத்மா நமது சாரமான ஜீவன்.

It is concealed from us.

அது நம்மிடமிருந்து மறைந்துள்ளது.

The false self or mental ego conceals.

நம் அகந்தை பொய்யான ஆத்மா. அது மறைக்கிறது.

It also enjoys that play and delight.

அந்த லீலையையும், ஆனந்தத்தையும் அது அனுபவிக்கிறது.

It enjoys it eternally and inalienably.

அதைக் காலத்திற்கும் பிரிய முடியாதபடி அனுபவிக்கிறது.

It cannot indeed do otherwise.

அது வேறு வகையாக இருக்க முடியாது.

It is one in being with the Divine Consciousness.

தெய்வீக ஜீவியத்தினுடன் அது ஒன்றாக உள்ளது.

We aspire to a divine life.

தெய்வீக வாழ்வை நாம் நாடுகிறோம்.

The only way to attain to it is to unveil our self.

திரை மறைவில் உள்ளதை வெளிக்கொண்டுவருவது மட்டுமே வழி.

Our present status is the false self.

நாமிருப்பது பொய்யான வாழ்வு.

It is the mental ego.

இது மனத்தின் அகந்தை.

We must rise to the true, higher status.

உண்மையான உயர்ந்த நிலைக்கு நாம் உயர வேண்டும்.

It is the true self, the Atman.

இதுவே நம் உண்மையான ஜீவன், ஆத்மா.

There we enter into unity with the Divine Consciousness.

இவ்வழி நாம் தெய்வீக ஜீவியத்துடன் ஐக்கியமாகிறோம்.

It is now superconscient to us.

இது நம் ஜீவனுக்குப் புலப்படாதது.

The Atman always enjoys the higher consciousness.

ஆத்மாவுக்கு எப்பொழுதும் உயர்ந்த ஜீவியம் ஒத்துவரும்.

Otherwise we could not exist.

அப்படியில்லாவிட்டால், நம்மாலிருக்க முடியாது.

But our conscious mentality has forfeited it.

நம் மனப்போக்கு ஆத்மாவை இழந்துவிட்டது.

Contd....

தொடரும்.....

****

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜீவனைக் கரைக்கும் விசாரம் போலல்லாமல், தியானம் எண்ணத்திலும், மனத்திலுமுள்ள சக்தியைத் திரட்டுகிறது. அது முழுமை பெற்ற நேரம், ஆழம் திறந்து மனோமயப்புருஷ தரிசனம் கிட்டும்.

எண்ணம் முழுமை பெற்று மனோமயப்புருஷ தரிசனம் கிட்டும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நல்லது, கெட்டதான புறநிகழ்ச்சிகளை அகவுணர்வால் புரிந்துகொள்வது ஞானம்.

நல்லவை உள்ளுணர்வை நேரடியாகவும்,

கெட்டவை தலைகீழாகவும் பிரதிபலிக்கின்றன.


 


 


 


 


 



book | by Dr. Radut