Skip to Content

09.தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

 தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

56. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

. தன்னைத் தானே தூண்டிக்கொள்ளும் சுடர் அன்னை நினைவு.

57. சுகத்துக்குப்பின் துக்கம், துக்கத்துக்குப்பின் சுகம்.

. சுகத்தின்பின் பெருஞ்சுகம், துக்கத்தின்பின் சுகம்.

58. தத்துவம் அறிந்தவன் தவசி.

. சரணாகதியறிந்தவன் யோகி.

59. துளசிக்கு வாசமும், முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே தெரியும்.

. அன்னையின் சூழல் ஆரம்பத்திலேயே தன்னை அறிவிக்கும்.

60. நுணலும் தன் வாயால் கெடும்.

. வாயால் கெடும் மடமையும் சமர்ப்பணத்தால் தப்பும்.

தொடரும்....

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நோக்கம் உள்ளவரை பலன் தரும். ஆழ்ந்த நோக்கம் வாழ்வு

முழுவதையும் நிர்ணயிக்கும்.

 

 

 

 



book | by Dr. Radut