Skip to Content

03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XIX. Life
 
People will say this is not life.
Page No.177
Para No.8
We mean a particular result of universal force.
We are familiar with that.
It manifests only in the animal and the plant.
It does not manifest in the metal, the stone, and the gas.
It operates in the animal cell.
But, it does not operate in the pure physical atom.
We must be sure of our definition of life.
Let us examine in what precisely consists this particular result.
It is a play of Force which we call life.
It differs from the other result in inanimate things.
We call it not-life.
On earth there are three realms of the play of Force.
One is the animal kingdom.
It is an old classification.
Man belongs to it.
Next is the vegetable kingdom.
The last is the mere material void of life.
19. வாழ்வு
 
இது வாழ்வில்லை எனப் பலரும் கூறலாம்.
வாழ்வு பிரபஞ்ச சக்தியின் ஒரு செயல்.
நாம் அதை அறிவோம்.
அது விலங்கிலும், தாவரத்திலும் வெளிப்படும்.
உலோகம், கல், வாயுவில் அது வெளிப்படுவதில்லை.
இது விலங்கின் செல்லில் வேலை செய்கிறது.
தூய ஜடத்தின் செல்லில் அது வேலை செய்வதில்லை.
வாழ்வுஎனில் என்ன என்ற விளக்கம் தேவை.
இந்தக் குறிப்பிட்ட பலன் வருவது என்னஎன்று நாம் தெளிவாக ஆராய்வோம்.
இது சக்தியின் லீலை. நாம் அதை வாழ்வென்போம்.
உயிரற்றவற்றுள் அது தரும் பலன் வேறு.
நாம் அதை வாழ்வென்பதில்லை.
புவியில் மூன்று லோகங்கள் உள. அவை லீலையின் அம்சங்கள்.
விலங்கு வாழ்வு அவற்றுள் ஒன்று.
இது பழைய சாத்திரம்.
மனிதன் விலங்கினத்தைச் சார்ந்தவன்.
அடுத்தது தாவரம்.
முடிவானது ஜீவனற்ற ஜட உலகம்.
It is our pretense.
There is life in us.
There is life in the plant.
How does life differ here?
There is life.
There is not-life.
It is the world of the metal and the mineral kingdom.
It is the old phraseology.
There is the new chemical kingdom.
Science has discovered all these.
Animal life is the life we speak of.
Page No.177
It moves, breathes, eats, feels, desires.
Sometime we speak of plants.
It is a metaphor.
It is not so much a reality to us.
It was considered as a material process.
It was not considered as a biological phenomenon.
We have associated life with breathing.
It is breath of life for us.
It is there in every language of life.
The formula is true.
We can change our conception as to Breath of Life.
Such a change validates the formula.
Locomotion, eating, breathing are signs of life.
Spontaneous motion is another sign.
They are not life, they are processes of life.
They are means for generation of energy.
Or, they release that stimulating energy.
It is done constantly.
இதுவே நாம் உலகை ஏற்கும் பாணி.
நமக்கு உயிருண்டு.
தாவரத்திற்கும் உயிருண்டு.
இரண்டிலும் உயிர் எப்படி வேறுபடுகிறது?
வாழ்வு என்பது ஒன்று.
உயிரற்றவை என்பன அடுத்த வகை.
உலோகமும், கனிப்பொருளும் சேர்ந்த உலகம்.
இது பழைய பாஷை.
புதியதாக ரஸாயன உலகம் வந்துள்ளது.
விஞ்ஞானம் இவற்றைக் கண்டுபிடித்துள்ளது.
 
நாம் வாழ்வு எனக் கூறுவது விலங்கு வாழ்வு.
அது ஊரும், மூச்சு விடும், சாப்பிடும், உணரும், ஆசைப்படும்.
நாம் தாவரத்தை அறிவோம்.
இது ஓர் உருவகம்.
இதற்கு நம்மைப் பொருத்தவரை அர்த்தமில்லை.
தாவரத்தை ஜடமாகக் கருதுகின்றனர்.
தாவரம் உயிருள்ளதாகக் கருதப்படவில்லை.
உயிருள்ளது எனில் மூச்சுவிடும் என நாம் அறிகிறோம்.
வாழ்வின் மூச்சு என்பது மொழியின் உருவகம்.
எல்லா மொழிகளிலும் இச்சொல்லுண்டு.
இது உண்மையான சூத்திரம்.
இந்த சூத்திரத்தை நாம் வேறு வகையாக அறியலாம்.
அப்படி நம் மனம் மாறினால் சூத்திரம் பிடிபடும்.
நடப்பது, சாப்பிடுவது, மூச்சு விடுவது ஆகியவை உயிருடனிருப்பதற்கு அடையாளம்.
நினைத்தவுடன் நடப்பதும் அப்படியே.
இது உயிரன்று, உயிர் செயல்படும் வகை.
சக்தியை உண்டுபண்ணும் வழிகள் இவை.
உற்சாகமூட்டும் சக்தியை அவை வெளியிடுகின்றன.
இது தொடர்ந்து நடக்கிறது.  
This energy is our vitality.
It is a process of two functions.
They are disintegration and renewal.
Our existence is substantial.
They support our existence.
They are not the only means of maintaining them.
There are other ways too.
Our sustenance and respiration are our ways.
These are the processes of our vitality.
Breathing is now deemed necessary.
Or, we can say was deemed necessary.
Beating of the heart too was so considered.
They can be temporarily suspended.
Still, human life can remain in the body.
It can remain in full consciousness.
It is a proved fact.
New evidence of phenomena has now come.
We deny any conscious reaction to the plant.
It is now shown it has a physical life.
It is identical with our own.
It is essentially organised as our own life.
It is different apparently in organisation.
This may be proved true.
Then we will have to make a clean sweep of the past.
It is an old facile, false conception.
They pertain to the symptoms.
We must get beyond the symptoms.
The symptoms are externalities.
We must reach the root of the matter.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Contd...
இந்த சக்தியே நம் மூச்சு.
இது இரு வகையானது.
ஒன்று அழிவது, அடுத்தது புதுப்பிப்பது.
நம் வாழ்வு திறனுடையது.
இவை நம் வாழ்வுக்கு ஆதரவு.
வாழ்வை நடத்த இவை மட்டுமே வழிகளில்லை.
இதர வழிகளுண்டு.
நம் உணவும், மூச்சும் நாமறிந்த வழிகள்.
அவை நம் உயிர் வாழும் முறைகள்.
மூச்சு அவசியம்என நாம் கருதுகிறோம்.
நாம் கருதினோம் எனவும் கூறலாம்.
இதயத்துடிப்பும் அப்படியே கருதப்பட்டது.
அவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
இருந்தாலும், உடலில் உயிரிருக்கும்.
உயிர் ஜீவனுடனிருக்கும்.
இதை நிரூபித்துவிட்டனர்.
புதிய விவரங்கள் வருகின்றன.
தாவரத்திற்கு உணர்ச்சியில்லை என்கிறோம்.
தாவரத்திற்கு உயிருண்டுஎன இப்பொழுது நிரூபிக்கப்பட்டது.
அது நம் உயிர் போன்றதே.
நம் வாழ்வு போலவே அது அமைந்துள்ளது.
பார்வைக்கு அதன் அமைப்பு மாறித் தோன்றுகிறது.
இதையும் நிரூபிக்கலாம்.
அப்படியானால், நாம் பழைய நிலையை அடியோடு கைவிடவேண்டும்.
அது ஜீவனற்ற பொய்.
அவை புறத்தோற்றம்.
நாம் தோற்றத்தைக் கடக்க வேண்டும்.
அடையாளமானவை, வெளித்தோற்றம்.
நாம் பிரச்சினையின் மூலத்தை அடைய வேண்டும்.
தொடரும்....  

*****



book | by Dr. Radut