Skip to Content

04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி  

  • உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்
    • The Life Divine தடைகளை உடைக்கும்.
      அது அறிவுக்குரிய தடை.
      மனத்திற்குரிய தடை அறிவுக்குரிய தடையைவிட மாறியது.
      கண்ணெதிரேயிருப்பது மனத்திற்குரிய தடை.
      50 முறை தவறிய வேலையை மீண்டும் அதே போல் செய்வது உணர்வுக்குரிய தடை.
      உடலுக்குரிய தடையை உடைத்தால்
      1. எந்த வியாதியும் அதனால் குணமாகும்.
      2. எந்த லெவல் level அதிர்ஷ்டத்தையும் உற்பத்தி செய்யலாம்.
    • 8 தலைகீழ் மாற்றங்கள் இதைப் புரிந்துகொள்ள உதவும்.
      இதை அன்றாடம் காணலாம்.
      ஒரு செயலைத் தலைகீழே மாற்றிப் பலனைக் காணலாம்.
      எவ்வளவுக்கெவ்வளவு செயல் சிறியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாற்றுவது சிரமம்.
    • நல்லதை ஏற்கும்பொழுது 3 நிலைகளில் ஏற்கிறோம்.
      1. புரியாமல் மூடநம்பிக்கையால் ஏற்கிறோம்.
      2. புரிந்து ஏற்கிறோம்.
      3. புரிந்தபின் புரிந்தவற்றை விலக்கி பகவான் சொல்வதை ஏற்கிறோம் - இது பெரியது.
        அதேபோல் மற்றவர் சொல்வதை ஏற்பது பெரியது.
        சிறியவர் சொல்வதை ஏற்பது அதனினும் பெரியது.
        அர்த்தமற்றவர் சொல்வது அடுத்தது.
        எதிரி சொல்வது அதற்கடுத்தது.
        வாய்ச்சொல் - வாழ்க்கை சொல்வது.
        நம் மனத்திலுள்ளதற்கு பொருத்தமான வாய்ச்சொல் அன்னை வாழ்வுமூலம் பேசுவது.
    • நாம் திட்டாமலிருப்பது ஓரளவு முடியும்.
      திட்டினால் திருப்பித் திட்டாமலிருக்க முடியாது.
      100 முறை பொறுத்து 1 முறை பதில் சொன்னால் பொறுமை வீண் போகும்.
      யார் ஆரம்பித்தது என்பதன்று.
      எந்த நிலையிலும், நாம் பதிலுக்குத் திட்டுவது மனித குணம்.
      மனிதன் போய் தெய்வம் வர வேண்டும்.
      1000 நடந்தாலும் ஆழமாக நினைத்து மாறினால் அத்தனையும் ஆற்றுவெள்ளம் காலடிச் சுவட்டை அழிப்பது போலழிக்கும்.
  • உஷாராக முன்கூட்டி பதில் பேசுவது
    • நம்மீது தப்பு வரக் கூடாது என உஷாராக இருப்பது.
      இது உள்ளவரை தரித்திரம் போகாது, அதிர்ஷ்டம் வாராது.
      தரித்திரம் இதனால் உயிர் பெறும்.
      இப்பழக்கம் நாமுள்ள நிலையில் நம்மை நிலைநிறுத்தும்.

      இதற்கு எது எதிரானது?
      எவர் சொல்வதும், எது சொல்வதும், நமக்கில்லைஎன்ற போக்கு.
      அது உண்மையானால், அப்படிப்பட்ட பேச்சு அதன்பிறகு காதில் விழாது.
      பொய் சொல்லும் சந்தர்ப்பம் தரமாட்டேன்என அன்னை கூறுவது இதுவே.
      நாமே விரும்பிப் போகாத குறைக்கு அன்னை இடம் வைப்பதில்லை.
      நாமே விரும்பிப் போகும் நிறையை அன்னை பூர்த்தி செய்வார்.
      அதையும் தேடிப் போகாமலிருப்பது நல்லது.
      நாம் உட்படும் நிலையில் உள்ளது பூர்த்தியாவது மனத்துடையது (psychological).
      குறையும், நிறையும் (social) ஊருக்குரியது.
      மனம் (psychological) என்பது social நிலையைவிட உயர்ந்தது.
      சமூகம் (social) என்பது உயிர் vital. மனம் psychological என்பது அறிவு mental.
      ஒரு பெரிய ஆங்கிலக் கதாசிரியர் "பெறுவது கொடுப்பதைவிடச் சிரமம்'' என்கிறார்.
      பிறரைத் திருப்தி செய்யப் பெறுவது பெரிய மனம்.
      மறுப்பது அவரைப் புண்படுத்தும்.
      அன்னை தரும் அருளை நன்றியுடன் பெறுவது கடினம்.
      பெற முடிந்தால் பெறற்கரியது பெறலாம்.
      பெறும் மனம் பெரிய மனம்.
      மனம் வளரும்படி நினைப்பது வாழ்வு உயர்வது.
      நம்முள் சைத்தியப்புருஷனுண்டு. (The psychic is there in you).
      அன்னை இசை அதை வெளியில் கொண்டு வரும். (Mother's music brings it out).
      அது உண்மை.
      நன்றி சைத்தியப்புருஷனை புல்லரிப்பாகக் காட்டும். (Gratitude brings it out by a thrill).
      புளகாங்கிதம் புனர்ஜென்மம்.
      புனர்ஜென்மம் வாழ்வு வளர்வது.
      உடல் புளகாங்கிதமடைந்தால் உயிர் அதிக நாள் வாழும்; தெம்பு உயரும்.

  • சத்தியம்
    • இருப்பது சத்தியம்.
      இல்லாதது பொய்.
      பொய்யை உறுதியாய் நம்புவது தரித்திரம்.
      மூடநம்பிக்கையை முடிவாக நம்புவது தரித்திரம் வளர்வது.
      தைரியம் அதை வளர்ப்பது தரித்திரத்தின் வலிமை.
      மூடநம்பிக்கை (superstition) தரித்திரம்.
      இல்லாததை கற்பித்து நம்புவது சூட்சுமத்தில் தரித்திரத்திற்கு அழைப்பு அனுப்புவது.
      நம் நண்பர் அதுபோன்ற பெருமையுடையவர்.
      அடுத்த வீட்டுப் பையன் நண்பரை மிஞ்சியவன்.
      அது தரித்திரத்தின் உருவகம் (It is a personification).
       
      அதிர்ஷ்டம்
      X    தரித்திரம்
      மெய்
      X    பொய்
      பெருந்தன்மை            
      X    அல்பம்
      திட்டமுடியாத மனநிலை
      X    கொட்டினால் தேள்
      விட்டுக் கொடுப்பது
      X    பிடியை விடாதது சாமர்த்தியம்

      சற்று சம்பாதித்தவன் சாமர்த்தியமானால் அவன் சாமர்த்தியம் அவனுக்கு தரித்திரமாகும். அதற்குமேல் போக முடியாது.

      ரிஸ்க் (risk) எடுப்பது
      ரிஸ்க்கை விலக்குவது
      (avoiding risk)
      விஸ்வாசம்
      துரோகம்
      வலிமை (strength)
      (weakness) எளிமை
      பொறுமை
      அவசரம்
      கேட்க முடியாத மனம்
      கேட்பது
      நம்மை மற்றவருக்குக் கட்டுப்படுத்துவது  
      பிறர் நமக்குக் கட்டுப்பட்டவரென நினைப்பது
      வதந்தியில் ஆசை இல்லாதது
      (No interest in gossiping)
      ஒட்டுக் கேட்பது, வம்பு பேசுவது
      உழைப்பு
      சோம்பேறி
      ஞாபக சக்தி
      ஞாபக மறதி
      நினைவே வாராதது
      மறந்து அறியாதது
      இனிய சொல் (pleasing words)
      சுடு சொல் (offending words)
      கோள் சொல்ல முடியாதது  
      கோள் சொல்வது

       
  • கெட்டவரிடம் - மட்டமானவரிடம் - நல்ல பேர் வாங்குவது கெட்ட பெயர்

    "நாம் ஒரு societyயில் இருக்கிறோம்''. அதனால் அத்துடன் ஒத்துப் போக வேண்டும்என்பவருக்கு அன்னையிடம் வேலையில்லை, வேலையேயில்லை. சமூகம் (society) பொய் மயமானது, சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாறுவது, சந்தர்ப்பவாதம் opportunist. அது அருவெறுப்பானது. அது முக்கியம்என்பவர் சமூகத்திற்கு (society) உகந்தவர். அது ஏற்கக்கூடிய எண்ணமில்லை.

    • சொஸைட்டி முக்கியமில்லை,
      உண்மை முக்கியம்.
    • சமூகம் முக்கியமில்லை,
      நல்லது முக்கியம்.
    • நாலு பேர் முக்கியமில்லை,
      நியாயம் முக்கியம்.
    • எவரும் முக்கியமில்லை,
      அன்னை (Mother) முக்கியம்.
    • சத்யகர்மா என்று ஒரு வேத ரிஷியுண்டு.
      சிறு வயதில் அவர் ஒரு குருவை நாடினார்.
      "உன் கோத்ரம் என்ன?'' என்று குரு கேட்டார்.
      சிறுவன் தாயாரைப் போய்க் கேட்டான்.
      அவள் "நான் பலர் வீட்டில் வேலை செய்தேன்.
      நீ யாருக்குத் தரித்தாய்என நானறியேன்'' என்றார்.
      சிஷ்யன் அதை, குருவிடம் கூறினான்.
      அவன் சத்தியத்தை மெச்சினார்.
      கோத்ரம் முக்கியமில்லை.
      சத்தியம் முக்கியம் என்றார்.
      அவன் சத்யகர்மா ஆனான்.
      உலகப்புகழ் வேத ரிஷியானான்.
      5000 ஆண்டிற்குப் பின் நாம் அவன் பெயரைக் கூறுகிறோம்.
      சத்தியம் நிலைக்கும்.
      சத் அகம், புறம்எனப் பிரிந்தால் அகம் ஆன்மாவாகும்.
      புறம் சத்தியமாகும்.
      சத்தின் புறமான சத்தியம் நமக்கு அகம்.
  • சூளையில் வேகாத மண்பாண்டம் (Unformed personality)
    • பிறரிடம் பேசுவது, பழகுவது (manners) பழக்கம்.
      இது புறம், வாய்அளவில் உள்ளது, உதட்டளவில் உள்ளது.
      இது அழகாக உள்ள எத்தனை பேர் நமக்குத் தெரியும்?
      நாம் தேறுவோமா?
      உதடு உள்ளே உண்மையாவது (behaviour) நடத்தை.
      பழக்கத்திற்கு (manners) உயிரளிப்பது (behaviour) நடத்தை.
      நடத்தை (behaviour) உண்மையானால் அது அகம் அழகாக இருப்பது.
      நாமே நம்மை அப்படிக் கருத முடியுமா?
      அது அழகாக இருந்தால், அன்பாக இருக்குமா?
      அர்த்தமுள்ளதாக இருக்குமா? நமக்கு ஆனந்தம் தருமா?
      பிறருக்கு ஆனந்தம் தருமா? தந்தால் அது மேல் மனத்தின் மேற்புறம்.
      நடத்தை (behaviour) மேலே, சுபாவம் (character) உள்ளே.
      சுபாவம் (character) மேல் மனத்தின் ஆழத்திற்குரியது.
      அதை சுபாவம்என்று கூறுகிறோம்.
      அதை மாற்ற முடியாது.
      அது ஆழ்ந்த பகுதி. பிரியம், இனிமை, உண்மை, கோபம், மட்டம், கயமை, திருடு, சூது, வாது சுபாவமாகும்.
      பர்சனாலிட்டி (personality) என்பது அதையும் கடந்தது.
      சுபாவத்தின் (character) சாரம் (essence) பர்சனாலிட்டி personality.
      சுபாவம் (character) நிலையானது, மாறாது, மாற முடியாது.
      பர்சனாலிட்டி (personality) அதன் சாரம் (essence).
      சுபாவத்தின் திறன் அது உருவான இடத்தில் மட்டும் பலிக்கும்.
      பர்சனாலிட்டி (personality) அதன் சாரத்தை எல்லா இடங்களுக்கும் கொண்டுபோகும்.
      அந்த பர்சனாலிட்டி(personality)க்கு நமது முத்திரையிருப்பது (individuality) தனித்தன்மை.
      அது உடல், உயிர், மனம், ஆத்மா (physical, vital, mental, spiritual) லெவல்களில் உண்டு.
      அமெரிக்கர்கட்கு ஜடமான தனித்தன்மை (physical individuality) உண்டு.
      அது உலகையாள்கிறது.
      இந்தியர்கட்கு ஆன்மீகத் தனித்தன்மை (spiritual individuality)க்குரிய வித்து (potential) உண்டு.
      ஆனால் ஜடத்திலும் தனித்தன்மை (physical individuality) இல்லை.
      அன்பர்கட்கு ஆன்மாவைக் (spirit) கடந்த (Mother's Individuality) அன்னையின் தனித்தன்மை உண்டு. அது சத்தியஜீவிய ஜீவாத்மா (Supramental Individuality).
      நாமறிந்த சிலருக்கு ஜடமான தனித்தன்மையுமில்லை.
      அவர்கள் வேகாத மண்பாண்டம்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அடக்க முடியாத ஆசையைத் தன்னையறியும் சக்தியாக மாற்றுவது, அதற்குரிய வழுவில்லாத தீர்மானம் திருவுருமாற்றமாகும்.
 
திருவுருமாற்றம் அடங்காததை, தன்னையறியச் செய்யும்.
 
*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அந்நிலையில் முனைந்து முன்கையெடுப்பது அகந்தை அழிந்தால்தான் முடியும். அது அன்னை நம்மில் முன்கை எடுப்பதாகும்.
 
*******



book | by Dr. Radut