Skip to Content

09. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

பூமி ஜடமில்லை, ஜடம் நீள்வதால் 5ஆம் நிலைக்குரியது (P.81)

பொதுவாக நாம் மண், பூமிஎன்பதை ஜடம்எனக் குறிக்கிறோம். இது தவறில்லை. எனினும், ஜடம்என்பது வேறு. பூமி, மண்என்பது பிரித்விஎன சமஸ்கிருதத்தில் கூறுவது. ஜடம் (matter) என்பது ஜட சக்தி (material force). தத்துவப்படி இது சத் தலைகீழே மாறுவதால் உண்டாவது. பகவான் ஜடத்திற்கு அளிக்கும் விளக்கம் பின்வருமாறு.

  1. சத் பிரபஞ்சத்தில் எழ முனைவதால் பொருள் ஏற்படுகிறது (substance).
    இது ஆன்மீகப்பொருள் (Spiritual substance).
  2. மனம் இப்பொருளை புலன்மூலம் கண்ணுறும்பொழுது சத் மனத்திற்கு ஜடமாகத் தெரிகிறது.
    மனம் பிரபஞ்சத்தில் சத்தை ஜடமாகக் காண்கிறது எனலாம். இது தத்துவம்.
    இந்த ஜடம் 5 முறை தன்னை மாற்றுகிறது.
  1. முதல் மாற்றத்தில் எழுவது சப்தம்.
  2. இரண்டாம் மாற்றத்தில் எழுவது காற்று.
  3. மூன்றாம் மாற்றம் நெருப்பு - ஒளியை - ஏற்படுத்துகிறது.
  4. நான்காம் மாற்றத்தில் நீர் உற்பத்தியாகிறது.
  5. ஐந்தாம் மாற்றத்தில் எழுவது பிரித்வி, பூமி, மண் எனப்படும்.
    இது ரிஷிகள் கூறியவை.

பகவான் இதை எழுதுகிறார். ஆனால் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை.
மேற்கூறியவற்றைப் பஞ்ச பூதங்கள் எனக் குறிப்பிடுகிறார்.
பஞ்சேந்திரியங்கள்என்பவை ஐம்புலன்கள்.
பஞ்சபூதங்களை அறியும் திறனையுடையவை பஞ்சேந்திரியங்கள்.
அதிர்வை உணர்வது சப்தத்தை அறிவது. காது ஒலியைக் கேட்கிறது.
தொடு உணர்ச்சியால் சக்தியை அறிவது உடல்.
பார்வைஎன்பது ரூபத்தை அறிவது. ஒளி ரூபத்தைச் செதுக்குகிறது.
ஒளியும், நெருப்பும் ஒன்றானவை.
நான்காம் பூதம் ருசி.
ஐந்தாம் புலன் வாசனை.
சக்தி சக்தியுடன் தொடர்பு கொள்வதால் எழுவது உணர்வு.
உணர்வை அறிவது புலன்.
புலனின் உறைவிடம் இந்திரியம்.
அவை ஐந்து - பஞ்சேந்திரியங்கள் எனப்படும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நினைவுவரும் கடந்தகாலம் உடலின் ஜீவியத்திற்கு உரியது. குறிப்பாக அதன் அகந்தைக்குரியது.
 

 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வாழ்வு எதிரொலிக்க ஒரு வாழ்வு நிலையை அமைப்பால் செறிந்த நிறைவு செய்ய வேண்டும்.
 
எதிரொலிக்குச் செறிவு தேவை.
 
 
******

 



book | by Dr. Radut