Skip to Content

13. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(22) அடுத்தவர் கோணத்தில் விஷயத்தைப் புரிந்துகொள்வது.

  • அடுத்தவர் கோணத்தில் புரிவது ஆண்டவனைப் புரிவதாகும்.
  • அதற்கு அடையாளம், அவர் நம் மனத்திலுள்ளதைப் பேசுவதாகும்.
  • சிருஷ்டி என்பது ஒன்று பலவாகி, பல ஒன்றோடு ஒன்று உறவாடுவதாகும்.
    All is in each, each is in all என்பது தத்துவம். அதன்படி உலகிலுள்ள அனைவரும் என்னுள் உள்ளனர். நான் அனைவரிலும் வதிகிறேன். எனவே ஒவ்வொருவரும் என்னுள் உள்ளனர். நான் அனைவரிலும் வதிகிறேன். எனவே ஒவ்வொருவரும் உலகிலுள்ள அனைவருடனும் உறவாடிப் பெறும் இன்பம் என்னுடையது.
  • அடுத்தவர் கோணத்தில் புரிவது ஆரம்பம்.
  • அடுத்தவர் கோணத்தின் மகிமையை பீர்பால் அக்பருக்கு உணர்த்தினார். அரண்மனை பெருக்குபவன் முகத்தில் விழித்ததால் அன்று பல தொந்தரவுகள் வருகிறதுஎன அவனைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்ட சக்ரவர்த்திக்கு பீர்பால், "அரசன் முகத்தில் விழித்ததால் அவன் தலை போயிற்று" எனக் கூறினார்.
  • ஒரு ரிஷி உலகின் - உலகில் உள்ள அனைவரின் - கருத்தை அறிந்தால், அவர் அக்கருத்தை மாற்ற முடியும். நெடுநாள் பலன் க்ஷணத்தில் வரும். சாவித்திரியில் ஒருவனுடைய சிறப்பு உலகை உய்விக்கும் என்பது அதுவே.
  • அடுத்தவர் கோணம் புரிவது ஆரம்பம்.
    நம் கருத்தை அவர் கூறுவது அதற்கு அடையாளம்.
    நம் கருத்தை அவர் ஏற்பது அடுத்தது.
    தன் தீவிரமான கருத்தை, நம் கருத்தை ஏற்று, மாற்றுவது பெரியது.
    ஒருவரிடம் பெற்ற அனுபவம் பலரிடமும் பெறுவது.
    அடுத்தவரின் அனைத்துக் கருத்தும் தெரிவது, மேலும் ஒரு படி.
    உலகம் நம் கருத்தை வெளியிடுவது.
    உலகம் நம் கருத்தை ஏற்றுச் செயல்படுவது.
    எவ்வளவு நாளானாலும் என் கருத்தை உலகம் செயல்படுத்தத் தவறியதில்லைஎன பகவான் கூறுகிறார்.
    உலகுக்கு முக்கியமானவர் நம் கருத்தை ஏற்று, செயல்பட்டால், நம் மனம் பிரபஞ்ச மனமாகிவிட்டதுஎனப் பொருள்.
    இது ஜீவியத்தில் நடப்பது, மேல்மனத்தில் நடப்பது.
    இதுவே அடிமனத்தில் பொருளில் நடக்கும்.
    ஏதாவது ஒரு விஷயம் இப்படி நடந்தால், நமக்கு யோகம் பலிக்கும்.
    நமது ஆசையை உலகம் பிரதிபலிப்பதும், நம் கருத்தை உலகம் ஏற்பதும், நம் மனத்திற்குத் தெளிவாகப் புரியும்.
    ஆசை பிரதிபலிப்பதும் அர்த்தமுள்ளதேயாகும்.

அகம் புறத்தைப் பலிப்பதில் 3 கட்டங்கள் உண்டு.

  1. நம் மனம் சூட்சுமமாக இருப்பதால், அது உலக நிகழ்ச்சிகளைப் பிரதிபலிக்கிறது.
  2. நம் மனம் வலுவாக இருப்பதால், அது உலகை மாற்றுகிறது.
  3. இடைப்பட்ட நிலை.  
  • அடுத்தவர் கோணத்தில் நாம் விஷயங்களைப் புரிந்து கொண்டால் நம் வாழ்வு பெரியதாகும், இருவர் வாழ்வும் சேர்ந்த அளவு விரிவடையும். பலர் கோணத்திலும் உலகம் நமக்குப் புரிந்தால் பலரும் நம்மை ஏற்பர். நம் வாழ்வு பலர் வாழ்வு அளவு பெரியதாகும்.
  • அடுத்தவர் கோணத்தில் புரிவதைச் செயல்படுத்தினால், அவர்கள் முழுஆதரவு நமக்குக் கிடைக்கும்.
  • உலகை ஆள விரும்புபவன் உலகிலுள்ள அனைவர் கோணத்திலும் விஷயங்களைப் புரிந்து, அதன் முரண்பாடுகளை உடன்பாடாக்கி, அவ்வுடன்பாட்டை மனதால் செயல் படுத்தலாம். அது அவருக்குத் தலைமையைப் பெற்றுத் தரும்.
  • தலைமையின் அளவு மனத்தின் அளவாக இருக்கும்.

(23) ஆன்மா வளரும்பொழுது பரிணாமவளர்ச்சி பெறுவது ஆயுளை நீடிக்கும்.

  • பிறவிச் சூழலினின்று விடுபட்டு மோட்சம் பெறுவது தவம்.
  • பிறவியைத் தவிர்த்து, வாழ்வை அன்னை வாழ்வாக்குவது யோகம்.

    அந்த நாளில் ஊரில் பேங்க் இருக்கும். ஏழைக்கு அங்கு வேலையில்லை. அவனுக்கு எதுவும் தெரியாது. இந்த நாளில் பேங்க் அவனைத் தேடி வந்து கடனுதவி செய்து, முன்னுக்குவர உதவுகிறது. சிறிய ஊர்களில் பேங்க் இருப்பதில்லை. இன்று எல்லா கிராமங்களுக்கும் பேங்க் வந்துவிட்டது. அன்று அன்னையிருந்தார். இந்தியாவிலேயோ, தமிழ்நாட்டிலோ அவரை அறியாதவர் ஏராளம். அன்னையைப் பற்றி அறிவது அதிர்ஷ்டம். அது பலருக்கில்லை. இன்று தமிழ்நாட்டில் அன்னையை அறியாதவரில்லை. அன்னையை அறிந்து, அன்பராவது முதல் நிலை. அன்னையின் அம்சங்களையறிந்து, அவரை ஏற்று, பூரணயோக வாயில் திறப்பது முடிவான கட்டம் ஆரம்பிப்பது ஆகும். பூர்வஜென்மத்தில் அன்னையுடனிருந்தவரே இன்று அவருடன் வாழ்ந்தனர். இது பெறற்கரிய பேறு. இதனால் அது நீடிக்கும் எனக் கூறமுடியாது. காந்திஜீயின் சந்ததிகளைப் பற்றி நாம் இன்று கேள்விப்படுவதில்லை. புண்ணியத்தின் பலனை ஏற்றுப் போற்றலாம். அதை அத்துமீறிப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தினால் "குன்றும் மாளும்”, அதுவும் கரையும், எதிராகவும் மாறும். பூரணயோக வாயில் திறக்கும் அறிகுறிகளில் ஆன்மா வளரும்பொழுது, உடலும் வளர்வது ஒன்று. உடலுக்குரிய தகுதி முடிந்தபின் ஆத்மா அடுத்த உடலை நாடுவது மரணம். ஆத்மா வளரும்பொழுது உடலும் வளர்ந்தால் மரணமில்லை. சிறுவயதில் காய்ச்சல் வந்தால், தானே போகும். வயதானபின் ஒரு வாரம், 10 நாட்கள் படுக்க வேண்டும். வயதானபின் காய்ச்சல் வந்து, நாம் கவனிக்காவிட்டால், தானே சிறுவயதில் போவதுபோல் போனால், உடலில் தெம்பிருக்கிறது எனப் பொருள். ஆன்மா வளரும்பொழுது உடலும் வளர்ந்தால், பூரணயோக வாயில் திறக்கும், தெம்பு வளர்வது காட்டும். இதை ஒரு சௌகரியமாக எடுத்துக்கொள்வதைவிட, இதை அன்னை நமக்கு யோக அழைப்பு அனுப்புகிறார்என அறிதல் நன்று. 10 வேளைக்கு டாக்டர் மருந்து கொடுத்தால், ஓரிரு வேளைகளில் உடல் குணமாவதும் இது போன்றதே. காயம் ஆற ஒரு வாரம் ஆகும் என்றபொழுது, 5 நாளில் ஆறுவதும் உடல் விழிப்பாக இருக்கிறது, ஆன்மா வளரும்பொழுது உடலும் வளர்கிறது, பூரணயோக வாயில் திறக்கிறது, அன்னை யோகத்தை மேற்கொள்ள நம்மை அழைக்கிறார்எனப் பொருள்.

  • பொதுவாக இது அன்பர்கள் கண்ணில் படுவதில்லை.
  • கண்ணில்பட்டு, மனம் ஏற்று, அழைப்பை ஏற்றுக்கொள்வது, அன்னையை பூரணமாக ஏற்பதாகும்.

(24) நாம் செய்யும் வேலை ஜடஉலகினின்று நகர்ந்து, சூட்சுமத்தைத் தாண்டி, சத்தியஜீவிய உலகையடைவது.

  • எதிரி நமக்குச் சாதகமாக மாறுவது.
  • அறிவில்லாமல் அடமாகச் செய்யும் காரியமும் கூடி வருவது.

    செயலுக்கு மூன்று நிலைகளுண்டு. கையால் செய்யும் வேலை ஜடஉலகைச் சார்ந்தது. உணர்ச்சியால் செய்வது சூட்சுமலோகச் செயல். ஆத்மாவால் செய்வது சத்தியஜீவியச் செயல்.

அருள் செயல்படும்பொழுது, யோகவாயில் திறக்கும்.
அது அன்னையின் அழைப்பு.
அப்பொழுது கையால் செய்யும் வேலை தானே
சத்தியஜீவியச் செயலாக மாறும்.

மருத்துவக் கல்லூரியில் படிக்க பண வசதியில்லாதவன் ஆசையின்பேரால் விண்ணப்பம் போடுவது, கையால் செய்யும் ஜட வேலை. அவனுக்கு இடம் அளித்து வரச்சொல்வது, செயல் சூட்சுமமாகியதைக் காட்டுகிறது. கல்லூரியில் சேர்ந்தபின், எப்படி தனக்கு இடம் கிடைத்ததுஎன விசாரித்தால், அவன் பிறந்த ஊரில் பட்டதாரிகளில்லைஎன்பதால் அவனுக்கு இடம் கொடுத்து, ஸ்காலர்ஷிப் கொடுத்தார்கள் என்பது தெரிய வருகிறது. முதல் ஆண்டு, அமெரிக்க புரொபசர் வந்து மாணவர்களை சந்தித்த பொழுது, இவனைத் தேர்ந்தெடுத்து, படிப்பை முடித்தபின் அமெரிக்காவுக்கு அழைப்பது சத்தியஜீவியச் செயல்.

  • இது போன்ற நிகழ்ச்சிகளை நாம் அன்பர்கள் வாழ்வில் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
  • அதை வசதியாக, அதிர்ஷ்டமாக ஏற்கலாம்.
  • யோக அழைப்பாக ஏற்பது முறை.
  • யோகத்திற்கு அன்னை அழைப்பதில்லை.
  • தானே வருபவர்களை "இது சரி வாராது'' எனக் கூறி அனுப்பி விடுவார்கள்.
  • அன்னை யோகத்திற்கு அழைப்பது லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராகும்படி அழைத்ததைப்போல். அடுத்தது இந்திராவுக்கு அவ்வழைப்பு வந்தது.
  • அன்றிலிருந்து இன்றுவரை இராஜாஜி தவிர எவரையும் முதல் மந்திரியாகவோ, பிரதமராகவோ அழைக்கவில்லை.
  • எந்த நாட்டிலும் அது நடக்கவில்லை. சாஸ்திரியும், இந்திராவும் அன்னைதரிசனம் செய்தவுடன் அவ்வழைப்பைப் பெற்றனர்.
  • இராஜாஜிக்கு அந்த அழைப்பு வந்தது, அவர் ஏற்கவில்லை. பிறகு சுப்ரமணியம் அவரை ஏற்கும்படிக் கேட்டுக்கொண்டதால், ஏற்றார். சுப்ரமணியம் பிறகு அன்னைக்குச் சேவை செய்தவர்.
  • சர்ச்சிலை அப்படி அழைத்ததற்கு பகவான் சக்தி செயல்பட்டது காரணம்.

தொடரும்.....

******



book | by Dr. Radut