Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

64. ஆழ்ந்துறையும் சந்தோஷம் பொங்கி வழிவது கலகலப்பாவது.

  • ஒரு நல்ல செய்தி சந்தோஷம் தரும். மற்ற நேரம் அந்த சந்தோஷமிருக்காது.
  • இன்று சம்பளம் ஆயிரம் ரூபாயிலிருந்து பல லட்சம் வரை உயர்ந்து சில கோடியாகவும் உள்ளது.
  • சந்தோஷம் பல கட்டங்களில் எழும்.
  • வெளியிலிருந்து வரும் சந்தோஷம் சிறியது, பெரியது, பிரம்மாண்டமானது என உயரும்.
  • வெளியிலிருந்து வரும் சந்தோஷம் எவ்வளவு பெரியதானாலும் ஓரளவுக்குத்தான் நீடிக்கும்.
  • உள்ளிருந்து எழும் சந்தோஷம் எவ்வளவு சிறியதானாலும் நீடிக்கவல்லது.
  • வெளிச் சந்தோஷம் முடிந்தபின்பே உள்ளிருந்து எழும் சந்தோஷம் வரும்.
  • வெற்றி அனைவருக்கும் சந்தோஷம் தரும்.
  • பொருளால் வரும் வெற்றியைவிட மனிதரைப் பெறும் வெற்றி - நட்பு - அதிக சந்தோஷம் தரும்.
  • அதிகாரம் தரும் சந்தோஷம் அபரிமிதமானது.
  • அன்பு தரும் சந்தோஷம் அமிர்தமானது.
  • ஆதாயம் உயர்ந்தால் சந்தோஷம் பெருகும்.
  • நல்ல மனிதனின் நட்பு, நம்மை அவர் ஏற்பது உயர்ந்த சந்தோஷம் தரும்.
  • ஆதாயமின்றி அதிக உயர்ந்த மனிதனின் நட்பு அபரிமிதமான சந்தோஷம் தரும்.
  • தான் விரும்புபவர் தம்மை விரும்புகிறார் என்பது வாழும் செருக்கைத் தரும் என்பது குறள்.
  • விருப்பம் ஏற்கப்பட்டால் வாழ்வே பெருமையுடையதாகும்.
  • இறைவனை விரும்பும் மனம் சந்தோஷத்திற்குரியது.
  • இறைவன் விரும்பும் மனம் நிலையான உயர்ந்த சந்தோஷத்திற்குரியது.
  • மனிதனில் உள்ள இறைவன் அதனினும் உயர்ந்தது.
  • காரணமில்லாமல் எழும் சந்தோஷம் காரண தேகத்திற்குரியது.
  • பெண் மகப்பேற்றில் பெறுவது பெரும் மகிழ்ச்சி.
  • மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் ஈன்றபொழுதின் பெரிதுவப்பவள்.
  • லெனின் மரணப்படுக்கையில், வாழ்நாள் முழுவதும் மனித குலத்தின் முதன்மையான இலட்சியமான சுதந்திரத்திற்காக வாழ்ந்தேன் என மகிழ்ந்தார்.
  • பீதோவன் எழுதிய ஒன்பதாம் சிம்பனி இசை உலக சிகரம். அவருக்குக் காது செவிடு.
    மேல் நாட்டுப் பாட்டுக் கச்சேரிகளில் மேடையில் வட்டமாக உட்கார வைப்பார்கள்.
    அனைவரும் வாத்தியம் வாசிப்பவர். சங்கீத கர்த்தா அவர்களை நோக்கி நின்று கையிலுள்ள கோலால் இசையை நிர்வாகம் செய்வார். பீதோவன் ஒன்பதாம் சிம்பனியை நடத்தும் பொழுது மண்டபத்தில் அனைவரும் ஆரவாரம் செய்து கை தட்டி எழுந்து கூக்குரலிட்டுக் கோஷமிட்டுப் பாராட்டினர். இத்தனையும் அவர் காதில் விழவில்லை. அவரால் கேட்க முடியாத பாராட்டைப் பார்க்கட்டும் என அவரைத் திருப்பி நிறுத்தினார்கள்.
    சிருஷ்டி கர்த்தா சிருஷ்டியைப் பாராட்டுவதில் பெரு மகிழ்வு பெறுகிறார்.
  • மழலைச் சொல் கேட்பவர் அதனினும் பெரு மகிழ்வு எய்துகிறார்.
  • இதய கமலத்தில் இறைவன் உறைகிறான்.
  • கமலம் மொட்டவிழும் பொழுது இறைவன் - அன்னை - மகிழ்கிறார்.
  • அன்னை ஒருவர் இதயத்தில் பெறும் மகிழ்ச்சி அனைவர் உள்ளமும் பூரிக்கும் செயல்.
  • அது நிகழ்ந்தால் அவருக்கு யோகம் ப-க்கும் எனப் பொருள்.
  • இதுவரை யோகத்திலில்லாத கட்டம் ஒன்றுண்டு. அதை அன்னை அனுபவித்தார்.
    இதயத்தைக் கடந்து, ஜீவனையும் கடந்து உடலில் உள்ள செல்கள் பக்தியால் மலர்வது உடல் ஆன்மாவால் பூரிப்பது.
    அது யோகத்தில் முடிவான நிலை.

தொடரும்.....

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
யோகம் ஜகத்குருவுக்குரியது.
 

*******



book | by Dr. Radut