Skip to Content

10. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

Sri Aurobindo and the Tradition

ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. The Absolute can be reached in the tradition escaping the universal.
    Integral Yoga's first realisation is universalisation.

    மரபில் பிரபஞ்சத்தை விலக்கி பிரம்மத்தை அடையலாம்.
    பூரண யோகத்தில் பிரபஞ்சமயமாவதே முதல் சித்தி.

  2. The traditional goal leaves the earth and humanity as it is.
    Integral Yoga transforms humanity as well as the earth.

    மரபின் இலக்கு உலகையும், மானுடத்தையும் மாற்றாமல் அப்படியே விட்டுவிடுகிறது.
    பூரண யோகம் உலகையும், மானுடத்தையும் திருவுருமாற்றுகிறது.

  3. God is extra cosmic for the tradition.
    God is cosmos for Him.

    மரபில் இறைவன் படைப்பைக் கடந்தவன்.
    ஸ்ரீ அரவிந்தருக்கு, இறைவனும் படைப்பும் ஒன்றே.

  4. Tradition cannot know the Unknowable.
    The Unknown is not Unknowable for Him.

    மரபு அறிய முடியாததை அறிய முடியாது என்கிறது.
    ஸ்ரீ அரவிந்தர் அறியாதது அறிய முடியாததல்ல என்கிறார்.

  5. The tradition needs a human guru.
    The human guru is replaced by the Inner Guru in this yoga.

    மரபில் மனித குரு தேவை.
    பூரண யோகத்தில் மனித குரு இல்லை. அவரிடத்தில் அககுரு உண்டு.

  6. The tradition takes the desire soul and the Purusha as our Soul.
    Sri Aurobindo calls the Psychic the true soul.

    மரபு ஆசையையும், புருஷனையும் நம் ஆன்மாவாகக் கருதுகிறது.
    ஸ்ரீ அரவிந்தர் சைத்திய புருஷன் மட்டுமே உண்மையான ஆன்மா என்கிறார்.

  7. Concentration is the method of all traditional yogas.
    Consecration is the cornerstone of Integral Yoga.

    எல்லா மரபு வழி யோகங்களிலும் ஒரு நிலைப்படுதலே வழி.
    பூரண யோகத்தில் சமர்ப்பணமே முக்கியம்.

  8. To the materialist demand of proving God, the tradition has no effective answer.
    Sri Aurobindo says where Mind fails, consciousness can answer.

    பொருள்வாதி கோரும் கடவுள் இருப்பதற்கான ஆதாரத்தை, மரபால் சரிவரக் காட்ட முடியவில்லை.
    மனத்தால் முடியாதபோது, ஜீவியத்தால் பதில் கூற முடியும் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

  9. Tradition worships the gods.
    Sri Aurobindo shows us the superiority of Man over the gods.

    மரபு தெய்வங்களை வணங்குகிறது.
    தெய்வங்களைவிட மனிதன் மேலானவன் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

  10. Tradition, in its practice, relies on authority.
    Sri Aurobindo lays emphasis on the ultimate authority of utter Freedom.

    மரபு வழிப் பயிற்சி அதிகாரத்தைச் சார்ந்திருக்கிறது.
    முழுமையான சுதந்திரத்திற்கே இறுதிக்கட்ட அதிகாரமுண்டு என்று ஸ்ரீ அரவிந்தர் அழுத்திக் கூறுகிறார்.

  11. Secrecy is essential in all traditional yogas.
    Secrecy, though valuable in its place, is not an essential value of Integral Yoga.

    எல்லா மரபு வழி யோகங்களிலும் ரகசியம் முக்கியமானது.
    பூரண யோகத்தில் ரகசியத்திற்கு வேண்டிய அளவிற்கு மதிப்புண்டு என்றாலும் அது அத்தியாவசியமான பண்பல்ல.

  12. The human guru claims supreme precedence over the Divine in the tradition.
    The Inner Guru, the Jagat Guru, has an inviolate supremacy in His Yoga.

    மரபில் இறைவனை விட மனித குருவிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
    பூரண யோகத்தில் அசைக்க முடியாத மேலதிகாரம் அககுருவான ஜகத்குருவிற்கே உண்டு.

  13. Tradition does not allow us to question the Shastras.
    To Him, no written Shastra is valid as against the sacred inner voice.

    மரபில் சாஸ்திரங்களைக் கேள்வி கேட்க அனுமதி இல்லை.
    பூரண யோகத்தில் புனிதமான அகக்குரலுக்கு எதிரான எந்த சாஸ்திரமும் ஏற்கப்படுவதில்லை.

  14. Tradition has an end for its efforts.
    Endlessness is of extreme ever present value here.

    மரபில் முயற்சிக்கு முடிவுண்டு.
    பூரண யோகத்தில் முடிவின்மை எப்போதும் உண்டு.

  15. Kala – Time – is the determinate of all yogas.
    Man, the sadhak, determines Kala – Time – by his attitude.

    அனைத்து மரபு வழி யோகங்களையும் காலம் நிர்ணயிக்கிறது.
    பூரணயோகத்தில் சாதகனாகிய மனிதன் தன் மனோபாவத்தின் மூலம் காலத்தை நிர்ணயிக்கிறான்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எல்லாம் எல்லாவற்றுள்ளும் இருப்பதால்
எதிலிருந்தும் எதையும் உற்பத்தி செய்யலாம்.
 
முழுமையாக ஏற்காவிட்டால்
அன்னையை ஏற்க முடியாது.
 

******



book | by Dr. Radut