Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/25. கெட்ட எண்ணம் வெட்கம் கெட்ட சுறுசுறுப்பு

  • எண்ணம் மனத்தைச் சுறுசுறுப்பாக்கும்.
  • வெட்கம் என்பது ஊரை விட்டு விலகும் உணர்ச்சி.
  • அதுபோன்ற செயல் வெட்கம் தரவில்லை எனில் அவன் வெட்கம் கெட்டவனாவான்.
  • நல்ல எண்ணம் மனத்தை விரிவுபடுத்தும்.
  • கெட்ட எண்ணம் மனத்தைச் சுருக்கும்.
  • நல்ல எண்ணம் மனத்தைச் சுறுசுறுப்பாக்கும்.
  • பிறருக்கு நல்லது செய்வது நல்ல எண்ணம்.
  • பிறருக்குக் கெடுதல் செய்வது கெட்ட எண்ணம்.
  • கெட்ட எண்ணம் எழுந்தால் மனம் வெட்கப்படும்.
  • கெட்ட எண்ணம் சுறுசுறுப்பாக்கும்.
  • வெட்கப்படுபவனுக்குக் கெட்ட எண்ணம் எழாது.
  • வெட்கம் கெட்ட எண்ணம் சுறுசுறுப்பாவது கெட்ட எண்ணத்தால்.
  • எவரும் லஞ்சம் வாங்க, பொய் சொல்ல, பழி வாங்க வெட்கப்படுவார்கள்.
  • பழி வாங்க சுறுசுறுப்பாகச் செயல்படுவது கெட்ட எண்ணம்.
  • உன்னைப் பழி வாங்குவேன் என சபதம் செய்பவன் சுறுசுறுப்படைகிறான்.
  • தனக்குத் தவறு செய்தவனை அழிக்க முயல்வது சரியில்லை என்றாலும் அது சுபாவம்.
  • எதுவும் செய்யாதவனைப் பழி வாங்க நினைப்பது மனித சுபாவமில்லை.
  • சாமான்ய மனிதன், சத் புருஷன், மானுஷ ராட்சஸா என மனித குலத்தைப் பாகுபாடு செய்தவர் தனக்கு லாபமுமில்லாமல், பிறரை அழிக்க முயல்பவனை எப்படி விளக்குவது என்று அறியாமல் அவனை விளக்க மொழியில் சொல்லில்லை என்றார்.
  • சுறுசுறுப்பு வளரும் சக்தி.
  • நல்லெண்ணம் சுறுசுறுப்புத் தரும்
  • கெட்ட எண்ணம் சுருங்கும்
  • கெட்ட எண்ணம் சுறுசுறுப்புப் பெறுவதை வெட்கம் தடுக்கும்
  • ஒரு பலன் பெற மனிதன் சுறுசுறுப்பாகச் செயல்படுவான்.
  • பலனற்ற காரியம் சுறுசுறுப்புத் தராது.
  • பிறர் பெறும் பலனைத் தடுப்பது கெட்ட எண்ணம்
  • ஒருவர் மகள் திருமணமாக உதவுவது நல்லெண்ணம்
  • திருமணத்தைத் தடுப்பது கெட்ட எண்ணம்
  • நம் ஆன்மிக இலக்கியங்கள் கெட்ட எண்ணத்தின் மூலத்தை அறிய முயலவில்லை.
  • கெட்ட எண்ணமும் நல்லெண்ணமும் இரட்டைகள்.
  • அதுவே முடிவான நிலையில்லை.
  • அவை இரண்டும் உயர்ந்து இணைகின்றன. அது உயர்ந்த நிலை.
  • கெட்டது உற்பத்தியாகாமல், நல்லது உற்பத்தியாகாது.
  • இரண்டும் எண்ணம்.
  • இரண்டும் உயர்வது எண்ணம் ஜீவியமாகும் நிலை.
  • இலட்சியவாதியின் நல்லெண்ணம் சுறுசுறுப்புத் தரும்.
  • அது பெருமை தரும் செயல்.
  • எதிரானது கெட்ட பெயர் தரும்.
  • கெட்ட பெயர் பெற வெட்கப்பட வேண்டும்.
  • கெட்ட பெயர் பெற வெட்கப்படாதிருப்பது கெட்ட எண்ணம்.
  • விக்காம் ஓடிப் போனது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
  • அவனுக்கு வெட்கமில்லை.
  • வெட்கப்பட வேண்டிய செயலுக்கு வெட்கப்படாமலிருப்பது கெட்ட எண்ணம்.
  • ரிஷிகட்கும், அயோக்கியனுக்கும் உள்ள மனநிலையது.

********



book | by Dr. Radut