Skip to Content

10.நானிருக்க பயமேன்

நானிருக்க பயமேன்

பெண்ணின் வயிற்றில் பெரிய கட்டி. டாக்டரிடம் காட்டினார். பெண்ணின் இதயம் சரியாக வேலை செய்யவில்லை. இதயம் சரியாக வேலை செய்யாதபொழுது ஆப்பரேஷன் ஆபத்து. டாக்டர் ஆப்பரேஷனை ஏற்கவில்லை. வேறு சில டாக்டர்களும் மறுத்துவிட்டனர். முதல் பிரசவம் பார்த்த டாக்டரிடம் பெண் திரும்ப வந்தாள். அவரும், மற்ற டாக்டர்கள் சொல்லியதையே சொன்னார். அவர் அன்னை பக்தர். இந்த ஆஸ்பத்திரி கட்ட ஆரம்பித்தபொழுது கணவன் இறந்துவிட்டார். டாக்டருக்கு நிர்வாகம் பிடிபடாது. அவர் பெண்கள் அரைகுறையான ஆஸ்பத்திரியை விற்கச் சொன்னார்கள். அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு சமாதி வந்தார். தியானத்தில், "நானிருக்கிறேன், பயம் தேவையில்லை'' என்று குரல் கேட்டது. திரும்பிப் போனார். நிலைமை மாறி அனைத்தும் கூடிவந்தது. அன்று முதல் அந்த டாக்டர் செய்த எந்த ஆப்பரேஷனும்தவறியதில்லை. இந்தப் பெண்ணைப் பரிசோதிக்க முயன்றபொழுது பெண் கழுத்தில் அன்னை சிம்பலைக் கண்டார். ஆப்பரேஷனை ஏற்றுக்கொண்டார். 4 கிலோ கட்டி 40 நிமிஷத்தில் வெளிவந்தது. இதயம் கோளாறு செய்யவில்லை. ஆஸ்பத்திரியில் ஓர் அறையில் அன்னை ஸ்ரீ அரவிந்தர் படம் வைத்து தியானம் செய்ய ஏற்பாடு. வியாதியஸ்தர்களும், பக்தர்களும்வருகின்றனர்; புத்தகங்களைப் படிக்கின்றனர்.

இது ஆஸ்பத்திரியாக இல்லை, ஆசிரமமாக இருக்கிறது

என்று கூறுகின்றனர். ஆஸ்பத்திரியை அளவுகடந்து சுத்தமாக வைத்திருக்கின்றனர். இந்த டாக்டருக்கு 35 ஆண்டு அனுபவம். அவருக்கு முதல் அன்னை படம் வந்தபொழுது சோகமாக இருந்தவர், மனம் நிறைவு பெற்று, மாறி குதூகலமானார். அந்த சந்தோஷம் இன்னும் அவரிடம் அப்படியேயிருக்கிறது.

 

*******


 



book | by Dr. Radut