Skip to Content

03.சாவித்ரி

"சாவித்ரி"

P.48 A wider consciousness open then its doors..

அகண்ட ஜீவியம் அதன் வாயிலைத் திறந்தது.

. ஆன்மீக மௌனம் படையெடுத்து வந்தது.

. காலத்தைக் கடந்த சிறப்பின் கதிர் கனிந்து வந்தது.

. மின்னும் களிமண்ணான நம்மை உய்விக்க அது வருகிறது.

. அதன் வெண்ணிற முத்திரை நம்மில் பதிந்தது.

. மனித மனம் மறதியின் அரங்கம்.

. சமாதியின் விழிப்பு சத்திய ஜீவியச் சிறப்பு.

. ஆழ்ந்த அகத்தின் தனிமை.

. உருவமற்ற உணர்வும் உணரும் நேரம்.

. அகண்டத்தின் காலம் அதிர்ந்தெழுந்தது.

. அறிவுக்கெட்டாத ஞானத்தின் முன்னுள்ள திரை விலகியது.

. காதில் விழாத கானம் கேட்கிறது.

. புவியறியாத புலன் உணர்வு எழுகிறது.

. இதயம் கண்டு நடுங்கும் நிலை நமக்கு இனிக்கும்.

. பிரபஞ்ச ஞான ஒளிக்கு அடங்கும் மனம்.

. ஆத்மாவின் அந்தரங்கம் அழைக்கும் ஒலி.

. இறைவனின் ஸ்பர்சத்தின் இதமான பூரிப்பு.

. அமர வாழ்வின் தழலென எழும் பொன்னான இரகஸ்யம்.

. பெரிய ஆத்மாவின் பெருநெறிகள் இவை.

. நாமறியாமல் நம்முள் வதியும் நல்லவை.

. ஏதோ ஒரு நேரம் எழும் புனித உணர்வு.

. புனிதனின் சாந்நித்தியம் புதுமையை எழுப்பும்.

. மண்ணின் மடமை மடிந்து விலகும்.

. ஆத்ம ஜோதியின் அருளின் அழகு.

. சொர்க்கக் கனலின் முணுமுணுப்பு.

. நம்மை நாம் வேறாக அறியும் நேரம்.

. இல்லாதது இருப்பதுபோல் செயல்படும் வகை.

. பிரபஞ்ச ஜனனத்தைப் பின்பற்றும் போக்கு.

. மண்ணான உடலின் மடியும் நேரம்.

. புது உலகம் பிறக்கும் தீர்க்க தரிசனம்.

. காலத்தைக் கண்டுகொள்ளாத இறைவனின் இனிமை.

. யுகம் நகர்வதைக் காணும் பெரியதின் பொறுமை.

. அற்புதத்தை எதிர்நோக்கும் பாங்கு.

. ஊன்றி நின்று செயல்படும் உலகத்தின் சக்திகள்.

*******


 


 


 



book | by Dr. Radut