Skip to Content

05. யோக வாழ்க்கை விளக்கம் V

 

 

யோக வாழ்க்கை விளக்கம் V                                                கர்மயோகி

 

 


 

838) அவை பழக்கம், நடத்தை, சுபாவமாகவும், பண்புகளாகவும் (சமூக, தார்மீக, ஆன்மீகப் பண்புகளாக) வெளிப்படுகின்றன.

அவை பழக்கமாகவும், பண்பாகவும் வெளிப்படுகின்றன.

*******

839) நோக்கம் ஓரிடத்தில் புரட்சிகரமாக மாறி நடைமுறை தலைகீழாகும். தலைகீழ் மாற்றம் அளவுகடந்த சக்தியை, பரிணாம வளர்ச்சிக்காக வெளிப்படுத்தும். அதன் பலனாக எதிர்கால நோக்கம் பேரளவு மாறும்.

தலைகீழ் மாற்றத்தால் எதிர்கால நோக்கம் பேரளவு மாறும்.

ஜடம் விழிப்பது தாழ்த்தப்பட்டவர் விழிப்பது போலாகும். நான் தாழ்த்தப்பட்டவனில்லை என வீறு கொண்டெழுந்தவன் உயர்ந்தவனாகி, உயர்ந்தவனைத் தாழ்த்தப்பட்டவனாக நடத்தும் நிலையை இன்று நாம் காண்கிறோம்.

பெண்கள் விடுதலை அமெரிக்காவில் பல கட்டங்களைக் கடந்து ஆண்கள் விடுதலை இயக்கம் தேடும் நிலைக்கு வருகிறது. ஜடம் விழித்து மனமும், ஜடமும் இடம் மாறுகின்றன. ஆன்மாவும், ஜடமும் இடம் மாறுகின்றன. 1917-இல் தொழிலாளி ராஜ்ஜியமான ரஷ்யாவை அழிக்க அனைத்து வல்லரசுகளும் முனைந்தன. 1942-இல் அதே வல்லரசுகள் ரஷ்யாவின் உதவியை நாடின. ஹிட்லரை அழித்த பின் யாரை 1917-இல் அழிக்க முயன்றனரோ, அந்நாடு வல்லரசாகிவிட்டது.

. சோஷலிஸத்தை அழிக்க முற்பட்ட அத்தனை நாடுகளும் நடைமுறையில் சோஷலிஸத்தை ஏற்று, ரஷ்யாவைவிடப் பல மடங்கு தொழிலாளியை உயர்த்தின.

. நோக்கம் ஒரு கட்டத்தில் புரட்சியின் தீவிரம் பெறும்.

. அது தலைகீழே மாறும்.

. புரட்சியின் தீவிரம் பெற்று, தலைகீழே மாறியபின், பெரு மாறுதல் ஏற்படும்.

உலகத் தொழிலாளர் இயக்கம் 1917-இல் புரட்சியாயிற்று. அதன் நோக்கம் தொழிலாளரை உயர்த்துவதினின்று மற்றவர்களை அழிப்பதாக மாறியது. அதைக் கண்ட உலகம் புரட்சியைத் தவிர்க்க சோஷலிஸக் கொள்கைகளை ஏற்று தொழிலாளியின் பொருளாதார நிலையை அளவுகடந்து உயர்த்தியது.நாம் ஜடத்தை ஆன்மாவால் மாற்றினால் என்ன நடக்கும்?

. சொத்தை நம்புவதற்குப் பதிலாக நாணயத்தை நம்புவது ஜடம் ஆன்மாவுக்கு இடம் தருவதாகும்.

. நாணயம் தீவிரமாகி, புரட்சிகரமானால், பொதுமக்கள் நம்பிக்கை அளவுகடந்து பெருகி 2½ கோடி கடன் பெற முடியாத கம்பெனிக்கு 20 கோடி டெப்பாசிட் அளித்தது.

. பொருள் ஜடம், நாணயம் ஆத்மாவுக்குரியது.

. அவை இடம் மாறுவது புரட்சி.

. மாற்றம் புரட்சியின் வேகம் பெறுவது பெருவாரியான பொதுமக்கள் நம்பிக்கை.

. இன்றைய வியாபார உலகில் நாம் காண்பது மேற்சொன்னது.

. ஆத்மா நாணயத்தால் வெளிப்படும் என்றாலும், நாணயத்தைக் கடந்தது.

ஜடத்தை ஆன்மாவால் இடமாற்றம் செய்வது உயர்ந்த பண்புகளை நடைமுறையில், அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதாகும். அது அபரிமிதமான செல்வம் தரும்.


 

தொடரும்....

*******.


 


 

ஜீவிய மணி

பலன் பரமனுக்கில்லை.


 


 


 


 



book | by Dr. Radut