Skip to Content

07.அஜெண்டா

Agenda

Vision of vast projects, great designs unrealised;

'That' is THAT in the individual evolving;

Vertically, capacity to unite with the Origin and

horizontally fulfilling several other destinies combine

so that you do so either in a few lifetimes

or a few minutes;

Maheswari assumes several other forms according to 'that' in you.

பெருந் திட்டங்கள் காட்சியாக எழுகின்றன, அவை

பூர்த்தியாவதில்லை;

பிரம்மம் நம்முள் எழுவது அப்படிப் பெரிய திட்டங்களாக

உருவாகின்றன;

பிரம்மத்துடன் இணையும் திறனும், பல்வேறு சட்டங்கள்

பூர்த்தியாவதும் இணைகின்றன;

அதனால் இப்பெரிய திட்டங்கள் பல ஜென்மங்களிலாவது அல்லது

சில நிமிஷத்திலாவது பூர்த்தியாகும்;

நம்முள் பிரம்மம் எழுவதை இவ்வகையாக மஹேஸ்வரி பூர்த்தி

செய்கிறார்.

பெரும்பாலும் மகான்கள் உலகம் ஒன்றுபடவேண்டும், துன்பம் அழியவேண்டும் என்று வேலை செய்துள்ளனர். பிரம்மம் அவருள் உருவாவது அதுபோன்ற எண்ணமாக வெளிப்படுகிறது. யோகத்தால் ஆத்மா பிரம்மத்துடன் இணையும்பொழுது, உலகில் நாமறியாத சந்தர்ப்பங்களும், சட்டங்களும் பிரம்மத்தைப் பூர்த்தி செய்ய முனையும்.அந்த நேரம் மனிதன் தன்னைப் பாராட்டலாம் அல்லது பிரம்மத்தைப் பாராட்டலாம்.

. தன்னைப் பாராட்டினால் திட்டம் பல ஜென்மங்களில் பூர்த்தியாகும்.

. அன்னையைப் பாராட்டினால் அடுத்த நிமிஷம் பூர்த்தியாகும்.

அன்னையின் நான்கு அம்சங்களில் தலையாய அம்சமான மஹேஸ்வரி ஞானத்திற்குரியவர். அவர் தம்மை நம் வாழ்வில் பூர்த்தி செய்வது பல வகைகளில். மேற்சொன்னவை இரு வகைகள்.

1910-இல் பகவான், இந்தியா சுதந்திரம் பெற்றதை சூட்சும உலகில் கண்டார்.

1920-இல் மகாத்மா காந்தி சத்தியாக்கிரஹத்தை அறிமுகப்படுத்தினார்.

1940-இல் சுபாஷ் சந்திரபோஸ் காந்திஜீக்கு எதிராக, இந்தியா-ஜப்பானுடன் சேர்ந்து ஆங்கிலேயரை வெளியேற்ற வேண்டும் என வேலை செய்தார்.

பகவான் இரண்டாம் உலகப் போரைத் தவிர்க்க முனைந்த பொழுது சூட்சும லோகத்தில் கறுப்பு சக்திகள் வலுவாக இருப்பதைக் கண்டு, இவற்றை சூட்சுமத்தில் வெல்ல முடியாது. உலகில் போரைத் தவிர்க்க முடியாது. போரிட்டு இச்சக்திகளை உலகில் முறியடிக்க வேண்டும் என்று உணர்ந்தார். ஜப்பான் இளம் நாடு. அதற்கு ஏகாதிபத்திய ஆசை எழுந்துவிட்டது. பிரிட்டன் பக்குவம் நிறைந்த நாடு என்பதால் அதன் ஏகாதிபத்திய ஆசை 100 ஆண்டுகளில் - சரியாக 1857 முதல் 1947 வரை 90 ஆண்டுகள் - முடிவடைந்தது. ஜப்பானுடைய ஏகாதிபத்திய ஆசை லித்தால்

 

 அது தீர 500 ஆண்டுகளாகும் என்று பகவான் கூறினார்.

. 1910-இல் இந்தியா சுதந்திரம் பெறும் வாய்ப்பைப் பெற்றது.

. 1920-இல் அது தடம்புரண்டு பல தலைமுறைகளில் சுதந்திரம் வரும் என்ற நிலை ஏற்பட்டது.

. 1940-இல் இந்தியா 500 ஆண்டுகள் அடிமையாகும் என்ற ஆபத்து ஏற்பட்டு விலகியது.

. 1947-இல் சுதந்திரம் வந்தது, இச்சக்திகளின் மோதல் சிக்கலாகி, அவிழ்ந்த வகையைக் காட்டுகின்றது.

*******


 



book | by Dr. Radut