Skip to Content

09.தகவல் தெரிய வேண்டும்'

தகவல் தெரிய வேண்டும்'

பள்ளிக்குப் போன பையன் வீடு திரும்பவில்லை எனப் பெற்றோர் பள்ளிக்கு வந்து Vice-Principal வைஸ்-பிரின்ஸிபாலை சந்தித்தனர். அவர் விவரம் முழுவதும் கேட்டுக்கொண்டார். அவர் செய்வதற்குஒன்றுமில்லை.அவர் மேஜைமீது அன்னை ஸ்ரீ அரவிந்தர் படமிருந்தது. அவர் பக்தர்.பெற்றோரை அனுப்பிவிட்டு அவர் பிரார்த்தனையை மேற்கொண்டார்."அம்மா, இந்தப் பிள்ளை ஏன் இப்படிச் செய்தான்? அவன் எங்கிருக்கிறான் என்று தகவல் தெரிந்தால் போதும். வரவேண்டும் என்பதுகூட முக்கியமில்லை''. மறுநாள் ஓடிப்போன பையன் தன் வீட்டாரைப் போனில் கூப்பிட்டுப் பேசினான். வீட்டிற்கும், பள்ளிக்கும் செய்தி வந்தது.

மறுநாள் பையன் வீடு திரும்பினான். வைஸ்-பிரின்ஸ்பாலை வந்து பார்த்தான். நடந்த விவரத்தைக் கூறினான். வீட்டில் பிரச்சினை. பொறுக்க முடியாமல் பையன் ஓடியிருக்கிறான். பெற்றோர் பிரச்சினையைக் கிளப்பினால் யார் என்ன செய்ய முடியும்? "எனக்கு வீட்டில் இருக்க முடியவில்லை. பள்ளிக்குக் கிளம்பி வந்த நான், வண்டியைத் தெரிந்த இடத்தில் விட்டுவிட்டு, பஸ் ஏறினேன். என்ன செய்கிறேன், எங்குப் போகிறேன், ஏன் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அது சென்னையிலிருந்து திருவனந்தபுரம் போகும் பஸ். நான் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தேன். ரோட்டில் போகும்பொழுது என்னை ஒருவர் நிறுத்திப் பேசினார். அவர் தாடி வைத்திருந்தார். வெள்ளை சட்டை போட்டிருந்தார்.உங்கள் மேஜை மீதுள்ள படத்திருப்பவரைப்போல் தோன்றினார். நான் ஓடிவந்தது தவறு என்றார். உடனே திரும்பி வீட்டிற்குப் போ என்றார்.எதுவானாலும் உடனே தகவல் தெரிவித்துவிடு என்றார். இவர் யார்? ஏன் என்னிடம் பேசுகிறார்? எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அவர் சொற்படி நான் நண்பனை, போனில் அழைத்து, நான் திருவனந்தபுரத்திலிருப்பதாகக் கூறினேன். பிறகு உடனே திரும்பி வந்துவிட்டேன்'' என்றான். பொதுவாக இது பக்தர்கள் வீட்டில் நடக்காது. ஒரு பக்தருடைய நண்பர் மகன் நண்பனுடன் ஓடிப்போக பஸ் ஏறினான். கண்டக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததை மற்றவர் கவனித்தார். பையனுடைய தகப்பனாரைத் தெரிந்தவர் பஸ்ஸிலிருந்திருக்கிறார். அவர் பையனை அடையாளம் கண்டு, பஸ்ஸைவிட்டு இறக்கி, வீட்டில் கொண்டுவந்து சேர்த்தார். அன்னையுள்ள இடத்திலும், அன்னை சூழலுள்ள இடத்திலும் இதுபோன்று நடக்காது. நடந்தால் பாதுகாப்பு பலவகையாகவும் வரும்.

*******


 


 


 



book | by Dr. Radut