Skip to Content

10.திருவடி நிழல்

திருவடி நிழல்

அன்னையை அறிவது பாக்கியம், ஏற்பது அதிர்ஷ்டம், அன்னை நம்மை ஏற்பது அருள், அவர் ஏற்றதின் ஆன்மீகப் பெருமைக்கு ஏற்றவாறு நாம் உணர்விலும், செயலிலும் மாறுவது பேரருள் என்று பலவாறாக நாம் நம் மனநிலைகளை அறிவோம். பெண்ணின் அன்புக்கு மனத்தைப் பறிகொடுத்தவன் தன்நிலை இழந்தவன். உலகம் அதைக் காதல்எனக் கூறும். அவன் கசிந்துருகுவான். அவன் உருக்கம் அவனது உள்ளத்தின் பெருக்கம். அன்னையிடம் மனத்தைப் பறிகொடுத்தான். அன்னை அதை ஏற்றதை நெஞ்சால் உணர்ந்தவன் தன் மனத்தின்பின் நெஞ்சும், அதனைத் தொடர்ந்து ஜீவனும் அன்னையை அடைந்ததைக் காண்பான். அவன் அன்பன்.

-அவ்வன்பன் நல்லது, கெட்டதைக் கடந்தவன்.

அவன் உயர்வு, தாழ்வைத் தாண்டிவந்தவன்.

பாவ, புண்ணியங்கள் அவனுக்கில்லை.

அப்படிப்பட்ட அன்பர் உள்ள இடத்தில், அருள் ஜீவனோடிருக்கும்.

அவர்முன் கெட்டது நல்லதாக மாறும்;

தாழ்வு உயர்வாக உயரும்;

பாவம் புண்ணியமாகத் திருவுருமாறும்.

நரகம் அவரால் சொர்க்கமாகும்.

- "மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிளவேனிலும்போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழல்"என்ற நாயனார் சொல் நடைமுறை உண்மை என அறிவோம்.

****



book | by Dr. Radut