Skip to Content

03.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

பெண் - அடிக்கடி சொல்கிறீர்களே...இந்தப் பெருக்கம் எதிலிருந்து வருகிறது:

. இந்தப் பெருக்கம் உண்மையிலேயே ஓர் அட்சயபாத்திரம்.

. அதன் அடிப்படை பிரம்மம்.

. அந்த நேரம் காரணமானது உழைப்பின் திறமை, ஓர் இடத்தில் செய்த வேலை பலன் தாராதது, போன்றவை.

. அன்னைக்கு 107 °ஜுரம் பல நாள் இறங்காத போது பகவானுடைய மலை போன்ற சக்தி பலிக்காததற்குக் காரணம், அவருக்கு என்ன வியாதிஎனப் புரியவில்லை என்பதால்.

. விநாயகருடைய சக்தி 10 ஆண்டுகள் அன்னைக்கு வெள்ளமாகப் பணம் கொடுத்தது. அமெரிக்காவில் வேலையை ஆரம்பித்தவுடன் நின்றுவிட்டது. காரணம் அமெரிக்கர்கட்கு விநாயகர்மீது நம்பிக்கையில்லை.

. மாணவனுடைய உழைப்புக்குப் பலன் தருவதை நிர்ணயிப்பது அவன் புத்திசாலித்தனம். நிலத்தின் சிறப்பு பலன் தருவது அங்குக் காணும் கவனம், உழைப்பு.

. வாழ்வில் பலன்பெற இரண்டு வேண்டும்.

. உள்ள இடத்தில் உழைப்பு, திறமை, ஸ்தாபனம் organised personaலிty

. அடிப்படையிலுள்ள அம்சம்.

. எலிசபெத்திற்கு டார்சி அமைய நாட்டின் புரட்சிகரமான சூழல் அடிப்படை. அவர்களுடைய உறவில் மற்ற பெண்களைப் போலில்லாமல் அவள் ஆதாய மனப்பான்மை இன்றி இலட்சிய மனப்போக்குள்ளவளாக இருந்தாள்.

. அடிப்படையான அம்சம் செயல்பட மனமும் அறிவும் அதை அறிய வேண்டும், நம்ப வேண்டும்.

. நடைமுறைப் பலன் வர (e.g. Hire purchase, Insurance) நாம் செயல்படுமிடத்தில் ஸ்தாபன அமைப்பு வேண்டும்.

. இந்தியாவின் ஆன்மீகம் வெளிப்படப் பெறுபவருக்கு முழு சத்தியம் தேவை. அடிப்படை ஆன்மீகம் முழுசத்தியத்தால் மடையனை மேதையாக்கவல்லது (-ம். காளிதாசன்). அடிப்படை Mental clarity மூலம் அடிமடையனை மேதையாக்க அடுத்த அம்சம் utter truthfulness of higher consciousness ஆக இருக்க வேண்டும். இந்தியருடைய ஆன்மீக அம்சம் உள்ள இடங்களில் இந்த choiceக்குரிய இரு விஷயங்களிருக்கும். Our own choice decides. நம் செயல் அதை நிர்ணயிக்கும். Low consciousness represents the partial view of the Mind High Consciousness represents the FULL view of the Supermind. Each will be accompanied by their opposite. Our role lies in knowing the setup, choosing the right side, offering the rigt complement to the contradiction. The GENIUS in the child can flower through Mental Clarity overcoming the Low consciousness if the timidity rises to the occasion and offers the right complement to the venom of cruelty.

பெண் - இந்த மாதிரி லைசென்ஸ் எல்லாம் நம்ம மாதிரியுள்ளவர்க்கு இல்லை:

. "நம்ம மாதிரியுள்ளவர்க்கில்லை"என்பது அன்னையின் முத்திரை.

. அன்னையின் அருள் பெற்று உயர்ந்தவர்களில் பெரும்பாலோர் நமக்கில்லை என்றவர்களே. உயர்ந்தவர் அன்னையிடம் வந்து பெறாமல் போனவர்கள் அதிகம். பெற்றவர் முழுவதும் பெறுவதற்குள் விலகுவர்.

. இதன் தத்துவம் என்ன?

. அன்னை சக்தி மனம் தன்னை சத்தியஜீவியம்என அறிய உதவும்.

. இது திருவுருமாற்ற சக்தி.

. திருவுருமாற்றம் வரவேண்டுமானால் இன்று அவர் தாழ்ந்திருக்க வேண்டும். அதுவே சட்டமில்லாவிட்டாலும், அதுவே பொது விதி.

. தாழ்ந்தவர் "இதெல்லாம் நமக்கில்லை"என்பார்.

. தாழ்ந்தவர் உயர தாழ்ந்த நிலையில் உயர்ந்த குணம் ஒன்றிருக்க வேண்டும்.

. தாழ்ந்த நிலையில் அவ்வுயர்ந்த குணத்தைப் பாராட்ட வேண்டும்.

Must choose it.

.Choice எல்லா இடங்களிலும் உண்டு.

. தொடர்ந்த சரியா choice இருப்பதில்லை. இருக்கக்கூடாது என்பதில்லை.

. இறைவன் வரும் தருணத்தில் choice சரியாக இருந்தால் பெரிய உயர்வு வரும்.

. பார்ட்னருக்குக் கணவர் அது போன்ற சந்தர்ப்பம்.

. பார்ட்னருக்கு இக்கம்பனியில்லை என்றாலும், கணவரைப் பாராட்டும் நல்ல குணம் அவரிடமிருக்கிறது. அந்த நேரம் அதைப் பாராட்டினார்.

. இக்குடும்பத்தில் அதுபோன்ற நல்ல சந்தர்ப்பங்களில்லை.

. தாயாருக்குமட்டும் பெரும்பாலும் அது உண்டு. மற்றவர் தாயாரைப் பாராட்டினால் அந்த அளவுக்கு அது பலிக்கும்.

. தாழ்ந்தவருக்கு நேரம் வரும் பொழுது தம்மிடம் உள்ள நல்ல குணத்தைப் பாராட்டத் தோன்றினால், அவருக்கு உலகில் உயர்வுண்டு.

. உயர்ந்தவருக்கு நேரம் வரும்பொழுது தம்மிடம் உள்ள கெட்ட குணத்தைப் பாராட்டினால் அவருக்குள்ளது அனைத்தும் போகும்.

. கதையைத் தத்துவத்தின்மூலம் அறிவது The லிfe Divine யை வாழ்வின் மூலம் அறிவதற்கொப்பாகும்.

பார்ட்னர் - "நான் அதிர்ஷ்டக்காரரைத் தேடினேன். நீங்கள் எனக்கு அதிர்ஷ்டம்''என்கிறார். கம்பனி ஏற்பட்டது:

. அன்னை வரும் அதிசயமான பல வழிகளில் இதுவும் ஒன்று.

. ஏற்கனவே நாமறிந்த வழிகளில், நம்முடைய திட்டப்படி வரக்கூடாது என்ற சட்டமில்லை. அது விலக்கு, குறைவு.

. குறி கேட்கும் இடத்தில்,I Ching பார்ப்பதில் காசைத் தூக்கிப் போட்டு எப்படி விழுகின்றதுஎனப் பார்ப்பார்கள். Subtle Planeசூட்சுமத்தை இப்படி நாடுவதுண்டு. அதிர்ஷ்டம் நம்முள் வர சூட்சுமம் உதவும்.

. ஓர் ஆட்டத்தில் பந்து goal கோல் விழ இருகட்சிகளும் ஓடி ஆடுவதில் சூட்சுமம் உற்பத்தியாகிறது. ஆட்டத்திற்குச் சூட்சுமம் இன்றியமையாதது. அதேபோல் அதிர்ஷ்டம் உள்ளே வர சூட்சுமம் பெரிதும் உதவும். அதிர்ஷ்டம் பெற்றவர்கள் "ரோட்டில் கார் ரிப்பேர் செய்ய உதவினேன், கம்பனி டைரக்டர் ஆனேன்", "வம்பில் மாட்டிக் கொண்டு தப்ப முயன்றேன். என்னைக் கைது செய்ய முயன்றவர் நண்பரானார்", என்று கதைகள் சொல்வார்கள்.

. பார்ட்னரை அதிர்ஷ்டம் தேடி வந்ததைப்போல், கணவரையும் அதிர்ஷ்டம் தேடி வந்தது.

. பெரிய வேலை கிடைத்தது, நல்ல வரன் அமைவது, தற்செயலாகக் காதில் விழுந்த சொல் பிரம்மாண்டமாக வளர்ந்தது வாழ்வில் நிறைய உண்டு.

. அதிர்ஷ்டம் வர சூட்சுமம் உதவுவதுபோல் அன்னை வரக் காரணலோகம் (Casual world) உதவும். காரணமும் சூட்சுமமும் கலந்திருப்பதால் வித்தியாசம் கண்டுபிடிப்பது கஷ்டம். அன்னை பால்கனித் தரிசனம் தந்தபொழுது, அவ்வழியாக வண்ணான் பிடித்துக்கொண்டு போன கழுதை தலையைத் திருப்பி அன்னையைப் பார்த்ததால், அன்னை அக்கழுதையைக் கொண்டு வரச்சொல், தடவிக் கொடுத்தார். கழுதைக்கு எப்படித் திரும்பி அன்னையைப் பார்க்கத் தோன்றும்? அதில் உள்ள விசேஷம் நமக்குத் தெரியவில்லை. அன்னை அவ்விசேஷத்தை அறிந்து, நாடி, பாராட்டினார். டென்னிஸ் கோர்ட்டிலிருந்து 7 மைல் அன்னை காரில் லேக் எஸ்டேட்டிற்குத் திடீரெனப் போய், வயல்வெளியில் நடந்து போய் அங்கு வந்த கிழவியைப் பார்த்து விசாரித்துப் பூரித்தார். "அக்கிழவியின் குரல் கேட்டு வந்தேன்"என்றார் அன்னை. இவை சூட்சுமமாகத் தோன்றினாலும், அதைக்கடந்த காரணலோக நிகழ்ச்சிகள் இவை:

. அதிர்ஷ்டம் சூட்சுமம் மூலமாக வரும்.

. அருள் காரணமூலமாக வரும்.

. அன்னை காரணத்திலிருந்து சூட்சுமம் மூலமாக வருவார்.

பார்ட்னர் - மனம் பக்குவப்படுவது எல்லாவற்றையும்விடப் பெரியது:

. மனம் நம் சிறந்த கருவி.

. மனம் என்றால் என்னஎன்ற கேள்வியை நாம் இதுவரை எழுப்பியதில்லை.

. நாம் ஆயிரம் பொருள்களை - மாம்பழம், பேனா, கம்ப்யூட்டர், etc.

- அவையென்ன, எப்படி வந்தனஎன யோசிக்காமல் பயன் படுத்துகிறோம். அதில் மனம் ஒன்று.

. மனம் பக்குவமடையவேண்டும் என்பதையறிய மனம், பக்குவம் இரண்டையும் தெரிந்துகொண்டால் நல்லது.

. Ripeness, richness, fullness, maturity, saturation, பழுத்தது, முழுமை, நிறைவு, முதிர்ச்சி, செறிவு ஆகியவற்றைக் கடந்தது பக்குவம். Sagacity, wisdom,விவேகம் என்பதும் பக்குவத்தின் அறிவைமட்டும் குறிக்கும். அறிவு, உணர்வு, செயலில் நிதானம் ஆகியவையும் பக்குவமாகா. மனத்திற்கு அறிவுபோல், உணர்ச்சிக்கு கூர்மையுண்டு, செயலுக்குப் பூர்த்தியுண்டு, ஜீவனுக்கு இதுபோல் உள்ள faculty பக்குவம். The endowment of the Being to exit in Joy can be called பக்குவம். ஜீவன் ஆனந்தமாயிருப்பது பக்குவத்தால்.

. மனம் நினைவு, ஞாபகம், சிந்தனை, நிதானம், முடிவு, கற்பனை, மௌனம், பாகுபாடு, பகுத்துணர்வது, உற்சாகம், குறிப்பறிதல், ஞானோதயம், சித்திபோன்ற பல திறமைகளையுடையது. (Memory, understanding, thinking, decision, determination, patience, imagination, insight, intuition, experience, discrimination, discretion,suggestion, inspiration, revelation, realisation).

இத்தனைத் திறமைகளும் (faculties) சேர்ந்தது மனமாகாது. ஒரு மெஷினின் பகுதிகளைப் பிரித்து ஒரு பெட்டியில் போட்டால் எல்லாப் பகுதிகளுமிருப்பதால் அது மெஷினாகாது. அவை ஒன்றோடொன்று பொருத்தப்பட்டு வேலை செய்தால், அது மெஷினாகும். மனத்தின் இத்தனைத் திறமைகளும் செயலாற்றும்வகையாகப் பொருந்தி நிற்பது மனத்தின் பக்குவமாகும்.

. மனமே முழுமனிதனில்லாவிட்டாலும், மனம் பெரியது என்பதால் அதன் பக்குவம் முக்கியம்.

. ஆத்மாவும், வளரும்ஆத்மாவும் மனத்தைவிடப் பெரியவை.

. உயிரும், உடலும் (in the descent) மனத்தைவிடப் பெரியவை.

. ஜீவனே பெரியது, முழுமை பெற்றது. ஜீவனின் சைத்தியப்புருஷனே முடிவானது என்றாலும், மனம் அதன் ஒரு பகுதி என்றாலும்,இக்குடும்பத்தில் எதுவுமேயில்லைஎன்பதால் மனம் பெரியது, அதன் பக்குவம் அதனினும் பெரியது.

. பார்ட்னருக்கு மனப்பக்குவம் உண்டு.

. இந்த வீட்டில் இரண்டும் - மனமும், பக்குவமும் - இல்லை என அவர் அறிவார்.

. அதனால் மனப்பக்குவம் பெரியதாகும்.

கணவர் - உங்களுக்கு மனம். எங்களுக்கெல்லாம் பழக்கம் வரவேண்டும்:

. பழக்கம், பக்குவம் என்றால்என்ன? கணவர் இவற்றைப் புரிந்து பயன்படுத்துகிறாரா?

. பொதுவாக அறிவில்லாதவரும், படிப்பில்லாதவரும், சொற்களைத் தங்கள் பாணியில் மிகப்பொருத்தமாகப் பயன்படுத்துவார்கள்.ஏனெனில், சொல் உணர்விலிருந்து எழுகிறது. உணர்வால் தவறமுடியாது.

. கணவர் எதற்கும் புண்ணியமில்லாதவர். எந்த உயர்ந்த பழக்கமும் இல்லாதவர். தனக்குப் பழக்கம் போதாது என்பதை அறிவார்.அத்துடன் பார்ட்னர் மனப்பக்குவத்தைத் தேடுவதையும் அறிவார்.

. பழக்கம்என்பது physical உடலுக்குரியது. புத்தகங்களை அடுக்கி வைப்பது, சாப்பிட்டபின் வாயை நன்றாகக் கொப்பளிப்பது, எழுதியபின் பேனாவை மூடி அதனிடத்தில் அழகாக வைப்பது. அது இந்த வீட்டில்லிலை. எந்த வீட்டிலும் அதில் குறையுள்ளவர் ஒருவரிருப்பார். அப்படி ஒருவரில்லை என்றால், அது பெரிய இடம். அங்கு, கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில:

. பழக்கம் பெரியவர்களால் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

. கற்றுக்கொடுத்தாலும் கற்றுக்கொள்ளவேண்டும்.

. கற்றுக்கொண்டாலும் பழக்கம் வரவேண்டும்.

. பெரியவர் கற்றுக்கொடுப்பது குடும்பம் பழக்கமுடையது என்று தெரியும்.

. குழந்தை கற்றுக்கொள்வது பரம்பரையில் அப்பழக்கம் உள்ளது என்று தெரிகிறது.

. கற்றுக்கொள்வது மனதில் பதிவது, முன் ஜன்மத்தில் குழந்தைக்கு அனுபவம் உண்டு எனத் தெரிகிறது.

. பழக்கம் உடலுக்குரியது, செயலுக்குரியது.

. பக்குவத்திற்கு அடிப்படை மனப்பழக்கம்.

. செயலுக்குரிய பழக்கம்போல், சொல்லுக்குரிய பழக்கம் மனப்பழக்கமாகும்.

. மனப்பழக்கம் சரியாக இருக்க குடும்பத்தில் படிப்பு வேண்டும்.

. அது பல தலைமுறைகளிருந்தால்தான் மனம் பழக்கத்தை ஏற்கும்.

. பழக்கம் பண்பை ஏற்றால் பக்குவம் வரும்.

. ஒரு குடும்பம் முழுவதும் முழுமுயற்சி செய்தால் மனப்பக்குவம் ஒருவர் பெறலாம்.

. ஊரே அம்முயற்சியை பயிற்சியாக ஏற்றால் ஒரு குடும்பத்திற்கு மனப்பக்குவம் வரும்.

தாயார் - ...வருவதைப் பெறுபவர் கேலிசெய்தபின் வந்ததாக வரலாறில்லை. அது அவருக்கு மட்டுமன்று. அவர் சந்ததிக்கே வாராது:

. கேலி என்பது எதிர்ப்பின் வகைகளில் முடிவானது - 1) பாராமுகம்

2) எதிர்ப்பு 3) கேலி- எழுந்தால் எதிர்ப்பு மும்முரமாக இருப்பதாக அர்த்தம். அதனால்தான் அது அவர் சந்ததிக்குமில்லை என்பது. ஒருவகையில் அப்படி ரத்தாவதும் அனந்தம். சித்தி ஒருவர் பெற்றால் அவர் சந்ததிகள் அனைவருக்கும் சித்தியின் வித்திருக்கும். அதற்கு முடிவில்லை. அது அனந்தம்.

. சித்திக்கும், கேலிக்கும் அந்த அளவில் வித்தியாசமில்லை.

. இரண்டும் அனந்தம்.

. இராமாவதாரக் கர்மம் கிருஷ்ணாவதாரத்திற்கும் வந்தது.

. அதற்கு மாற்று நாமறிந்த ஆன்மீக மரபில், அவதாரப் புருஷனுக்கேயில்லை.

. அன்பர்கள் அனைவரும் பலமுறை கண்ட சக்தியிது.

. கேலியை மாற்றியது பெரியது, வளர்ந்தது மிகப்பெரியது.

. கேலிசெய்த மனிதன் (evil force) தீயவன். அவருக்காக வசூல் செய்தது 25 மடங்கு வளர்ந்தது எனில் கெட்ட எண்ணம் அதன்மூலம் 25 மடங்கு அதிக ஆன்மீகசக்தியால் அழிந்தது எனப் பொருள்.

. அந்த நிகழ்ச்சிக்குப்பின் தீயவனுடைய தீயசெயல்கள் எதுவும் பலிக்கவில்லை.

. பிறருக்கு அவர் செய்ய முயன்றனவெல்லாம் அவருக்கே நடந்தது.

. ஸ்தாபனத்திற்கு வெளியிலிருந்து வருபவரை ஸ்தாபனத்தில் விடாமல் தடுக்க முயன்றது பலிக்கவில்லை. ஸ்தாபனத்தில், நிர்வாகத் தலைமையிலிருந்த அவரை ஸ்தாபனம் வெளி- யேற்றியது. அவர் தன் செயலுக்கு மன்னிப்புக் கோரி உள்ளே வரவேண்டியதாயிற்று.

. அன்னை லோகத்தில், அன்பர்கள் வாழ்வில், இனி தீமை செயல்படமுடியாது. முயன்றால் அடி தீமையின் மீது விழும் என்று இந்நிகழ்ச்சி உலகுக்கு அறிவிக்கிறது.

. இக்கதையில் அச்சூழலைக் காணலாம். எதிரான சொல், செயலைக் கடந்து காரியம் கூடிவருவதைக் காணலாம்.

. கேலி அருளுக்குப் பரம எதிரி.அப்படிப்பட்ட மனிதருக்கு அது பலிக்கும்வகையில் செயல்படமுடியும்.அதுவும் சொல்லியதுபோல் 25 மடங்கு பலிக்கும்வகையில் செயல்பட தெய்வ சக்தியால் முடியாது. பிரம்மத்தின் அனந்தத்தால்தான் முடியும். அதுவும் நம் அனுபவம். அநேகமாகப் பெரும்பாலான நம் அனுபவங்கள் அதைப்போன்றவையே. அங்கெல்லாம் நாம் காண்பது அனந்தம். எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் சிருஷ்டிப்பது அது.

.தெய்வம் சக்திவாய்ந்தது. அது பிரியப்பட்டால் எதுவும் முடியும். சிருஷ்டியில் தெய்வத்திற்கும் மனிதனுக்கும் தொடர்பில்லை.மனிதனுடைய பிரார்த்தனை தெய்வத்தைத் திருப்தி செய்தால், தெய்வம் செயல்படும். நம்முடைய சொந்த அனுபவத்தில் நாம் கேட்டது, பார்த்ததில் தெய்வம் வேண்டாம் என்பவருக்கு 25 மடங்கு அனுக்கிரஹம் செய்ததாக உண்டா?

. அது மனிதன் மூலமாகச் செயல்படுவது அதைவிட முக்கியமில்லையா?அது என்ன சக்தி?

. அனந்தம் வாழ்வில் முடிவில்லாத சிறியது boundless finiteசெயல்படுகிறது.

. அனந்தம் சிருஷ்டிக்க அதற்கு எதுவும் தேவையில்லை.

. எதுவுமில்லாமலிருப்பதால்தான் அது அனந்தமாகிறது.

. எந்தத் திறமையிருந்தாலும், குணமிருந்தாலும் அந்த அளவில் கட்டுப்பாடுண்டு. எதுவுமில்லாவிட்டால் பூரணச்சுதந்திரம் உண்டு.

பூரணச் சுதந்திரம் எதையும் சிருஷ்டிக்கும். இங்கு அதையும் தாண்டிய கட்டம். எதிர்ப்பைமீறிச் சாதிக்கவேண்டும். எதிர்ப்பை மீறி நாம் சாதிப்பது வேறு. எதிர்த்தவருக்கே சாதிப்பது வேறு. எதிர்ப்பைமீறிச் சாதிக்க அனந்தம் எதிர்ப்புக்கு எதிரான திறமையும் பெற்றிருக்க வேண்டும். சாதனையின்போது எதிர்ப்பு எதிர்ப்பை இழந்து சாதிக்க முன்வரவேண்டும். அது திருவுருமாற்றம். திருவுருமாற்றம் சரணாகதியால் வருவது. இங்கு திருவுருமாற்றம் வெளியிlருந்து எதிர்த்தவருக்கு வருகிறது. ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபின், நாடு அராஜகத்தில் மூழ்கியது. வளரவில்லை, மக்கள் வளரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி வளரவில்லை. எதுவுமே வளரவில்லை. அராஜகம் வளர்ந்தது. அனந்தத்திலிருந்து எழும் சக்தி சாதிப்பதுடன், அராஜகத்தைக் கட்டுப்படுத்தி, சட்டமும், ஒழுங்கும் வளரும்படிச் செய்வது என்பதை நாம் கேள்விப் பட்டதில்லை.

. அன்னை சக்தியுள் அதுவும் உண்டுஎன்பதை நம் சொந்த அனுபவங்களை ஆராய்ந்தால் அறியமுடியும்.

. நாம் செய்யும் முயற்சி நமக்கு அடுத்தாற்போலுள்ள பழைய எதிரிக்கு 3 நாட்களில் 144 கோடி வியாபாரம் நடத்த உதவுகிறது என்பது ஓர் அன்பர் அனுபவம். அதனுள் இந்தச் சட்டம் செயல்படுவதை நாம் காணலாம்.

கணவர் - அன்னை எல்லா நாடுகளிலும் உள்ளார் என்பதை நாம் ஏற்கவேண்டும் என்றால் வெளிநாடு போய்ப் பார்த்தால்தான் தெரியும் போலிருக்கிறது:

. நாட்டின் சூழல் என்பது மலரின் மணம், பழத்தின் வாசனை போன்றது.மலருக்கு மணமில்லாமலிருக்காது. வாசனையுள்ள பொருளில்லாத இடத்தில் வாசனை வாராது.

. அன்பான வீட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணிற்கு "இது அன்பான குடும்பம்"எனத் தோன்றாது. அன்பில்லாத குடும்பத்தில் சில நாட்கள் தங்கும்வரை வீட்டில் உள்ள அன்பான சூழ்நிலையின் அருமை புரியாது.

. வெளிநாடுகளில் வசதி ஏராளம். ஆனால், மக்கள் அன்பாகப் பழகுவதில்லை. பழகவேமாட்டார்கள். நம் நாடுபோல் ஹாரன் சப்தமோ, மற்ற கூச்சல் இரைச்சலோ இருக்காது. ஊர் சுத்தமாக இருக்கும். ஆனால் வறண்டிருக்கும், வெறிச்சென்று சுடுகாடுபோன்ற உணர்விருக்கும். இந்தியா புண்ய பூமி, அதற்குரிய ஆன்மீகச் சாந்தியின் சூழலிருக்கும். மண்ணில் ஆன்மீகமிருந்தால், சூழலில் அன்பிருக்கும். மெதுவாக, இதமாக வருடிக் கொடுப்பதுபோலிருக்கும். மாத்ரு மந்திரில் வேலைசெய்பவர்கள் வெளியூர் போனால் அந்த வித்தியாசத்தைக் காண்பார்கள். ஓரிரு நாட்கள் தாங்காது. மீண்டும் திரும்பி வந்தபின்தான் போன உயிர் வரும். வெளிநாட்டிலும், நம் நாட்டிலும் இருந்தவர்களுக்கு அது புரியும். ஆன்மா விழிப்பாக இருந்தால் அதிகமாகப் புரியும்.

. வெளிநாட்டிற்குப் போனால் அன்னை மறந்துவிடும். நினைவும் வாராது. அங்கும் அன்னையிருக்கிறார் என்று நம்புவது கடினம். வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்கு வந்த பையன்களில் சிலருக்கு வீடே மறந்துவிடும். விநாயகர் சக்தியே செயல்படாத ஊர் அது. நமக்கு எப்படி நினைவிருக்கும்?

. 10, 20 வருஷங்களாக அன்னையை அறிந்தவர் முக்கியமான பிரச்சினை வந்து தவிக்கும்பொழுது, அன்னைக்குப் பிரார்த்தனை செய்தீர்களாஎனக் கேட்டால், "எனக்கு நினைவே வரவில்லை. நீங்கள் கேட்டபின்தான் நினைவு வருகிறது"என்பது பலர் நிலைமை. மெக்ஸிகோவில் அன்னையிருக்கிறார் என நம்ப நம்பிக்கை அதிகம் வேண்டும்.

. விஷயம் என எழுந்தவுடன் அன்னை நினைவு வருவது பெரிய விஷயம்.

. நாட்டு மண்ணிற்கு அந்த நாட்டின் ஆன்மீகப் பண்புண்டு. ஐரோப்பாவில் தவம் செய்பவரில்லை. அந்த மண்ணுக்கு தவத்தின் சிறப்பில்லை. வசதி, சுத்தமிருக்கும். மண்ணிலில்லாத மணம் சூழலிலிருக்காது. சூட்சுமமானவர் அதுபோன்ற நாடுகட்குப் போனால் மூச்சுவிடவும் திணறுவார்கள். சூழல் ஆன்மீக சொத்து.

. நினைவு என்றால் என்ன? அன்னை நினைவு, ஆத்மாவின் நினைவு என்றால் என்ன?

. நேற்று, சென்ற ஆண்டு, சிறுவயதில் நடந்தவை மனத்தின் அடித்தளத்திலிருந்து இப்பொழுது மேலே வருவது நினைவு எனப்படும்.Surface memory. இது மேலெழுந்த நினைவு.

. பூர்வஜென்மத்தில் நடந்தவை ஜீவனில் கரைந்துவிடும். ஏதோ காரணத்தால் ஒரு பகுதி கரையாமல் ஒட்டிக்கொண்டிருந்தால் இப்பொழுது தெரிவது பூர்வஜென்ம நினைவு. இது சைத்தியப் புருஷனுடைய நினைவு.

. மனிதன் பிறந்ததிலிருந்து இன்றுவரை நிகழ்ந்தவை நம் ஆழ்மனத்துள் உள்ளன. அவை கனவில் நேராகவும், தலைகீழாகவும், விபரீதமாகவும் எழும். அது ஆழ்மனநினைவு. Subconscious memory.

. மேல்மனம், உள்மனம், இரண்டையும் கடந்தது அடிமனம். அது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளது. அகந்தை அழிந்தபின் வெளிவரக் கூடியது. சூட்சுமமானது. அதற்கு உலகில் எங்கு நடப்பதும் தெரியும். அடிமன நினைவு எனலாம். Subliminal memory.

. உலகில் அனைவரும் ஆர்வமாகக் கருதுவது, சமூகத்தில் எவருக்கும் நினைவிருக்கும். அதைச் சமூகத்தின் நினைவு Collective social memory எனலாம்.

. ஏற்கனவே முன்ஜென்மங்களில் அன்னையை அறிந்தவருக்குத் தம்மையறியாமல் அவர் நினைவு எழும். அது ஆத்மா அன்னையை நினைவுகூர்வதாகும்.

. அன்னை என்ற தத்துவம் நாமறிந்தது என்றாலும், அன்னையின் அவதாரம் உலகுக்குப் புதியது; புதியது எதிரேயிருந்தாலும் நினைவு வாராது. ஏனெனில் நினைவு உள்ளிருந்து எழுவது.

. வேதம், உபநிஷதம், தத்துவம் பயின்றவர் அன்னையை அவர்களை அறியாமல் நாடி வருவதுண்டு. அப்படி வந்தாலும் அவர்கட்கு அன்னை நினைவு எளிதில் வாராது. அவர்கள் படித்ததே நினைவு வரும்.பூர்வஜென்மத் தொடர்பில்லாமல் அன்னை நினைவு சுலபத்தில் உள்ளிருந்து எழாது.

. புதியதாக அன்னையை அறிந்தவர் எளிதில் அன்னையை மறந்துவிடுவார். அவர் நாமஜெபம், அன்னையை ஆழ்ந்து போற்றுவது,இடைவிடாமல் நினைக்க முயல்வது, ஆகியவை உள்ளே அன்னைக்குரிய இடத்தைத் தொடும்வரை நினைவு ஏற்படாது. அப்படித் தொட்டபின் அன்னை நினைவு அங்கிருந்து எழும். நாம் அன்னையை ஏற்பது பவித்திரமானால், அன்னை நம்மை ஏற்பார். அவர் நம்மை ஏற்றால், உள்ளே நினைவுக்குரிய இடம் ஏற்படும்.

. அன்னை வாழ்ந்த இடம், அன்னையை வணங்கும் இடம்,அன்னையை அறிந்தவர் உள்ள இடங்களுக்குப் போனால், அவ்விடத்திலுள்ள சூழல் நமக்கு நினைவாக எழும்.

. அன்னையைத் தரிசனம் செய்த நாட்கள், அந்த நேரங்கள், இடங்கள், அவற்றோடு தொடர்புள்ள பொருள்கள், நபர்கள் அன்னையை நினைவூட்டுவார்கள்.

. அன்னையைப் பற்றிக் கேள்விப்படுவது பாக்கியம். அன்னையை அறிவது அதிர்ஷ்டம்.

அன்னை நினைவு வருவது நாம் அவர்க்கு உரியவர் என்று பொருள்.

. அன்னை நினைவு மனத்திற்கோ, உணர்விற்கோ இல்லை, ஆத்மாவுக்கேயுண்டு. அதுவும் வளரும் ஆத்மாவுக்கே அந்நினைவுண்டு.அதனால், நினைவே வழிபாடு, நெஞ்சே ஆலயம்என நாம் கூறுகிறோம்.

தாயார் - பிள்ளைவீட்டார் தாமே முன்வந்து பெண் வீட்டாரை அணுகி வரன் பேசுவதோ, எல்லாச் செலவுகளையும் தாமே ஏற்பதாகச் சொல்வதோ, நாம் அறியாதது:

. இது கேள்விப்படாதது. திருவுருமாற்றம் தேடுபவர்கள் செய்வது.

. இதைத் தொடர்ந்து செய்தால் சமூகத் திருவுருமாற்றம், மனத்தின் திருவுருமாற்றமாகி, ஆத்மாவின் திருவுருமாற்றத்தில் முடியும்.

. இதன் பலன் பெறுபவர் அன்னையை அதிகமாக நாடியதால் திருவுருமாற்றத்தின் பலன் அவர்கட்கு வருகிறது. தாங்களும் திருவுருமாற்றத்தை ஏற்கவேண்டும் என்று பொருள்.

. அன்னையை அறிவது பாக்கியம் என்றோம்.

. அன்னை அன்பருடன் தொடர்பு அதைவிடச் சிறந்தது.

. அன்பருடன் உறவு அதற்கடுத்தது.

. உறவில் திருவுருமாற்றப் பலன் தெரிவது, நமக்குத் திருவுருமாற்ற நேரம் வந்ததை அறிவிக்கும்.

. சுமுகம் அதன் அடிப்படை.

. சுமுகத்திற்குப் பதில் பிணக்கு எழுவது பழைய தரித்திரத்தை வற்புறுத்துவதாகும்.

. எவருக்கும் நடக்காதது நமக்கு நடந்தால், எதிர்காலத்தில் எவரும் பெறாததை நாம் பெறலாம் எனக் காட்டுகிறது. (-ம். software employee நாராயண மூர்த்தியாகலாம்).

. அது நடைபெற நாம் எவரும் செய்யாததை - திருவுருமாற்றத்தை

- விரும்பி ஏற்கவேண்டும்.

. அன்னை, அன்பரை எத்தனைக் கட்டங்கள் உயர்த்துவார் என்பதை அறிவதும் ஒரு ஞானம்.

. ஒவ்வொரு கட்டத்தையும் கடக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பது யோகம்.

. வாழ்வில் அதை அறிவது அதிர்ஷ்டம்.

. நமக்கு (particular personal) குறிப்பாக எந்த இடத்தில் எப்படிச் செயல்படக் கூடாது, எப்படிச் செயல்படவேண்டும் என்று தெரிவது choice தெரிவதாகும்.

. Choice தெரிவது அன்னையை வாழ்வில் அறிவதாகும்.

. Choiceஇரண்டல்ல, ஆயிரம்.

. Choice சமர்ப்பணத்திற்குரியது, நமக்கன்று.

. Choiceஇல் உலகம் அடங்கியுள்ளது.

. இந்த வீட்டில் எந்தப் பிள்ளைக்கும், கணவருக்கும் அன்னை நினைவே வாராதது கவனிக்கத்தக்கது.

தாயார் - மார்க்கட்டைப் போட்டி மனப்பான்மையுடன் நினைக்கக் கூடாது:

. போட்டியை அழித்தால் வளரலாம் என்பது மார்க்கட் சட்டம். போட்டியை வளர்த்தால் வளரலாம் என்பது அன்னைச் சட்டம். மார்க்கட் வளரும்பொழுது, போட்டி வளர்வதை நாம் காண்கிறோம். போட்டி வளர்வதால் மார்க்கட் வளர்கிறது என நாம் அறிவதில்லை.

. இக்கதையில் கம்பனிக்குப் பின்னணியாய் நிற்பவர் மனத்தில் போட்டியில்லாததால், கம்பனி தானே பல மடங்கு வளர்கிறது. அதற்கு முக்கியக் காரணம் போட்டி மனப்பான்மையில்லாததால்.

. போட்டி - வளர்ச்சி தத்துவம் என்ன?

மார்க்கட் வளரும்பொழுது, அதன் பெரும்பயன் பெற போட்டி வளர்வதைக் காண்கிறோம். போட்டியால் முக்கியமாக விலை குறைகிறது. விலை குறைவதால் திறமை வளர்கிறது. திறமையை நாமே வளர்த்துக்கொண்டால் மார்க்கட் வளரும்என்பது பொருளாதாரம் அறியும் தத்துவம்என்றாலும், பொதுவாக மக்கள் மனத்தில்லாதது.மார்க்கட் என நாம் கூறுவது சரக்கை உற்பத்திசெய்யும் திறமை.புதிய புதிய சரக்கு வரும்பொழுது அதற்கு மார்க்கட் உற்பத்தியானபடி

இருக்கிறது.மார்க்கட் என குறிப்பிட்ட அளவுண்டு. அதை அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும்என்று போட்டி மனப்பான்மை கூறுகிறது.திறமையாக நல்ல சரக்கை உற்பத்திசெய்தால் அதற்குரிய மார்க்கட் எழுகிறது என்பது அனுபவம். மார்க்கட் அளவுகடந்தது. அதை நாமே உற்பத்திசெய்கிறோம். அது திறமையால் உற்பத்தியாகிறது. பண்பு, நாணயத்தால் அளவில்லாமல் உற்பத்தியாகிறதுஎன்பதை எளிதில் ஏற்க முடிவதில்லை. இக்குடும்பத்தின் அனுபவத்தில் கம்பனி வந்தது,பெருகியது, மேலும் விரிவடைவது அதை நிரூபிக்கிறது.

. மனிதன் வளரச் சந்தர்ப்பம் வேண்டும், உதவி வேண்டும், சிபாரிசு வேண்டும் என்பது பொதுவான மனப்பான்மை.மனிதன் வளர முயற்சி வேண்டும், ஆர்வம் வேண்டும், திறமை வேண்டும் என்பது தத்துவம். முயற்சி, ஆர்வம், திறமை உள்ளவர்க்கு முடிவில்லாத சந்தர்ப்பம் உண்டு என்பது USAஇல் 300 ஆண்டு அனுபவம். 1980 முதல் அது இந்தியருடைய அனுபவம்.

. இக்கதையில் தாயாருக்குச் சந்தர்ப்பம், உதவி, சிபார்சு, ஆகியவை எல்லாம் அன்னை.

அன்னை இம்மூன்றையும் சேர்த்துள்ளார்.

தாயாருடைய பக்தி, குடும்பத்தை 3-ஆம் நிலையிலிருந்து 8-ஆம் நிலைக்கும், 15-ஆம் நிலைக்கும் கொண்டுவந்தது. எந்தச் சந்தர்ப்பமோ, எவருடைய சிபாரிசோ, உதவியோயில்லை. மேலும் 80-ஆம் நிலைக்கு வந்ததும் எதுவுமில்லாமல் வந்ததே.

. சந்தர்ப்பம் அன்னையை அறிவது.

. உதவி அன்னைக்கு உண்மையாக இருப்பது.

. தானே அன்னை நினைவு வருவது சிபாரிசு.

. போட்டி negative, ஒத்துழைப்பு positive.

போட்டிப்போட நினைக்காவிட்டால் அன்னை ஒத்துழைப்பார்.

போட்டி, தவறு எனக்கொண்டால், அன்னை அனைவர்மூலமும் ஒத்துழைப்பார்.

போட்டியைவிடப் பெரிய தவறு பொறாமை.

பொறாமையுள்ளவர் முன்னுக்குவர எவர்மீது பொறமையிருக்கிறதோ அவருக்குச் சேவை செய்யவேண்டும்.

தாயார் - அது பெரிய விஷயம். அதிர்ஷ்டம் வருவதை நாம் அவசியம்

மறுக்க வேண்டும் என்பது மனித நியாயம்;

பார்ட்னர் - இது நான் கேள்விப்படாததாக இருக்கிறதே:

. கதையில் மறுத்தவர்களுக்கு உதாரணம் கூறுகிறேன்.

. ரிஸ்க் இருக்கிறது என முதலில் மறுத்தவன், அனைவரும் ஏற்றபின்,

"இந்த ஊரில் போர் போடாமல் இனி வாழ்வதில்லை. எல்லா நிலமும் போனாலும் சரி"என்பான்.

. முதலில் ரிஸ்க் எடுக்க தைரியமில்லை. இப்பொழுது தைரியம் வந்துவிட்டது.

. அதிர்ஷ்டமாக இருந்தாலும் ஏற்க தைரியம் வரவேண்டும்.

. தைரியம் எப்படி வருகிறது?

. வரும் அதிர்ஷ்டத்தின்மீதுள்ள பிரியத்தால் தைரியம் வருகிறது.

. எப்பொழுது பிரியம் வரவில்லை?

. உள்ளதை இரசிக்கும்பொழுது வருவதை ஏற்க தைரியமில்லை.

. பகவான் அதை Taste of Ignoranceஅறியாமையின் ருசி என்கிறார்.

. மேலும் சொல்லக் கூடியதுண்டா?

. சமூகம் ஏற்பதை எதிர்பார்க்கிறான் என்றால் individuaலிty சொந்தமாக அறிவு வரவில்லை எனப் பொருள்.

. இருப்பதை இரசிப்பது அதிகமானால், வருவது கண்ணுக்குத் தெரியாது.

. மீதியெல்லாம் நாம் கூறும் காரணங்கள், சாக்கு என்றால் பொருத்தமாக இருக்கும்.

. வேண்டாம் என்று முடிவை எடுத்துவிட்டால், அதற்குக் காரணம் கூறுவது அவனவனுடைய பர்சனாலிட்டியைப் பொருத்தது. அது ஏராளம்.

. அந்த நேரம் எழும் பிரச்சினையை முக்கியமாகக் கருதிப் பேசுவார்கள்.

. வேண்டும் என்றால் அதே பிரச்சினையை ஒதுக்கிப் பேசுவார்கள்.

. அந்த நேரம் மனிதன் 60 வயதானாலும் அடுத்தவர் பேச்சைக் கேட்பான். அப்படி அதிகமாகக் கேட்பது,

. தகப்பனார் பேச்சு.

. அதைவிட அதிகமாகக் கேட்பது தாயார்.

. மனைவி பேச்சு தாயாரைக்கடந்து எழும் நேரமும், தாயார் பேச்சு மனைவியைக் கடந்து செல்லும் நேரமும் உண்டு.

. மனிதனுக்குப் பெற்றோர் முக்கியம்.

. யாரோ ஒரு சிலர் குழந்தைகள் பேச்சை அப்படியே எடுத்துக் கொள்வார்கள்.

. யார் பேச்சைக் கேட்டாலும், அது தான் எடுத்த முடிவாக இருக்கும்.

. அதிர்ஷ்டத்தை மறுக்கக்கூடாது என்று ஒப்புக்கு ஏற்றுக் கொண்டாலும், அந்த அளவுக்கு பலிக்கும்.

. அதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டம் என அறிவது அதிர்ஷ்டம்.

. அன்னை தருவது அருள், பேரருள்.

. நம்பிக்கையால் பெறுவது அருள். தன்னம்பிக்கை போனபின் வருவது பேரருள்.

கணவர் - நாம் rivals போட்டிபோடுபவனை நம் முழுமையான பகுதியாக ஏற்றால் வாய்ப்பு வரும்என்கிறோம். மறுப்பதே மனித சுபாவம்... "நீ சொல்லிநான் செய்தால் என்ன மரியாதை''என ஒருவர் 85,000 ரூபாய் வருமானத்தை மறுக்கிறார் என்றால் அதற்கு மேலும் என்ன விளக்கம் தேவைப்படுகிறது?

. இதனுள் social evolution சமூக வளர்ச்சிக்குரிய தத்துவங்கள் பல உண்டு.

. வாய்ப்பு பெரியதிலிருந்து வருகிறது. நாம் சுயநலமாக நம்முடனே இருந்தால் சுருங்குகிறோம், பலரையும் சேர்த்துக்கொண்டால் பெரியதாகிறோம். அது வாய்ப்புவர உதவும், பலரையும் அவர் மதிப்பை அறிந்து ஏற்றுக்கொண்டால் பெரும்வாய்ப்புகள் வரும். சத்திய ஜீவியத்தில் அகந்தையில்லாததால், அனைத்து ஜீவன்களும் ஒன்றில்,அனைத்தும் சுமுகமாக இருக்கின்றன. போட்டிபோடுபவனை நம்மில் பகுதியாக ஏற்றால் நாம் சத்தியஜீவியசக்தியை நம்முள் கொண்டுவருகிறோம்.

. சமூகம் என்பது authority, power அதிகாரத்தால் ஏற்பட்டது. அதிகாரமில்லாவிட்டால் சமூகமில்லை. அதிகாரம் முக்கியம். சமூகமே அதிகாரம் என்பதால், அதிகாரத்தில் உள்ளவனுக்கு அறிவு இருக்கும் என நம்புகிறோம். இது மூடநம்பிக்கை என்றாலும் பரவலான நம்பிக்கை. அது தலைகீழே மாறி கீழே வேலை செய்பவனுக்கு அறிவிருக்காது என்னும் நம்பிக்கை.

. அத்துடன் எதிரி ஒருவன் சொல்வது நல்லதாக இருந்தாலும், அதனால் முடிவில் நமக்கு நல்லது வாராது என்பது அனுபவம். அதனால்,

. எதிரிக்கு நம் விஷயத்தில் இராசியில்லைஎன்று நம்புகிறோம். அது கீழே வேலை செய்பவனுக்கும் பொருந்தும்என்பது பலர் எண்ணம்.

. கீழே வேலைசெய்பவனுக்கு இராசியிருக்காது என்று நம்புகிறோம்.

. நாம் கீழே வேலைசெய்பவனை மட்டமாக நினைப்பதே தடையென நமக்குப்படுவதில்லை.

. அதிகாரம் என்பது வலிமை. வலிமை முக்கியம் என்று மனிதன் கருதியதால் கொள்ளைக்காரன் ஆதிநாளில் இராஜாவானான்.

. பிரம்மம்என்பது சத். சத்தென்பதே ஜடமாயிற்று. ஜடம் என்பது பொருள், நிலம், சொத்து. சொத்துடையவன் தலைவன்என்ற பரம்பரை பிரம்மம் நமது தலைவன்என்ற அடிப்படையில் ஏற்பட்டது.

. மனிதன் பிரம்மத்தை ஏற்பதை வலிமையானவன் தலைமையை ஏற்பதால் வெளிப்படுத்துகிறான்.

. அன்னையை அறிவது அதிர்ஷ்டம். அன்னை தம்மை எதிர்ப்பவர்க்கும் தம்மை அறிமுகப்படுத்துகிறார். எந்த கயமையுள்ளும் ஒளி சிறிது இருக்கும். கெட்டகாரியங்கள் மூலமாகவும் அவ்வொளி சிறு நல்ல காரியங்களைச் செய்யும். நல்ல ஊழியனை வேலையிலிருந்து எடுப்பது துரோகம் என்றாலும், அவ்வூழியனுக்கு இந்தச் சமூகத்தில் பொறாமையை அறியாமல் வாழமுடியாதுஎன்ற அறிவுதர அந்த வேலைநீக்கம் பயன்படுவதால், அதுவும் அன்னைக்குச் செய்யும் சேவை. அந்தச் சேவைக்குப் பலனாக அன்னை அதே ஊழியன்மூலம் 85,000 ரூபாய் வருஷவருமானத்தைத் தருகிறார். தாம் செய்த பாவத்தின் மூலமாகவும் இறைவன் செயல்படுகிறான் என்ற அருளை ஏற்கமுடியாதது மனித நிலை.

. 25 ஆண்டுகளில் அவர் பெற்ற நன்கொடை ரூ.2,350/-, ஆண்டிற்கு 100 ரூபாய்.

. 85,000 ரூபாய் வருமானம் வரும் முயற்சியில் அனுபவம் இல்லாதவர் தயங்கலாம். இவருக்குச் சொந்த அனுபவம் உண்டு.அந்த அனுபவத்தால் அம்முயற்சிக்குச் செலவில்லை. இந்த வருமானமுள்ள இடங்களில் முதல் ஆபத்து திருடு. இவருக்கு அதுவும் இல்லை. 4 ஆண்டுகட்குப்பின் பெரும்வருமானம் வரும் என்பது இவருக்குப் புரிகிறது. நம்புகிறார்.

. ஆனால் மறுக்கிறார்.

. மறுப்பது தரித்திரம்.

. தரித்திரத்தை வற்புறுத்த அவர் சொல்லும் காரணம், "நீ சொல்லி நான் செய்யமாட்டேன்"என்பது.

பார்ட்னர் - நாம் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்கிறோம். அதிகமாகவும் சுருக்கிக்கொள்கிறோம். வருவது அந்தச் சுருக்கத்தின் மூலம் வரவேண்டும் என்கிறோம். இந்த மனப்பான்மை புரிகிறது. உலகில் எதுவும், யாரையும் தேடி வருவதில்லை. தரித்திரம்தான் தேடி வரும்:

. தெய்வலோகம் (overmind) சத்தியஜீவியத்திற்கு உலகில் பிரதிநிதி.

. சத்தியஜீவியம் அனந்தம் (infinite). தெய்வலோகம் அதைக் கண்டமாக்குகிறது finite.

. கண்டமான நிலையில் (unique) ஒவ்வொன்றும் தனித்திருக்கும். கைவிரல் ரேகை ஒருவர்போல ஒருவருக்கிருக்காது, மரஇலைகள் ஒவ்வொன்றும் வேறாக இருக்கும். இத்தனித்தன்மையில் (uniqueness) சிருஷ்டி முடிகிறது. அதன்பிறகு பரிணாமம் எழுகிறது. அதைச்செய்வது சைத்தியப்புருஷன். நாம் வியாபாரத்தை ஆரம்பித்தால், அதிலிருந்து பிரிந்து மளிகைக்குப் போகிறோம். அதிலும் ஒரு விஷயத்தை - பருப்பு அல்லது அரிசி - முக்கியமாகக் கவனிக்கின்றோம். நல்லபருப்புக்கு நம் கடை பேர் போனதாகிறது. கையில் முதல் சேர்கிறது. நகை வியாபாரத்தில் அதிகலாபம் வரும் என்றால், "எனக்குப் பருப்பு வியாபாரத்தை விடமுடியாது" என்கிறோம். முதல் சேர்ந்தபின் பெரியவியாபாரத்திற்குப் போக நூற்றில் ஓரிருவரும் முன்வரமாட்டார்கள். தொழிலை வியாபாரம் ஆக்கி, அதை மளிகையாக்கி, அதுவும் பருப்பு வியாபாரம் என சுருங்குவதால் பிரபலமாகி முதல் சேர்கிறது. முதல் சேர்ந்தபின் எந்த வியாபாரத்திற்கும் போகலாம். பொதுவாக அப்படிப் போவதில்லை.

இக்குடும்பம் சிறுகுடும்பமாக இருந்து தகப்பனார் போலவே பிள்ளையும் இருக்கவேண்டும் என வற்புறுத்தியிருந்தால், B.E. படித்திருக்கமாட்டான். இந்த வாய்ப்புகள் வந்திருக்காது. எதுவுமில்லாத பொழுது மனிதன் எதையும் பற்றிக்கொள்வான். கொஞ்சம் வசதி சேர்ந்தபின் அதை ரிஸ்க் செய்யமாட்டான். ரிஸ்க் எடுக்காதவனுக்கு வாய்ப்பில்லை.

. இந்தக் குடும்பம் தன் தரித்திரமான குணங்களைவிட்டு அன்னைக்கு உரிய நல்லகுணங்களை ஏற்பது ரிஸ்க் என நினைத்து ஒதுங்குகிறது.அதுவே அவர்கட்குத் தெரியாது.

. சிருஷ்டி எந்தக் கட்டத்திலும் பரிணாமமாகலாம் - சைத்தியப்புருஷன் மூலமாக. முதல் சேர்ந்தபின் எந்த வியாபாரத்திற்கும் போகலாம் என்பது போன்றது அது.

. அன்னை வாழ்வு என்பது நாம் நாடிப்போவது நம்மைத் தேடி வருவதாகும்.

. உள்ளதுதான் தேடிவரும்.

. நம் உலகிலுள்ளவை பிரச்சினை, கஷ்டம், தரித்திரம், தொந்தரவு தான். நம்மைத் தேடி வரவேண்டும் என்றால் இவைதான் தேடிவரும்.

. நம் உலகில் நல்லதில்லை, வாய்ப்பில்லை நம்மைத் தேடிவர.

. அன்னை உலகை நாம் அடைந்தால், அங்கு நல்லது மட்டுமிருக்கும்.நம்மை நல்லது மட்டும் தேடிவரும்.

. இந்தக் குடும்பத்திற்கு வந்த வாய்ப்புகள் பிரம்மாண்டமானவை. இந்த அளவு வாய்ப்பு வாராத அன்பர் குடும்பமில்லை என்றால் நம்புவது கஷ்டம்.

. எல்லா அன்பர்கட்கும் இந்த அளவு வாய்ப்பு வந்தாலும், தானுள்ள இடத்தை மாற்றாமல், "எனக்கு வருவதானால் என் தொழில் வரட்டும்" என்பது தரித்திரத்தை வலியுறுத்துவதாகும்.

. வாராததேயில்லை. மனிதன் மறுக்காததுமில்லை.

பார்ட்னர் - அதிர்ஷ்டம் வரும் ரூபத்தில் நாம் ஏற்பதே அதிர்ஷ்டம். அதிர்ஷ்டத்தை நமக்குரிய ரூபத்தில் வரச்சொல்வது தரித்திரம்:

. காலம் மாறும்பொழுது மனிதன் அதற்கேற்ப மாறிக்கொள்ளவேண்டும்.

. நிகழ்காலத்தைக் கடந்தகாலத்திற்கு உட்படுத்த முயல்வது சிருஷ்டியின் போக்கை மாற்றமுயல்வது. இதைத் தமிழில் தரித்திரம் என்பர்.

. தரித்திரம் என்ற சொல் வறுமையைக் குறிக்கும்.

. வறுமைக்குரிய மனப்போக்கை எல்லாம் குறிப்பிடும் சொல் தரித்திரம்.

. அறியாமையை அறிவுக்கு எதிரானது என்கிறோம். அறிவைப் பயன் படுத்தி அறியாமையின் உயர்வை நிலைநிறுத்துவது தரித்திரம்.

. Reactionary, conservatismm, anachronism, superstition ஆகிய அனைத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் செறிவானசொல் தரித்திரம் என்பது. பிற்போக்கு, பழைய பஞ்சாங்கம், காலத்திற்கு ஒவ்வாதது, மூடநம்பிக்கை ஆகியவை தரித்திரத்தின் பகுதிகள்.

. Luck என்பதற்கு எதிராக misfortune எனலாம். அதை அதிர்ஷ்டம், தரித்திரம் எனக் கூறலாம்.

. Luck என்ற சொல் அதிர்ஷ்டத்தின் எல்லா அம்சங்களையும் தொகுத்துக் கூறும் Misfortune என்பது தரித்திரத்தின் ஒரு பகுதியைமட்டும் கூறும்.

. நாடு முன்னேறுகிறது. இனி கிராம வாழ்வில் சிறப்பில்லை. திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு வேலையில்லை. கூழ்குடித்தவன் குண்டன், சோறு தின்பவன் சொத்தை என்பது செல்லாது. ஷர்ட் போடாத நாகரீகம் எடுபடாது. குடுமிக்குக் காலமில்லை. செய்தியை ஆளிடம் சொல்லியனுப்பும் காலம் மாறிவிட்டது. நகரவாழ்வு நாகரீகமானது. உலகைப்பற்றி அறியும் படிப்பு அவசியம். காலையில் எழுந்து டிபன் சாப்பிட்டு, ஷர்ட் பேண்ட் உடுத்து, முடியை கிராப் செய்து, செய்தியைப் போன்மூலம் பேசும் இந்த நாளில், முந்தைய பழக்கங்களை இலட்சியம் என வற்புறுத்தும் மனப்பான்மை தரித்திரம். உலகம் மாறும்பொழுது நாமும் மாறவேண்டும். நம் மனப்போக்குக்கு ஏற்றவாறு உலகம் மாறவேண்டும்என்பது பிற்போக்கான தரித்திரமான மனப்பான்மை.

. மரியாதை பணத்திலிருந்து மனிதனுக்கு வருகிறது. அதிகாரத்திலிருந்து அடக்கத்திற்கு மாறுகிறது. ஆணின் உயர்வு மாறி ஆணும் பெண்ணும் சமம் என்றாகிறது. விஷயங்களை நினைவிருத்துவதற்குப் பதிலாக ரிக்கார்டில் பதிக்கிறோம்.

சிறுவர்கள் படித்துவிட்டால் அவர்கள் படிப்பை ஏற்கிறோம்.

தாழ்ந்தவன் திறமை பெற்றால், அவன் திறமையை ஏற்கிறோம்.

வெளிநாடு சென்றால் ஜாதிப்பிரஷ்டம் செய்வதற்குப்பதிலாகப் போற்றுகிறோம்.

ஆங்கிலத்தை நீசபாஷை என்று கூறாமல் உலகமொழி என ஏற்கிறோம்.

சம்பிரதாயத்தைப் போற்றிப்புகழாமல், மூடநம்பிக்கை என்கிறோம்.

சோப்புப் போட்டு குளிப்பது அனாசாரம்என்று கூறாமல், சோப்புப் போடாமல் குளிப்பது அழுக்குப்போகாது என்று சோப்பை ஏற்கிறோம்.

குழந்தை வேகமாகக் கற்றால் மண்டை வெடித்துவிடும் என்பது அறியாமை என்று தெரிகிறது.

பெரியம்மை வந்தால் மாரிஅம்மனுக்குப் பிரார்த்தனை செய்வது மாறி தடுப்புஊசி போட்டுப் பெரியம்மையைத் தடுக்கிறோம்.விஷயம் மாறுவதில் இல்லை.அறியாமை அறிவாக மாறும்பொழுது மாறுவது விஷயம்.

அறியாமையை அறிவுஎனப் பேசும் அறிவு தரித்திரமான மனப்பான்மை.

விஷயம் மனப்பான்மையிலிருக்கிறது.

கடந்தகாலம் வரப்போவதில்லை.

நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கடந்தகாலத்திற்கு உட்படுத்த முயலும் அறிவு தரித்திரம் எனப்படும்.

கணவர் - நாங்களெல்லாம் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யவேண்டும் எனச் சொல்;

பார்ட்னர் - அப்படிக் கேட்கக்கூடாது என்று கூறுகிறாரே?

. அதிகாரிக்குக் கீழே வேலை செய்பவன் சொல்வதைச் சொல்வதுபோல் செய்யவேண்டும். இந்த தபாலைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வா என்றால், அதை மகனிடம் கொடுத்தனுப்பக் கூடாது; குற்றமாகும்.

. அதிகாரி தான் என்ன செய்யவேண்டும் என அடுத்தவரைக் கேட்டால்,அவர் அதிகாரியாக இருக்க இலாயக்கற்றவர்.

. இதிலுள்ள தத்துவம் என்ன?

சிருஷ்டி தன்னிச்சையாக (Self-conception) ஏற்பட்டது.

தன்னிச்சையாக ஏற்பட்டிருக்காவிட்டால், அது சிருஷ்டியாக

இருக்காது, மனிதன் பிரம்மம்.

அவன் செய்வனவற்றை தானே அறிந்து, புரிந்து, உணர்ந்து செய்ய வேண்டும். தானே செயல்படமுடியாதவன், பிறர் கீழே வேலை செய்ய வேண்டியவன்.

அவனுக்குச் சொந்தமாக எதுவும் கிடையாது.

மனிதன் மலர்வது மனிதனில் பிரம்மம் மலர்வது.

தன்னிச்சையாக செயல்பட்டால்மட்டுமே அது முடியும்.

அப்படியானால் அன்னை கூறியதை எப்படி எடுத்துக்கொள்வது?

அன்னை கூறியதைப் புரியாமல் எடுத்துக்கொள்வதற்குப்பதிலாக,

நன்றாகப் புரிந்தபின், புரிந்ததற்காக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக,

அன்னை கூறியதற்காக எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த யோகத்தில் மனிதகுரு இல்லை.

உள்ளுறை ஜகத்குருவே குரு.

அந்த ஜகத்குரு சொல்வதும், அன்னை சொல்வதும் ஒன்றாக இருக்கும்.

. ஆரம்பத்தில் சொல்லலாம், சொல்லிக் கொடுக்கலாம்.கேட்டுச் செய்பவருக்குப் பெரும்பலனிருக்கும்.பெறும் பலனுக்கு அகந்தை அடங்கவேண்டும்.அகந்தை பலனைத் தனக்கு எடுத்துக்கொள்ளும்.அந்தக் கட்டத்தில் மேலும் யோசனை சொல்லமுடியாது, சொல்லக் கூடாது.

"சொல்லுங்கள்"என்பவர் அந்தக் கட்டம் தாண்டியபின் சொல்வதைச் செய்யமாட்டார்.சொந்த யோசனை உள்ளவனுக்கே யோசனை சொல்ல முடியும். என்ன சொன்னாலும் சொந்த யோசனையுள்ள அளவிலேயே பலிக்கும்.சொந்த யோசனை என்பது பர்சனாலிட்டியாகும்.

. கதையில் மனைவி கணவருக்கும், அவரது நண்பர் பார்ட்னருக்கும் யோசனை சொல்வதால் பெண்என்ற இடத்தையோ, மனைவிஎன்ற இடத்தையோ தாண்டக்கூடாது. உரிய இடத்தைத்தாண்டி செயல்பட்டால், செயல் பலிக்காது.பார்ட்னர் விவரமாகப் புரிந்து ஏற்பதுபோல் கணவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

புரியாமல் ஏற்கிறார்.

புரியாமல் ஏற்பவர், பிறகு புரியாமல் உளறுவார்.

புரியாதவருக்குப் பொறுப்பிருக்காது.

புரிவது பொறுப்பிற்கு அடிப்படை.

புரியாமல் பொறுப்பேற்க முடியாது.

தாயார் - ...அந்த வேலையைக் குறைந்தபட்சமாக, அதிகபட்சமாக

எப்படிச் செய்வது என நமக்குத் தெரியும்:

. எந்த வேலைக்கும் குறிப்பிட்ட பலன் என்பதில்லை, பரீட்சை எழுதினால் எவரானாலும் 60 மார்க்தான் வரும்என்ற சட்டமில்லை. புத்தகம் எழுதினால் 10,000 பிரதிகள் விற்கும் என்ற நிர்ணயமில்லை. எந்த வேலைக்கும் range ஏற்றத்தாழ்வுண்டு.

. ஏற்றம் எதனால் வருகிறது? தாழ்வு எதனால் வருகிறது?

. நாம் ஒரு லெவல்,

உதாரணமாக மனம் என்ற லெவலில் செயல்படுகிறோம். மனத்திற்கு range வீச்சுண்டு. மேலே மனத்தால் மாறி மாறி இருபக்கமும் பார்க்க முடியும். அந்த நிலையில் மனம் சத்தியஜீவியத்துடன் தொடர்புகொள்கிறது. கீழே மனம் அடுத்த பக்கத்தைப் பார்க்க மறுக்கிறது. முழுவதும் மறுக்கும் நேரம் உணர்வோடு (vital) தொடர்புகொள்கிறது. இந்த வீச்சிருப்பதால் ஏற்றத்தாழ்வுண்டு.

. வாக்காளர் குறைந்தபட்சம் ஓட்டுப்போடலாம். அதிகபட்சம் MLAஆக நிற்கலாம். ஓட்டுமட்டும் போடும்பொழுது குடிமகனாக இருக்கிறோம்.MLAஆக நிற்கும்பொழுது வாக்குரிமையால் பதவியை நாடுகிறோம்.

. வேலைக்கு வீச்சிருந்தால் நாமெப்படிச் செய்வது?

. நாம் செய்வது நம் நோக்கம் (attitude) என்ன என்பதைப்பொருத்தது.

. நமக்கு எப்படி நோக்கம் எழுகிறது?

. நோக்கம் நமக்கு. நாம் யார் என்பதைப் பொருத்து நோக்கம் எழுகிறது.

. நாம்,

. உடலின் அகந்தையாக,

. உயிரின் அகந்தையாக,

. மனத்தின் அகந்தையாக,

. உடலாக, அல்லது உயிராக, அல்லது மனமாக,

. ஆத்மாவாக,

. வளரும்ஆத்மாவாக இருக்கலாம்.

. வளரும் ஆத்மாவுக்கும் மனம், உயிர், உடல்என்ற நிலைகள் உள்ளன.

. இப்பத்து நிலைகட்குள்ள 10 வகை நோக்கங்கள் உள்ளன.

. நோக்கம் செயலின் வீச்சை நிர்ணயிக்கும்.

. செயலின் பலனின் அளவைத் திறமை நிர்ணயிக்கும்.

. வீச்சுள்ள வேலையில் நாம் யார் என்பதைப்பொருத்து நோக்கம் நமது திறமையால் பலனின் அளவை நிர்ணயிக்கும்.

. நாம் யார் என்பது வேறு. நாம் யார் என்பதை உணர்வது வேறு.

. யார் என்பது நிர்ணயிக்காது. யார் என உணர்வது நிர்ணயிக்கும்.

கணவர் - பிள்ளைகள் குதர்க்கமாக இருக்கிறார்கள். கண்டிக்கிறேன் என்றால் கூடாது என்கிறாய்;

தாயார் - அவர்களைத் திருத்த நாம் திருந்திக்கொள்ளவேண்டும்:

. குதர்க்கம் என்றால் கோணல் வழி.

. எது வழிஎன்று தெரிந்தால், கோணல்வழி புரியும்.

. சிருஷ்டியின் வழியும் making the infinite finite), பரிணாமத்தின் வழியும் (finite becoming infinite) வழி, மற்றவை கோணல்வழி.

. பள்ளிக்கூடம் போவது மாணவனுக்கு வழி, அங்கு போகாமலிருப்பது தப்பு. பஸ்ஸ்டாண்டிற்குப் போய் கண்டக்டர், டிரைவருடன் பொழுது போக்குவது கோணல்வழி.

. ஒருவன் உழைத்துச் சாப்பிடுவது வழி, மற்றவர் உழைப்பால் சாப்பிடுவது கோணல்வழி.

. தகப்பனார் ஆபீசுக்குப்போய் வேலைசெய்வது முறை. காண்டீனிலும்,மற்ற இடங்களிலும் அரட்டைஅடித்து வேலை செய்யாமலிருப்பது கோணல்வழி, குதர்க்கம்.

. தகப்பனார் செய்வதைப் பையன் செய்தால், பையனைத் திருத்த தகப்பனார் தன்னைத் திருத்தவேண்டும். தகப்பனார் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, தான் ஆபீசில் வேலை செய்யாமல், பையனைக் கண்டித்தால், பையன் பஸ்ஸ்டாண்டில் பொழுது போக்குவதை, பள்ளியில் வேறு வகையில் மனத்தால் செய்வான்; திருந்தமாட்டான்.

. மனிதன் சிருஷ்டியின் பகுதி.

. சிருஷ்டி, மனத்திலிருந்து வாழ்வுக்கும், வாழ்விலிருந்து உடலுக்கும் செல்கிறது.

. பரிணாமம் உடலிலிருந்து மீண்டும் வாழ்வுக்கும், மனத்திற்கும்,சத்தியஜீவியத்திற்கும் செல்கிறது.

. தற்சமயம் (at the given moment) மனிதன் மனத்திலிருந்து சத்தியஜீவியத்திற்குப் போகவேண்டும்.

. அதன் வழி சிந்தனையைவிட்டு மௌனத்தால், காலத்தைவிட்டு மூன்றாம் நிலை காலத்திற்கு, அகந்தையைவிட்டு சைத்தியப் புருஷனுக்குச் சமர்ப்பணத்தால் போவது.

. அதைச் செய்யாமலிருப்பது சோம்பேறித்தனம், தவறு.

. அதைச் செய்யாமல் அகந்தைவழிச் செயல்படுவது குதர்க்கம்.

. அகந்தைவழிச் செயல்பட, சிறியதாக, கடந்தகாலத்தை வலியுறுத்தி, சிந்தனையால் செயல்படுவது குதர்க்கம்.

. பெற்றோர் அன்னைவழி சென்றால், பிள்ளைகள் அன்னைவழிச் செல்வார்கள்.

. கடன் வாங்கியவன், நஷ்டப்படும்பொழுது, கடனைத் திருப்பித்தர முடியாது. .வருமானம் வரும்பொழுது அவனுக்குக் கடனைத் திருப்பித்தரத் தோன்றாது. வேறு செலவு முக்கியமாகத் தோன்றும். அது குதர்க்கம்.

. வாங்கிய கடனைத் திருப்பித்தருவது சரி.

. காணிக்கை முதல் கடன்.

. காணிக்கைக் கொடுக்கத் தோன்றாதது, கடனைத் திருப்பித்தரத் தோன்றாதது. அது குதர்க்கம்.

. ஆத்மா, வேலை, பணம், உயிர், ஆகியவை முழுமையாகக் காணிக்கைக்கு உரியவை. அனைத்தையும் காணிக்கையாகத் தாராதவர் அர்த்தமற்ற பூஜ்யங்கள்.

பார்ட்னர் - நமக்கு உலகம் என்ன செய்யவேண்டுமோ, அதை நாம் பிறருக்குச் செய்யவேண்டும் என்பது நல்லசட்டமாயிற்றே;

தாயார் - பாக்டரியைப்பொருத்தவரை அந்த ஒரு சட்டம் போதும்,

நாம் உலகப் பிரசித்திபெற:

. பைபிளில் இந்தக் கருத்து வருகிறது.

. இந்தச் சட்டம் ஒரு பாக்டரியை உலகப் பிரசித்திபெறவைக்கும் என்றால் அந்தச் சட்டத்திற்கு உள்ளது என்ன சக்தி? (Infinite) அனந்தமான சக்தியாகத் தெரிகிறது.

. அனந்தம் எப்படி இச்சட்டத்தில் வரும்?

. நாம் அனந்தம் என்பது 1, 10, 100, 1,00,000;...... அனந்தம் என நினைக்கிறோம்.

. உலகமும், பிரபஞ்சமும் அனந்தம். நாம் அதனின்று பிரிந்து அகந்தையுள்ளிருக்கிறோம். அகந்தை அணுவானது (infinitesimal). அகந்தையை விட்டு வெளியேறினால் அனந்தத்தின்முன் இருக்கிறோம்.

. உலகம் என்ற அனந்தம் நமக்குச் செய்யக்கூடியது அகந்தையை அனந்தமாக மாற்றுவது. நாம் அதை உலகுக்குச் செய்தால் நாமே நம்மை அனந்தமாக்குகிறோம்.

. Sears சீயர்ஸ் என்ற அமெரிக்கன் கம்பனி அமெரிக்காவில் "பொருள் திருப்தியில்லைஎன்றால் பணத்தைத் திருப்பித்தருகிறோம்"என்றது.இக்கம்பனி சப்ளையரிடம் பொருள் வாங்கும்பொழுது எதை எதிர்பார்க்கிறதோ, அதை தம் லட்சக்கணக்கான வாடிக்கைக்காரருக்கு வழங்கியது. அதன் விளைவாக அது சிறுகம்பனியிலிருந்து $50 பில்யன் கம்பனியாயிற்று.

. அனந்தமான சக்தி இச்சட்டத்துள்ளிருப்பது புரியவேண்டுமானால், நம்மூர்க் கடைகாரரிடம் இதைச் செய்யச்சொன்னால் எதிர்ப்பு அனந்தமாக வருவதைக் காணலாம்.

. கோகோ கோலா கம்பனியில் தங்கள் டிஸ்ட்ரிபுயூட்டர்களை கோடீஸ்வரராக முயன்றார்கள், உதவினார்கள். அதுவும் இதுபோன்ற சட்டமே. அக்கம்பனியும் உலகப்பிரசித்தி பெற்றுவிட்டது.

. IBMஎன்பது பிரபலமான கம்பனி. 1929இல் அமெரிக்கக் கம்பனிகள் ஏராளமாக மூடப்பட்டு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது.கம்பனி முதலாளி வாட்சன் "எங்கள் கம்பனியில் ஒருவரையும் வேலை நீக்கம் செய்யப் போவதில்லை"என்றார். "என் வேலையை இக்கம்பனி நீக்கக்கூடாது என நான் பிரியப்படுவதுபோல் எவர் வேலையையும் நான் நீக்கமாட்டேன்"என அவர் எடுத்த முடிவு வாட்சன் பெயரை உலகப்பிரசித்தியாக்கியது.

. அனந்தம் வாழ்வில் உலகப்பிரசித்தியாக வெளிவருகிறது.

தாயார் - புத்தியில்லை எனப் புரிந்துகொள்ளும் புத்தி உனக்கு

இருக்கிறதே போதாதா?

. யாருக்காவது ஏதாவது செய்யவேண்டுமானால் எரிச்சல் வருகிறது என்று தொடங்கிய உரையாடல் மேற்சொன்னதில் முடிகிறது.

. புத்தியில்லை என்பது ஒன்று.

. புத்தியில்லை எனப் புரிவது வேறு.

. இல்லை என்று இன்று புரிந்தால் ஒரு நாள் அந்த புத்தி வரும்.அதை negative achievement என்கிறோம்.

. முன்னேற்றம் positive, negative என இருவகையானது.

. மனிதன் மெய்யைக் கடைப்பிடித்து முன்னேறலாம்.

. பொய்யைக் கடைப்பிடித்து, இது உதவாது என்ற முடிவுக்கு வரலாம்.

. ஒன்று positive அடுத்தது நெகட்டிவ்.

. ஏன் மனிதன் இருவிதமாக இருக்கிறான்?

. Choice காரணம்.

. நெகட்டிவாக இருப்பது சுலபம், அதனால் அது சரிஎனப்படும்.

. எனவே அதைச் செய்துபார்ப்பான், முடியாதுஎன அறிவது புத்தி கொள்முதல்.

. சுலபமானதை சரிஎன நினைப்பது vital உணர்வு.

. உணர்வாலானவன் அறிவை எட்ட நெகட்டிவாக முன்னேறுவது அது.

. ஒரு plane நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப்போக முயல்வது முன்னேற்றம்.

. அந்நிலையிலிருந்து முயல்வது - சுலபத்தைச் சரி எனக் கருதுவது

- நெகட்டிவ்.

. அடுத்த நிலை -அறிவு- க்குரியதை ஏற்று முயல்வது பாஸிட்டிவ்.

. யோகத்தில் சமர்ப்பணம் முக்கியம், முதற்கட்டம்.

. நம்மால் சமர்ப்பணம் செய்ய முடியவில்லைஎன அறிவது நெகட்டிவ் முன்னேற்றம்.

. தம் பிள்ளைகளைக் கண்டு அவர்கள் குறைகள் தம் குறை என அறிவது நெகட்டிவ் அறிவிலும் பாஸிட்டிவானது.

. தம் குறைகட்கு தம் பிள்ளைகளைக் கடிந்துகொள்வது ( vitally negative recognition) உணர்வு நெகட்டிவாக அறிவது.

. தம் குறைகளைப் பிள்ளைகளிடம் கண்டு அவற்றைச் செல்லமாக வளர்ப்பது enjoying their vital defects obliviouslyகுறைகளை நிறைவாகப் போற்றுவது.

பார்ட்னர் - ஒரு கம்பனியைப்பற்றி 8 கோடி, 80 கோடி எனப் பேசியது

நினைவிருக்கிறதா?

. ஒரு கடையில் பையன் வேலை செய்தால் அவன் குடும்பத்தைக் காப்பாற்றுவான். அதே கடை அவனுடைய சொந்தக்கடையானால்,அவன் செய்யும் வேலை அநேகமாக ஏற்கனவே செய்ததாகவே இருக்கும். அவன் குடும்பத்தைக் காப்பதுடன் பணக்காரனாவான்.

. செய்யும் வேலை ஒன்றே, உரிமை வேறு. பலன் 8 கோடிக்கும், 80கோடிக்கும் உள்ள வித்தியாசமிருக்கும்.

. அன்பருக்கும், மற்றவருக்கும் உள்ள வித்தியாசம் இது.

. இருவரும் நடத்தும் வாழ்வு ஒன்றே. வாழ்வில் வித்தியாசம் குறைவு.பலனில் மாறுதல் பல மடங்கு.

. மனித வாழ்வு (life in force) சக்தியில் வாழ்வது.

அன்பர் வாழ்வு(life in being) ஜீவனில் வாழ்வது.

ஏராளமான வித்தியாசம் தெரிவது இதனால்தான்.

அன்பர் அன்னைச்சூழலில் வாழ்வதற்கும், அன்னையை ஏற்றுக் கொண்டு அவர் ஜீவியத்தை வெளிப்படுத்துவதற்கும், இதே போன்ற மாறுதல் அடுத்த கட்டத்தில் உண்டு.

. ஒன்று அன்னையைப் புறத்தில் ஏற்பது, அடுத்தது அகத்தில் ஏற்பது.

. இதைப்போன்ற மாறுதல surface, depth மேல்மனத்திற்கும், ஆழத்திற்கும் உண்டு.

. மீண்டும் மனத்திற்கும், உயிருக்கும் பெரும்மாற்றம் அடுத்த கட்டத்தில் உண்டு.

. பழைய விவசாயத்திற்கும் நவீன விவசாயத்திற்கும் பலனில் இம்மாறுதலைக் காணலாம்.

. உரம் போடுவதற்கும், போடாததற்கும் உள்ள வித்தியாசம் இது.

. உரத்திற்குப்பதிலாக உரத்திற்குச் சமமான எருவைப் போட்டாலும் அது  போன்ற மாறுதலிருக்கும்.

. மனப்பாடம் செய்வதற்கும், புரிவதற்கும் உள்ள மாறுதல் அது.

. ஆசிரியர் போதிப்பதற்கும், மாணவன் சிந்தித்து அறிவதற்கும் இதே மாறுதல் உண்டு.

. படிப்பில் சிந்தனைக்கும், மௌனத்திற்கும் இதுபோன்ற வித்தியாசம் பலனில் உண்டு.

. அதிகாரத்திற்கும், அன்பிற்கும் இது உண்டு.

. செல்வத்திற்கும், பண்பிற்கும் உள்ள வித்தியாசமும் அதுவே.

. பண்பிற்கும், பக்குவத்திற்கும் அதே வித்தியாசம் உண்டு.

. கண்காணிப்பதற்கும், நாணயத்திற்கும் இம்மாறுதலைக் காணலாம்.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மறுப்பு ஆர்வமானால் திருவுருமாற்றம் ஏற்படும்.


 


 


 


 book | by Dr. Radut