Skip to Content

09.பரம்பரைப் பண்பின் பக்குவம்

பரம்பரைப் பண்பின் பக்குவம்

இந்தியாவில் இரயில் வந்த புதிது. சுமார் 150 ஆண்டுகட்குமுன், கம்பனி ஆட்சி நடக்கின்றது. தலைநகர் கல்கத்தாவில். தஞ்சாவூரில் சோழ ராஜ்ஜியம் சரபோஜி கையில் உள்ளது. கம்பனிக்குக் கப்பம் கட்டும் நிலை. சரபோஜி மகாராஜா கம்பீரமான தோற்றம். இவருக்குப் பின் வாரிசு நிர்ணயிப்பது கம்பனி கையில் கவர்னர் ஜெனரல் செய்யவேண்டும். ராஜா கேட்டுப்பெறும் நிலையிலுள்ளார். 3000 பேருடன் கப்பலில் கல்கத்தா வந்தார். கவர்னர் ஜெனரலைப் பார்க்கப் போனார். ராஜா உதவி கேட்க வருகிறார். அவர் தோற்றம் கம்பீரமானது. கவர்னர் ஜெனரல் எழுந்துநின்று வரவேற்றார். சபையே எழுந்தது. சரபோஜி கேட்டதை கவர்னர் ஜெனரல் கொடுத்தார். உதவி கேட்க வருபவரை எழுந்துநின்று வரவேற்று ஆலிங்கனம் செய்து கேட்டதைத் தந்தது பரம்பரைப் பண்பு.

ரூஸ்வெல்ட்டிற்கு இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு பக்கமும் (crutch)கட்டையுடன் நடப்பார். நிற்பது கஷ்டம், வலிக்கும். ஹீவர் ஜனாதிபதி.ரூஸ்வெல்ட் அவரைப் பார்க்கவந்தால், வேண்டுமென்றே அவரை நெடுநேரம் நிற்கவைப்பார். வலியுடன் அவர் நிற்கவேண்டும். ரூஸ்வெல்ட் அடுத்த ஜனாதிபதியானார். முந்தைய ஜனாதிபதி இவரிடம் மட்டமாக நடந்துகொண்டவர். அவருக்கு செக்யூரிட்டி தருவது ரூஸ்வெல்ட் கையில்.ஹீவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இருப்பினும் தம்மை அவமானப்படுத்திய ஹீவருக்கு செக்யூரிட்டி தர மறுத்துவிட்டார்.அமெரிக்கர் புதுப்பணம் படைத்தவர்.

ஸ்ரீ அரவிந்தரிடம் வத்தல் என்ற சமையல்காரனிருந்தான். அவன் மந்திரவாதி. பகவான் வீட்டில் கல் விழ மந்திரம் செய்தான். அவரிருந்த அறை தவிர மற்ற எல்லா அறைகளிலும் கல் மச்சிலிலிருந்து விழுகிறது. யார் மீதும் விழவில்லை. அன்னை அக்கல் போடும் தேவதைகளை அழைத்து கற்களை நிறுத்தினார். மந்திரவாதி மரணப்படுக்கையிலிருக்கிறான்என்ற செய்தி பகவானுக்கு வந்தது.மந்திரவாதிக்கு தன் மந்திரசக்தி தெரியும். பகவானைப் பற்றித் தெரியாது.அவர் சக்தியிடம் மோதினால் அவன் உயிர் போகும் என்பதை அவன் அறியான்.பகவான் "இந்த கற்களுக்காக அவன் உயிரிழக்கவேண்டுமா?'' என்றார்.அவன் பிழைத்துக்கொண்டான். அது ஆன்மீகப்பண்பு. சரபோஜி பெற்றது பரம்பரைப்பண்பு. புதுப்பணம் பண்பு பெற பல தலைமுறைகளாகும்.

****


 



book | by Dr. Radut