Skip to Content

10.சாவித்ரி

சாவித்ரி

P.67He puts on joy and sorrow like a robe.

சந்தோஷமும் கவலையும் அவன் அணியும் ஆடை.

. அனுபவம் அவனுக்கு ஆனந்தம் தரும் மதுபானம்.

. கனத்த பரப்பு அவன் கடந்த நிலைக்குக் கட்டுப்பட்டது.

. ஆழ்ந்த மனத்துள் அனைத்தும் அறிபவனாக உறைகிறான்.

. ஜோதிமயமான மனிதன், தனித்தவன் ஏற்ற தலைமை.

. பிரம்மம், பூரணன், ஏகன்.

. மௌனமெனும் மலையை நகர்த்தும் சக்தியை அறை கூவியழைக்கிறது.

. ரூபமற்ற அமைதி குணமிழந்த நிலையில் அவளை அணைத்துப் பிடிக்கிறது.

. காலனுக்குக் கரையான நிச்சலன நித்திரை.

. அவன் தனிமையின் வலிமை சொல்லைக் கடந்தது.

. பிரம்மம், பூரணன், ஏகன்.

. காலத்தின் பரப்புக்குள் மௌனமென காலடி எடுத்து வைத்தான்.

. ஏகன் அநேகன் ஆனதை சிருஷ்டித்தது அவனே.

. அகண்டத்தின் தனிமை அனைவருள்ளும் நுழைந்தது.

. காலமும் அவனே, அது பரந்து விரியும் பரப்பும் அவனே.

. பிரம்மம், பூரணன், அசைவற்ற வமை.

. நம் ஆத்மா என உறையும் அவன்.

. நம் குறை எனும் முகமூடியை அவன் ஏற்றான்.

. தசை எனும் இப்பாசறையை தனதென ஏற்றான்.

. அவனுடைய ரூபம் மனிதனளவில் வார்க்கப்பட்டது.

. நாமும் தெய்வத் திருக்கோலம் பூண்பது அவன் திருவுள்ளம்.

. இறைவன் ஏற்ற இசைவான ரூபம்.

. படைத்தவன் நம்மை மீண்டும் படைத்து நடத்த

. தெய்வமிட்ட திட்டம் அழியும் மனிதனுள் அமையும்.

. கண்டம் அகண்டத்தை நாடி உயரும்.

. காலம் கடந்ததைத் தொடும்.

. திருவுருமாற்றம் பூமி சொர்க்கத்திற்குப் பட்ட கடன்.

. இறைவனுக்கு மனிதன் கூட்டாளி.

. நம்மை ஏற்றவனை நாம் ஏற்க வேண்டும்.

. நாம் இறைவனின் புத்திரர்கள். நாமும் அவனாக வேண்டும்.

. நாம் இறைவனின் மனிதன். நாமும் தெய்வமாக வேண்டும்.

. வாழ்வின் புதிருக்குக் கடவுள் என்பது விடை.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

படைப்பான ஒவ்வொரு செயலும் நாம் ஆரம்பித்ததிலிருந்து நாமே மறைந்து செயலை வெளியிலிருந்து இரண்டாம் பேர் வழியாகப் பார்க்கலாம். அது பேரானந்தம் தரவல்லது.

இரண்டாம் நபரால் இதையும் சாதிக்கலாம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம் கரணங்கள் பதப்படுத்தப்பட்டவை. ஒரு பழக்கத்தாலோ,ஒரு திறனாலோ அவை செயல்படுகின்றன. பழக்கத்தை விட்டால்,திறனைக் கடந்து வந்தால், கரணத்தின் முழுமையால் செயல்பட முடியும். மனிதன் பரம்பொருளை வெளிப்படுத்த அதுபோன்ற விழிப்பு, தேவை.

மனிதனின் பிரம்ம விழிப்பு பரம்பொருளை வெளிப்படுத்தும்.


 


 



book | by Dr. Radut