Skip to Content

12.லைப் டிவைன் - கருத்து

"Life Divine" - கருத்து

தெய்வீக வாழ்வு எளிமையாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கலாம்.

.பரம்பரையாக உலகெங்கும் துறவி எளிமையான வாழ்வை மேற்கொண்டான்.

.ஆடம்பரமான வாழ்வு ஆசையை அனுபவிக்கும் வாழ்வு என்பதால் அதற்கு அனுமதியில்லை.

.ஆசை பெண்ணை அனுபவிக்கும்.

.பதவி மீது மோகம் எழும்.

.பணம் எவரையும் கவரும்.

.இவை மூன்றிற்கும் ஆன்மீகத்தில் அனுமதியில்லை.

.ஸ்ரீ அரவிந்தம் "அனுமதியில்லை" என்ற கொள்கையை அனுமதிக்கவில்லை.

.அனுமதியில்லை என்ற நிலை சுதந்திரத்தை சுருக்குகிறது.

.பிரம்மத்தின் சுதந்திரம் எல்லையற்றது.பகவான், அந்த சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரமும் பிரம்மத்திற்கு உண்டு என்கிறார்.ஒருவகையில் ஸ்ரீ அரவிந்தம் இக்கருத்தையே தன் மகுடமாகக் கொண்டது.

.ஆன்மீகம் என்பது ஆத்மாவின் வாழ்வு.

சத்தியம் ஆன்மாவின் புறம்.

ஆன்மா அகமாகவும், சத்தியம் புறமாகவும் சிருஷ்டி ஆரம்பித்தது.

ஆன்மா சத்தின் பகுதி.

சத் பிரம்மத்தின் பகுதி.

பிரம்மம் முழுமையுடையது.

முழுமை என்பதற்கு மறுபெயர் சுதந்திரம்.

எனவே எளிமை என்ற நிபந்தனைக்கு ஆன்மா உட்படாது.

ஆன்மாவே பிரியப்பட்டு எளிமையான வாழ்வை மேற்கொள்வது

ஆன்மா தான் சுதந்திரமாகச் செயல்படுவதாகும்.

சுதந்திரம் என்ற கொள்கையையும் நிபந்தனையாக ஏற்காதது ஆன்மா என்பது ஸ்ரீ அரவிந்தம்.

.எளிமை உயர்ந்தது என்பது ஒருவகையில் விவரமற்ற நம்பிக்கை.

ஞாபகசக்தி என்பதும் அறிவும் வேறுபட்டவை.

ஞாபகசக்தி அதிகமாக உள்ளவனை அறிவாளி என்பது பொருத்தமாகாது.

ஆங்கிலம் சரளமாகப் பேசுபவனை அக்காரணத்தால் அறிவாளி எனக் கருதுவது மூடநம்பிக்கை.

அதேபோல் ஆன்மீகத்துடன் எந்தத் தொடர்புமற்ற எளிமையை ஆன்மீகச் சின்னமாகக் கருதுவது அறிவுக்குப் பொருந்தாது. அது மூடநம்பிக்கை ஆகும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒருவர் பெரிதும் விரும்பிப் பெற முடியாததை நாம் கொடுப்பது,யோக வாழ்வில் ஜடத்தின் உதாரகுணமாகும். தம் கட்டுப்பாடு இடம் கொடுக்காததை, அளவு கடந்து ஒருவர் விரும்பினால் அதை மறுப்பது, வாழ்வில் ஜடத்தின் ஆன்மீக உதாரகுணமாகும்.
 

கொடுப்பதும் மறுப்பதும் உதாரகுணமாகும்.


 


 



book | by Dr. Radut