Skip to Content

13.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

வாழ்வு முழுவதும் யோகம் என்பதால் வாழ்வுக்குரிய எந்த முறையும் யோகத்திற்குரிய முறையாகும். நேர்மை, திறமை, கடமை, உழைப்பு,நட்புணர்வு போன்ற பல வாழ்வு முறைகளை நாம் அறிவோம். அவை நேரடியாக யோக முறைகளாகாவிட்டாலும், அவை பூரணம் பெறும் பொழுது யோக சக்தி அதன்மூலம் வாழ்வினுள் நுழையும். யோகத்திற்குரிய முறையாக பகவான் கூறுவது ஒரே முறை. அது சரணாகதி. அதை வாழ்வுக்குரியபடி மாற்றி அமைத்தால், பணியவேண்டியவற்றிற்குப் பணிவது என்றாகும். அதை வாழ்வில் சரணாகதி எனக் கொள்ளலாம். மேலும் பொதுவான மொழியில் கூறவேண்டுமானால் வாழ்வில் அடக்கம் என்பது,யோகத்தில் சரணாகதியாகும். அடக்கம் அர்த்தபுஷ்டியுடையதானால் யோகத்தில் சரணாகதி பெறுவதை, வாழ்வில் அடக்கம் பெறும். கீழே பல முறைகளை எழுதியுள்ளேன். அவை யோக முறை, வாழ்வு முறை, குறிப்பட்ட சுபாவமுள்ளவர்க்குப் பொருந்தும் முறை எனப் பிரிகின்றன. முறை எதுவானாலும், அது நமக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும். நம் சுபாவத்திற்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட முறையைத் தேர்ந்தெடுத்தால் அது பலன் தரும். முறை முழுவதும் பொருத்தமாக அமைந்தால் பலன் 3 நாளில் உண்டு. அன்பர்கள் அனுபவத்தில் பல ஆண்டுப் பிரச்சினை சில நாட்களில் தீர்ந்ததுண்டு.சில நிமிஷங்களிலும் முடிவு தெரியும். இதற்குரிய நிபந்தனைகள்:

.முறை பொருத்தமாக இருக்க வேண்டும்.

.பின்பற்றுவது பூரணமாக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறையை விவரமாகப் படித்து அறிந்து, அல்லது கேட்டறிந்து மனம் தெளிவுபட்டு, தயக்கமின்றி, குதூகலமாக ஏற்க வேண்டும். அவசரமாகப் பயில ஆரம்பிப்பதைவிட மனத்தைக் கொஞ்ச காலம் கலந்து தயார் செய்து, அது தயாராகும் வரைப் பொறுத்திருக்க வேண்டும்.

.பயில ஆரம்பித்தால் முன் வைத்த காலைப் பின் வைக்கக்கூடாது.

.சரிவு ஏற்பட்டால், முதலிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

.வெற்றி பெற்றுத் தருவது பொறுமை, நிதானம். அவை குறைவற நிறைவு பெறவேண்டும்.

.முறையைச் சரிவரப் பின்பற்றுவது நம் உண்மை sincerity.

.பிரச்சினை எதுவானாலும் தீரும்.

.பிரச்சினையற்றவர்க்கு வாய்ப்பு எழும்.

.எழும் வாய்ப்பு அவரவர் பர்சனாலிட்டியைப் பொருத்தது.

.பர்சனாலிட்டியின் அளவைப் பெரியதாக்கவும் முறையுண்டு. பிரச்சினை தீர்ந்தபின் முறையைத் தொடர்ந்தால் பர்சனாலிட்டி

.எந்தப் பிரச்சினைக்கும் வழியுண்டு.

கற்பனைக்கெட்டாததற்கும் வழியுண்டு.

உயர்ந்த அம்சம் ஒன்றாவது பூரணமாக இருத்தல் அவசியம்.

.மௌனம், சாந்தி, தூய்மை, சத்தியம், நல்லெண்ணம், திறமை போன்றவை உயர்ந்த அம்சங்கள். அவற்றுள் சிறப்பானது sincerity உண்மையாகும்.

தொடரும்.....

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம் மௌனத்தைத் தேடிப் போவது எல்லா யோகங்களுக்கும் உள்ள நிலை.

மௌனம் நம்மைத் தேடி வருவது பூரணயோக நிலை.


 

வளரும்.



book | by Dr. Radut