Skip to Content

14. The History of USA

 The History of USA

A study of American History- அமெரிக்க வரலாறு - ஆராய்ச்சி என்ற தலைப்பில் வந்துள்ள நூல் ஆங்கிலத்தில் உள்ளது.

- பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய யோக தத்துவங்கள் வாழ்க்கைக்கு உரியன.

- அவற்றை முழுவதும் விளங்கிக் கொள்ள வரலாறு, இலக்கியம்,நடைமுறை நிகழ்ச்சிகள், நம் வாழ்வில் கடந்தகால நிகழ்ச்சிகள் உதவும்.

- இத்தத்துவங்கள் சமூகத்தில் வெளிப்படுவதை 32ஆக சுருக்கியும், 357ஆக விவரித்தும், முக்கியமாக Life Response எனவும் பல வருடங்களாக நான் எழுதி வருகிறேன்.

- அகதிகளாக அமெரிக்காவைச் சேர்ந்தவர் 1  ½வருஷத்தில்

ஐரோப்பாவைப்போல் அமெரிக்காவில் கூலி 10  மடங்கு.

அமெரிக்காவில் மனிதன் முன்னேற ஜாதியோ, அந்தஸ்தோ தடை இல்லை.

விவசாயம் செய்பவருக்கு 640 ஏக்கர் நிலம் இனாமாக அளிக்கப்பட்டது.

நிலம் 1/3 பாகம் அதிக மகசூல் கொடுத்தது.

நிலக்கரி, இரும்பு, தங்கம், பெட்ரோல் கிடைத்தால், அது கிடைத்தவருக்கே சொந்தம்.

அமெரிக்கா natural resources இயற்கை வளம் நிறைந்த நாடு.

நாட்டில் சர்க்காருக்கு வரி கட்டத் தேவையில்லை.

இதைப் பெற மனிதன் செய்ததென்ன? நாம் அறியக்கூடியது இங்கு ஏதாவது உண்டா?

தன் நாட்டை விட்டுப் போகும் தைரியம் உள்ளவர்க்கே இந்த வாய்ப்புண்டு.

‘100 ஏக்கர் நிலத்தை 400 பேர் பண்படுத்த முயன்றால் வேலை முடியும் பொழுது பாம்பு, விலங்கு, விஷ ஜந்துக்கள், வியாதி,ஆபத்து, கொசு இவற்றிற்கு 300 பேர் பலியானார்கள். அதாவது 1 ஏக்கர் பயிரிட 3 பேர் உயிர் விட வேண்டும்.

சூரிய உதயம் முதல் இரவுவரை உழைப்பவர் தவிர மற்றவர் அங்கு தேறுவதில்லை.

ஆபத்து அதிகம். அவரவர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்க முடியாது.

அன்பர்கள் இந்நூலைப் படித்தால்,

- மனிதன் உழைப்பால் உலகத்தை ஆண்ட முறையை அறிவார்கள்.

- அமெரிக்கருடைய உழைப்பு, உடல் உழைப்பு. அவர் பெற்றது அபரிமிதம்.

- இந்தியர் ஆன்மீக உழைப்பை அயராது நல்க முன்வந்தால், சத்தியம் நிறைந்த ஜீவனுக்கு, திறமையான நிர்வாகம் அமைந்தால் அவர் பெறுவது, இந்தியா ஜகத்குருவாகும் என்பதால் உலகின் பாராட்டுக்கு உரிய உன்னத வெற்றி.

-அன்னை வாழ்வில் அன்பருக்கு அளிக்கும் வரத்தை பெற இந்நூல் உதவும்.

****


 

வசதியுள்ள மத்தியதர வாழ்வை மேற்கொண்டது 1700, 1800இல் நடந்தவை. அதையே 7 வாரத்திலும் பலர் சாதித்தனர்.அதற்குரிய காரணங்கள் பல:



book | by Dr. Radut