Skip to Content

03.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II
                                           (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

இந்த நேரம் இப்பெருமுதலாளி பார்ட்டிக்கு வந்திருப்பது ஆச்சரியம். இது போன்ற இடங்களில் அவருக்கு மறை முகமாக advice விஷயம் கிடைப்பதுண்டு:

. நேரம் கடுமையானாலும், நிதானம் தவறாமல் செயல்படுவதால் அவர் பெருமுதலாளியாக இருக்கிறார்.

. அவர் ஸ்தானத்தில் உள்ளவர் மற்றவரிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள்.

. நெருங்கியவர் ஆலோசனை கூறினால் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

. வெளியிடங்களில் பேச்சுவாக்கில் வரும் கருத்தை ஏற்பது (open mind)பரந்த மனப்பான்மை.

.பரந்த மனப்பான்மை  பர்சனாலிட்டி

.இதில் ஒரு தத்துவம் உண்டு.

.நாம் என்பது Self, குறுகியது; கண் மூடியது.

.உலகம் பெரியது Not Self ; பிரபஞ்சத்தினளவு பெரியது.

.நம்மில் அனைத்தும் இருக்கிறது என நினைப்பது சுயநலம், அறியாமை.

.நம்மை கடந்து வெளியில் ஞானமிருப்பதாக அறிவது அறிவு.

.அதை மனம் நாடுவது மனம் விசாலமாக இருப்பதாக அர்த்தம்.

.அந்த மனப்போக்குக்கு அவருக்குத் தேவையான விஷயம் அவரைத் தேடிவரும்.

.இந்தக் கதையில் அவருக்கு அப்படி பார்ட்னர்மூலம் அன்னை அறிமுகமாகிறார்.

.அகந்தை அதிகாரம் செய்யும்.

.அடக்கம் பணியும்.

.இப்பெருமுதலாளி விபரம் தெரிந்து கொள்ள பார்ட்னரைத் தேடி வருகிறார்.

.அங்கு பார்ட்னரில்லை என்றபொழுது, தாயார் வீட்டைத் தேடி வருகிறார்.

.தேடி வருவது அடக்கம்.

.கேட்டுக் கொள்ளும் மனப்பான்மை receptivity ஏற்புத்திறனெனப்படும்.

.அவருக்கு வேண்டியது கிடைக்கிறது.

.தொழிலாளிகள், அவர்களுக்குள் பிரிவினை ஏற்பட்டு ஸ்டிரைக்கை வாபஸ் செய்கின்றனர்.

.தாயார் தாம் வருவதற்கில்லை, வரும் அவசியமில்லை என்பதையும் எரிச்சலின்றி முதலாளி கேட்டுக்கொள்கிறார்.

.எதிர்பாராததுபோல் நிலைமை மாறிப் பலன் பெறுகிறார்.

.இடம் பெரியது. மனமும் பெரியது.

.அதனால் பலன் பெரியது.

.பார்ட்னர் முதலாளியைப் பார்க்கப் போகவில்லை என்றாலும், முதலாளி தன்னடக்கத்துடனிருப்பது காரியம் கூடிவரும் என்பதைக் காட்டுகிறது.

.பெரியவனுக்கு வந்த சிரமத்தை முதலாளி விலக்கியது "காணிக்கை"யாகக் கருதப்படும்.

"நிச்சயமாக சத்தியம் ஜெயிக்கும். அதில் சந்தேகமில்லை'' என்று தம் நண்பர்களிடம் பார்ட்னர் கூறினார். அந்த முதலாளிக்கு இந்தச் செய்தி போயிருக்கிறது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்:

.நிச்சயமாக சத்தியம் நிதர்சனமாகத் தோற்றுக் கொண்டுள்ள பொழுது "சத்தியம் ஜெயிக்கும்" என்பதை ஒருவர் ஏற்க அவருக்கு சத்தியத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

. சத்தியம் 90 பங்கிருந்து ஏதாவது சிறு தவறு நடந்தாலும் சத்தியம் தோற்கிறது. சத்தியம் 40 பங்கிருந்தாலும் சமயத்தில் ஜெயிக்கிறது. முழுப்பொய்யும் ஜெயிக்கிறது.

எப்படி நாம் இவற்றைப் புரிந்துகொள்ள முடியும்?

.நம்முள் உள்ள சத்தியம், சத்தியத்தை நம்பினால், வேறு குறைகள் காரியத்தைப் பாதிக்காது.

.சத்தியத்தை நம்முள் உள்ளது நம்புவது பொய்யானால் காரியம் கூடி வாராது.

.பொய்யே நம்பினாலும், நம் போக்கு - சமூகத்தின் போக்கு -முற்போக்கானால் நாம் ஜெயிப்போம். முற்போக்கு முதல்வனின் - சத்தியத்தின் - போக்கு.

.எதை நம்புவது?

.நம்முள் உள்ள வாழ்வு மையம் personality - சத்தியத்தைப் பொய்யைவிட அதிகமாக நம்பினால் காரியம் கெடாது.

.அதை எப்படி நாமறிவது?

.உள்ளே ஜில்லென்றிருந்தால் சரி.

.நாம் பெரியவர் என்றிருந்தால் சரியில்லை.

.இந்த முதலாளி சத்தியம் ஜெயிக்கும் என்பதை ஏற்றதே, அவர் சரி எனக் காட்டுகிறது.

.இது போன்ற முதலாளிகள் அரசியல் செல்வாக்கு, பணம், அடியாள்,மிரட்டல் போன்றவற்றைத் தவிர மற்றதைக் காதில் போட்டுக்கொள்ள மாட்டார்கள்.

.போட்டுக்கொள்வது பொருத்தம்.

.பார்ட்னர் முதலாளிக்கும் தாயாருக்கும் இடையேயிருந்து பொருத்தமாகச் செயல்படுவது சூழலின் அம்சம்.

.கணவர் இதில் எதிலும் கலந்துகொள்ள முடியாத நிலை. முதலாளியின் நம்பிக்கை, அடக்கம், அதனால் ஏற்பட்ட பலன் அவர் கண்களைத் திறந்திருக்கலாம்.

.திறந்ததாகத் தெரியவில்லை. இக்குடும்பத்திற்கு இது பெரிய வாய்ப்பு.அன்னையை அபரிமிதமாக அறியும் வாய்ப்பு.

தொழிலாளர்கள் குறித்த தேதியை வரையறையின்றி ஒத்திப் போட்டனர்:

. முடிவு, சூழலை நிர்ணயிக்கும்.

.செயல், பிரச்சினையைத் தீர்க்கும்.

.முடிவின் அளவில் - மனத்தின் அளவில் - செயல் உண்டு.

.அதுவும் சூழல் பலமானால் பிரச்சினையைத் தீர்க்கும்.

.முடிவின் பகுதிகள் எண்ணம், விவரம் புரிவது, முடிவு செய்வது, தீர்மானமாவது.

.இந்த ஒரேயொரு கட்டத்திற்கும் சூழலில் பலன் தெரியும்.

.முடிவு எடுக்கும் முதலாளி நல்லெண்ணத்திலும் முடிவு செய்யலாம், வேறு வழியில்லை எனவும் முடிவு செய்யலாம்.

.இரண்டு முடிவுக்கும் பிரச்சினை தீரும்.

.இரண்டும் தீரும் வகை வேறு.

.நல்லெண்ணத்தால் முடிவு செய்தால் முழு நல்லபலன் வரும்.

.பயந்து முடிவு செய்தால், ஸ்டிரைக் வாபஸ் ஆகும்.மற்ற பிரச்சினைகள் தொடரும்.

.அருள் செயல்பட்டால் 100% தீரும்.

.நம்பிக்கை செயல்பட்டால் 99% தீரும்.

.எது தீரமுடியாது, தீரவே வழியில்லை என்றிருந்ததோ, அது நாமெல்லாம் அறியாத வகையில் தீரும்படிச் சூழல் மாறுவது அருள்.

.தொழிலாளர் இரு கட்சியாகப் பிரிவது, எதிர்ப்புக்கு ஜீவனில்லை என அறிவிக்கிறது.

.அரசின் ஆதரவு எல்லாத் தொழிலாளிகட்குமில்லை என்பது அராஜகம் உரிமை கொண்டாடவில்லை. சமயம் பார்த்து சதி செய்கிறதாகப் பொருள்.

.முதலாளி முயற்சியின்றி தீர்வு எழுவது அருள் செயல்படுவதை,முழுவதும் செயல்படுவதைக் காட்டுகிறது.

.செய்தி பேப்பர்மூலம் வந்தால், முதலாளி பார்ட்னரை மறந்து விட்டார் எனப் பொருள்.

.உதவி பெறுபவர் உதவி செய்பவரை மட்டும் மறப்பது உலக இயல்பு.

.உலக இயல்பு செயல்படுகிறது எனில் அருள் மேலெழுந்தவாரியாகச் செயல்பட்டதாகும்.

இவர்கள் மூலமாகத்தான் அன்னையை அறிந்தேன் என்றவுடன் முதலாளி கணவர் பக்கம் திரும்பிவிட்டார்:

.உடனே பார்ட்னரைவிட்டு மனம் தாயாரை நாடுவது, தாயாரை விட்டுத் தம்மை நாடும் மனம் என அறிவிக்கிறது.

.நெருக்கடி பெரியதானால், எவரும் எவரையும் நாடி வருவார் என முதலாளியின் செயல் சொல்கிறது.

.இது உலகில் உள்ளது.

.இதன் மறுபுறம் நெருக்கடி பெரியதானால், அன்னை எவர் அழைப்பையும் ஏற்று வருவார் என்பது.

.நெருக்கடியேயின்றி அழைப்பை - எவர் அழைப்பையும் - அன்னை ஏற்கிறார் என்பது அருளுக்கு அனைவரும் அன்பர் என்பதாகும்.

.முதலாளி கணவர் பக்கம் திரும்புவதும், கணவர் முதலாளி பக்கம் திரும்புவதும் இயல்பு.

.பக்தி தாயாருக்குமட்டும் என்றாலும், முதலாளி எதிரில் -அடுத்தவர் எதிரில் - அவர் அன்பரன்று, மனைவிதான்.

.அன்னை "மனைவி" என்ற எல்லைக்குள் இதுவரை செயல் படுகிறார்.

.இந்த இடத்தை எந்தக் கணவனும் விட்டுக் கொடுக்கமாட்டான். எவரும் விட்டுக்கொடுக்கமாட்டார். மனைவி, அந்த இடம் தரப்பட்டாலும் எடுத்துக் கொள்ள மாட்டார்.அன்னையுடன் தாயார் பெற்றது சமூக உறவு, ஆன்மீக உறவன்று.

.அன்னைக்கேற்ப அனைவரும் நடக்க வேண்டுமானால்,

1.முதலாளி பார்ட்னர்மூலம் செயல்பட வேண்டும்.இந்திரா காந்தியை நந்தினி அன்னையிடம் அழைத்து வந்த பொழுது அன்னை இந்திராவிடம் பேசவில்லை. இந்திராவின் கேள்விகள் நந்தினியிடம் கேட்கப்பட்டன. அன்னை நந்தினிக்குப் பதில் சொன்னார்.

2.கணவர் ஒதுங்கி தாயாரை நேரடியாகப் பார்ட்னரிடம் பேச அனுமதித்திருக்க வேண்டும்.

3.தாயார் அதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

4.கதையில் குடும்பம் கணவருக்குக் கட்டுப்பட்டது என்பதால், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கணவரே முன்நிற்கிறார்.

முதலாளி - இந்தத் தகராறு தீருமா?

தாயார் - அன்னையை நம்பினால் தீரும். நம் பக்கம் நியாயம் இருந்தால் தீரும்:

.நம் பக்கம் நியாயமில்லாவிட்டால், அன்னையை நம்ப முடியாது.அன்னையை நம்பினால், நம் பக்கம் நியாயம் வந்துவிடும்.

.பாண்டவர் வனவாசம் போனபொழுது, 13ஆம் நாள் கிருஷ்ண பரமாத்மா "நாம் அனைவரும் போய் இராஜ்யத்தைக் கேட்போம். வேறொரு பஞ்சாங்கத்தின்படி 1 நாள் ஒரு வருஷம். அதனால் 13வருஷம் முடிந்துவிட்டது" என்றார்.

.புதியதாக பாக்டரி கட்டும் இடத்தில் உள்ளூர் ரௌடி ஓர் ஆளை அனுப்பி பெயிண்ட் திருடச் சொன்னான். அப்பையனைப் பிடித்து விட்டனர். ரௌடி அவனுக்குச் சாதகமாக வந்து, முதலாளியைப் பார்க்கப் பிரியப்பட்டான். முதலாளி ராணுவ ஆபீசராக இருந்தவர்.விசிலை எடுத்து ஊதினார். இரண்டு ஜவான்கள் வந்து ரௌடியை அறையில் தள்ளி நையப் புடைத்தனர். வெளியே வந்ததும் ரௌடி முதலாளிக்கு சலாம் போட்டு, "இன்று முதல் நீங்களே என் தலைவர்.நாளைக்கு என் வீட்டிற்கு விருந்திற்கு வரவேண்டும்" என்றான்.

.அடிப்பட்ட ரௌடி அடித்தவரைத் தலைவராக ஏற்பது சட்டத்திற்கு அடங்காத ரௌடி அடி உதைக்கு அடங்கும் நியாயமாகும்.

.தொந்தரவே வாய்ப்பு என்பது வாழ்வின் வழக்கு.

.நியாயம் என்பது பல நிலைகளில் உண்டு. அன்னை பக்தனுக்கு அத்தனையும் நியாயமே. அடுத்தவரின் அநியாயம் ஆண்டவனின் நியாயம் என்பது அன்பர் இலட்சியம்.

.தொடர்ந்து இடர்கள் வந்தால் அது ஆண்டவன் சோதனை.

.பிள்ளையைக் கறி சமைத்துக் கேட்டால் "என்னிடம் உள்ளதைக் கேட்டாரே" என்ற பூரிப்பு".

.குப்புற விழுந்தாலும் அதுவும் அருள் என்பது அன்பர் சட்டம்.

.தகராறு தீர்ந்தால் அருள்.

.தகராறு தீராவிட்டாலும், முற்றினாலும் பேரருள்.

.ஆனந்தமாக சிருஷ்டிக்கப்பட்ட உலகம், ஆனந்தத்தால் சிருஷ்-டிக்கப்பட்டது, ஆனந்தத்தில் சிருஷ்டிக்கப்பட்டது, ஆனந்தத்தில் முடிவது என்று உபநிஷதம் கூறும்பொழுது அந்தப் பார்வைக்கு ஆனந்தம் தவிர வேறு எதுவும் தெரியாது. ஏனெனில் ஆனந்தம் தவிர வேறெதுவுமில்லை, எங்குமில்லை, எக்காலத்திலுமில்லை.

.பக்குவம் மாறினால் பார்வை மாறும்.

.பார்வை மாறினால் பவித்திரம் மாறும்.

.குடும்பம் முடிவன்று, உலகம் முடிவன்று, பிரபஞ்சம் முடிவன்று,பரமாத்மா முடிவன்று, பிரம்மமும் முடிவில்லை; பிரம்ம ஜனனம் முடிவு. ஏனெனில் அதுவே முழுமுதற் கடவுள், மூலவன்.மூலமும் முடிவும் முதல்வனே.

முற்றும்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு நிலையில் அமைப்புச் செறிவடைந்தால், அடுத்த நிலைக்குப் போகும்.

நிலை செறிந்து மாறும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

வெற்றியின் இரகஸ்யத்தை விரும்பி அளித்தால், "இரகஸ்யம் வேண்டாம், வெற்றியைக் கொடு'' என்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தரத் தோல்வி நிச்சயம்.

தேடும் இரகஸ்யம் நாடி வந்தாலும் விலக்கி, வெற்றியைக் கேட்பான்.


 

 



book | by Dr. Radut