Skip to Content

06.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

கர்மயோகி

14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

பிரம்மா உலகை சிருஷ்டித்தார். பிரம்மா தெய்வீக மனத்திற்குரிய கடவுள். விஷ்ணுவும், சிவனும் அவர் உடன் உறைபவர்கள். சத்தியஜீவியம் (Supermind) மனத்தைக் கடந்தது. தெய்வீக மனம், மனத்துடையது. பிரம்மா சிருஷ்டித்தார் எனில் மனம் சிருஷ்டித்தது எனப் பொருள். ஸ்ரீ அரவிந்தர் உலகை சத்தியஜீவியம் சிருஷ்டித்தது என்கிறார். இந்த அத்தியாயம் அதைக் கூறுகிறது.

பகவான் சத்தியஜீவியத்தைப் பற்றி எழுதினார், அது எவருக்கும் புரியவில்லை என அன்னை கூறுகிறார். "புரியவில்லை'' என்பதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? பகவான் கூறுவதை நாம் ஏற்கிறோம். ஆனால் ஏன் கூறுகிறார் என அறிவதில்லை. சூரியன் பூமியைச் சுற்றி வருவதைக் காண்கிறோம். விஞ்ஞானி பூமி சூரியனைச் சுற்றி வருவதாகக் கூறுகிறார். நாம் அதை விஞ்ஞானி கூறுவதால் ஏற்கிறோம். எப்படி என நமக்குப் புரிவதில்லை. கோபர்னிகஸ் அதை முதலில் புரிந்து கொண்டதை உலகுக்குக் கூறினார். மனத்தின் அறிவால் செயல்படுபவர்கள் அதைப் புரிந்து கொண்டார்கள். நாம் கண்ணால் சூரியனைப் பார்க்கிறோம். கண், புலன். அறிவு மனத்திற்குப் புலப்படும்.புலனான கண்ணுக்குப் புலப்படாது. அதனால் நமக்குப் புரிவதில்லை. நமக்கு மனம் உண்டு; அறிவு உண்டு. அவற்றால் பூமி, சூரியனைப் பற்றிச் சிந்தித்துப் புரிய முயல்வதில்லை. அதனால் புரிவதில்லை. மனம் மூளை மூலம் செயல்படுகிறது. நமக்கு மூளையுண்டு. அதனால் மனம் என்ற கருவியும்,அறிவும் உண்டு. சத்தியஜீவியம் 30,000 ஆண்டுகட்குப் பின் வரப் போவது. அதையறியும் கருவி இப்பொழுது மனிதனிடமில்லை. கருவியில்லாத பொழுது பகவான் விளக்கம் புரியாதது ஆச்சரியமில்லை. அதற்குரிய மையம் நெஞ்சுக்குப் பின்னாலிருப்பதாகப் பகவான் கூறுகிறார். நாம் தியானம் செய்யும் பொழுது நம் மையம் நெஞ்சிலிருப்பதைக்

நாம் புலியைக் பிடிக்காது, இனிமை பிடிக்கும், இவை மனத்தின் பார்வை. நல்லது, கெட்டது என்ற பாகுபாடு மனத்திற்குண்டு. நெஞ்சுக்குப் பின்னால் போனால் அது சத்தியஜீவிய மையம். அங்கிருந்து பார்த்தால் புலியைக் கண்டு பயம் எழாது, நெருப்பு சுடாது, கொடுமை பிடிக்கவில்லை எனத் தோன்றாது. அப்பார்வைக்கு கொடுமையும், இனிமையும் ஒன்றே. குழந்தை பேசும் மழலை நம்மைப் பாதிப்பதில்லை. ரோட்டில் போகும் மனிதன் பேசும் அசிங்கமான சொல் மனத்தில் வெறுப்பை உண்டாக்கும். மழலையை நாம் ஏற்பதைப் போல் சத்தியஜீவியம் அசிங்கமான சொல்லையும் வெறுப்பில்லாமல் ஏற்கும். சித்தி அடுத்த கட்டம் போனால், சத்தியஜீவிய பார்வையுள்ளவர்முன் குழந்தை தெளிவாகப் பேசும்; அசிங்கமான சொல் பேசுபவர் மாறி அழகான சொல் பேசுவார்; புலி பசு போலிருக்கும். மனம் அறியாமையின் கருவி. புலியின் கொடுமை அறியாமை காண்பது. சத்தியஜீவிய ஞானத்திற்குப் புலி ஒரு பிராணி. கொடுமை அதன் பார்வைக்குத் தெரியாது. சத்திய ஜீவிய சித்தியிலும் பல கட்டங்கள் உள்ளன. பொருள்கள், பிராணிகட்குள்ள உருவம் நம் பார்வையைப் பொருத்தது. சத்தியஜீவியம் முடிவாகப் பலித்தால் பொருள்கட்கு சத்தியஜீவிய ரூபம் ஏற்படும். அது ஸ்ரீ அரவிந்தராகத் தெரியும். குற்றவாளிகள், மரம், கம்பி பகவானுக்கு வாசுதேவனாகத் தெரிந்தது. அது சத்தியஜீவியக் காட்சி. வாசுதேவன் என அவர் கூற வேண்டியிருந்தது. வாசுதேவனும் தெய்வீக மனத்துடையவர் ஆதலால் அது பொருந்தாது. ஸ்ரீ அரவிந்தர் சத்தியஜீவிய அவதாரம் என்பதால் அது பொருந்தும். நம் காட்சியில் பகவான் தெரிவார். (வாசுதேவன் பிறப்பின் ஆதி சத்தியஜீவியம் என்பதால் அதுவும் தவறாகாது). அக்காட்சி நமக்குத் தெரியும் வரை நாம் மனத்தின் அறிவால் செயல்பட வேண்டும். இந்த அத்தியாயத்தை அறிவால் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இரு பகுதிகள் - மேல்பக்கம், கீழ்ப்பக்கம் - உள. அறிவே முடிவு என்பது கீழ்ப்பகுதி. அப்படிக் கருதினால் அத்தியாயம் புரியாது. அறிவுக்கும் ஓரளவு ஆத்ம தொடர்புண்டு என்று கொண்டு அறிவால் செயல்பட்டால், ஆத்ம ஞானம் தெரியும் நேரம் உண்டு. இது மேற்பக்கச் செயல். எந்தச் செயலும், எந்த நேரமும் இந்த நோக்கம் இருந்தால், நெஞ்சுக்குப் பின்னாலுள்ள மையம் திறக்க ஆரம்பிக்கும்The Life Divine  புரியும்.

குடும்பம், கம்பனி, மெஷின் ஆகிய உதாரணங்கள்மூலம் சத்திய ஜீவியத்திற்கும், மனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஓரளவு விளக்கலாம்.

.சத்தியஜீவியம் முழுமை.

.மனம் பகுதி.

.பகுதியான மனத்தால் முழுமையை அறிய முடியாது.

.பகுதியில் செயல்பட்டாலும், பகுதியே முடிவில்லை என்று நோக்கம் இருந்தால் முழுமை தெரியும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் வருமானம் முழுமை, நிர்வாகம் பகுதி. பலர் உள்ள குடும்பத்தில் ஒருவர் சம்பாதிக்கிறார்; மற்றவர் செலவு செய்கிறார்.செலவை நிர்வாகம் செய்கிறார்கள். செலவு செய்பவர்களாலும், செலவை நிர்வாகம் செய்பவர்களாலும் சம்பாதிக்க முடிவதில்லை. நான் வீட்டைப் பராமரிக்கிறேன், அதனால் நான் முக்கியம். நான் சமைக்கிறேன்;அதனால் நான் முக்கியம் என்பவர் மனத்திற்கு ஒப்பாவார். சம்பாதிப்பவர் சத்தியஜீவியத்திற்கு ஒப்பாவார். சம்பாதிப்பவர் வருமானத்தைக் கொண்டு வந்தால் நிர்வாகம் செய்பவர் செய்ய முடியும். சம்பாத்தியம் முழுமை. நிர்வாகம் செய்பவரைச் சம்பாதிப்பவர்என நினைப்பது தவறு.சத்தியஜீவியம் உலகை சிருஷ்டித்தது. பிரம்மா நிர்வாகம் செய்கிறார்.பிரம்மா சிருஷ்டிக்கவில்லை என ஸ்ரீ அரவிந்தம் கூறுகிறது.

முழுமை, பகுதி என்ற அம்சம் எல்லாச் செயல்களிலும் உண்டு. நாம்

எந்தப் பகுதியிலிருக்கும் உரிமையும் நமக்குண்டு.பகுதியிலிருந்து நாம் முழுமைக்கு ஒரு செயலில் மாறினால், அச்செயலில் பலன் 10 மடங்கு,100 மடங்கு, 1000 மடங்குஎனப் பெருகும். அப்படி அபரிமிதமாகப் பலன் பெருகினால் நாம் மாறினோம் எனப் பெயர். பகுதியினின்று, முழுமைக்கு மாறுவது எனில் மனத்தினின்று சத்தியஜீவியத்திற்கு மாறுவதாகும். எப்படி மாறுவது என்பது கேள்வி. மாற்றம் பல கட்டங்களில் உண்டு. கட்டத்திற்குத் தகுந்தவாறு பலன் உண்டு.

முதற்கட்டம்-

செயலில் திறமை 100% இருப்பது 10 மடங்கு பலன் தரும்.

இரண்டாம் கட்டம் -

செயலில் நல்லெண்ணம் 100% இருப்பது 100 மடங்கு பலன் தரும்.

மூன்றாம் கட்டம் -

செயலில் சமர்ப்பணம் வந்து, நிலைத்து, நிறைவு பெறுவது முடிவானது.

இம்மாற்றத்திற்கு அடிப்படையாக உதவுவது பகுதியை நம்பாமல் முழுமையை நம்புவது. அதாவது நம்மையோ, நம் திறமையையோ, நம் வேலையையோ நம்பாமல் அன்னையையும், நம்பிக்கையையும் (faith), சமர்ப்பணத்தையும் நம்புவது மாற உதவும்.

இந்த அத்தியாயத்தின் கருத்துகள் (பாரா நம்பருடன் எழுதுகிறேன்):

1) சத்தியஜீவியத்தை நாம் விளக்க முடியும், அடைய முடியும்.

2) நமக்கும் சத்தியஜீவியத்திற்கும் உள்ள முரண்பாடு, விளக்க முடியுமா என்ற ஐயத்தை எழுப்புகிறது.

3) சத்தியஜீவியம் உலகையும், மனத்தையும் சிருஷ்டித்தது என்பதால் விளக்க முடியும்.

4) வேதம் என்ன கூறுகிறது?

5) ஆகாயத்தை விடப் பரந்தது, ஜோதிமயமானது, சத்தியம், ஜீவியம் பெறுகிறது, இறைவனின் திருவுள்ளம் என்றகருத்துகள் சத்திய ஜீவியத்தைப் பற்றி வேதத்தில் காணப்படுகிறது.

6) இதன் பகுதிகளும் உண்டு.

7) இவ்விளக்கம் சத்தியஜீவியம் சச்சிதானந்தத்திற்கும் உலகுக்கும் இடைப்பட்டதாகக் காட்டுகிறது.

8) சிருஷ்டியின் சூத்திரம்.

9) ஏன் சச்சிதானந்தம் உலகை சிருஷ்டித்திருக்க முடியாது?

10) மனம் உலகை சிருஷ்டிக்கவில்லை என்ற விளக்கம்.

11) மனம் தன்னையறியும், உலகையறியாது.

12) பிரபஞ்சத்தின் மூன்று நிலைகள்.

13) Real-Idea சத் தன் முழு எண்ணத்தால் சிருஷ்டிக்கும் முறை.

14) புருஷன் பிரகிருதியை சக்தியாலும் ரூபத்தாலும் எண்ணத்தால் சிருஷ்டிக்கிறான்.

15) மனமும், எண்ணமும் உலகை விட்டு நம்மைப் பிரிக்கின்றன.

16) சத்தியஜீவியத்தில் எண்ணம் அதுபோல் உலகை விட்டுப் பிரிவது இல்லை.

17) ஞானமும், செயலும் சத்தியஜீவியத்தில் நெருப்பும் ஒளியும்போல் ஒன்றாக இருக்கின்றன.

18) ஒன்றின்பின் உலகம் உள்ளது. அதை சத்தியஜீவியம் எப்படிச் செய்கிறது?

19) ரிஷிகள் சத்தியஜீவியத்தை உணர்ந்த வகை.


 

1)முதற்பாராவில் உள்ள கருத்துகள்:

.மனத்தைவிட உயர்ந்த ஞானமும், செயல்திறனுமுள்ள சிருஷ்டிகர்த்தா உலகுக்கும் சச்சிதானந்தத்திற்கும் இடையேயுள்ளது. இதை சத்திய ஜீவியம் என்கிறோம்.

.இது நாம் அறியாததில்லை.

.நம்மிலிருந்து வெகுவாக மாறுபட்ட ஜீவன் பெற்ற ஞானமில்லை இது.நாம் அதனுடன் பேச முடியாது என்பதில்லை.

.அது சிகரத்திலுள்ளது. என்றாலும் அது நம்முடைய சிகரமே.

.நாம் அதைப் புரிந்துகொள்ளலாம் என்பதுடன், அது நமக்குச் சித்திக்கும்.

.நம்மை இழக்கும் நேரத்தில் நாம் மெதுவாக இந்த உயரத்தை எட்டிப் பிடிக்கலாம். மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட முயற்சியால் நாம் அங்கு நிரந்தரமாக உறைய முடியும்.

.நாம் இறங்கி உலகத்திற்கு வந்தால் திறந்த கதவு மூடிக் கொள்ளும்.மீண்டும் திறந்தாலும் மறுபடியும் மூடிக்கொள்ளும்.

.நாம் நம் ஆத்மாவைக் கரைத்து அழிக்க முயலாமல், திருவுள்ளப்படி அதைப் பூர்த்தி செய்ய முயன்றால் அங்கேயே நிரந்தரமாகக் குடியிருக்கலாம் (மோட்சம் ஜீவனை அழிக்கும்).

.இதுவே ஆதிலட்சியம். முடிவான சுமுகம். இதுவே நாம் உலகில் சாதிக்க முயல்வது.

(நம் ஜீவன் உடல், உயிர், மனம், ஆத்மா என்ற பகுதிகளாலானது.தபஸ்வி ஆத்ம விடுதலையை நாடுகிறான். அதற்கு உடல், உயிர், மனம் தடை. அதனால் தவத்தால் ஆத்மாவை அவற்றிலிருந்து பிரித்தவன் பெறுவது விடுதலை. அவனை ஜீவன் முக்தன் என்பர். அது பெரிய சித்தி. அடுத்த கட்டமும் உண்டு. பரமாத்மாவை நோக்கி விடுதலை பெற்ற ஆத்மா சென்றால் பரமாத்மாவில் ஜீவாத்மா கரையும்.இது மோட்சம். திருவுள்ளம் இதன்று. உடல் ஆன்மா உண்டு. உயிரிலும் ஆன்மா உண்டு. மனத்திலும் ஆன்மா உண்டு. அவை வெளிப்பட்டால் ஆத்மா வளரும். வளரும் ஆத்மா பிரம்மத்தை நோக்கி வளரும். ஆத்மா வளர ஆரம்பித்தால் தீயவை இருக்கா. தவத்தால் ஆத்மாவைக் கரைப்பதற்குப் பதிலாக, ஜீவனின் எல்லாப் பகுதிகளிலும் ஆத்மா வெளிப்பட்டு வளர்வது, பிரம்ம ஜனனத்தில் முடியும். அது ஸ்ரீ அரவிந்தம் அளிக்கும் அற்புதம்).

2) சத்தியஜீவியத்தை நாம் விளக்க முடியும், அடைய முடியும்.

.மனித அறிவுக்குப் புலப்படுவதுபோல் சத்தியஜீவியத்தை விளக்க முடியுமா எனச் சந்தேகம் எழலாம்.

.சத்தியஜீவியம் அரிதானது என்பதால் இவ்வையம் எழவில்லை. அது நாம் நிரூபிக்கக் கூடியதில்லை என்பதாலும் எழவில்லை.

.மனம் செயல்படுவதும், சத்தியஜீவியம் செயல்படுவதும் முரணாக உள்ளன. அந்த நடைமுறை முரணானது. தத்துவமும் முரணானது.அதனால் இந்தச் சந்தேகம் எழுகிறது.

3)உலகை சிருஷ்டித்தது சத்தியஜீவியம். நம் மனத்தை சிருஷ்டித்ததும் அதுவே. மனம் நமக்குச் சொந்தம். உலகில் நாம் வாழ்கிறோம். எனவே நாம் அதை விளக்க முடியும்.

.நமக்கும் அதற்கும் தொடர்பில்லைஎனில் அதை விளக்க முடியாது.

.சத்தியஜீவியம் ஞானம் மட்டும் என்றால் நாம் அதை நிஷ்டையில் அடையலாம், விளக்குவது இயலாது. அது சிருஷ்டிகர்த்தா. செயல்படும் சக்தி என்பதால் கட்புலன் அறியக்கூடியது. எனவே விளக்க முடியும்.

.உலகை இது சிருஷ்டித்தது என்பதால் இது ஞானமாக மட்டுமிருக்க முடியாது. சக்தியாகவுமிருக்கும். மேலும் இது ஞானம் மட்டும் பெறும் சக்தியில்லை. செயலை நடத்தும் சக்தி. ஞானத்தைமட்டும் பெறலாம் எனில் பெறுபவர் எடுத்துச் சொல்ல முடியாது. செயலை நடத்துவதால்,செயல் கண்ணுக்குத் தெரியும். தெரிவதை விளக்க முடியும்.

.மனம் சத்தியஜீவியத்தினின்று எழுந்தது. அதனால் மனம் திரும்ப சத்தியஜீவியத்தை அடைய முடியும். மனம் அதை அடையலாம் எனில் மனத்தின் அறிவு அதை விளக்க முடியும்.

.சத்தியஜீவியத்தின் சாரம் மனத்துள் புதைந்துள்ளது. நடைமுறை-யிலும், செயல்படும் வகையிலும் மனம் நேரெதிராக இருந்தாலும்,சத்தியஜீவியச் சாரம் மனத்திற்குண்டு.

.அதனால் அவற்றை ஒப்பிட்டால் பலன் பெறலாம்.

.அது போதுமானதாக இருக்காது. என்றாலும் சுட்டிக்காட்டப் பயன்படும்.

.மேலும் மனம் சில உயர்ந்த கட்டங்களை அடைய முடியும். இவை  சத்தியஜீவியத் தொடர்புள்ளவை என்பதால் புரிய வாய்ப்புண்டு. நிலையாக சத்தியஜீவியத்தில் தங்க இதுவரை மனிதனால் இயலவில்லை.

4) வேதம் கூறுவது என்ன?

.உலகம் சரிவர அறியாத சத்தியஜீவியத்தைப் பற்றி வேதம் ஏதாவது கூறுகிறதா?

.நாம் ஆரம்பிக்க ஓரிடம் தேவை. அதற்கு ஒரு பெயரிட வேண்டும் அன்றோ!

.சத்தியஜீவியம் என்ற சொல் தெளிவற்றது. மனத்தைப் போல் உயர்ந்த நிலை எனக் கொண்டால் தத்துவம் தடம்மாறிப் போகும். மகாத்மா காந்தியைப் பெரிய மனிதர் என்றால், உயரமாக அதிக எடையுள்ளவர் எனக் கொள்ளும் வாய்ப்புண்டு. காந்திஜீ ஆத்மாவில் பெரியவர் எனக் காட்ட அவரை மகாத்மா என்கிறோம். சத்தியஜீவியத்தின் உண்மையை எடுத்துரைக்கும் சொல்லில்லை

5)வேதம் சொல்லிய  சொற்கள்:

.வேதவாக்கு சுட்டிக்காட்டும். திரை மறைவிலுள்ள பொருளெனத் தெரியும்.

.அதன்மூலம் மனத்திற்கு எட்டாத பரவெளியென நாம் சத்திய ஜீவியத்தை அறிகிறோம். அங்கு சத்தியம் அதன் அரங்குடன் ஒன்றியுள்ளது. குடிகாரத் தகப்பனார் மகனைக் குடிக்கக்கூடாது என்றால் அச்சொல்லில் உரிமை இல்லை.குடிப்பழக்கமில்லாதவர் அதைக் கூறினால் சொல்லுக்குச் செயலின் உண்மையுண்டு.

.உண்மைக்கு உருவம் உண்டு, உருவகம் உண்டு, அதற்குரிய ஏற்பாடு உண்டு, அதை வெளிப்படுத்தும் சொல்லுண்டு, செயலுண்டு. அவை சட்டமாக மாறும்.

பரந்த அனைத்தையும் தன்னுட் கொண்ட ஞானம்.

ஜோதிமயமான சத்தியம்.

ஜீவனின் சுமுகம். அப்பரவெளியில் பரவுகிறது.

தெளிவற்ற குழப்பமன்று.

தன்னை இழந்த இருளன்று.

சட்டத்தின் சத்தியம் ஜீவனின் சுமுகத்தை வெளிப்படுத்தும்.

செயலும் ஞானமும் ஜீவனின் சத்தியச் சுமுகத்தையுடையவை.

- இவை வேதத்தில் காணப்படும் குறிப்புகள்.

.தெய்வங்களின் இரகஸ்யம் பிறந்த இடம் சத்தியஜீவியம்

.அவை அங்கு உறைகின்றன. அதுவே அவர்க்குரிய இடம்.

தெய்வங்கள் தங்கள் ஞானத்தை உணர முயன்றால் "சத்தியம், ஜீவியம்"பெறும்.

அது ரிஷியின் திருஷ்டி.

தெய்வங்களின் சித்-சக்தி வேலை செய்ய ஆரம்பித்தால் அவை தவறுவதில்லை, தடம் பிறழ்வதில்லை.

இங்கு ஞானமும் திறமையும் இணைந்துள்ளன.

யோசிக்காமல் செயல்பட முடியும்.

அச்செயல் பலன் தரும்.

தெய்வீகச் சுபாவத்திற்கு இரண்டு திறனுண்டு.

இயல்பாக தானே செயல்படுவது ஒன்று. இதன்மூலம் சாரம் வெளிப்படும். ஆதியான சத்தியம் செயல்படும். ஜோதியின் சக்திக்கு அதே திறனுண்டு. அது இரண்டாவது.

(நமக்கு அறிவுண்டு. இருந்தாலும் எல்லாச் சமயங்களிலும் நாம் அதைப் பயன்படுத்துவதில்லை. சில சமயங்களில் பயன்படுத்த முடியாமற் போகிறது. அதே போல் தெய்வங்கட்கு சத்தியஜீவிய சக்தி அடிப்படையில் இருந்தாலும் அது நிச்சயமாகப் பயன்படும் எனக் கூற முடியாது.சிவபெருமான் பஸ்மாசூரனுக்கு வரம் கொடுத்தபின் செய்வதறியாது திகைத்தார். சபிக்கப்பட்டவர் தெய்வங்களை நாடினால் சாபத்தைக் குறைக்க முடியுமே தவிர அழிக்க முடியாது. சிவபெருமானே நக்கீரனைச் சபித்தார். இக்குறைகள் சத்தியஜீவியத்தில்லை).

6) இதன் பகுதிகள்:

.பகுதிகள் பல; அவை முக்கியமானவை. அவை ஞான திருஷ்டி, அசரீரி.

.நாம் அவற்றை ஞானோதயம், தானே தோன்றுவது என்கிறோம்.

.சத்தியஜீவியத்தை இரு பகுதிகளாகக் கூறுகிறார். (1) காலத்தைக்

கடந்தது (2) காலத்திற்குட்பட்டது.

இவை வேதக் குறிப்புகள்.

7) சத்தியஜீவியம் சச்சிதானந்தத்திற்கும் உலகுக்கும் இடைப்பட்டதாகும்.

.மேற்கூறிய விளக்கம் இடைப்பட்ட நிலையைக் கூறுகிறது.

.சிறிய பகுதி பெரிய பகுதியினின்று வெளி வந்து மீண்டும் அதை அடைவதையும் அறிகிறோம்.

.மேற்பகுதி: ஐக்கியமான சச்சிதானந்தம்.

கீழ்ப்பகுதி: ஐக்கியத்தை அறிய முடியாத மனம்.

மனம் பகுதிகளைச் சேர்த்துப் பார்க்கும். அது முழுமையாகாது.

ஒரு மெஷினின் எல்லாப் பகுதிகளையும் பிரித்திங்கு கூடையில் போட்டால் எல்லாப் பகுதிகளுமிருப்பதால் அது மெஷினாகாது.அதனால் முழுமைப் பகுதிகளின் தொகுப்பைக் கடந்தது என்கிறோம். பகுதிகளை மெஷினாக இணைக்க பகுதிகளில்லாத இன்ஜினீயரிங் ஞானம் தேவை. அது முழுமையாகும். ஒரு வீட்டிலுள்ள 6 நபர்கள் சேர்ந்தால் வீடாகும், குடும்பமாகாது. குடும்பமாக பிரியம், பொறுப்பு,பாசம் தேவை. இவை முழுமையின் குணங்கள்.

.முழுமைக்கும், பகுதிகளுக்கும் உள்ள வேறுபாடு சத்திய ஜீவியத்திற்கும், மனத்திற்கும் உள்ள வேறுபாடு. ஒரு கம்பனியில் மானேஜர்,சூபர்வைசர், தொழிலாளிகள் உண்டு. வேலையுண்டு, பணம்,மார்க்கட், திறமை, உற்பத்தி, விற்பனையுண்டு. முதலாளி இத்தனையும் உற்பத்தி செய்கிறார்இல்லாமல் இத்தனையும் சேர முடியாது. சேர்ந்தால் கம்பனியாக செயல்பட முடியாது.

8)சிருஷ்டியின் சூத்திரம்:

.மேலே ஏகனான சச்சிதானந்தம் அழியாதது; அனந்தமானது.

கீழே அநேகனான அழியக்கூடிய உலகம் உண்டு. அழியும் உலகில் அழியாத நிலையானதைத் தேடுகிறது சிருஷ்டி.

.ரிஷி நிஷ்டையில் புலனைக் கடந்து, உலகைக் கடந்து, உள்ளத்தைக் கடந்து விவரிக்கவொண்ணாத பிரம்மம் என்ற ஒன்றைக் காண்கிறார்.புறத்தில் மரம், செடி, மலை, மனிதன் என்ற பலவான சிருஷ்டி நிறைந்த உலகைக் காண்கிறார். பிரம்மத்தினின்று உலகம் வந்ததென அறிகிறார்; கூறுகிறார். எப்படி வந்ததெனத் தெரியவில்லை என்கிறார்.

பிரம்மம் உலகை சிருஷ்டித்தது என்றார். பிரம்மம் அழியாத நிலையான ஒன்று. உலகம் அழியும் ஆயிரம் பொருள்கள். இவற்றிடையேயுள்ள சத்தியஜீவியம் ஒன்றிலிருந்து கருதலாம். "நாளை நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்" என்பது எண்ணமானால் அந்த 5 சொற்களை "வருகிறேன் நாளை வீட்டிற்கு உங்கள் நான்" எனக் கூறினால் சொல் எண்ணத்தை வெளிப்படுத்தாது. மேலும் சொல்லின் எழுத்துகளைப் பிரித்து இஷ்டப்படிக் கலந்து (.ம். "உங்கள்" என்பதை ", ள், , ங்" எனக் கலந்தால்) பேசினால் குழப்பமாக இருக்கும். எண்ணம் சொல்லாக வெளி வரும்பொழுது எண்ணத்தின் முழுமை அழியாதவாறு சொல் வெளிப்படுவது சிருஷ்டி.அதை மனம் செய்ய முடியாது. சத்தியஜீவியம் செய்யும். எனவே சூத்திரம்: முழுமையிலிருந்து முழுமையை இழக்காதவாறு எழும் பகுதிகளின் அமைப்பு உலகம்.

உற்பத்தி செய்யும்பொழுது பல ஒன்றுடன் உள்ள தொடர்பை இழப்பது இல்லை. அதுவே சிருஷ்டியின் சூத்திரம்.

எண்ணம் சொல்லாக வெளிவருகிறது. எண்ணம் சொல்லை உற்பத்தி செய்கிறது. எண்ணத்தை ஒன்று எனவும் சொல்லைப் பலவாகவும்

.மேலே ஒன்றான சச்சிதானந்தம்.

கீழே பலவான உலகம் இருப்பது உண்மையானால் இவற்றைக் கடந்து இவற்றை கடந்த ஒன்று இருப்பதை அவை குறிக்கும்.கடையில் பல பொருள்கள் விற்கின்றன. நாம் அவற்றை வாங்குகிறோம் எனில் நம்மையும், கடையையும் கடந்து பொருள்களை உற்பத்தி செய்யும் பாக்டரி ஒன்று இருப்பதாக நமக்குப் புரியும்.

.உலகம் பகுதிகளாலானது.

சச்சிதானந்தம் முழுமையாலானது.

பகுதி என்பது குணம், முழுமை என்பதும் குணம்.

இரு குணங்களைக் காண்கிறோம். குணங்களுக்கு உற்பத்தி ஸ்தானம் இருக்க வேண்டுமல்லவா? அது குணங்களைக் கடந்தது அல்லவா? அதுவே பிரம்மம்.

.நமக்கு பிரம்மம் புரிந்தால் சச்சிதானந்தம் என்ற கடவுளும், உலகமும் புரியும். அவற்றிடையே முரண்பாடிருக்காது.

9)ஏன் சச்சிதானந்தம் உலகை சிருஷ்டித்திருக்க முடியாது?

.சச்சிதானந்தம் முழுமையானது. முழுமையை மட்டுமுடையது. உலகம் பகுதிகளாலானது. பகுதிகளாலான உலகை முழுமையை இழக்க முடியாத சச்சிதானந்தம் சிருஷ்டித்திருக்க முடியாது.பெரிய மரத்துண்டை பலகை, சட்டங்களாக்கி நாற்கா லி செய்கிறோம். சச்சிதானந்தம் பெரிய மரத்துண்டு போலாகும். வாழ்வு, உலகம் நாற்காலி போலாகும் செய்வது தச்சன். மரத்துண்டு தன் முழுமையை இழக்காமல் நாற்காலி ஆக

10) மனம் உலகை சிருஷ்டிக்கவில்லை என்ற விளக்கம்:

.உலகம் பகுதிகளாலான முழுமை. சச்சிதானந்தம் பகுதிகளற்ற முழுமை. நாற்காலியின் பகுதிகள் கால், பலகை, சட்டம் ஆகியவை நாற்காலிக்கு அவசியமானாலும், அவை தானே சேர்ந்தால் (ஒரு பெரிய கூடையில் அவற்றைப் போட்டால்) நாற்காலியாகாதுதச்சன் அவற்றை அதற்குரிய ரூபம் கொடுத்தால் நாற்காலியாகும். மனம் பகுதிகளாலானது. பகுதிகள் சேர்ந்து முழுமையான நாற்காலியாக முடியாது. ஒரு தச்சன் அதைச் செய்ய வேண்டும்.

11) மனம் தன்னையறியும், உலகையறியாது.

.ஒரு கம்பனியில் வேலை செய்யும் தொழிலாளி தன் வேலையை நன்கு அறிவான். அவனுக்கு, கம்பனியைப் பற்றி அதிகம் தெரியாது.பொதுவாகத் தெரியும். தன்னையறிவதுபோல் கம்பனியை அறிய மாட்டான்.

ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய கூட்டம் போட்டு விருந்து வைத்தால், சமையல்காரனுக்கு விருந்து அம்சங்கள் அத்தனையும் தெரியும், ஏன் கூட்டம் நடக்கிறது, என்ன முடிவெடுத்தார்கள் என்பது அவன் அறியாதது, அறிய முடியாதது. அறிந்தால் அபத்தமாக அறிவான்.

மனம் பகுதியானது. பகுதியை ஆராயவல்லது. ஆராய்ந்து ஆராய்ச்சி விவரங்களைத் தெளிவாகக் கூறும். எந்த முழுமையின் பகுதியை ஆராய்ந்தோம் என மனம் அறியாது. இராமாயணப் பிரசங்கத்தில் தூங்கியவன் மீது அடுத்தவன் சாய்ந்து தூங்கி எழுந்தபின் இராமாயணம் பாரமாக இருந்தது என்ற கதை மனம் உலகை அறியும் பாணியைக் கூறுகிறது. இராமாயணம் மனத்தில் பாரமாக மாறுகிறது.

மனம் விஷயத்தை அறிய முடியாமல் விவரங்களை அறியும்.

12) பிரபஞ்சத்தின் மூன்று நிலைகள்:

1) முழுமையான சச்சிதானந்தம்.

2) பகுதிகளின் தொகுப்பான உலகம்.

3) முழுமை, தன்னைப் பகுதிகளாக்கி, பகுதிகள் முழுமையை இழக்காதவாறுள்ள சத்தியஜீவிய லோகம்.

நம் மனம் ஒரு கருத்தை அறிகிறது. நாம் அதை விளக்குகிறோம். என்ன செய்கிறோம்என்று அறியாமல் ஒருவர் கேட்டுக் கொள்கிறார். அடுத்தவர் அறிந்து கேட்டுக்கொள்கிறார்.

.நம் மனம் கருத்தை முழுமையாக அறிவது சச்சிதானந்த முழுமை. அது வெளிப்படாது. அது சொல்லாக வெளிப்படும் பொழுது, விஷயம் அறியாமல் சொற்களைக் கேட்பவர் நாம் சொன்னவற்றையெல்லாம் அறிவார். எதைப் பற்றிப் பேசினோம்என அறியார் - இது மனம் அறியும் உலகம் போன்றது. நாம் சொல்வதை அறிந்து அதைச் சொற்களில் காண்பவர் சத்தியஜீவியம் போன்றவர்.

13) Real-Idea முழு எண்ணம் சிருஷ்டிக்கும் முறை:

.ஒன்றான பிரம்மத்தினின்று சத், சித், ஆனந்தம் என்ற மூன்றை சத்தியஜீவியம் சிருஷ்டித்தது.

.ஒன்றை 3ஆக வேறுபடுத்திக் காட்டும் திறன் சத்திய ஜீவியத்திற்கு உண்டு. 3ஆகப் பிரிப்பதில்லை. சத்தியஜீவியம் மூன்றிலிருந்து ஒன்றுக்கு வருவதில்லை. அது மனம் செய்வது. ஒன்றில் ஆரம்பித்து அதனுள் மூன்றைக் காண்பது சத்தியஜீவியம்.

இராதாகிருஷ்ணன் என்று பெயரிட்டால் ராதா என அழைப்பார்கள்.அது வீட்டுப் பெயர். கண்ணா எனவும் வழங்கும். அவருடைய நண்பர் ஒருவர் அவரைத் தேடி வந்து இராதாகிருஷ்ணனைப் பார்க்க வேண்டும் என்றால் வீட்டுப் பழக்கத்தை மட்டும் அறிந்தவர் "அப்படி ஒருவர் இங்கில்லை" என்றார். பின்னாலிருந்து மற்றொருவர் "அவர் ராதாவைத் தேடுகிறார்" என்றார். "ஓஹோ, எனக்குப் புரியவில்லை, அப்படியா?"என்றார்.

ஆபீசில் வேலை செய்பவர் அவரை இன்ஜீனியர் என அறிவர். வீட்டில் அவரை ராதா என்பர். கிளப்பில் அவரை டென்னீஸ் எக்ஸ்பர்ட் என்பர்.மூவரும் ஒருவரே. மூன்று நபர்களில்லை. அவர் ஒருவரே என்பதை மறந்து இன்ஜீனியர் ஒருவர், ராதா என்பது வேறொருவர், டென்னீஸ் எக்ஸ்பர்ட் மூன்றாம் நபர், ஆக 3 பேர் என மனம் அறியும். அதில் உண்மையில்லை.

சத்தே சித், சித்தே ஆனந்தம், ஆனந்தமே சத் என்பது சச்சிதானந்த உண்மை. ரிஷிகள் மனம் அவற்றை மூன்றாகப் பிரித்து மூன்று வேறு அம்சங்களாகக் கண்டது. இது உண்மையில்லை. மனம் செயல்படும் வகை.

சத்துள் சித்தும் ஆனந்தமும் உண்டு. அதே மற்ற இரண்டினுள்

மூன்றும் உறைவது ஆத்மீக உண்மை.

அபிவிருத்தி, பரிணாமம், வெளிப்படுத்துதல் என்ற மூன்று அம்சங்கள் சிருஷ்டியில் உண்டு.

சூழ்வது, சிருஷ்டி, மறைபொருளாக்குவது என்பவை பரிணாமத்திற்கு உரியவை.

.ஒரு மனித மனத்திலிருந்து அவன் குடும்பம் உற்பத்தியாகிறது. ஒரு முதலாளி மனத்தினின்று கம்பனி உற்பத்தியாயிற்று.ஆண்டவன் மனத்திலிருந்து பூமியும், உலகமும், பிரபஞ்சமும் உற்பத்தி ஆயின.

.பெற்றோர் குழந்தையைப் பெறுகின்றனர். குழந்தை வளர்கிறது. சிறிய உடலிலிருந்து பெரிய உடல் வருகிறது. மழலை மொழி தெளிவான பேச்சாகிறது. ஒன்றும் தெரியாத சிறுவன் எல்லாம் அறிந்த பெரியவனாகிறான். குழந்தையுள் இவை மறைத்து வைக்கப்பட்டு குழந்தை வளரும் பொழுது அபிவிருத்தியாகி,வெளிப்பட்டு, பரிணமிக்கிறது. இவற்றை செய்வது சத்திய ஜீவியத்தின் Real-Idea. முழு எண்ணம்.

14) புருஷன், பிரகிருதியை சக்தியாலும், ரூபத்தாலும் சிருஷ்டிக்க, தன் எண்ணத்தைக் கருவியாகப் பயன்படுத்துகிறான்.

.சத்தியஜீவியத்துள் இரு பகுதிகள் உண்டு. ஒன்று காலத்தைக் கடந்தது. அடுத்தது காலத்தில் செயல்படுவது.

.ஒரு முதலாளி கம்பெனி ஆரம்பிக்க, பல எண்ணங்கள், திட்டங்கள்,உதவிக்கு வேண்டிய மனிதர்கள், பயன் படுத்த வேண்டிய டெக்னாலஜி,பெற வேண்டிய லைசென்ஸ் ஆகியவற்றை தம் மனத்துள் பெற்றிருக்கிறார். அவை திரண்டுள்ளன. வெளியில் தெரியாது. முதற் பகுதி இது போன்றது.அவர் நிலம் வாங்குகிறார், கட்டிடம் கட்டுகிறார், மெஷின் வாங்குகிறார், ஆள் எடுக்கிறார். இதுபோன்ற செயல்கள் வெளியில் தெரியும்.எல்லாம் அவர் எண்ணங்களே. மனத்துள் உள்ளபொழுது தெரிவது இல்லை. செயல் படும் பொழுது தெரிகிறது.

.ஆண்டவன் இயற்கையை சிருஷ்டிக்க, தம் சக்தியை வெளிப்படுத்தி அவற்றிற்கு ரூபம் அளித்து தம் எண்ணத்தால் தம்முள் செயல்படுத்துகிறார்.

15) மனமும் எண்ணமும் உலகை விட்டு நம்மைப் பிரிக்கின்றன.நம் வீட்டில் திருமணம் நடத்துகிறோம். அநேகர் குழுமி வைபவம் நடக்கிறது. மணம், இசை, விருந்து, உபச்சாரம், மேளம்என ஆயிரம் காரியங்கள் நடக்கின்றன. இது நம் வீட்டுத் திருமணம். நாமே திருமணம்.போட்டோ எடுக்கிறோம். பல போட்டோ ஆல்பம் செய்கிறோம். போட்டோ வந்த புதிதில் போட்டோ முக்கியமாகிவிடும். போட்டோ என்பது ஒரு நிகழ்ச்சி (still photo). அதில் அசைவில்லை. நாம் முதல் காமிரா வாங்கி போட்டோ எடுத்து ஆல்பம் தயாரித்து அனைவரிடமும் காண்பித்து மகிழ்ந்தால், அதைப் பலமுறை செய்தால், நண்பர், "உங்களுக்கு திருமணம் மறந்துவிட்டது. போட்டோ முக்கியமாகிவிட்டது" என்பார்.

போட்டோ திருமணத்தில் ஒரு சிறு பகுதி. ஆல்பம் முழுவதும் பகுதியே.அதில் ஜீவனில்லை. நம் மனம் ஆர்வத்தால் போட்டோவுக்கு ஜீவன் அளிக்கிறது. இது மனத்தின் செயலுக்கு ஒப்பாகும்.

வீடியோ எடுத்தால், அதில் அசைவுண்டு. போட்டோவை விட அது ஜீவன் உள்ளது. என்றாலும் அதுவும் பகுதியே. இது சத்தியஜீவியம் போன்றது.

திருமணம் என்பது பெரியது, அதனுள் நடந்தவை ஆயிரம். அதன் முக்கிய அம்சங்கள், கருத்துகள் போட்டோவிலோ, வீடியோவிலோ அகப்படா.

இதை சச்சிதானந்தத்திற்கு ஒப்பிடலாம்.

போட்டோ திருமணத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியைப் பிரிப்பதைப்போல் எண்ணம் முழுமையினின்று ஒன்றைப் பிரித்தெடுக்கிறது. அதன் வழி சென்றால் எண்ணத்தை முழுமையினின்று பிரிப்பதுபோல் நம்மையே நிகழ்ச்சியிலிருந்து

16) சத்தியஜீவியத்தில் எண்ணம் அதுபோல் உலகை விட்டுப் பிரிவதில்லை. வீடியோவில் அசைவும், லியும் இருப்பதால் போட்டோ நிகழ்ச்சியினின்று விலகுவதுபோல் வீடியோ விலகுவதில்லை.

17) நெருப்பும் ஒளியும் பிரிய முடியாதவைபோல் நாம் சச்சிதானந்தத்திலிருந்து

18) நமக்கு ஆயிரம் எண்ணம், பொறுப்பு, திறமையுண்டு. ஒரு காரியம் செய்யும் பொழுது, ஒருவரிடம் பேசும்பொழுது, நாம் பேச்சில் மட்டும் ஈடுபடுகிறோம்.மற்றவற்றை மறப்பதில்லை; பின்னா லிருக்கின்றன. சத்தியஜீவியம் ஒரு குழந்தையை உலகில் சிருஷ்டிக்கும்பொழுது, உலகம் குழந்தையை மட்டும் காண்கிறது. பிரபஞ்சம் முழுவதும் அதன்பின் சத்தியஜீவியத்தால் திரை மறைவிருப்பதைப்போல் மறைந்துள்ளது. எனவே குழந்தை உண்மையில் முழு உலகமாகும்.

19) இவற்றையெல்லாம் குறிப்பாக உணர்ந்த ரிஷிகள் இறைவனை எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்தவன், எதுவும் செய்யக்கூடியவன் என்றனர்.

மேற்சொன்னவை தத்துவ விளக்கம். ஓரளவு புரியலாம். முழுவதும் புரிய வாழ்வில் இக்கருத்துகள் செயல்படுவதைக் கண்டால், புரியும்.நாம் எலக்ஷனில் நிற்பதுமுதல், கடிதம் எழுதுவதுவரை பல்வேறு காரியங்கள் செய்கிறோம். எந்தச் செயலிலும் மனத்திற்குரிய சிறிய பகுதிகளும், சத்தியஜீவியத்திற்குரிய பெரிய அம்சங்களும் உண்டு.மனத்தால் செயல்பட்டால், செய்யும் வேலை பலிக்கும் சத்திய ஜீவியத்தால் செயல்பட்டால், வேலை பலிப்பதுடன்நம்மை வேலை அதன் உயர்ந்த கட்டங்கட்கு எடுத்துப்போகும்.

.பலன் மனநிலைக்கு வரும், வேலைக்கன்று.

.வேலைக்கு, வேலைக்குரிய பலன் வரும் - ஊதியம் கிடைக்கும்.

.மனநிலைக்கு ஊதியத்துடன், இலாபம் வரும்.

.வேலைக்குச் சம்பளம், இன்க்ரிமெண்ட் வரும்.

.மனநிலைக்கு பிரமோஷன், புதிய பெரிய வேலை வரும்.

.வேலைக்குரியது திறமை.

.மனநிலைக்குரியது பதம், பக்குவம், இதம், இங்கிதம், அடக்கம், பொறுமை.

 ****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

செய்தி உலவுவது உணர்வை மனம் பயன்படுத்துவதை உயிரோட்டம் உள்ளதாக்குகிறது. சமூகத்தில் அதன் பலன் பெரியது.குடும்பத்தை ஜீவனுள்ளதாக்க ஒவ்வொருவரும் பிரியமாகத் தம் விஷயங்களை அனைவருக்கும் சொல்கிறோம்.

கலந்த உணர்வு நிறைந்த குடும்பம்.


 

 

 



book | by Dr. Radut