Skip to Content

12.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)   

                                                                                                                                               கர்மயோகி

903) அனுபவிப்பதையே அறியமுடியும்அதனால் உணர்வு அறிகிறதுஎனவே அது உணர்வின் சித்திமற்றவை சொல்லின் தெளிவுமனம் கண்டது அறிவுக்குரிய உண்மை; தத்துவம். நமக்கு லீலை விளங்க நாம் பரம்பொருளை உணர்வில் அறியவேண்டும். இப்பொழுது பரம்பொருள் பரம்பொருளுக்கே விளங்கும் நிலையிலுள்ளது.

இன்று லீலை, பரம்பொருளுக்குத் தெளிவுநமக்குத் தெளிவானது உணர்வு மட்டுமே.

பரம்பொருள் உணர்வைத் தொட்டால், லீலை உணர்வுக்கு - நமக்கு தெளிவாகும்.

கம்பர், வால்மீகி, திருவள்ளுவர், ஷேக்ஸ்பியர் எப்படிப் பெருங்கவிகளானார்கள் என்பது பகவான் எழுதிய விளக்கத்திலுள்ளது. அது,

. எந்த இலட்சியமும் அவர் மனத்திலில்லை (purposeless).

. பரப்பிரம்மம் அவர்கள் ஜீவனிலிருந்து எழுதியதை நம்முள் உள்ள பரப்பிரம்மம் உணர்வதால் அவை அழியா இலக்கியமாயின.

. மக்களாட்சியின் சிறப்பு மகத்துவமுள்ள மனிதனை மணிமகுடம் தேடிவரும்.

. நாட்டுத்தலைவன் அறிவாளி, நாணயமானவன், திறமைசாலி, தலைமைத் தகுதி பெற்றவன், நற்குடிப் பிறந்தவன்என நாம் தேடும்பொழுது அப்படிப்பட்டவரில்லைஎன ஆராய்ச்சி கூறும்.

. அதே சமயம் நாடு தனக்குரியவனை மேற்கூறிய திறமைகளைப் புறக்கணித்துத் தயார் செய்து, மகுடத்தை அவனிடம் கொண்டுபோய்க் கொடுப்பதைக் காண்கிறோம்.

. Spiritual democracy ஆன்மீக ஜனநாயகம்என ஒரு சொல்லை நாம் ஏற்க முடியுமானால், பரம்பொருள் நம் உடலுணர்வைத் தொட்டவுடன், நம் கண்பார்வை ஞானதிருஷ்டியாகி, ஞானதிருஷ்டி சத்தியஜீவிய திருஷ்டி ஆகும்.

. அதே நேரம் உலகில் தீமை மறையும்.

. அழுக்கு, ஆபாசம் அழகாக மாறும்.

. சித்ரவதை, சீரிய சேவையாகத் தெரியும்.

. விஸ்வரூபம் தெய்வலோக மனம் கண்டது. அதில் சொர்க்கமும், கோரமும் உண்டு.

. பகவான் கண்ட அலிப்பூர் தரிசனத்தில் கோரமில்லை.

கோரம் உயர்ந்த உன்னதமாகிறது.

. அறிவுக்கு இந்த ஞானம் புலப்பட்டால் நம் மனம் கீதையைக் கடக்கும்.

உணர்வுக்கு இது புலப்பட்டால் அற்புதம் வெளிப்படும்.

அது வெளிப்பட அதிகாரம் செய்யும் டிரைவரை வளரும் ஆன்மா பண்பு பெற முன் பேசும் பேச்சாக அறியவேண்டும்.

ஓடிப்போன பெண்ணை உலகம் தூற்றும்பொழுது, அவள் இதயத்தின் ஏக்கத்தை அறிந்து ஏற்க முன்வரவேண்டும்.

அவளே உன் மகளானால் அற்புதம் நிதர்சனமாகும்.

Marvel, அற்புதம், தீமையற்ற உலகம், மலர்தலை உலகம், ஆன்மா உடலில் வெளிப்பட்டு மலர்ந்து மகிமையை உணர்த்துவதைக் காண மனம் பரந்து, உணர்வு இனித்து, உடல் நன்றியால் புல்லரிக்கவேண்டும்அதை இன்றே, இப்பொழுதே செய்ய முனைதல் சாலச்சிறந்தது.

****

904) சத்தியஜீவிய சக்தி ஒரே ஒரு முறையும் செய்ததைத் திரும்பச் செய்யாது. வெற்றியாகப் பயன்படுத்திய முறைகள், உபாயங்கள் அடுத்த முறை பயனில்லாமலிருப்பதை நாம் பார்க்கலாம்மறுமுறையும் பயன்பட்டால் அது சத்தியஜீவிய சக்தியாகாது.

ஒவ்வொரு தரமும் முறை மாறும்.

நாம் கண்ட கடல் அலையை மீண்டும் காண முடியாது. அலைகள் ஆயிரம் வரும். ஆனால் அந்த அலை மீண்டும் வாராது.

பௌத்தம் நெருப்பு, ஆறு ஆகியவை மாறியபடியிருப்பதை உதாரணமாகக் காட்டுவர்.

இன்று ஒரு பேனா, T.V., கார் வாங்கினால் அது சில வருஷங்களில் மாறிவிடும். பழைய மாடல் மாறிவிடும்.

சத்தியஜீவியச் செயல் க்ஷணத்தில் மாறும் மாடல்.

க்ஷணத்தில் மாறாதது சத்தியஜீவியமில்லை.

நமக்கு ஒரு வகையான பிரச்சினை 4 முறை வரும்பொழுது, ஒவ்வொரு முறையும் பலன் வெவ்வேறு வகையாகக் கிட்டுவதைக் காணலாம்.

முதன்முறை எதிரி மனம் மாறி எழுப்பிய பிரச்சினையை வாபஸ் செய்தால், அடுத்த முறை எதிரி பிரச்சினையை வாய்ப்பாக்கி நம்மை ஏற்கச் சொன்னால், மூன்றாம் முறை கையெழுத்திடும் உரிமையில்லாத பொழுது பாங்க் கடனைத் தர விழைந்து தொகையை 45லிருந்து 65க்கு உயர்த்தி, அதையும் 85 ஆக்கி, முடிவாக 85,000 ரூபாயைக் கொடுத்த பொழுது அத்துடன் உபரியாக 2 இலட்சம் 25,000 ரூபாய் வந்தது அன்பர் அனுபவம்.

நம்பிக்கையால் குணமானால் பலன் 99%,

அருளால் குணமாகும்பொழுது அது 100%,

பேரருளால் பலன் வந்தால் முடிவு முதலிலேயே 1000%ஆக வரும்.

இதை ஆழ்ந்த நம்பிக்கையுள்ள அன்பர்கள் சோதித்துப் பார்க்கலாம்.

நிபந்தனைகள்,

1. எரிச்சல் படக்கூடாது.

2. நாமாக முனைந்து செயல்படக்கூடாது.

மனம் அமைதியுற்று, அமைதி ஆழ்ந்து, அகன்று, கனத்து, அமிர்தமாகி,அனந்தம் ஆனந்தமாகும் நேரம்

சத்தியஜீவிய சக்தி க்ஷணம் செயல்படும்.

. அந்த நேரம் ஓர் அன்பரை கவர்னர் கூப்பிட்டனுப்பினார்.

அடுத்த கவர்னர் 'உங்களைப் பார்க்க உங்கள் இடத்திற்கு வருகிறேன்' என்றார்

.பிரதமர் அடுத்த முறை அதுபோல் பேசினார்; செயல்பட்டார்.

. எந்த idea ஒருவருக்கு அகில இந்திய தொழிலதிபர் அந்தஸ்து தருமோ, அந்த idea அன்பருக்குத் தோன்றியது.

தொந்தரவு அளித்த முதல்வர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

சத்தியஜீவியம் சத்தியமாகச் செயல்படுவது சத்தியம்.

தொடரும்.....

****

ஜீவிய மணி

வேதனையைத் தவிர்ப்பது சாதனைக்கு அவசியம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்வு பல நிலைகளிலுள்ளது. ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல உதவுவது சரணாகதி. அதுவே மனிதன் தெய்வமாகும் பாதை.

நிலையை உயர்த்தும் சரணாகதி.


 


 


 


 


 book | by Dr. Radut