Skip to Content

14."டோக்கன் ஆக்ட்''

"டோக்கன் ஆக்ட்''

     அன்னையின் சக்தியை அனுபவித்து அறிய உதவுவது ஒரு சிறு காரியம்.  அக்காரியத்தை சமர்ப்பணம், நிதானம், பொறுமை, பரநலம், சிறப்பு ஆகியவற்றால் நிரப்பினால் எதிர்பார்க்கும் பலன் பல மடங்கு பெருகும்அதை அடையாளமான செயல் token act என்றேன். 3 ஆண்டுகட்குமுன் 3000ரூபாய் சம்பாதித்தவர் அன்பராகி 10,000 ரூபாய் சம்பாதித்தார். அவர் டோக்கன் ஆக்டைச் செய்து சோதனை செய்தார். கம்பனி அவருக்கு இரண்டேகால் இலட்சம் போனஸ் கொடுத்து டைரக்டராக்க விரும்பியதுஅவர் நம்பிக்கை நீடித்தது. 6 மாதத்திற்குள் நாலேமுக்கால் இலட்ச ரூபாய் போனஸ் கொடுத்தது.

     டோக்கன் ஆக்ட் - அடையாளமான செயல் - என்பதைப் பொதுவாக ஏற்றுச் செய்வதின் பலனிதுஅதே காரியத்தை 10 அல்லது 20 பாகங்களாகப் பிரித்துஇதே முறையைப் பின்பற்றினால் பலன் தொடர்ந்து பெருகும்செயலைப் பல பாகங்களாகப் பிரிப்பது ஒருமுறை. அதற்கு பெரும்பலனுண்டு. மனநிலையைப் பலவாகப் பிரிக்கலாம். அறிவு, பொறுமை, பரநலம், முறையென 10 அல்லது 20 பாகங்களாகப் பிரிக்கலாம். குணம் என்பதால் செயலைவிட அதிக சக்திவாய்ந்தவை இவைடோக்கன் ஆக்ட்எனும் முறையை குணச் சிறப்பில் வெளிப்படுத்துவது அதிகமான உயர்ந்த பலன் தரும்.

     டோக்கன் ஆக்ட்என்ற முறையை ஆபீசில் பயன்படுத்துகிறோம். அதற்குரியது மேற்பட்ட பலன்.

     வீட்டில் பயன்படுத்துவது சிரமம்; பலன் அதிகம்.

     வீடும், ஆபீசும் தவிர வெளியில் நண்பர்கள், உறவினர்களிடையே பயன்படுத்துவது அடுத்த முறை.

     குணத்தையும் கடந்து, மனம் உள்ளே கொலுவீற்றிருக்கிறது.

     அது எளிதில் கட்டுப்படாது; நாம் செய்வனவற்றிற்கெல்லாம் எதிராக வீறுகொண்டிருக்கும்.

     மனம் டோக்கன் ஆக்ட் முறைகளை ஏற்றால், அது தவத்திற்குச் சமம்.அது தரும் பலன் சொத்து, வீடு, பணம், பிரபலமாக இருக்காது.

    அது மனத்திற்குத் தூய்மை தரும். அன்னைக்கு உகந்ததாக மனம் மாறும்.

அதனுள் நம் அன்றாட வாழ்வு சிறு பகுதி.

 

****


 



book | by Dr. Radut