Skip to Content

15.காணிக்கை

காணிக்கை

- அன்னையை அறிவது அதிர்ஷ்டம்.

- அன்பரானபின் அன்னை நினைவு வருவது அதிர்ஷ்டம்; சுலபமாக வாராது.

-பல சமயம் பிரார்த்திக்கத் தோன்றாது.

- பிரார்த்தனை செய்பவருக்குக் காணிக்கை நினைவு வாராதவர் உண்டு.

நினைவு வந்தாலும் கொடுக்கப் பிரியம் எழாது.

இப்படிப்பட்டவர் பொதுவாகக் காணிக்கை தருவதில்லை. தந்தால் அது அன்னையைச் சேராது.

- காணிக்கை அவசியம். ஆனால் எவ்வளவு என்பது முக்கியமேயில்லை. எவ்வளவு சிறியதானாலும் பிரார்த்தனை முழுமையாக நிறைவேறும்.

- சேவையை விரும்புபவர் பெரிய காணிக்கை தருவார்கள்.

- ஒருவர், அடுத்தவரை காணிக்கைத் தரும்படிக் கூறுவது நல்ல பலன் தராது.

- நாமே நம்மை வற்புறுத்தித் தரும் காணிக்கை, காணிக்கையாகாதுதவறான காணிக்கை போய்ச் சேராது; பெற்றால் பெற்றவருக்கு ஊறு செய்யும்; கொடுப்பவரையும் பாதிக்கும்.

- மனத்தையும், உடலையும், ஆன்மாவையும் சமர்ப்பணம் செய்தவருக்குக் காணிக்கை தேவையில்லை.

- காணிக்கையின் பல அம்சங்களை அறிய முயல்வது யோக ஞானம்.

- ஏராளமாகக் கடன் வாங்கி, ஏராளமாகக் காணிக்கைக் கொடுத்தவருக்குக் கடன் பூதாகாரமாகப் பெருகியது. கடனிலிருந்து வந்த காணிக்கை கடனை வளர்க்கும்.

- நல்லவருக்கும், மற்றவர்க்கும் அன்னையிடம் வந்தால் வாழ்வு பெருகும். பெருக்கம் அவரவர் இராசியைப்போலிருக்கும்இராசியை மாற்றும் சக்தி உலகிலில்லை.

- அன்னை அதையும் செய்வார். அவர் அப்படி நம் வாழ்வில் செயல்பட மனமும், சொல்லும் உண்மையை மட்டும் கடைப் பிடிக்கவேண்டும்.

****



book | by Dr. Radut