Skip to Content

03.வருமானம்

வருமானம்

கர்மயோகி

.யோகத்தை விட நாடு விடுதலையடைவது முக்கியம் என பகவான் 1904இல் கருதினார்.

இன்று யோகம் என்றால் நாடு வறுமையிலிருந்து வெளிவருவதாகும்.

நாம் வசதி பெறுவது நாடு வசதியடைவதாகும்.

வருமானம் என்பது உழைப்பால் வருவது.

வேலை செய்து பெறுவது சம்பளம்.

வேலையில்லாதவனுக்கு வேலை கிடைப்பது முன்னேற்றம்.

.சம்பளத்தால் வயிறு நிறையும், குடும்பம் நடக்கும், நாமோ நம் மூலம் நாடோ வளம் பெறாது.

நாடு வளம் பெற தொழிலும், வியாபாரமும் பெருக வேண்டும்.

இளைஞர்கள் வேலையை நாடாமல், சொந்தமாகத் தொழில் செய்தால் நாடு வளம் பெறும்.

.வருமானம்என்பது திறமையால் பெறுவது.

திறமைஎன்றால் வேலை செய்யும் திறமை (skill) தொழில் நடத்தப் போதாது.

வேலை செய்தால் செய்த வேலை முடியும்.

தொழில் பெருகுவது வேலை.

அதைச் செய்யும் திறமை (capacity) தொழில் பெருக உதவும்.

அத்திறமையில்லாதவர் தொழில் செய்தால் திவாலாவர்.

அத்திறமையை அன்னையால் பெற உழைப்புடன் நம்பிக்கை வேண்டும்.

இத்திறமையுள்ளவர் அனைவரும் வெற்றி பெறுவர்.

பெறும் வெற்றியின் அளவு பர்சனாலிட்டியின் அளவாகும்.

(பர்சனாலிட்டியின் அளவும் அன்னையால் பெருகும்).

பர்சனாலிட்டி என்பது நாம் எதை நம்புகிறோம் என்பதைப் பொருத்தது.

பிறர் உதவியை நாடுபவன் சிறிய பர்சனாலிட்டி.

சொந்தக்காலில் நிற்பவன் வளருவான், பெரிய பர்சனாலிட்டி.

கவனமுள்ளவனுக்குத் தோல்வியில்லை.

நாம் எதைக் கவனிக்கிறோமோ, அது நம்மைக் கைவிடாது.

உஷாராக இருப்பவனை ஏமாற்ற முடியாது.

அவனுக்குப் பிரச்சினை வருமுன் தெரியும்.

பொறுப்புள்ளவனுக்குப் பணம் சேரும்.

பொறுப்பை ஏற்க மறுப்பவன், சம்பளக்காரன்.

உழைப்புள்ளவனை, உழைப்பு கைவிடாது.

புத்திகூர்மையுள்ளவனுக்கு மற்ற திறமைகள் சிறக்கும்.

பொறுமைக்குப் பெரும்பலனுண்டு.

அடக்கம் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றுத்தரும்.

ஞாபகம் ஒரு சொத்து.

அளவோடு செயல்படுவது தோல்வியை விலக்கும்.

தெம்பு ஆர்வத்தால் வருவது.

ஆர்வம் சாதிக்கும்.

உடலுக்குரிய ஆர்வம் உழைப்பு.

உணர்வுக்குரிய ஆர்வம் பாசம், பற்று.

அறிவுக்குரிய ஆர்வம் புத்திகூர்மை.

ஆத்மாவுக்குரிய ஆர்வம் பண்பு.

அன்னைக்குரிய ஆர்வம் சமர்ப்பணம், சரணாகதி.

அமைதி பலம் தரும்.

சாந்தி நிதானம் தரும்.

முன்யோசனை, சிரமத்தை விலக்கும்.

அடுத்தவர் கோணத்தில் பார்ப்பது, தொழிலை விரிவு செய்யும்.

தரமான சரக்கு தோல்வியடையாது.

தரமான மனிதன் தவறமாட்டான்.

தரமான கொள்கைக்குத் தோல்வியில்லை.

உழைப்பு, ஆர்வம், அறிவு, பொறுமை, அடக்கம், முன்யோசனை, பாகுபாடு போன்றவை அனைத்தும் பர்சனாலிட்டியின் பகுதிகள்.

அவை பர்சனாலிட்டியாகா.

அவை சேர்ந்த முழுமையும் பர்சனாலிட்டியாகாது.

பர்சனாலிட்டிஎன்பதை நாம் 'மனிதன்' என்கிறோம்.

ஆள் எப்படிப்பட்டவன்எனக் கேட்கிறோம்.

பர்சனாலிட்டியுள்ளவன் தலைவனாவான்.

கொள்கையை உயர்த்தினால் பர்சனாலிட்டி உயரும்.

சுயநலமி கோடிக்கணக்காகச் சம்பாதிப்பான்.

அவனுக்குச் சுயநலத்தின் பிரச்சினைகள் எழும்.

சுயநலமில்லாதவன் கோடிக்கணக்காகச் சம்பாதிப்பான்.

அதற்கு அதிகத் திறமை வேண்டும்.

அவனுக்குச் சுயநலமியின் பிரச்சினைகளிருக்கா.

இலட்சியத்தை உயர்த்தினால் பர்சனாலிட்டி உயரும்.

இலாபத்திற்காகச் செய்யும் தொழிலை,

.தொழிலுக்காகச் செய்வது உயர்வு.

.ஊருக்காகச் செய்வது பேர் உயர்வு.

.இலட்சியத்திற்காகச் செய்வது பெரியது.

.அன்னைக்காகச் செய்வது அபரிமிதமான பலன் தரும்.

.பலன் கருதாமல் செய்வது சிறப்பு.

.கொள்கை உயர்ந்தால் நாம் உயர்வோம்.

நாம் என்பது பர்சனாலிட்டி

.அன்னையில் வாழ்பவர்க்கு பர்சனாலிட்டி உயர்ந்து கொண்டே போகும்.

.Accomplishment சாதனை பெரியது.

சாதிக்கும் அவசியமில்லாதது அதைவிடப் பெரியது.

சாதிக்கும் அவசியமில்லாதபொழுது செய்யும் தொழில் தானே தன்னைச் சாதித்துக்கொள்ளும்.

.வருமானம் என்பது ஆரம்பத்தில் திறமை.

அடுத்த கட்டத்தில் பண்புகள்.

முடிவான கட்டத்தில் இலட்சியம்.

பண்பான இலட்சியம் பெறும் திறமை பெருகும் வருமானம்.

.அன்னையை எந்த அளவிலும் ஏற்கலாம்.

வருமானத்திற்காக ஏற்கலாம்;

வருமானம் வரும், பெருகும்.

தொழிலுக்காக ஏற்கலாம்;

தொழில் பெருகும்.

வாழ்க்கைக்காக ஏற்கலாம்;

வாழ்க்கை வளம் பெறும்.

யோகத்திற்காக ஏற்கலாம்;

யோகம் சித்திக்கும்.

யோக வாழ்க்கைக்காக ஏற்கலாம்;

வாழ்க்கை யோகமாக மாறும்.

அன்னைக்காக ஏற்கலாம்;

எதற்காக ஏற்பதானாலும், அதற்குரியவாறு அன்னை புரிய வேண்டும்.

பொய் சொல்லும் மனிதன் சிறு வியாபாரியானால், அவன் மெய் மட்டும் சொல்ல ஆரம்பித்தால், பெருவியாபாரியாகும் வாய்ப்பு உடனே எழும்.

அதைப் பெற பொய்யைக் கைவிடவேண்டும்.

பிடியை விடாதவன், விட்டுக்கொடுக்க முனைந்தால், தொண்டன், தொண்டர் தலைவனாவான். தொடர்ந்து பிடியை விட்டுக்கொடுத்தால் தலைவனும் ஆவான்.

வருமானத்தை நாடினால் வருமானம் பெருகும்.

வருமானத்தை நாடாவிட்டால் அதிகமாகப் பெருகும்.

அன்னைமூலம் வருமானத்தை நாட,

.உழைப்பாளி நாணயமான திறமையைப் பொறுப்பாக ஏற்று, அடக்கமாக வேலை செய்து, வருமானத்தைக் கருதாவிட்டால், அவன் மிகச் சிறிய நிலையினின்று மிகஉயர்ந்த நிலைக்கு வருவான்.

.வாழ்வில் இலட்சத்தில் ஒருவர் பெறுவது அவன் பெறுவதாக இருக்கும்.

.செய்யும் தொழிலைச் சிறப்பாகச் செய்து, எதையும் நினைக்காமல், மனம் அன்னையில் இலயித்தால், நமக்கு எது வரவேண்டுமோ அது நம்மைத் தானே தேடி வரும்.

வருவதைப் போற்றி நன்றியுடன் பெறுவது ஆன்மீக அடக்கம்.

 நாம் அன்னையை நாடிப்போவது வழிபாடு; அன்னை நம்மை நாடி வருவது பக்தி, ஆர்வம், நம்பிக்கை, சரணாகதி.

 

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உணர்வே தீவிரமாக அழைக்கும். கொஞ்ச நாழியானாலும் தீவிரம் உச்சமாக இருக்கும்.

தீவிரத்திற்குரியது உணர்வு; அறிவில்லை.

 

  

 

 

 

 



book | by Dr. Radut