Skip to Content

04.நன்றியறிதல்

நன்றியறிதல்

N. அசோகன்

     நமக்கிருக்கின்ற பல உணர்வுகளில் நன்றியறிதல் என்ற உணர்வு நம்முடைய விசேஷ கவனத்திற்குரியதுஏனென்றால் நம்முடைய மனநிலையை உயர்த்தி நம்மை இறைவனை நெருங்கச் செய்கிறதுநன்றியறிதலை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வாழ்க்கை நமக்கு நிறையவே அளிக்கிறதுஇருந்தாலும், இச்சந்தர்ப்பங்களிலெல்லாம் நாம் முறையாக நடந்துகொள்கிறோமாஎன்பது சந்தேகத்திற்குரியதுநாம் சரியாக நடந்து கொள்ளாவிட்டாலும் நம்முடைய வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறதுஎன்பது இறைவனும், இயற்கையும் நம்மிடம் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்துகொள்கிறார்கள்என்பதைத்தான் காட்டுகிறது. இறைவனும், இயற்கையும் நம்மிடம் நன்றியறிதலை எதிர்பார்ப்பதில்லை.  நமக்குக் கிடைப்பனவெல்லாம் நாம் நமக்குரியதுஎன எடுத்துக் கொள்கிறோம்இது இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றாகவே தெரியும்.  இருந்தாலும் நம் குறைகளைப் பொருட்படுத்தாமல் இயற்கையும், இறைவனும் தாம் வழங்கும் கொடைகளைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  நியாயமாகப் பார்த்தால் சூரியனிடமிருந்து நமக்குக் கிடைக்கும் வெப்பத்திற்கும், மேகங்கள் வழங்குகின்ற மழைக்கும், பூமி வழங்குகின்ற உணவுப்பொருட்களுக்கும், விண்வெளி நமக்கு வழங்குகின்ற காற்றிற்கும் நாம் நன்றி சொல்லவேண்டும். மழை அபரிமிதமாகப் பெய்தாலும், நிலத்தில் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் நமக்கு சந்தோஷம் வருகிறதென்பது உண்மைஅதே சமயத்தில் இயற்கையின் இந்தக் கொடையை நாம் பெறும்பொழுது, நம் மனம் நன்றியறிதலால் நெகிழ்ந்து போகிறதாஎன்பது சந்தேகந்தான்ஆனால் மழை குறைந்துபோகும் பொழுதும், விளைச்சல் குறைந்துபோகும்பொழுதும், அதன் பலனாக உணவுப் பற்றாக்குறை வரும்பொழுதும் நாம் பாதிக்கப்படுகிறோம்என்பது உண்மைஇப்படி மழை இல்லாதபொழுதுதான் நமக்கு மழையின் அருமை தெரிகிறது என்றால், இது எதிர்மறையான பாணியில் மழைக்கு நாம் அங்கீகாரம் கொடுப்பதாக அமைகிறது. நீண்டகாலக் கண்ணோட்டத்தில் இது சரி வாராதுமழையின் அபரிமிதத்தை நாம் அனுபவிக்கும்பொழுது, நம் நன்றியறிதலை தெரிவித்து, அவ்வகையில் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுதான் நமக்கு முறையான செயல்பாடாக அமையும்.

     இயற்கையன்னைஎன்பவர் மிகப்பிரம்மாண்டமான வடிவம் கொண்டவர்.  இந்த பிரம்மாண்ட வடிவத்திற்கு முன்னால், நம்முடைய சிறு மானிட வடிவம் மலைக்கு முன்னால் இருக்கின்ற எறும்பை ஒத்ததாகும்இந்த பிரம்மாண்ட வடிவம்தான் இயற்கையன்னைக்கு இந்த பெருந்தன்மையை அளித்து, நமக்கு நன்றியறிதல் இருக்கின்றதோ, இல்லையோ அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், மழை எனும் கொடையைத் தொடர்ந்து அவரைத் தர வைக்கின்றதுஒரு பக்கம் இயற்கையன்னை நம்மிடம் நன்றியறிதலை எதிர்பார்ப்பதில்லைஇன்னொரு பக்கம் நமக்குக் கிடைப்பனவற்றையெல்லாம் நாம் நமக்குண்டானவை, நமக்குரிமை உள்ளவைஎன எடுத்துக்கொள்கிறோம். இரண்டு நோக்கங்களுமே ஒன்றோடொன்று ஒத்துப்போவதாகத் தெரிகின்றன. அதனால் நாம் இப்படி விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது, நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு எனத் தெரிகிறதுமழைக் காலத்தில் நிறைய மழை கிடைக்கும் பொழுதெல்லாம் நாம் இயற்கையன்னைக்கு நன்றி உள்ளவர்களாக நடந்துகொண்டோமென்றால், நமக்கும், அவருக்கும் இடையே உள்ள அலைன்மென்ட் (allignment) சிறப்பாக இருக்கும்அப்பட்சத்தில் நம்முடைய ஏற்புத்திறன், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் இருக்கும்அதன் விளைவாகப் பெய்கின்ற மழையும் அதிகமாகப் பெய்வதற்கு வாய்ப்புகள் வளர்ந்துகொண்டேயிருக்கும்மாறாக, மழைக்குரிய நன்றியறிதலை நாம் செலுத்தாமல் பராமுகமாக இருக்கும்பட்சத்தில், நம்முடைய ரிசப்டிவிட்டி குறைய ஆரம்பிக்கின்றதுஇப்படிக் குறைந்துகொண்டே வரும்பொழுது ஒரு கட்டத்தில் நமக்கும், இயற்கையன்னைக்கும் உள்ள அலைன்மென்ட் முழுவதுமாகக் கெட்டுப்போய் மழை பேரளவு குறைந்துபோய் கடுந்தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுகிறதுஇத்தகைய நிலைக்கு சென்னைவாசிகளை ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.  1990இல் இருந்து 2005 வரை மழையைச் சரியாக மதிக்காமல் பராமுகமாக இருந்ததன் காரணமாக கடுமையான தண்ணீர்பஞ்சத்திற்கு ஆளாகினார்கள்.

     நன்றியறிதல்என்ற உணர்வை நாம் வரையறுத்தோமென்றால், இறையருளின் ஸ்பரிசத்திற்கு நம்முடைய ஆன்மா வழங்கும் அங்கீகாரந் தான் நன்றியறிதல்என்று சொல்லலாம்உண்மையான நன்றியறிதல்என்பது நம்முடைய பர்ஸனாலிட்டியின்  ஆழத்தில்  எழுவதாகும்.  அந்த ஆழத்தில் நன்றியறிதல் எழும்பொழுது  நம்முடம்பே கரைவது போலிருக்கும். வாயால் நன்றியறிதல் சொல்வதோ, அல்லது  கடிதம்மூலம்  நன்றி தெரிவிப்பதோ, நாம் சுலபமாகச்  செய்யக்கூடிய காரியங்களாகும். ஆனால் உள்ளத்தின் ஆழத்தில் உடம்பே கரைவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் நன்றியறிதலை உணர்வது சிரமமான காரியமாகும்.  ஆனால் அந்த ஆழத்திற்குச் சென்று அதை நாம் உணர்தோமென்றால், வாழ்க்கை அதைக் கண்டிப்பாக கவனித்து அதற்கேற்ற வெகுமதிகளை அது நமக்கு அளிக்கும்.  தடைபட்டுப்போன வேலைகள் மீண்டும் புத்துயிர் பெரும். அந்த வேலையில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்கவேண்டிய நன்றி அறிதலையெல்லாம், இப்பொழுது நினைவுகூர்ந்தோமென்றால் நின்றுபோன வேலை அந்தஅளவிற்கு விரைவு பெரும்.  இம்மாதிரியே பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட காலங்களில் ஏற்கனவே நமக்குக் கிடைத்த பண உதவிக்கெல்லாம்  நாம் இப்பொழுது நன்றி தெரிவித்தால் தற்போதுள்ள பணத்தட்டுப்பாடு நீங்குமளவிற்குப்  புதிய பணவரவு வருவதையும் நாம் பார்க்கலாம். 
                                                    

     நம்முடம்பில் உள்ள முக்கிய உறுப்புகள் எல்லாம் இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாமல் இயங்கி நம் உயிரைப் பாதுகாக்கின்றன என்பதை நாம் உணர்வதேயில்லை.   நம்முடைய இதயம் கோடிக்கணக்கான தடவை நம் வாழ்நாள் முழுவதும் துடிக்கின்றதுஎன்பதை டாக்டர் நம்மிடம் சொல்லும் பொழுது, அது நமக்கு வெறும்புள்ளிவிவரமாகத்தான் தெரிகிறது.  அந்தச் சில நிமிடங்கள் நமக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும், சிறிது நேரத்தில் அதை நாம் மறந்துவிடுகிறோம்ஆனால் இப்படியில்லாமல் தினந்தோறும் நாம் நம்முடைய உள்உறுப்புகளுக்கு, அவற்றின் முறையான செயல்பாட்டிற்குப் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தோமென்றால், அதன் பலனாக நிச்சயமாக நம்முடைய ஆயுள் பலம் அதிகரிக்கும்இம்மாதிரியே அரசாங்கத்துடன் நமக்குள்ள உறவையும் ஆராய்ந்து, அரசாங்கத்தைப் பற்றிக் குறை சொல்லிக்கொண்டிருக்காமல், அதனிடம்  இருந்து  கிடைக்கும் நன்மைகளையெல்லாம் எண்ணிப்பார்த்து நன்றி தெரிவித்தோமென்றால், அத்தகைய செயல்பாடும் பாராட்டுக்குரியதாகும்.

     அரசாங்கமும், சமூகமும் நமக்கு ஓர் இரண்டாவது தாயார்போல நடந்துகொள்கின்றனஎன்பதை நாம் கருதுவதேயில்லைஇன்று அரசாங்கம் நமக்குச் சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், ஓய்வூதியம், வேலை இல்லாதவர்களுக்கான உதவித்தொகை, ஊனமுற்றோருக்கான சலுகைகள்என்று எத்தனையோ வகைகளில் வசதிகளை வழங்கி நம்மைக் கவனித்துக்கொள்கிறது.  நம்முடைய நீண்டகாலச் சரித்திரத்தில் இந்தளவிற்கு அரசாங்கம் நமக்குதவி செய்ய முன்வருவதே கடந்த 50 ஆண்டுகளாகத்தான் என்று சொல்ல வேண்டும்.  1950ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் அரசாங்கங்கள் பொதுநலம் கருதும் அரசாங்கங்களாக தலையெடுக்க ஆரம்பித்தனஅதற்கு முன்பெல்லாம் அரசாங்கம் தன்னுடைய கடமையாகச் சாலைகள் அமைப்பது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது, நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதுஎன்று இந்த மூன்று வேலைகளைத்தான் எடுத்துக்கொண்டிருந்ததுமலிவுவிலையில் உணவுப்பண்டங்களை வழங்குவதோ, குறைந்த கட்டணத்தில் மின்சாரம், தண்ணீர், கேஸ் சிலிண்டர் போன்றவற்றை வழங்குவதோ, பஸ் பாஸ் மற்றும் ரயில் பாஸ் வழங்குவதோ, தாழ்த்தப்பட்ட  ஜாதிமக்களை உயர்த்துவதோ, முதியோர் பென்ஷன், கைம்பெண் பென்ஷன், என்றிவை எல்லாம் இருபதாம்  நூற்றாண்டின் பிற்பகுதியல் வந்த சலுகைகள்தாம்.  ஊனமுற்றோரை அரசாங்கம் கவனிப்பதும் இந்த வகையைச் சாரும். மேற்கண்டவையெல்லாம்  அரசாங்கம் ஒரு தாயரைப்போல் நம்மைக் கவனிக்கிறது என்பதைக் தெள்ளத் தெளிவாக்குகிறது. ஆனால் குடிமக்கள் இத்தனைச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்திற்கு வரி கட்ட முன்வாராமல் இருப்பது அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய நன்றியறிதல் நமக்கு இல்லையென்பதைக் காட்டுகிறது.

     ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு தமிழ்ப் பத்திரிகையின் ஞாயிறு தின இணைப்பில் ஒரு நிகழ்ச்சிக் குறிப்பொன்றைப் பார்த்தேன்ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் ஒரு கஸ்டமர் ஆடிட்டருடன் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது, இரண்டாவது கஸ்டமர் ஒருவர் உள்ளே வந்தார்.  தம்முடைய வருமான வரி கட்டுவதற்கான பேப்பர்களுடன் வந்திருந்தார்.  அந்த பேப்பர்களை வாங்கி பரிசீலித்த ஆடிட்டர் அவர் கட்டவேண்டிய வரிகளை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்பதற்கான வழிகளையெல்லாம்  சொல்ல ஆரம்பித்தார்ஆனால் அந்த கஸ்டமர் குறுக்கிட்டுத் தாமும், தம்முடைய சகோதர, சகோதரிகள் எல்லோரும் சிறுவயதிலிருந்தே அரசாங்க உதவித்தொகையை வைத்துத்தான் படித்துக் கல்லூரிவரை சென்றதாகவும் அதற்கு நன்றி தெரிவிக்கும்பொருட்டு அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய முழுவரியையும் கட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.  அவருடைய நேர்மையைக் கண்ட ஆடிட்டர் வெட்கப்பட்டார்.  அருகில் அமர்ந்திருந்த முதல் கஸ்டமர் அதிசயித்துப்போனார்.  அவருடைய நேர்மையைப் பாராட்டி எழுதவேண்டுமென அவருக்குத் தோன்றியதால் அந்தச் செய்தித்தாளில் ஞாயிறு இணைப்பில் இதுபற்றி எழுதினார்.  வரி கட்ட வேண்டிய எல்லாரும் அந்த நேர்மையான நபரைப்போல அரசாங்கத்திற்குக்  கட்டவேண்டிய வரிகளையெல்லாம் கட்டினால் அரசாங்கத்தின் வருமானம் பல மடங்கு உயரும்.  அந்தக் கூடுதல் வருமானத்தைக்கொண்டு அரசாங்கம் மீண்டும் நமக்கு மேலும் பல வசதிகளைத்தான் செய்யப்போகிறதுஎன்பதை நாம் நினைத்துப்  பார்ப்பது இல்லை.  நம்முடைய கண்ணோட்டம் மிகவும் குறுகியதாக இருப்பதால் நாம் எவ்வளவு குறைந்த அளவிற்கு வரி கட்ட முடியுமோ அந்த அளவிற்குக் குறைத்துக் கட்ட விரும்புகிறோம்.  இப்படி வரி கட்ட மறுப்பதால் என்ன நிகழ்கிறதுஎன்று பார்த்தல் நம் செயல்பாடு நம்மை எந்தளவிற்கு பாதிக்கிறதுஎன்பது  தெரியவரும்.  இந்தியாவில் பல இடங்களில் நெடுஞ்சாலைகளும், உள்ளூர்ச் சாலைகளும் குண்டும், குழியுமாக இருப்பதைக் கண்டு நாம் நொந்துபோகிறோம்.  ஆனால் நாம் போதிய வரிப் பணம் கட்டாமல் இருப்பதால்தான் சாலைகள் சீர்ச்செய்ய பணம் இல்லாமல் இப்படி குண்டும் குழியுமாக இருகிறதாஎன்பதை உணருவது இல்லை.  கிராமப்புறத்தில் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்குப் பழகிவிட்டதால் மின்கட்டணம் கட்டவேண்டும்என  அரசாங்கம் பேச்சு எடுத்தால் எதிர்ப்புத் தெரிவிகின்றனர்.  இதன் விளைவாக இவர்களுக்குக் குறைந்த நேரத்திற்கே மின்சப்ளை கிடைக்கின்றது.  விவசாயிகளிடம் மின் கட்டணம் வசூலிக்க முடியாதென்று தெரியும்பொழுது அரசாங்கமும் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்காகப்  புது மின்நிலையங்கள் கட்டுவதற்கு  முதலீடு செய்வதிலும் அரவம் காட்டாமல் இருக்கிறது .

     இயற்கையன்னை, அரசாங்கம், சமூகம்என்று எல்லா இடங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் பலன்களெல்லாம் இறுதியில் அன்னையிடம் இருந்து தான் நமக்குக் கிடைக்கிறது என்று நாம் உணரவேண்டும்மேற்கண்ட இடங்களிலிருந்து கிடைப்பவற்றையெல்லாம் நாம் அங்கீகரிக்காமலோ, நன்றி தெரிவிக்காமலோ இருந்தால், நாம் உண்மையில் அன்னையிடம்  இருந்து பெறுவதற்கு நன்றி தெரிவிக்காமலிருக்கிறோம்என்று அர்த்தம்  அன்னைக்கு நன்றி தெரிவிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு அவருடைய பலன் நமக்கு வந்து சேர்வதற்குக் கருவியாகச் செயல்படுபவைகளுக்கும் நன்றி தெரிவிப்பது அவசியமாகும். அப்படி நாம் செய்யாமல் இருக்கும்பொழுது நமக்கும், அன்னைக்கும் இருக்கின்ற உறவில் இடைவெளியுண்டாகி, அது நாளாவட்டத்தில் வளர்ந்து நம்முடைய ரிசப்டிவிட்டியையே குறைத்துவிடும். நிறைய அன்னை பக்தர்கள் அருளால் கிடைத்த பலனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காணிக்கை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்நாம் காணிக்கை வழங்குவதைவிட நமக்கு அந்நேரம் வருகின்ற நெகிழ்ந்த நன்றியறிதல்தான் அன்னையுடன் நமக்கிருக்கின்ற உறவை வலுப்படுத்துகிறது

     அன்னை முதல் தடவை புதுவை வந்தபொழுது பகவானுடைய வீட்டை அவருக்குக் காட்டியவருக்கு மாதந்தோறும் ஒரு சிறு தொகையும், ஒரு நன்றிக்கடிதமும் அனுப்பிக்கொண்டிருந்தார்என்ற விஷயம் அன்பர்களுக்குத் தெரியும்என்று நினைக்கிறேன்இப்படி நம்மை அன்னைக்கு அறிமுகப்படுத்தியவருக்கு நாமெல்லோரும் நன்றியுடையவராக இருந்தால் உண்மையில் அவருடைய குழந்தைகளாக வர்ணிக்கப்படக்கூடிய தகுதியை நாம் அடைவோம். அன்னை நன்றியறிதல் மிகுந்தவராக இருந்ததோடு மட்டுமின்றி மிகவும் பணிவுடையவராகவும் இருந்தார்இந்த பணிவு கீழ்க்கண்ட சம்பவத்திலிருந்து வெளிப்படுகிறது. வட இந்தியாவில் இருந்து புதுவைக்குப் பயணம் செய்துகொண்டிருந்த அன்னை பக்தர்களுடன் ஓர் ஏழை வட இந்தியக் குடியானவரும் அதே பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அன்பர்கள் அவரிடம் அன்னையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அதன் விளைவாக அவருக்கும் அன்னையின் மேல் ஈடுபாடு வந்தது. அவர் இறங்கவேண்டிய இடம் வந்தபொழுது தன் பாக்கெட்டில் வைத்திருந்த சில்லறை காசுகளையெல்லாம் திரட்டினார். அந்த காசுகளெல்லாம் சேர்ந்து ஒரு ரூபாய் மதிப்பு வந்தது. அன்பர்களிடம் அந்த ஒரு ரூபாய்த் தொகையைக் கொடுத்து, "என்னுடைய காணிக்கையாக இதை அன்னையிடம் சேர்த்துவிடுங்கள்'' என்று சொல்விட்டுச் சென்றாராம்அன்னையிடம் அவர்கள் அந்த காணிக்கையை ஒப்படைத்த பொழுது, "அந்த ஏழை குடியானவனுடைய பக்திக்கு ஈடு செய்வது இறைவனுக்கே கடினம்'' என்று அன்னை பதிலளித்தாராம். ஒரு மனிதனின் பக்திக்கு இறைவனாலேயே தகுந்த கைம்மாறு செய்ய முடியாதென்று அன்னை பேசியிருக்கிறார்என்றால் அவர் எவ்வளவு பணிவானவர் என்பதை நாம் இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

     அன்னையே இப்படி இருக்கும்பொழுது இறைவனின் அருளை அனுபவிக்கும்பொழுது நாமெப்படி மேலும் பணிவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கவேண்டும்இறைவனின் கருணையை வரையறுக்க வேண்டுமென்றால் நாம் அதையெப்படி வரையறுப்பது? அருளென்பது ஆபத்திலிருக்கும்  மனிதன் எழுப்பும் அபயக்குரலுக்கும், தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டி மனிதன் எழுப்பும் விண்ணப்பத்திற்கும், இறைவன் வழங்கும் நிபந்தனையில்லாத பதில் மற்றும் ரெஸ்பான்ஸாகும்நம்முடைய பிரார்த்தனைகளுக்கு அருள் நிபந்தனை விதிக்க ஆரம்பித்தால் நம்முடைய பிரார்த்தனைகளெல்லாம் என்னாவது? அப்பட்சத்தில் சுமார் பத்து சதவீதம் அளவிற்குத்தான் நம்முடைய பிரார்த்தனைகளே நிறைவேறும்படிப்பில் கவனமில்லாத ஒரு மாணவனின் தாயார் பிள்ளை பாஸாக வேண்டுமென்று வேண்டுகிறார்புகைபிடித்து நுரையீரல் புற்றுநோயை வளர்த்துக்கொண்ட ஒரு நோயாளி தம் நோய் குணமாக வேண்டுமென்று பிரார்த்திக்கிறார்வேலையில் நாட்டமில்லாமல், குடும்பப் பொறுப்பில்லாமல் இருக்கின்ற ஓர் ஆண்மகனைக் கணவனாகக் கிடைக்கப்பெற்ற ஒரு பெண்மணி அவருக்கொரு நல்ல வேலையும், வருமானமும் வாங்கிக் கொடுத்துத் தம் குடும்பத்தைக் காப்பாற்றும்படி அன்னையிடம் வேண்டுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண் உயரதிகாரியை மணக்கவேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறார். நேர்மை இல்லாதவருக்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் கொடுத்த கடனைத் திரும்ப வாங்கித் தரும்படி ஒருவர் அன்னையிடம் கேட்கிறார்.

     இம்மாதிரி சூழ்நிலைகளை வாழ்க்கை ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரம்கூட பொறுத்துக்கொள்ளாதுஇம்மாதிரி சூழ்நிலைகள் கண்டிப்பாக அன்னை சம்பந்தப்படவில்லையென்றால் ஏமாற்றத்தில்தான் போய் முடியும்.  ஆனால் இப்படிப்பட்ட பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றனஎன்பதை வைத்துப் பார்க்கும்பொழுது அன்னை நம்முடைய தகுதியைப் பார்த்து செயல்படுவதாகத் தெரியவில்லை. நமக்குத் தகுதி உள்ளதோ, இல்லையோ நம்முடைய தேவையை அவர் நிறைவேற்றுகிறார். விஷயம் இவ்வளவு எளிமையாக உள்ளதுநமக்குத் தகுதியில்லாத உதவி நமக்குக் கிடைக்கும் பொழுது நாம் மேலும் எப்படி நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதைப் பார்க்கவேண்டும்நாம் அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் பொழுதெல்லாம் நம் தகுதிக்கு மீறி அருள் செயல்படுகிறதுஎன்ற எண்ணம் நம் மனதில் ஓங்கியிருக்கவேண்டும்இப்படி நம்முடைய தகுதியற்ற நிலைமையை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தோமென்றால் நம் மனநிலையும் அருளுக்குத் தகுந்த பணிவான நிலையிலேயே இருக்கும்.

     'இரகசியம்' என்று பெயரிடப்பட்ட ஒரு புத்தகம் அமெரிக்காவில் தற்பொழுது வெளியாகியுள்ளதுஅது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சாதிப்பதன் இரகசியமென்னவென்று அப்புத்தகம் விளக்குகிறதுநாம் எதை நாடுகிறோமோ அது நம்மை நாடி வரும்என்ற விதிமுறை இயற்கையில் இருப்பதாக அப்புத்தகம் சொல்கிறதுகீதையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணபகவான்  இதே கருத்தை நாம் எதை நாடுகிறோமோ அதாக மாறலாம்என்று சொல்லியிருக்கிறார்.  இந்த பழைய கருத்தை, புத்தகத்தை எழுதியவர் புதிய பாணியில் விவரிக்கிறார். ஆகவே, நமக்கு நல்ல வருமானம் வேண்டும், நல்ல  வேலை வேண்டும், நல்ல வாழ்க்கைத்துணை வேண்டும், நல்ல உடல்நலம் வேண்டும்என்று விரும்பி, இவையெல்லாம்  நமக்குக் கிடைப்பதுபோன்ற காட்சிகளை மனதில் சித்தரித்தோமென்றால், நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் நம்முடைய நாட்டத்தைக் கண்டுகொண்டு இவற்றை நமக்கு வழங்கும்என்று அந்தப் புத்தகத்தை எழுதியுள்ள ஆசிரியர் சொல்கிறார். இப்படிப்பட்ட  காட்சிகளை மனதில் சித்தரிப்பதை வலியுறுத்துபவர், அதே சமயத்தில் ஏற்கனவே நமக்கு வாழ்க்கையில் கிடைத்துள்ள நல்ல விஷயங்களுக்காக நாம் நன்றியறிதலைத் தெரிவித்தால் புது நல்ல விஷயங்கள் கிடைக்க வழிபிறக்கும்என்று  சொல்கிறார்.  அதாவது நாம் நன்றி தெரிவிக்கும்பொழுது நமக்கும், பிரபஞ்சத்திற்கும் ஒரு நல்ல அலைன்மென்ட் கிடைகிறதென்றும், அதனை வைத்துப் புது நல்ல விஷயங்களை பிரபஞ்சத்தால் விரைவாக வழங்க முடியுமென்றும் நூலாசிரியர் சொல்கிறார்.  இதற்கடுத்த மேலும் ஒரு கட்டம் உண்டு என்றும் நூலாசிரியர் சொல்கிறார்.  அதாவது நமக்கு ஒரு தேவை இருக்கிறதென்று பிரபஞ்சத்திடம் தெரிவித்துவிட்டு, உடனே நம் கையில் கிடைத்தாற்போல்  ஒரு சந்தோஷத்தை மனதில் வரவழைத்து பிரபஞ்சத்திற்கு  நன்றியறிதலைத் தெரிவித்தோமென்றால் நம் விருப்பம் அந்த அளவிற்கு வேகமாக நிறைவேறும்என்றும் சொல்கிறார். உதரணமாக ஒருவர் தமக்கு ஒரு நல்ல வீடு வேண்டுமென விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவ்விருப்பத்தை பிரபஞ்சத்திடம் தெரிவித்துவிட்டு, அவர் தம் மனதில் சித்தரித்த வீடு அவருக்கு உடனே கிடைதுவிட்டதுபோலவும், அவர் அதில் குடியிருப்பதுபோலவும் மனதில் பாவனை செய்துக்கொண்டு, உடனே பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்தால் அவர் விரும்பிய வீடு அந்தளவிற்கு விரைவில் கிடைக்கும்மென்றும் புத்தகம் சொல்கிறது.
 
     இரகசியம் என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியவர் பிரபஞ்சம்தான் நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்கிறதுஎன்று குறிப்பிடுகிறார்ஆனால் அன்னை பக்தர்கள் பிரபஞ்சம் செய்கின்ற வேலையை அன்னை செய்வதாக பாவித்து, அன்னைக்கு பிரார்த்தனை செய்யும்பொழுதே அது நிறைவேறிவிட்டதாக பாவனை செய்துகொண்டு அன்னைக்கு உடனே நன்றி தெரிவிக்கலாம்அப்பட்சத்தில் நாம் எதிர்பார்க்கும் பலன் உடனேயும் கிடைக்கும்; அன்னையோடு நமக்குள்ள உறவும் அந்தளவிற்கு அதிகரிக்கும்.  பிரார்த்தனை செய்யும்பொழுதே பலன் கிடைத்துவிட்டதுபோன்ற சந்தோஷம் நமக்கு வருகிறதென்றால் நம்முடைய நம்பிக்கை அந்தளவிற்கு முழுமையாக உள்ளதுஎன்று அர்த்தம். இல்லாவிட்டால் அப்படிப்பட்ட சந்தோஷம் நமக்கு வராது. ஒரு சிறிய புராணக்கதையில் நாரதர் ஒரு ஞானியையும், ஒரு பக்தரையும் சந்திப்பதாகவும், அந்த இருவரிடமும் இறைவனைத் தரிசிக்க அவர்கள் குறைந்தபட்சம் இலட்சம் பிறவிகள் எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கிறார்இதை கேட்ட ஞானி மிகவும் அதைரியமடைந்து தம்முடைய ஞானயோகத்தையே கைவிடுகிறார். ஆனால் பக்தனோ இலட்சம் பிறவிக்கு அப்பாலாவது இறைவனின் தரிசனம் கிடைக்கப்பெற்றால் அது தாம் செய்யும் பாக்கியம்என்று கருதி அப்பொழுதே மனதில் சந்தோஷம் நிரம்பி, நாரதருக்கு அந்தச் செய்தியைச் சொன்னதற்காக நன்றியும் தெரிவிக்கிறார். அந்த சந்தோஷமும், அந்த நன்றியறிதலும் உச்சக்கட்டத்தில் இருந்ததால் அந்த பக்தருக்கு இறைதரிசனம் அப்பொழுதே கிடைத்து விடுகிறது. இந்தக் கதையிலிருந்து நாம் நன்றியறிதல் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.

     அன்னையை நேரிடையாக தரிசித்த அன்பர்கள் உள்ளார்கள். அந்த பாக்கியத்தை அவர்கள் அடிக்கடி நினைவுகூர்ந்து அவர் திருமுகத்தை தரிசிக்கும் பாக்கியத்தை அவர்களுக்குக் கொடுத்ததற்கு அவர்கள் அடிக்கடி அன்னைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கலாம். இந்த பாக்கியம் கிடைக்கும் அளவிற்குப் புண்ணியத்தைச் சேகரித்துள்ள தம்முடைய ஆன்மாவிற்கும் நன்றி தெரிவிக்கலாம். ஆனால் அன்னை சமாதியான பிறகு அவரைத் தெரிந்துகொண்டுள்ள அன்பர்களும் உள்ளனர். நேரிடைத் தரிசனம் கிடைக்குமளவிற்கு அவர்கள் பாக்கியசாலிள் இல்லாவிட்டாலும் அன்னையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாவது கிடைத்ததே என்றும், அவரைப்பற்றிப் புத்தகங்களில் படிக்கவும், அவருடைய அருளைப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளதைப்பற்றி சந்தோஷப்பட்டு, அதற்கு அவர்கள் அடிக்கடி அன்னைக்கு நன்றி சொல்லலாம். அன்பர்கள் தம்மை அன்னையின் பாதுகாப்பு சூழலுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். நாம் அறிவோடும், முறையோடும், கட்டுப்பாடோடும் நடந்துகொண்டால், உணர்ச்சிவசப்பட்ட, அறிவில்லாத, ஆபத்தைக் கொண்டு வரக்கூடிய செயல்பாடுகளிலிருந்து காப்பாற்றப்படுகிறோம்.  இது தெரிந்திருந்தும் பல அன்பர்கள் அறிவில்லாமல், உணர்ச்சிவசப்பட்டு செயல்பட்டு ஆபத்தையும், பிரச்சினைகளையும் தேடிக்கொள்கிறார்கள்.  வாழ்க்கையில் இப்படிப்பட்ட அறிவில்லாத, உணர்ச்சிவசப்பட்ட செயல்என்பது இம்மாதிரி செயல்படுபவர்களை சமூகத்தின் கடைசி நிலைக்குக் கொண்டு சென்று அவர்களின் வருமானம், சமூக அந்தஸ்து, சந்தோஷம்என்று எல்லாவற்றையும் பறித்துவிடும்.  உயிருக்கே ஆபத்து வந்தாலும் ஆச்சரியம் இல்லை.  ஆனால் அறிவில்லாமல் உணர்ச்சிவசபட்டுச் செயல்படக் கூடியவர்கள், அதே சமயத்தில் நல்லெண்ணம் உடையவர்களாகவும், நன்றியறிதல் உள்ளவர்களாகவும் இருந்தால் அவர்கள் செய்த தவறுகள் அவர்களை பாதிக்காமல் அன்னை இடையில் வந்து காப்பாற்றுவார். நாணயமில்லாத  நபர் ஒருவரை நம்பிய அன்பர் ஒருவர் அந்த நாணயம் அற்றவர் துவக்கியிருந்த   டெபாசிட் திட்டம் ஒன்றில் தம் நண்பர்களை எல்லாம் அவர்களுடைய சேமிப்பைப் போடச் சொன்னார்.  நிறைய வட்டி கிடைக்குமென இவர் சொல்லியதை நம்பி  அவர்களும் அவ்வாறே செய்தனர்.  ஆனால்  ஆறே மாதங்களில் அது ஒரு ஏமாற்று வேலைஎன தெரிந்து, போட்ட பணமெலாம் கிடைக்காது என்ற  சூழ்நிலை உருவாகியது. தம் நண்பர்களைப் பணம் போடச் சொன்ன அன்பர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த மோசடி பேர்வழியிடமிருந்து தம் நண்பர்கள் போட்ட சேமிப்பையெல்லாம் மீட்டுத் தருவது தம் கடமை என உணர்ந்தார். தம்முடைய நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்வதில் மிகவும் தீவிரமாக இருப்பவர் இவர்இப்பொழுது இப்படியொரு தவறான சூழலில் சிக்கிக்கொண்டதை உணர்ந்து மிகவும் இடிந்துபோய்விட்டார். என்ன செய்வது, எப்படிச் செயல்படுவது என்றே தெரியவில்லை. அறிவில்லாமல், உணர்ச்சிவசப்பட்டு செயல்படக்கூடியவர்என்றாலும், அடிப்படையில் நல்லெண்ணமும், நன்றியறிதலும் உள்ளவர்அன்னையைத் தெரிந்து கொண்டது பற்றியும், அன்னையால் தமக்கு விளைந்த நன்மைகள் பற்றியும் நினைத்து அடிக்கடி நெகிழ்ந்துபோகக்கூடியவர். அந்த நன்றியறிதல் இப்போது அவருக்கு உதவிக்கு வந்ததுஅந்த மோசடிப் பேர்வழியின் கூட்டாளிகள் இருவர் நடந்த தவற்றிற்கெல்லாம் தாங்களும் முழுப் பொறுப்பேற்று, தாங்களிருவரும் அந்தப் பணத்தையெல்லாம் மீட்டுத் தருவதாக வாக்களித்தனர்; அம்மாதிரியே செய்தனர்அன்பரும் தமக்கு வந்த பேராபத்து விலகியதைக் கண்டு சந்தோஷப்பட்டு, தாம் இழந்த நிம்மதியைத் திரும்பப் பெற்றார்.

     இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், நன்றியறிதல் இரண்டு விதமாகச் செயல்படும்என்பதுதான்ஒரு பக்கம் புதுநன்மைகளை நம்மை நாடி வரச் செய்யும்இன்னொரு பக்கம் நம் வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சினைகள், மற்றும் ஆபத்துக்களிலிருந்து நம்மைக் காப்பாற்றவும் செய்யும்நன்றியறிதலால் நமக்கு இப்படி நல்ல பலன்கள் கிடைக்கும்பொழுது அன்னைக்கும், உலகத்திற்கும், நாமிருக்கும் சமூகத்திற்கும், நம்முடைய அரசாங்கத்திற்கும், நம்முடைய குடும்பத்திற்கும், உற்றார், உறவினர், நண்பர்கள்என்று எங்கெல்லாம் நமக்கு உதவி கிடைத்துள்ளதோ அவர்களையெல்லாம் அடிக்கடி நினைவுகூர்ந்து ஏன் நன்றி சொல்லக்கூடாது? நன்றிஎன்பது ஒரு தெய்வீக உணர்வு என்றும், படைப்பில் உள்ள தெய்வங்களில் நன்றி தேவதைதான் மிகவும் இளையவள், கடைசியாக வந்தவள் என்றும் அன்னை சொல்லியிருக்கிறார். அப்படி என்றால், நன்றியறிதலை நம்மால் முழுவதுமாக உணர முடிந்தால் நாம் மானிட நிலையிலிருந்து தெய்வீக நிலைக்கு உயர்வோம் என்றாகிறதுஓர் உணர்வு நம்மை தெய்வீக நிலைக்கு உயர்த்துமென்றால் நாம் ஏன் அந்த உணர்வை வளர்த்துக்கொள்ளக்கூடாது?

 

 ****

ஸ்ரீ அரவிந்த சுடர்

கை மேல் கிடைத்த பலன் என்ன என்று ஆராய்ந்தால் அதை நிர்ணயித்தவை நம் உறவும் உள்நோக்கமுமாகும் என்று தெரியும்.

உள்நோக்கம் உறவில் பலன் தரும்.book | by Dr. Radut